PDA

View Full Version : ஆகஸ்டு 14 & 15-ம் தேதி பதிப்புகள்



இராசகுமாரன்
17-08-2005, 03:59 PM
நண்பர்களே..

மன்றத்தில் என்கோடிங்கில் நிகழ்ந்த பிழையால் ஆகஸ்டு 14 மற்றும் 15-ம் தேதி பதித்த பதிப்புகளை என்கோடிங் Unicode (UTF-8) வைத்து பார்த்தால் மட்டுமே தெரிகிறது, அல்லது அவை கட்டம் கட்டமாக தெரிகிறது.

நான் அவைகளை முடிந்த வரை திருத்தி வருகிறேன். உங்களுக்கு நேரம் கிடைத்தால் உங்கள் பழைய பதிப்புகளை திரும்பி பார்த்து, கொஞ்சம் திருத்தி விடுங்கள்.

திருத்தும் முறை:

1) உங்கள் பதிப்புக்கு செல்லுங்கள் (அவை கட்டம் கட்டமாக, அல்லது தூ..த்த்#துர்..தூ என்று தெரியலாம்)

2) Browser-ன் என்கோடிங்கை View --> Encoding --> Unicode (UTF-8) என்று மாற்றுங்கள்.

3) இப்போது அவை தமிழில் நன்றாக தெரியும். நீங்கள் தட்டச்சு செய்ததை தேர்வு (highlight) செய்யுங்கள், பிறகு Ctrl + C, or Copy செய்யுங்கள்.

4) உங்கள் பதிப்பின் கீழ் உள்ள Edit பட்டனை அழுத்தவும். அதில் தெரியும் முந்தைய பதிப்பின் மீது Ctrl + V, or Paste செய்யவும்.

5) இப்போது Browser-ன் என்கோடிங்கை பழையபடி View --> Encoding --> Western European (ISO) என்று மாற்றிக் கொள்ளுங்கள்.

நன்றி..

pradeepkt
17-08-2005, 04:27 PM
மிக்க நன்றி இராசகுமாரன்.
என்னுடைய சென்னைப் பாராயணத்தின் மூன்றாம் காதை இப்படி மாட்டி விட்டதென்று நினைக்கிறேன்....

kavitha
18-08-2005, 04:42 AM
மிக்க நன்றி இராசகுமாரன்.
என்னுடைய சென்னைப் பாராயணத்தின் மூன்றாம் காதை இப்படி மாட்டி விட்டதென்று நினைக்கிறேன்....
ஆமாம் பிரதீப். இப்போது தெளிவாக(!)ப் படிக்க முடிகிறது. நன்றி :)

மன்மதன்
18-08-2005, 04:48 AM
நன்றி நண்பரே...
அன்புடன்
மன்மதன்