PDA

View Full Version : காதல் பிசாசு



மன்மதன்
17-08-2005, 12:59 PM
ஒரே மூச்சில் ஹை பிட்சில் படியுங்க.. படிச்சிட்டு அடிக்க வராதீங்க..(அனைத்தும் மூழ்க முழுக்க கற்பனையே.)

-----------------------------------------------------------



நியூயார்க்..

டிசம்பர் 26 காலை ..

மொத்த அலுவலகமும் பரபரப்பாய் இருந்தது. காலை நேரம் எப்பவும் அப்படித்தான். அப்பொழுது எனக்கு இந்தியாவிலிருந்து ஒரு போன் கால். என்னவள் பண்ணினாள். இந்த காலை நேரத்தில் பண்ண மாட்டேளே என்று போனை எடுத்தவன், அதிர்ந்து போனேன். அவள் தண்ணிக்குள்ளேயிருந்து பேசுவது மாதிரி கேட்டது. ஒண்ணுமே புரியவில்லை. போன் கட் ஆனது. பிறகு பல தடவை நான் ட்ரை செய்தும் லைன் கிடைக்கவில்லை.

சிறிது நேரம் கழித்து, ஆபிஸில் பரபரப்பு. சுனாமி என்ற வார்த்தை அடிக்கடி காத்துவாக்கில் காதில் விழுந்தது. ஊரிலிருந்து இன்னொரு போன்கால் வந்தது. வீட்டிலிருந்து பேசினார்கள். தமிழ் நாட்டில் பல ஊர் உள்ளே கடல் தண்ணீர் புகுந்து நிறைய பேர் செத்து விட்டார்கள்.. அய்யகோ , சோனியா கூட இப்ப தண்ணிக்குள்ளாற இருந்து போன் பண்ணினாளே .. என்னாச்சு..ஏதாச்சு..?? நெஞ்சு பதறும் போதே, லைனில் வந்த என் தம்பி, 'அண்ணா, சென்னைக்கு அதிக பாதிப்பில்லை, நாம எல்லாம் பத்திரமாத்தான் இருக்கோம்.. ஆனால்..' நிறுத்தினான்.. 'டேய்...டேய்.. உடனே சோன்யா வீட்டிற்கு உன் பைக்ல போயி பாருடா..அவ எனக்கு போன் பண்ணினா, திருவான்மியூர்ல எப்படிடா நிலமை ??'

ஹாட்ர்பீட் எகிறிக்கொண்டிருந்தது.. சிறிது நேரம் மௌனத்திற்கு பிறகு அவன் சொன்னான் 'அவங்க குடும்பத்தோட வேளாங்கண்ணிக்கு போயிருக்காங்க, சுனாமில பாதி வேளாங்கண்ணி அழி..' போனை கட் செய்தேன்..

என் இதயத்துடிப்பு அதி வேகமாக ஓடியது. வேலை ஓடவில்லை. நிலை கொள்ளவில்லை. செல்போனில் சோனியா, அவள் அப்பா, தம்பி நம்பருக்கு விடாமல் ட்ரை பண்ணிக்கொண்டிருந்தேன். ஆபிஸில் என் நிலையை பார்த்து என்னை யாரும் தொந்தரவு செய்யவில்லை..

எல்லாம் முடிந்து விட்டது. தம்பி அடிக்கடி எனக்கு போன் போட்டு செய்தி கொடுப்பான். பாடி வந்தாச்சு.. தகனம் பண்ணியாச்சு.. எப்ப போன் பேசினாலும் அதற்கு பிறகு வரும் கண்ணீரை அடக்க மட்டும் முடியாது.. அவ இறப்பதற்கு முன்னாடி ஒரு தடவை கூட அவளை பார்க்க முடியலையே..அவ கூட பேச முடியலையே என்று அழாத நாளில்லை..

நாட்கள் ஓடியாச்சு.. வாழ்க்கையில் ஒரு பிடிப்பும் இல்லாமல் போகவே, ஆபிஸிற்கு அடிக்கடி லீவு போட்டு, தனியாக கடற்கரையோரமாக காரை நிறுத்தி, நாங்கள் பழகிய நாட்களை நினைத்து, நினைத்து பார்த்து... இப்படியாக நாட்கள் ஓட, என் அம்மாவின் பிடிவாதத்தால் ஆபிஸிற்கு லீவு போட்டு விட்டு சென்னைக்கு பறந்தேன்..

என்னுடைய தனிமை கொஞ்சம் கொஞ்சமாக விலகியது. குடும்பத்தாருடன் நிறைய நேரம் செலவு செய்தேன். என்னை வெளியே தனியாக போகதவாறு பார்த்துகிட்டனர். நண்பர்கள் 'எனக்கு ஆறுதல் எப்படி சொல்வது' என்று கூட தெரியாமல் விழித்தனர்.

ஒருநாள் பெசண்ட் நகர் பீச்சில் காற்று வாங்கலாம் என்று பைக்கை எடுத்துக்கொண்டு போனேன். அந்த பழைய ஞாபகங்கள் என்னை சுழற்றி சுழற்றி அடித்தன.. கடற்கரை முழுதும் உட்கார்ந்து பேசிய கணங்கள், அலை மாதிரி என் எண்ணங்களை அடித்துச்சென்றது..

யாரும் தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக, யாருக்கும் தெரியாம கண்ணுக்கு மறைவா சுனாமியில் புரட்டிப்போடப்பட்ட ஒரு படகின் மறைவில் அமர்ந்தேன்.

'சுண்டல் வேணுமா சார்?' என்ற பையனின் குரல் கேட்டு என் நினைவுகள் கலைந்து திரும்பி பார்த்தேன்.

'சார், எப்ப சார் வந்தீங்க..?

'என்னாப்பா, இங்கே கூட்டத்திலிருந்து ரொம்ப தூரம் தள்ளி ஒளிஞ்சி உட்கார்ந்திருக்கிறேன். இங்கே கூட வந்திட்டியே'

'சோனியா அக்கா என்னை போயி பார்க்க சொன்னிச்சி'

சுண்டலை என்னிடம் கொடுத்து விட்டு, என்னிடம் காசு வாங்கிக்கொள்ளாமலேயே அவன் சென்றான்.. சின்ன பையன் அவன், என் மேல் இரக்கம் காட்டுகிறேன் பேர்வழி என்று கொஞ்ச நேரம் கடலை வெறித்து பார்த்துவிட்டு சென்றான்..


http://img.photobucket.com/albums/v372/manmathan/beach.jpg

நானும் , கடலை வெறித்து பார்த்துக்கொண்டிருக்கும் போது, ஜாக்கிங் போயிகிட்டிருந்த ஒரு பெண் .. ரொம்ப களைத்து போயிருப்பா போலிருக்கு . என் அருகில் வந்து உட்கார்ந்தாள்..

'இங்கே உட்காரலாமா?' என்றாள்..

இந்த ஏரியாவிற்கு புதிதாக குடியேறியிருக்க வேண்டும். நான் பார்த்ததில்லை..தனியாக வந்திருக்க வேண்டும்.

'இட்ஸ் ஓகே' என்றேன்.

'இங்கே உட்காரலாமா?? '

'அஃப்கோர்ஸ்..!'

ஹ்ம்ம்ம்.. எந்த பெண்ணிடம் பேசினாலும் சோன்யாதான் அந்த பெண்ணின் முகத்தை ரிப்ளேஸ் பண்ணியிருப்பா.. இவளையும் விட்டு வைக்கவில்லை..அடிக்கடி சோன்யா முகம் வந்து போனது...

என் பக்கத்தில் உட்கார்ந்தவள், 'உங்களுக்கு இப்படி தனியாக உட்கார்ந்து கடலை ரசிக்க பிடிக்குமா' என்ற கேள்வியில் ஆரம்பித்து, குற்றால அருவி மாதிரி விடாம பேசிக்கொண்டேயிருந்தாள்.


http://www.i-needtoknow.com/nootka/photos/2001/2/images/029_third_beach_sitting.jpg

கையேந்திபவன் இட்லியில் ஆரம்பித்து, தாஜ் ஹோட்டல் 'பென்னெ -பாஸ்தா' வரை, தேவாவின் 'கவலைப்படாதே சகோதரா'விலிருந்து, ஆகோன் 'லோலனி' வரை , கருப்பு வெள்ளை படத்திலிருந்து, இன்னும் 'வார் ஆஃப்த வேர்ல்ட்' வரை சகட்டு மேனிக்கு பேசினோம். நேரம் போனதே தெரியவில்லை.. 8 மாதமாக, மணிரத்னம் பட ஹீரோ மாதிரி ஓரிரு வார்த்தையில் பேசிய நானா, இப்படி.. ஆச்சரியமாக இருந்தது.

இரவு மணி 11 ஆனது.. இப்படியே இன்றிரவு முழுதும் பேசிக்கொண்டேயிருக்கலாம் போலிருந்தது, 'வீட்டில் தேட மாட்டார்களா ?' என்றேன்.. புன்னகைத்தாள்..

எனக்கு வீட்டிலிருந்து போன் கால் வந்தது. 'இந்த நேரத்தில் எங்கேயிருக்கிறாய்' என்று கேட்டார்கள். 'கடற்கரையில் என்றேன்'..

அடுத்த 10 நிமிடத்தில் என் தம்பி தூரத்தில் வருவது தெரிந்தது. உடனே அவள் புறப்பட்டு சென்றாள். புறப்படுவதற்கு முன் 'சோனியா என் நெருங்கிய தோழி' என்றாள்.. 'எப்படி?' என்றேன். அதற்கும் சிரித்து விட்டு சென்று விட்டாள்.

என் தம்பி என்னை தள்ளாத குறையாக தள்ளிக்கொண்டு, வீடு வந்து சேர்த்தான்.. வரும் வழியெங்கும் இந்த பெண்ணின் நினைவாக இருந்தது. 'அட பெயரை கூட கேட்காமல் விட்டு விட்டோமே ' மனசு துடித்தது.

சோனியாவை எடுத்துகிட்ட கடவுள், இவளை அனுப்பியிருக்கிறார் என்று நினைத்தேன்... அப்புறம் தான் தெரிந்தது..இவளை கடவுள் அனுப்பவில்லை.. சோனியாதான் அனுப்பியிருக்கா...


வீடு வந்து சேர்ந்ததும் முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்துக்கொண்டு என் தம்பி ஆசுவாசப்படுத்திக்கொண்டு அந்த வாக்கியத்தை சொல்ல.. அனைவரின் முகத்திலும் கவலை ரேகை..

'கடற்கரையில் தனியாக பேசிக்கொண்டிருந்தான்' என்று என் தம்பி சொல்லவும் , அனைவரும் என்னை சூழ்ந்து கொண்டனர்.

'என்னடா இது, தனியாக பேசினாயாமா?? யார் கூட பேசிக்கிட்டிருந்தே, அந்த சோனியாவா??'

'எப்படிமா அவ கூட பேச முடியும், இது இன்னொரு பொண்ணு, நம்ம ஏரியாவுக்கு புதுசா குடியேறியிருக்கு, நாளைக்கு கூட்டிவர்ரேன்'..

பையன் பழைய நியாபகத்திலிருந்து , மாறி வருவது குறித்து சந்தோசப்பட்டவர்கள் அவன் அடுத்து சொன்னது கேட்டு அதிர்ந்து போனார்கள்.

'நம்ம சத்யாவை பார்த்தேன்?'

'எந்த சத்யாடா??'

'அதான் நம்ம வீட்டிலே வேலை செய்தாங்களே ஒரு அம்மா, அவங்களோட பையன், பீச்ல சுண்டல் கூட விக்கிறானே..சின்ன வயசிலே நம்ம வீட்டிலேதானே விளையாடிகிட்டிருப்பான்...'

'என்னண்ணே, அவன்தான் சுனாமியில செத்து போயிட்டானே..அதுவுமில்லாம நீ எந்த படகு கீழே உட்கார்ந்திருந்தியோ அதே படகுலதான் சிக்கி உசிரை விட்டான்...அது மட்டுமில்ல, அந்த படகிலே சிக்கி ஜாக்கிங் போயிகிட்டிருந்த இன்னொரு பெண்ணும் செத்து போச்சி..'

நான் திகைச்சி நின்றேன்.

அப்பவே தெரிந்தது, என் அருகில் யாரோ நின்று, நான் பேசியதை ரசித்துகிட்டேயிருந்ததை கவனிக்க தவற விட்டிருந்தேன்..

-
மன்மதன்

pradeepkt
17-08-2005, 04:16 PM
அட...
மன்மதா கலக்கல் கதையப்பு...
கடைசியில ஒரு பன்ச் வச்சீங்களே... அருமை அருமை.
ஏன்யா நிறைய எழுத மாட்டேங்கறீங்க.?

சுவேதா
18-08-2005, 01:41 AM
மன்மதன் கதை சூப்பர் ஆனால் கொஞ்சம் பயமாகவும் இருக்கு அவர் ஆவியுடனா கதைதார்???

mukilan
18-08-2005, 01:59 AM
ஆவி இல்லை சுவேதா! காதல் பிசாசு, அழகான ராட்சசி,!தமிழ் கவிஞர்கள் ரொம்பவே மாறிட்டாங்க பாருங்க. (அழகிய அசுரா) திட்டும் வார்த்தைகளில் அன்பை வெளிப்படுத்தும் இதை வஞ்சப் புகழ்ச்சி அணியாகக் கொள்ளலாமா? தமிழறிஞர்களே விளக்குங்கள்.

உதயா
18-08-2005, 04:08 AM
மன்மதன் சூப்பர்... முதல் தொகுப்பில்.. கண் கலங்கிவிட்டது. இது கதையாக எடுக்கமுடியவில்லை. இது ஒரு உண்மை சம்பவம் போல் உள்ளது நண்பரே. தாங்கள் இன்னும் இது போல் எழுதுங்கள். நன்றி

kavitha
18-08-2005, 04:40 AM
இப்ப தான் மன்மதனின் கதைகள் குறைந்துவிட்டன என்று சொல்லி அங்கலாய்த்தேன். எனது குறை தீர்ந்தது மன்மதன். கதையைப்படிச்சிட்டு அப்புறம் சொல்றேன்.

gragavan
18-08-2005, 09:05 AM
வா மம்முதா.....பேய்க்கதையரசன் பட்டம் கொடுக்கலாம் உனக்கு. பிரமாதப் பேய்க்கதை.

ராட்சசி, அசுரா, அரக்கா என்றெல்லாம் கொஞ்சலாம். தப்பில்லை. சூர்ப்பனகை கூட அழகான ராட்சசிதான். சூரபதுமனும் அழகிய அசுராதான். இவங்கள விவரிக்க தமிழ்ப் புலவர்கள் பாட்டுக்கு மேல பாட்டு எழுதீருக்காங்க.

மன்மதன்
18-08-2005, 09:12 AM
அனைவருக்கும் நன்றி.. இது யோசித்த உடனே , உடனே ஒரே மணி நேரத்தில் எழுதியது........ நன்றாக வந்திருப்பதாக மனதில் பட்டதால் பதித்தேன்.... அதுவும் வேற மாதிரி கொடுக்கலாம் என்றிருந்தேன்.. இப்படியாகி விட்டது. எனக்கு 'The Ghost' படம் ரொம்ப பிடிக்கும்.
அன்புடன்
மன்மதன்

kavitha
18-08-2005, 11:01 AM
சுனாமியின் மீள்பார்வைக்குள் காதல், பாசம், நேசம், இரக்கம், கருணை கூடவே பயத்தையும் அள்ளித்தெளித்திருக்கிறீர்கள்.
கதை விறுவிறுப்பா நல்லா இருந்துச்சு! காதல் பிசாசு - இரட்டைப்பிசாசு.
( அதுசரி மன்மதா.. பிசாசு கூட ரெண்டு வேண்டுமா? :D )

மன்மதன்
18-08-2005, 11:47 AM
சுனாமியின் மீள்பார்வைக்குள் காதல், பாசம், நேசம், இரக்கம், கருணை கூடவே பயத்தையும் அள்ளித்தெளித்திருக்கிறீர்கள்.
கதை விறுவிறுப்பா நல்லா இருந்துச்சு! காதல் பிசாசு - இரட்டைப்பிசாசு.
( அதுசரி மன்மதா.. பிசாசு கூட ரெண்டு வேண்டுமா? :D )

அடிப்பாவி கவி.. அடக்கி வாசி..:rolleyes: :rolleyes:
அன்புடன்
மன்மதன்

gragavan
18-08-2005, 01:32 PM
சுனாமியின் மீள்பார்வைக்குள் காதல், பாசம், நேசம், இரக்கம், கருணை கூடவே பயத்தையும் அள்ளித்தெளித்திருக்கிறீர்கள்.
கதை விறுவிறுப்பா நல்லா இருந்துச்சு! காதல் பிசாசு - இரட்டைப்பிசாசு.
( அதுசரி மன்மதா.. பிசாசு கூட ரெண்டு வேண்டுமா? :D )மன்மதனாச்சே கவிதா..............

மன்மதன்
25-08-2005, 07:07 AM
இது சாதா மன்மதன்தான்பா..ஸ்பெஷல் இல்லை..:D

pradeepkt
25-08-2005, 07:44 AM
இது சாதா மன்மதன்தான்பா..ஸ்பெஷல் இல்லை..:D
என்னப்பா ராயர் காப்பி கிளப்பில சாதா தோசை, ஸ்பெஷல் ரவான்னு சொல்ற மாதிரி சொல்ற:D

மன்மதன்
25-08-2005, 08:01 AM
ராயரா இல்லை நாயரா?? :D :D
ராயப்பர்
மன்மதன்

இளசு
20-10-2005, 10:46 PM
சுஜாதா எழுதிய சில கதைகளைப் படித்தால் வரும் தாக்கம் - இறுதி முடிச்சில்.
அருமை மன்மதன்.
யூகிக்காத முடிவு. அட என வாசகனை அசர வைக்கும் யுக்தி.
வெற்றிகரமான சிறுகதை இது. பாராட்டுகள்.

poo
21-10-2005, 10:14 AM
அருமை மன்மதன்..

அண்ணன் சொல்வதுபோல சுஜதாவின் பாதிப்பு...

எழுபது வயசுல உன்னை யாரும் அடிச்சுக்க முடியாதப்பூ!!

Narathar
21-10-2005, 10:43 AM
சுனாமியின் சோகத்தையும்
காதலின் வேதனையையும்
கலந்து கொடுத்த கதாசிரியருக்கு
வாழ்த்துக்கள்..............

ஸூப்பரப்பு!!! இன்னும் எழுதுங்கள்

Shanmuhi
09-11-2005, 07:35 PM
கதை நன்றாக இருக்கின்றது மன்மதன்.

இளந்தமிழ்ச்செல்வன்
10-11-2005, 07:45 PM
இதை படிக்கும் போது மணி இரவு 2.13. கொஞ்சம் கலக்கி போட்டீங்கப்பு (கதைய சொன்னேன் மன்மதன்).

அனைத்தும் கலந்து அருமையாக சொல்லியிருக்கீங்க. வாழ்த்துக்கள்

அறிஞர்
11-11-2005, 03:27 AM
சுனாமி வைத்து இப்படி ஒரு கதை கட்டி விட்டீர்... தொடருங்கள் அன்பரே

மன்மதன்
13-11-2005, 09:22 AM
நன்றி நண்பர்களே.. கூடிய விரைவில் அடுத்த அட்டகாசமான கதையுடன் சந்திக்கிறேன்.. படித்து உற்சாகமூட்டிய அனைவருக்கும் நன்றிகள்..........

மயூ
16-04-2006, 05:35 AM
கலக்கல் மன்மதன். இப்படிப்பல கதை எழுதுங்கள். நான்கூட் சுனாமியை நேரில் பார்த்தவன் அதனால் கதையை வாசிக்கயில் அடிமனதை வருடியது. பேய் என்றாலும் பரவாயில்லை. உங்களுடன் அன்பாகத்தான் பேசியது இல்லையா?:p

ஓவியா
18-07-2008, 10:16 AM
சொன்ன வார்த்தை தவறாமல், ஒரே மூச்சில் படித்தேன்.

மன்மதா கதை கலக்கலா இருக்கு.

கடைசி பஞ்'தான் சூப்பர். :)

asok_03
01-09-2008, 01:47 PM
மிக மிக அருமையான படைப்பு, சுனாமியால் இழந்த தன் காதலியை வைத்து மிக அருமையாக சொல்லியிருக்கிறீர். ஒவ்வொரு வரியிலும் ஒரு மர்ம முடிச்சு. மிகவும் ரசித்து படித்தேன் வாழ்த்துக்கள் மன்மதன்.

arun
06-09-2008, 01:28 PM
சூப்பரான ஒரு கதை இத்தனை நாட்கள் எப்படி கண்ணில் படாமல் போனது என்று தெரியவில்லை உண்மையில் அருமையான கதை

MURALINITHISH
17-09-2008, 08:49 AM
அன்று ஜாக்கிங் வந்தவள் இன்றும் அங்கே ஜாக்கிங் செய்து கொண்டிருக்கிறாள் உண்மைதான் சோன்யாதான் அவளை அனுப்பியிருப்பள் ஏன் என்றால் அவளும் அங்கேதானே இருக்கிறாள்