PDA

View Full Version : ஆகஸ்ட் 18, வியாழக்கிழமை மலேசியாவிலிருந்து 



Mano.G.
18-08-2005, 02:46 AM
உயிரியல் தொழில்நுட்ப துறைக்கான ஆக்ககரமான திட்டங்கள்
உயிரியல் தொழில்நுட்ப துறையில் பட்டம் பெற்ற மாணவர்கள் அத்துறையிலேயே மேற்படிப்பைத் தொடர கல்வி கடனுதவி வழங்கப்படும் என அறிவியல்,தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க துறை அமைச்சர் Datuk Seri Dr Jamaludin Jarjis தெரிவித்தார்.
உயிரியல் தொழில்நுட்ப துறையில் முதுகலை பட்டப்படிப்பு அல்லது முனைவர் பட்டப்படிப்பு கற்க விரும்பும் மாணவர்கள் கல்வி உபகார சம்பளம் பெற பொதுசேவை துறையிடம் விண்ணப்பிக்கலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
அது மட்டுமின்றி,உயிரியல் தொழில்நுட்ப துறை தொடர்பான ஆராய்ச்சி மேற்கொள்ள விரும்பும் குறிப்பிட்ட தரப்பினர்களுக்கும் நிதியுதவி வழங்க பொதுசேவை துறை தயாராய் உள்ளதாக அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
--------------------------------------------------------------
வங்காளதேச தொழிலாளர்கள் வரவழைக்கப்படுவார்களா?
வங்காளதேச தொழிலாளர்களை மீண்டும் வரவழைத்து வேலையில் அமர்த்தும் திட்டம் தொடர்பாக தற்போது விவாதிக்கப்பட்டு வருகிறது என உள்நாட்டு விவகார துறை துணை அமைச்சர் Datuk Tan Chai Ho தெரிவித்தார்.
வங்காளதேச தொழிலாளர்களை வேலையில் அமர்த்தும் திட்டம் அல்லது குத்தகை 2000-ஆம் ஆண்டில் பல்வேறு சமூக பிரச்சனைகளால் ரத்து செய்யப்பட்டது. போலீசார் மற்றும் பொதுமக்கள் கொடுத்த புகார்கள்,ஆலோசனைகள்,கருத்துகள் தொடர்பாக அக்குத்தகை ரத்து செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
PUTRAJAYA-வில் செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் அவ்வாறு கூறினார்.தற்போது,முதலாளிமார்கள் சுமார் 12 நாடுகளிலிருந்து வெளிநாட்டு தொழிலாளர்களை தருவிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


மலாய்காரர்களுக்கான சலுகைகளினால்...
முன்பு வகுக்கப்பட்ட சமூக ãதியான குத்தகை மற்றும் வாய்ப்பு வசதிகள் என்றென்றும் நிலைத்திருப்பவை எனவும் அவற்றை மாற்றியமைப்பது குறித்து கருத்து கூற யாருக்கும் உரிமை வழங்கப்படவில்லை எனவும் Johor மாநில Menteri Besar Datuk Abdul Ghani Othman தெரிவித்தார்.
Umno தொடர்புத்துறை தலைவரான அவர் JOHOR BAHARU-வில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அவ்வாறு தெரிவித்தார்.
மலாய்க்காரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அதிக சலுகைகளினால் இதர இனத்தவர்கள் பெரும் வருத்ததிற்கு உள்ளாகின்றனர் என கடந்த ஞாயிறு அன்று, எரிபொருள், நீர், தொடர்பு துறை அமைச்சரும் Gerakan கட்சி தலைவருமான Datuk Seri Dr Lim Keng Yaik வெளியிட்ட அறிக்கை தொடர்பாக Datuk Abdul Ghani Othman அவ்வாறு பதில் அளித்துள்ளார்.


தேசிய தின தொடக்க விழா
நேற்று முதல் தேசிய தினக் கொண்டாட்ட விழா நாடு தழுவிய நிலையில் வெகு விமரிசையாகத் தொடங்கப்பட்டது. பெர்லிஸிலுள்ள அனைத்து இலாகாக்களும், அரசாங்க நிறுவனங்களும் மற்றும் பொது மக்கள் உட்பட அனைவரும் தேசிய கொடிகளை நேற்று பறக்கவிட்டனர்.
பெர்லிஸ் மாநிலத்திலுள்ள Dataran Merdeka-வில் தேசிய தின விழா தொடக்க நிகழ்ச்சியில் அம்மாநில அரசாங்க செயலாளர் Ismail Osman விழாவைத் தொடக்கி வைத்தார்.
Kuala Perlis-இல் உள்ள இடைநிலைப்பள்ளியிலும் தேசிய தின தொடக்க விழா விமரிசையாக நடைபெற்றது. மாணவர்கள் அணிவகுப்பு, தேசிய தின கவிதை படிக்கும் போட்டி என பல நிகழ்ச்சிகள் அங்கு நடந்தேறின.


SERI KEMBANGAN மற்றும் SERDANG பகுதிகளில் நீர் விநியோகிப்பில் தடை
Syabas நீர் விநியோகிப்பு குழாய்களைச் சரி செய்யும் பணிகளினால் எதிர்வரும் சனிக்கிழமை இரவு 8.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி வரையில் பெட்டாலிங் மற்றும் Hulu Langat வட்டாரத்தில் சில பகுதிகளில் நீர் விநியோகிப்பில் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Taman Universiti Indah, Taman Perindustrian Seri Kembangan, Kawasan Perdagangan Seri Kembangan, Taman Sri Serdang, Serdang Perdana, Seri Kembangan, Taman Sri Andalas மற்றும் Astro போன்ற பகுதிகளில் நீர் விநியோகிப்பில் தடை ஏற்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அப்பகுதிகளிலுள்ள பொது மக்கள் நீரை முன்கூட்டியே சேமித்து வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
--------------------------------------------------------------
பொதுத்துறை நிறுவன பங்கு விற்பனையை நிறுத்திவைக்க அரசு முடிவு
இந்தியாவிலுள்ள முக்கியமான 13 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனையை நிறுத்திவைப்பது என இந்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. முக்கிய பங்குகளின் விற்பனை வெளிப்படையான முறையில் இருக்கிறது.
முறையான வழிமுறைகள் பின்பற்றப்படும்வரை, முக்கிய நிறுவன பங்குகள் விற்பனை இருக்காது என்று இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
பொதுத்துறை நிறுவனங்களின் சிறிய அளவிலான பங்கு விற்பனைகளைப் பொதுமக்களுக்கு அளிப்பது குறித்தும் அரசு பரிசீலனை செய்து வருவதாக அரசாங்கம் தரப்பிலிருந்து வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.
--------------------------------------------------------------
பாகிஸ்தானில் நிலநடுக்கம்
பாகிஸ்தானில் நேற்று முன்தினம் இரவு மலேசிய நேரப்படி 12.00 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கம் ரிக்டேர் அளவுகோலில் 5.5 என பதிவாகியது. நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அந்நாட்டில் பல இடங்களில் உணரப்பட்டது.
எனினும் இதனால் எந்தவொரு பாதிப்பும் இல்லை என தெரிய வந்துள்ளது. இந்நிலநடுக்கம் சுனாமி அலைகளை ஏற்படுத்தவில்லை என வானிலை ஆராய்ச்சி மையத்தினர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனிடையே ஜப்பான் நாட்டிலும் இரண்டு நாட்களுக்கு முன் நிலநடுக்கமும் சிறிய சுனாமி அலைகளும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

அவசர நிலைப் பிரகடனத்திற்கான நாடாளுமன்றம் இன்று கூடுகிறது

வெளியுறவு அமைச்சர் லட்சுமணன் கதிர்காமர் சுட்டுக் கொல்லப்பட்ட பின்பு, இலங்கையில் அமல்படுத்தப்பட்டுள்ள அவசர நிலைப் பிரகடனத்திற்கு ஒப்புதல் அளிக்க இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடுகிறது.
அவசர நிலைக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் தேவை என்பதால் இன்று இலங்கை நாடாளுமன்றம் கூடுகிறது. கொலையாளிகளை பிடிப்பதற்கு வசதியாக அவசர நிலை பிரகடனம் இரு மாதத்திற்கு நீட்டிக்கப்படும்.
இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் தேவை என்பதால் இக்கூட்டம் இன்று கூடுவதாக தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் படித்த இந்திய மாணவர் ஒருவர் ஹூஸ்டன் நகரில் உள்ள பூங்காவில் சுட்டுக் கொல்லப்பட்டு காரில் பிணமாக கிடந்தார். இச்சம்பவம் அமெரிக்க இந்தியர்களிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கொலையாளி குறித்து தகவல் தருபவர்களுக்கு ஐந்தாயிரம் டாலர் பரிசு வழங்கப்படும் என அமெரிக்க போலீஸ் துறை அறிவித்துள்ளது.
இரு தினங்களுக்கு முன்பு இதே இடத்தில் இந்திய பிரஜையான பொறியியலாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளனர்.
--------------------------------------------------------------
லீக் போட்டி இறுதிச் சுற்றில் இந்தியா பாகிஸ்தானைச் சந்திக்கிறது
எட்டு நாடுகள் பங்கேற்கும் ராபோ டிராபி ஹாக்கி தொடர் ஹாலந்தின் ஆம்ஸ்டெல்வீன் நகரில் நடக்கவிருக்கிறது. நேற்று முன்தினம் நடந்த இரண்டாவது லீக் போட்டியில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, ஜெர்மனியை எதிர்த்து விளையாடியது.
இதில் ஜெர்மனி 2-1 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற்றது. முன்னதாக, முதல் லீக் போட்டியில் இந்திய அணி, ஸ்பெயினிடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.
இதன் மூலம் இந்திய அணி இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது. இந்நிலையில் இன்று நடக்கும் மூன்றாவது மற்றும் கடைசி லீக் போட்டியில் இந்தியா பாகிஸ்தானைச் சந்திக்கிறது.

நன்றி வணக்கம்மலேசியா.காம்


மனோ.ஜி