PDA

View Full Version : மொழி பெயர்ப்புக் கவிதைகள் - 3.



kavitha
19-08-2005, 05:23 AM
ஞானமும் நல்வாழ்க்கையும்

வலியுறுத்தாமையை வலியுறுத்து.
செயலின்றிச் செயல்படு.
சுவையில்லாததைச் சுவை.
பெரியதைச் சிறியதாக்கு.
சிறியதிலிருந்து பெரிதை ஆக்கு.


வெறுப்புக்கு நலனைப் பதிலாக்கு.

சிரமத்தை எளிதாகும்போது நினை.
மிகப் பெரிய காரியத்தைச் சிறியதாக
இருக்கும்போது எதிர்கொள்.

உலகின் மிகப் பெரிய சாதனைகள்
மிகச் சிறியனவாக இருந்தபோதிருந்து
ஆரம்பமானவை.

உலகின் மிகப் பெரிய பணிகள்
அவசியமாகவே மிகச் சிறியனவாக
இருந்தபோதிருந்து ஆரம்பமானவை.


- லா வோத் சூ

Mano.G.
19-08-2005, 05:54 AM
நல்ல தன்னம்பிக்கை
அறிவுரை கவிதை
வாழ்த்துக்கள்


மனோ.ஜி

மன்மதன்
19-08-2005, 09:56 AM
நல்ல முயற்சி.. தொடர்ந்து கொடுங்கள் கவி.
அன்புடன்
மன்மதன்

pradeepkt
19-08-2005, 10:14 AM
உலகின் மிகப் பெரிய பணிகள்
அவசியமாகவே மிகச் சிறியனவாக
இருந்தபோதிருந்து ஆரம்பமானவை.

--சிந்திக்க வைத்த வரிகள்.
மிக்க நன்றி கவிதா.

kavitha
19-08-2005, 10:48 AM
Á§É¡ «ñ½¡, ÁýÁ¾ý, À¢Ã¾£ô «¨ÉÅÕìÌõ ¿ýÈ¢..
¦Ã¡õÀ §¿Ãõ ±ý¨É «¨º§À¡¼ ¨Åò¾¨Å þÅÃÐ ¸Å¢¨¾¸û