PDA

View Full Version : குடை மரங்கள்...மன்மதன்
18-08-2005, 07:28 AM
நீண்டதொரு
பிரயாணத்தின்
அந்திசாயும்
வேளையில்

மரங்களடர்ந்த
ஒற்றைப்பாதையில்
வாகனத்தை
செலுத்தும் போது..

கேட்ட ஒரு
குயிலின் ஓசையில்
என் மனம்
சில்லிட்டு போகிறது...

சிறுதூரல் பூக்கள்
தூவும் மேகங்கள்..
குடை பிடிக்கும்
மரங்கள்..

இப்படியாக
என் பயணம்...
மனதை விட்டு
நீங்காமல்...http://transit-port.net/Galleries/Australian.Bushlands/images/To-Bunbury.jpg

-
மன்மதன்

pradeepkt
18-08-2005, 07:36 AM
மரத்தின் நிழலில் ஒதுங்கும் போது
சரம் சரமாய் எத்தனை சிந்தனைகள்
சிரம் கனத்த பணத்தின் தேடலில்
தரணியில் விட்டது எத்தனை எத்தனை!
சிரம்தாழ்ந்து அமர்ந்த வேர் பார்த்தேன்

உரம்தானே எல்லாம் வேர்சொன்னது இலையிடம்
சுரம் தணிந்து எண்ணிப் பார்க்கையில்
கரங்கள் துடைத்தன கண்ணீர்த் துளியை
தரமான வாழ்வறிய போதிமரம் தேவையில்லை
மரம்பட்டுப் போனாலும் வேர்சொல்லும் நூறுகதை

அன்புடன்,
பிரதீப்

pradeepkt
18-08-2005, 07:38 AM
மன்மதன்,
உங்கள் கவிதை படித்ததும் என்னுள் பீறிட்ட உணர்வுகள் இவை.
அக்காலத்தில் உள்ளத்தில் எத்தனை வேதனை வழிந்தாலும் என் தந்தைக்குப் பிறகு நான் பேராறுதல் தேடியது மண்டலப் பொறியியற் கல்லூரிக் காடுகளில்தான்.
அருமையான கவிதை.
நன்றி.

மன்மதன்
18-08-2005, 07:54 AM
இந்த சிறு கவிதைக்கு இத்தனை தாக்கமா.. நன்றி பிரதீப்.. மிக்க நன்றி..
அன்புடன்
மன்மதன்

gragavan
18-08-2005, 08:03 AM
புன்னையை வேங்கை முத்தமிட்டது
பச்சை இலைகள் சரசரக்க
பழுப்புக் கிளைகள் நெறுநெறுக்க
மெல்லச் சொன்னது
"வருத்தப்படாதே....
சாலையை நாளைதான் அகலப்படுத்துகிறார்கள்"

இதுதான் என் கவிதை....மன்மதனும் பிரதீப்பும் கவிச்சோலை காட்டுகிறார்கள். அருமை. வாழ்த்துகள்.

மன்மதன்
18-08-2005, 08:05 AM
ஆஹா..ஆஹா.. பிரமாதம்.. கலக்கல்ஸ் ராகவன்..
அன்புடன்
மன்மதன்

gragavan
18-08-2005, 08:13 AM
நன்றி நன்றி மம்ஸ்

pradeepkt
18-08-2005, 08:26 AM
அடடா.. பதில் கவிதை சூப்பர்...
வாலியோட பொய்க்கால் குதிரைகள் தொகுப்பில இப்படி ஒரு கவிதை வரும்.
ஒரு ஆட்டோட உரிமையாளர் அதுகிட்ட பேசுற மாதிரி.
பச்சைப் புல் மேய்
முள்வாயில் படாமல் மேய்
.....
அப்படி இப்படின்னெல்லாம் சொல்லிட்டுக் கடைசீல
சாயங்காலம் சீக்கிரம் வீடு வந்துசேர்
நாளைக்குத்தான் பக்ரீத்

அப்படின்னு முடியும். அப்படியே திக்குனு ஆயி நமக்குச் சோறுதண்ணி இறங்காது.

gragavan
18-08-2005, 08:47 AM
பொய்க்கால் குதிரைகள் புத்தகத்திலிருந்த கவிதைகளைத்தான் பொய்க்கால் குதிரை திரைப்படத்தில் பாலச்சந்தர் பயன்படுத்தியிருந்தார்.

அதில் "கொசுவே உனக்கு நம்ஸ்காரம்" என்று ஒரு கவிதை மிகவும் நன்றாக இருக்கும்.

அந்தப் படத்திற்காக வாலி எழுதிய பாடல் ஒன்றே ஒன்றுதான்.
"கனாக்காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல" என்ற பாடல்தான் அது.

பொய்க்கால் குதிரையில் இன்னொரு கண்ணகி என்று கவிதை எதுவும் இருக்கிறதா?

pradeepkt
18-08-2005, 08:56 AM
பொய்க்கால் குதிரைகள் புத்தகத்திலிருந்த கவிதைகளைத்தான் பொய்க்கால் குதிரை திரைப்படத்தில் பாலச்சந்தர் பயன்படுத்தியிருந்தார்.

அதில் "கொசுவே உனக்கு நம்ஸ்காரம்" என்று ஒரு கவிதை மிகவும் நன்றாக இருக்கும்.

அந்தப் படத்திற்காக வாலி எழுதிய பாடல் ஒன்றே ஒன்றுதான்.
"கனாக்காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல" என்ற பாடல்தான் அது.

பொய்க்கால் குதிரையில் இன்னொரு கண்ணகி என்று கவிதை எதுவும் இருக்கிறதா?
பார்த்துச் சொல்கிறேன்.
ஆமாம், கனாக்காணும் கண்கள் பாட்டு "அக்னி சாட்சி" படத்தில இல்லை?

gragavan
18-08-2005, 08:59 AM
பார்த்துச் சொல்கிறேன்.
ஆமாம், கனாக்காணும் கண்கள் பாட்டு "அக்னி சாட்சி" படத்தில இல்லை?ஆமாம். அக்னி சாட்சியில். அந்தப் படத்தில்தான் வாலியின் கவிதைகளைப் பயன்படுத்தியிருந்தார். பொய்க்கால் குதிரை என்று தவறாகச் சொல்லி விட்டேன். ஹி ஹி.

pradeepkt
18-08-2005, 09:00 AM
பொய்க்கால் குதிரையில்தான் வாலி முதல் முதலாக நடித்தார்.
கதை வசனமும் அவர்தான் என்று நினைவு.
அதற்கப்புறம்தான் ஒரே ஒரு கிராமத்திலே படம் வந்தது.

kavitha
18-08-2005, 10:59 AM
மழைப்பூக்களாக.. மரங்கள் குடைகளாக அழகிய உவமை மன்மதன்.
தொடரும் பிரதீப், ராகவன் கவிதைகளும் அருமை.

pradeepkt
18-08-2005, 11:09 AM
நன்றி சகோதரி. உங்கள் பாராட்டுகள் எங்கள் பலம்.
கையோட இந்த திஸ்கிய விட்டு வெளிய வாங்களேன்... தமிழில கவிதை எழுதி மேண்டரின்ல மொழி பெயர்த்த மாதிரி இருக்கு.

மன்மதன்
18-08-2005, 11:12 AM
நன்றி கவி..
அன்புடன்
மன்மதன்

kavitha
19-08-2005, 05:17 AM
நன்றி சகோதரி. உங்கள் பாராட்டுகள் எங்கள் பலம்.
கையோட இந்த திஸ்கிய விட்டு வெளிய வாங்களேன்... தமிழில கவிதை எழுதி மேண்டரின்ல மொழி பெயர்த்த மாதிரி இருக்கு.


இப்போது சரியாகத்தெரிகிறதா என்று சொல்லுங்கள். திஸ்கியில் அடிப்பது தான் எனக்கு எளிதாக இருக்கிறது. யுனிகோடு (ஆல்ட்+2) போட்டால் 'ந' போன்ற எழுத்துக்கள் வர அடம்பிடிக்கின்றன :confused:

mukilan
19-08-2005, 01:53 PM
மன்மதன் எந்த் பக்கம் எடுத்தாலும் கலக்கிக்கிட்டே போறார். அய்யா பிரதீப் மண்டலப் பொறியியல் கல்லூரியில் நீர் பொறியியல் மாணாக்கர் தானே? அங்கு தமிழ் இலக்கியத்திற்கென தனியே துறை ஏதும் இருக்கிறதா?
ராகவன் பற்றி சொல்லவே வேண்டாம். "சொல்ல சொல்ல இனிக்குமாறு எழுதுபவர். உள்ளுக்குள்ள கொஞ்சம் பொறாமைதான். இருந்தாலும் போனால் போகுதுன்னு எல்லோரையும் கொஞ்சம் பாராட்டுகிறேன்.

pradeepkt
19-08-2005, 07:58 PM
நன்றி முகிலன்.
மன்மதன் ஸ்டைலே தனி. ராகவன் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை!
கல்லூரியில் பொறியியல் சொல்லிக் கொடுத்தாலும் தமிழ் மன்றம் பெயர் பெற்றது. வருடாந்தர ஆண்டு விழாவில் படிக்குப் பாதி தமிழ்ப் போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடக்கும். இத்தனைக்கும் வரும் மாணவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் வெளிமாநிலத்தவர்.

சுவேதா
20-08-2005, 03:51 AM
அடர்ந்த காட்டு
பாதையிலே
பயணித்துச் செல்கையிலே
சில்லிடும் பறவைகள்
கூட்டம்

பனித்துளிகள் என்
மேல் விழுந்து நான்
நிமிர்ந்து பார்க்கையில்
என் மன்மே சிறகாய்
பறக்கிறது!
நிமிர்ந்து பார்த்ததும்
எனக்கு குடையாய்
மரம்!

:D:D:D மன்மதன்,பிரதீப் அண்ணா,இராகவன் அண்ணா உங்கள் கவிதை சூப்பர்! பாராட்டுக்கள்!

மன்மதன்
20-08-2005, 04:34 AM
கவிதை அருமை சுவேதா...