PDA

View Full Version : ஆகஸ்ட் 17, புதன் கிழமை மலேசியாவிலிருந்து உல&#Mano.G.
17-08-2005, 01:21 AM
ஜப்பானில் மாபெரும் பூகம்பம்: சுனாமி அலைகள் தாக்கின
ஜப்பானில் கடலுக்கடியில் நேற்று மிக பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இந்த பூகம்பத்தைத் தொடர்ந்து பசிபிக் கடலில் உருவான சிறிய சுனாமி அலைகள் ஜப்பான் கடலோரப் பகுதிகளைத் தாக்கின. வட கிழக்கு ஜப்பானிலுள்ள மியாகியிலிருந்து 80 கி.மீ. தொலைவில் பசிபிக் கடலுக்கு அடியில் 20 கி.மீ. ஆழத்தில் நேற்று காலை மலேசிய நேரப்படி 11.00 மணியளவில் இந்த பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 7.2 ஆகப் பதிவாகியுள்ள. இந்த பூகம்பத்தால் டோ க்கியோ, இவாட்டா, கியோடோ , சென்டாய் உட்பட ஜப்பானின் பல்வேறு பகுதிகளும் குலுங்கின.
கடற்கரை நகரமான சென்டாயில் உள்ளரங்க நீச்சல் குளத்தின் கூரை இடிந்து விழுந்ததில் அதில் சிக்கி 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த பூகம்பத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. பூகம்பம் குறித்து அறிந்ததும் வடக்கு ஜப்பானில் பாதாள ரயில்கள் உடனடியாக நிறுத்தப்பட்டன. டோக்கியோவிலுள்ள ஹனேடா விமான நிலையத்தில் தற்காலிகமாக விமானப் போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்து பொதுமக்கள் அவசர அவசரமாக வெளியேறி வருகின்றனர்.
வடக்கு ஜப்பானிலுள்ள ஹொக்கெய்டோ தீவிலும் நேற்று காலை லேசான பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது 4.9 ஆகப் பதிவானது. அடுத்தடுத்து ஜப்பானில் நேற்று ஏற்பட்ட இந்த பூகம்பங்களால் அங்கு மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே பூகம்பம் ஏற்பட்ட 18 நிமிடங்கள் கழித்து, டோ க்கியோவிலிருந்து 350 கி.மீ.தொலைவிலுள்ள அயுக்காவா பகுதியை சுனாமி அலைகள் தாக்கின.
சுமார் 10 மீட்டர் உயரத்திற்கு இந்த அலைகள் எழும்பின. பிற்பகலில் மேலும் சுனாமி அலைகள் உருவாகலாம் என்று வானிலை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். சுனாமி அலைகளைச் சமாளிக்கும் விதத்தில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
--------------------------------------------------------------
அரசாங்க மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை பிரிவு
அடுத்த ஆண்டு முதல் அனைத்து அரசாங்க மருந்தகங்களிலும் மருத்துவமனையிலும், இரத்த அழுத்தம் மற்றும் சக்கரை வியாதி உள்ள நோ¡ளிகளுக்கு சிறப்பு சிகிச்சை பிரிவு அமைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் Datuk Chua Soi Lek தெரிவித்தார்.
இச்சிறப்பு சிகிச்சை பிரிவை மருத்துவர்கள் தாதிகள் மற்றும் ழியர்கள் வழி நடத்துவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார். தற்போது மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களில் 30 விழுக்காட்டினர் இரத்த அழுத்தம் மற்றும் சக்கரை வியாதி உள்ளவர்கள் எனவும், புதிய சிகிச்சை பிரி திறப்பத்தின் வழி அவர்கள் சிகிச்சை பெற சுலபமாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதனிடையே, நாடு முழுவதும் 8 லட்சம் பேர் சக்கரை வியாதி நோயால் அவதிப்படுவதாகவும், 3 மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் இரத்த அழுத்த நோயால் அவதிப்படுவாதாகவும் அவர் குறிப்பிட்டார்.


நாட்டின் எதிர்காலம் இன்றைய இளம் வயதினர் கையில்......
நாட்டின் எதிர்கால தலைவர்களாகவும் மக்களுக்கு நல்வழிகாட்டிகளாகவும் திகழவிருக்கும் இன்றைய இளம் தலைமுறையினர் தீய செயல்களிலிருந்தும் ஒழுங்கற்ற கலாச்சாரத்திலிருந்தும் முழுமையாக விடுபட வேண்டும் என பிரதமர் துறை அமைச்சர் Datuk Dr Maximus Ongkili தெரிவித்தார்.
உலகமயமாக்குதல் மற்றும் 2020 தூரநோக்கு திட்டத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கும் நம் நாட்டின் முன்னேற்றமும் சுபிட்சமும் நற்பண்புகள் மற்றும் ஒழுக்கம் நிறைந்த குடிமகன்கள் கைகளில்தான் உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
இவ்வாண்டின் முதல் 6 மாதங்களில் நாடளவில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 2,784 பேர்களில் 2,042 பேர் இளைஞர்களாவர் என குற்றச்செயல் தடுப்பு வாரிய தலைவரான Datuk Dr Maximus Ongkili தெரிவித்தார்.பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைவு
நாட்டில் இருக்கும் 10 ஆயிரம் ஆரம்பப் பள்ளிகளில் சுமார் 23 விழுக்காட்டு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 150-க்கும் குறைவாக உள்ளதாக ஆய்வின் வழி தெரியவந்துள்ளது.
SKM என்று அழைக்கப்படும் குறைவான மாணவர்களின் எண்ணிக்கையை கொண்ட பள்ளிகள் பெரும்பாலும் கிராமப்புறங்களில் இருப்பதாகவும், அங்கு போதுமான சாலை வசதிகளும் இல்லாமல் இருப்பதாகவும் கல்வித்துறையின் அமைச்சர் Datuk Seri Hishammuddin Tun Hussein தெரிவித்தார்.
மேலும் சபா, சரவாக் மற்றும் பேராக் மாநிலத்தில் மட்டும் அதிகமான SKM பள்ளிகள் இருப்பதாக அவர் சுபாங் ஜெயாவில் நிகழ்ச்சி ஒன்றைத் திறந்து வைத்த போது செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


Perkeso-Ţ புதிய முடிவு

மலேசிய சமூக பாதுகாப்பு அறவாரியமான Perkeso,தனியார் மையங்களில் சிறுநீரக கோளாறு தொடர்பாக சிகிச்சை பெறுபவர்களுக்கு வருடாந்திர நிதி தொகையாக 500 ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்துள்ளது.
மருந்துகள் மற்றும் ஊசி முறையிலான சிகிச்சைமுறைக்கான செலவுத்தொகை அதிகரித்து வருவதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மனிதவள அமைச்சர் Datuk Dr Fong Chan Onn தெரிவித்தார்.
Perkeso காப்புறுதி உள்ளவர்கள் நாடளவில் உள்ள சுமார் 141 ரத்த சுத்திகரிப்பு மையங்களில் சிகிச்சை பெறலாம்.
இதற்குமுன், Perkeso காப்புறுதி உள்ளவர்களில் சிறுநீரக கோளாறு தொடர்பாக சிகிச்சை பெறுபவர்களுக்கு வருடாந்திர நிதி தொகையாக 110 ரிங்கிட் மட்டுமே ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


டீசல் எண்ணெய் கடத்தல் முறியடிப்பு
கோத்தா பாருவில் Kubor கடற்படை போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனையில் 2,000 ரிங்கிட் மதிப்புள்ள 1,200 லிட்டர் டீசல் எண்ணெய் கைப்பற்றப்பட்டது.
இந்த டீசல் எண்ணெய் அண்டை நாட்டிலிருந்து கடத்திக் கொண்டு வரப்பட்டதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக கடற்படை அதிகாரி DSP Ahmad Abu Bakar தெரிவித்தார்.
Ops Jejak 2 எனப்படும் நடவடிக்கையில் போலீசார் இந்த டீசல் எண்ணெயைக் கைப்பற்றினர். இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் நான்கு ஆடவர்களைப் போலீசார் இதுவரையில் கைது செய்துள்ளனர். இதுபோன்ற கடத்தல் சம்பவங்கள் தற்பொழுது அதிகரித்து வருவதாக அவர் கூறினார்.
--------------------------------------------------------------
தீவிரவாதிகளின் ஊடுருவலை முறியடிக்க நடவடிக்கைகள்
தீவிரவாதிகளின் ஊடுருவலை முறியடிக்கும் வகையில், கோவை மாநகரக் காவல் துறையில் அதிவிரைவுப் படை (கமாண்டோ ) பிரிவு தொடங்கப்படுகிறது. இது தொடர்பாக, கோவை ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப் பயிற்சியும் திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் அப்படையினருக்கு அளிக்கப்படும் என தெரிய வந்துள்ளது.
சந்தன மரக் கடத்தல் வீரப்பன் மற்றும் அவரது கும்பலைப் பிடிக்க அமைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படையில் பணியாற்றியவர்கள் இந்த கமாண்டோ படையில் இடம் பெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
--------------------------------------------------------------
விடுதலை புலிகள் ஊடுருவும் அபாயம்
இலங்கையில் வெளியுறவு அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் சுட்டுக் கொல்லப்பட்டத்தை தொடர்ந்து இலங்கையில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையில் இருந்து விடுதலை புலிகளும் தீவிரவாத அமைப்பினரும் தமிழக கடலோர பகுதிகளில் ஊடுருவும் அபாயம் உள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழக அரசு கடலோர பகுதிகளில் உஷார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.


மன்மோகன்சிங் புகார்களுக்கு பாகிஸ்தான் மறுப்பு
இந்திய சுதந்திர தின விழாவின் போது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறிய புகார்களுக்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்திருக்கிறது. பாகிஸ்தானிலோ, பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலோ தீவிரவாதிகள் முகாம் எதுவும் இல்லை. தீவிரவாதிகளை ஒடுக்கும் பொறுப்பு இரு நாடுகளுக்குமெ இருக்கிறது.
எங்கள் மீது இந்தியா பழி போடுவதால் சமரச முயற்சியில் இருந்து நாங்கள் பின் வாங்கமாட்டோம் என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் பிரதமர் மன்மோகன் சிங் கூறிய புகார்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை என அவர் கூறியுள்ளார்.


அமெரிக்காவில் இந்திய பொறியியலாளர் சுட்டுக் கொலை
அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் பொறியியலாளராக வேலை செய்து வந்த இந்திய பிரஜை ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கி குண்டுகள் துளைத்த நிலையில் அவரது உடல் காருக்குள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இச்சம்பவம் ஹூஸ்டன் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பணத்துக்காகவே இக்கொலை நடந்ததாக கூறப்படுகிறது. கொலையாளியைத் தேடும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
--------------------------------------------------------------
ருபென்ஸ் பார்ச்செல்லோ ஃர்ராரி (Rubens Barrichello, Ferrari) அணியிலிருந்து விலகிவுள்ளார்
பார்முலா 1 (Formula 1) கார் பந்தைய போட்டியாளர் ருபென்ஸ் பார்ச்செல்லோ, ஃர்ராரி (Rubens Barrichello, Ferrari) அணியில் இருந்து விலகி பார் ஹண்டா (BAR-Honda) அணியில் சேர உள்ளார். பிராசில் (Brazil) நாட்டை சேர்ந்த 33 வயது பார்ச்செல்லோ (Barrichello), ஒன்பது முறை கிராண்ட்ஸ் பிரிக்ஸ் (Grands Prix) போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
தற்போது அவர் BAR-Honda அணியில் பங்கேற்பதை குறித்து கையெழுத்திட்டுள்ளார். மேலும், BAR-Honda அணியில் பங்கேற்பதை குறித்து தாம் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும், Ferrari அணிக்கு தமது நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாகவும் Barrichello தெரிவித்தார்.


நன்றி வணக்கம்மலேசியா.காம்.


மனோ.ஜி

pradeepkt
17-08-2005, 06:50 AM
செய்திகளுக்கு நன்றி மனோ அண்ணா!