PDA

View Full Version : கைக்கணணிகளில் எது சிறந்தது?



இராசகுமாரன்
18-08-2005, 06:42 AM
நான் முன்பு Palm கைக்கணணி வைத்திருந்தேன். பிறகு HP கைக் கணனியும் வைத்திருந்தேன்.

இப்போது தான் கைக்கணணிகளுடன் சேர்ந்து GSM தொலைபேசி இணைப்பும் வருகிறது, Wi-Fi (Wireless Networking) வசதியும் வருகிறது.

எதை வாங்கலாம் என்று ஒரு கண்ணோட்டம் நடத்திக் கொண்டிருக்கிறேன்.

தொலைபேசி வசதி இல்லாவிட்டாலும் பரவாயிலை, Wi-Fi இனிவரும் நாட்களில் இன்றியமையாததாக இருக்கும், அதனால் இந்த வசதி உள்ள கைக்கணணிகளில் சிறந்தது எது என்று உங்கள் அனுபவத்தையும், அல்லது நீங்கள் அறிந்ததையும் கூறினால் எனக்கு உதவியாக இருக்கும்.

Sony Clie நன்றாக இருக்குமென கூறுகிறார்கள், ஆனால் நான் இருக்கும் UAE-யில் கிடைப்பதில்லை.

நன்றி.

இராசகுமாரன்

பாரதி
18-08-2005, 03:30 PM
அன்பு ராசகுமாரன் அவர்களே,

ஜுலை மாதம் வெளிவந்த பாக்கெட் பி.சி என்ற ஆங்கில இதழில் பலவிதமான கைக்கணினிகளைப் பற்றியும், ஸ்மார்ட் கைபேசிகள் குறித்தும் தெளிவான ஒரு ஒப்பீடு வந்துள்ளது. அதைப் பார்த்தால் எதை வாங்குவது என்பதை முடிவு செய்வது உங்களுக்கு மிகவும் எளிதான காரியமாக இருக்கும்.

www.pocketpcmag.com (http://www.pocketpcmag.com)
www.pocketpcfaq.com (http://www.pocketpcfaq.com)

kavitha
19-08-2005, 05:29 AM
தகவலுக்கு நன்றி பாரதி

Mano.G.
19-08-2005, 05:41 AM
புதிதாக சந்தையில் அறிமுகபடுத்த பட்ட கைகணனி
O2XDA IIs இதில் பல வசதிகள் டேபில் டாபில் உள்ள அனைத்து
சௌகரியங்களும் உள்ளடக்கியதாக கூறபட்டுள்ளது.

அதோடு நோக்கியா மாடல்களில் காமியுனிகேட்டர் வகைகளும்
சிறந்தாக கூறபடுகிறது.

இங்கு நான் கேசியோபெய்யா (Cassiopeia) ms windows powered with CF card slot (type II) 32,768 colour LCD , CPU 166 MHz, 280MIPS USB connection உபயோக படுத்துகிரேன். ஓரளவுக்கு உபயோகமாக உள்ளது. இதில் செல் போன் வசதி இல்லை.

மனோ.ஜி

siva
19-08-2005, 08:19 AM
மனோ சொல்வது போல் o2 சிறந்தது என்று நினைக்கின்றேன்

இராசகுமாரன்
20-08-2005, 07:03 AM
பாரதி,

தகவலுக்கும், இணைப்பு சுட்டிக்கும் நன்றி..

மனோ ஜி.

கேசியோபெய்யாவில் எனக்கு தேவையான Wi-Fi இல்லையே?
o2-வில் Wi-Fi யுடன் தொலைபேசி இணைப்பும் உள்ளது, தொலைபேசி இணைப்பு இல்லாத, Wi-fi உள்ளதைத் தேடுகிறேன்.

மன்மதன்
04-09-2005, 08:49 AM
எனக்கு ஒரு மெயில் வந்தது.. இங்கே கொடுத்திருக்கிறேன்...

The Treo 600 smartphone from palmOne seamlessly combines a full-featured mobile phone and Palm Powered organizer with wireless email and text messaging, web browsing and even a digital camera all in one device that's so small it fits right in your pocket. Plus, because everything is totally integrated including the full QWERTY keyboard its amazingly easy to use.

Features :
GSM/GPRS quad-band world phone.
144MHz ARM processor.
32MB RAM Menory.
Palm OS 5.2.1H operating system.
Bright CSTN backlit display.
Upto 6hrs Talk Time.
VGA Digital Camera.

------------------------------


http://www.notebookplus.net/images/compimages/treo600unit.gif


இது எப்படி என்று பாருங்கள். எனக்கு வாங்கலாமா என்ற யோசனை வந்தது.

இதன் டீலர் முகவரி.

இமேஜ் பிளஸ் எல்.எல்.சி.
போன் : 971 4 3598840

விலை : 955 திர்ஹம்..

aren
04-09-2005, 12:40 PM
தொலைபேசியுடன் வேண்டுமெனில் O2XDA II அல்லது O2XDA II மினி மற்றும் HP ஆகியவை சிறந்தவை.

தொலைபேசி இல்லாமல் வேண்டுமென்றால், Palm அல்லது HP சரியாக இருக்கும். Sony Clie வந்தபொழுது பெரிதாக பேசப்பட்டது. இப்பொழுது மூச்சையே காணோம்.

இளந்தமிழ்ச்செல்வன்
18-12-2005, 11:22 AM
தகவல்களுக்கு நன்றி நண்பர்களே