PDA

View Full Version : ஆகஸ்ட் 16, செவ்வாய்கிழமை மலேசியாவிலிருந்தMano.G.
16-08-2005, 11:00 AM
இஸ்லாமியர்களுக்கு சோம்பேறித்தனம் கூடாது - பிரதமர்
இஸ்லாமியர்கள் ஆக்ககரமான செயல்திட்டங்களை வகுப்பவர்களாகவும் அறிவியல் தொழில்நுட்பத்திற்கு வித்திடுபவர்களாகவும் திகழ வேண்டுமென பிரதமர் Datuk Seri Abdullah Ahmad Badawi தெரிவித்தார்.
வெறுமனே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துபவர்களாகவும் பார்வையாளர்களாக மட்டுமே இருக்காமல் மனித குலத்திற்கு பயனளிக்கக்கூடிய வகையில் தொழில்நுட்பத்தை உருவாக்குவது தொடர்பாக சிந்திக்க வேண்டும் எனவும் பின், செயல்திட்டங்களில் இறங்க வேண்டும் எனவும் பிரதமர் இஸ்லாமிய மக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
சோம்பேறித்தனம்,சிந்திக்காமல் இருத்தல், முன்னேற எண்ணம் கொண்டிராதது ஆகியவை இஸ்லாம் மக்களை மேன்மையுற வைக்காது என அவர் KUALA TERENGGANU-வில் Tilawah Al-Quran என்ற நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தபோது செய்தியாளர்களிடம் கூறினார்.
-------------------------------------------------------------
பேராசிரியர்கள் குத்தகை முறையில் வேலையைத் தொடரலாம்
பணி ஓய்வு பெற்ற பொது உயர்கல்வி மையங்களின் பேராசிரியர்கள், கண்டிப்பாக இன்னும் பத்து வருடக்காலம் குத்தகை முறையில் அதே உயர்கல்வி மையங்களில் வேலையை தொடரலாம் என உயர்கல்வித் துறையின் துணை அமைச்சர் Datuk Fu Ah Kiow தெரிவித்தார்.
மேலும், பொது உயர்கல்வி மையங்களில் மட்டுமல்லாது தனியார் உயர்கல்வி மையங்களிலும் அவர்கள் தங்களின் பணிகளை தொடரலாம் என மலேசியா புத்ரா பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, அதிக அனுபவங்கள் மற்றும் திறமைகளை பெற்ற பேராசிரியர்கள் பலர், வயதின் காரணமாக பணி ஓய்வு பெறுவதால், பல உயர்கல்வி நிலையங்கள் அவர்களின் சேவைகளை இழக்க நேரிடுவதாக பேராக் சுல்தான் Sultan Azlan Shah கருத்து தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல், பேராசிரியர்கள் 56 வயதில் பணி ஓய்வு பெறுவதை குறித்து மீண்டும் ஆராய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.


2020-ஐ நெருங்கிக் கொண்டிருக்கும் மலேசியா
ஆகஸ்ட் மாதம் 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் நடைப்பெற்றுவரும் அனைத்துலக ஆலோசகக் குழுவிற்கு பிரதமர் Datuk Seri Abdullah Ahmad Badawi தலையேற்றுள்ளார்.
2020 தூரநோக்கு இலக்கை நோக்கி சென்றுக்கொண்டிருக்கும் மலேசியாவிற்கான திட்டவரைவுகள் மற்றும் செயல்திட்டங்கள் தொடர்பாக விவாதிக்க இக்குழுவிற்கு பிரதமர் தலைமையேற்கின்றார்.
நாட்டின் பொருளாதார மன்றமும் இக்குழுவில் கலந்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.நிதி,அறிவியல் மற்றும் பொருளாதாரம் தொடர்பான வல்லுநர்களும் இக்குழுவில் கலந்துக் கொள்கின்றனர்.
ஆசிய மற்றும் உலகளாவிய நிலவரங்களை எடுத்துரைக்கவும் மலேசியா எதிர்கொண்டுள்ள சவால்களைப் பற்றி விவாதிக்கவும் அத்தரப்பினர் ஆலோசனைகளை வழங்கவிருக்கின்றனர்.


காற்றுத்தூய்மைக்கேட்டிற்கு முற்றுப்புள்ளியா?
கடந்த சில தினங்களாக நாட்டில் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட கடுமையான காற்றுத்தூய்மைக்கேடு தற்போது வெகுவாக குறைந்து வருகின்றது.நேற்று பல மாநிலங்களில் பெய்த மழையினால் புகைமூட்டம் கலைந்து தெளிவான வானிலை தென்பட்டது.
நாட்டில் காற்றுத்தூய்மைக்கேடு ஏற்பட்ட 51 இடங்களில்,தற்போது 5 இடங்களில் மட்டுமே காற்றுத்தூய்மைக்கேடு சற்று கடுமையாக உள்ளது என மலேசிய வானிலை இலாகா அறிக்கை வெளியிட்டுள்ளது.
Kangar, Alor Setar, Sungai Petani, Perai மற்றும் Seri Manjung ஆகிய இடங்களில் முறையே 106, 112, 103, 133, 151 என காற்றுத்தூய்மைக்கேடு குறியீட்டின் அளவு காட்டுகின்றது என தகவல்கள் தெரிவிக்கின்றன.


9-வது மலேசியத் திட்டத்தின் கீழ் R&D-க்கு அதிகமான நிதி ஒதுக்கீடு
9-வது மலேசியத் திட்டத்தின் கீழ் அரசாங்கம் R&D எனப்படும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு துறைக்கு வழங்கும் ஒதுக்கீட்டை இன்னும் அதிகரிக்கும் என பெரிதும் எதிர்பார்ப்பதாக மலேசிய உயிரியல் தொழில்நுட்பக் கழகம் அறிவித்துள்ளது.
R&D-யின் மேம்பாட்டிற்கு அதிகமான நிதி ஒதுக்கீடு தேவைப்படுவதாக அதன் நிர்வாகி Datuk Dr Salleh Mohd Nor தெரிவித்தார்.
R&D உயிரியல் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு பெரும் பங்கையாற்றுவதால் அதன் தொடர்பான மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அரசாங்கம் அதிகமான நிதி ஒதுக்கீட்டை 9-வது மலேசியத் திட்டத்தின் கீழ் வழங்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.


ஈப்போவில் சூதாட்டக் கும்பல் முறியடிப்பு
ஈப்போவில் சூதாட்ட மையம் ஒன்றில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் ஒரு பெண் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து போலீசார் இந்த திடீர் சோதனையை நடத்தியதாக ஈப்போ வட்டார தலைமை போலீஸ் அதிகாரி ACP Che Sab Hanafiah தெரிவித்தார்.
குறிப்பிட்ட அந்த மையத்திற்கு விரைந்துச் சென்ற போலீசார் அவ்விடத்தைச் சுற்றி வளைத்து 9 ஆடவர்களையும் ஒரு பெண்மணியையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் 28 வயது முதல் 48 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிய வந்துள்ளது. அவர்களிடமிருந்து 12,938 ரிங்கிட் ரொக்கம், 16 கைத்தொலைபேசி, மற்றும் கணக்கிடும் சாதனங்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டன.
--------------------------------------------------------------
சுதந்திர தின விழா:பிரதமர் உரையின் முக்கிய அம்சங்கள்
நேற்று நடைபெற்ற சுதந்திர தினத்தை ஒட்டி பிரதமர் மன்மோகன்சிங் டில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். வேலைவாய்ப்புகள் மேலும் அதிகரிக்கப்படும் என்றும் கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் என்று அவர் கூறினார்.
வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதன் மூலம் இந்தியாவில் வறுமை ஒழிக்கப்படும்.; நாட்டின் பொருளாதாரம் எதிர்பாராத அளவு அதிகரித்து வருகிறது; இந்த வளர்ச்சியை அடுத்த 10 ஆண்டுகளுக்கு தொடர்ந்து பராமரித்தால்தான் வறுமை, அறியாமை, பசி, நோய் ஆகியவற்றை ஒழிக்க முடியும் என அவர் கூறினார்.
மக்களுக்கும் அரசுக்கும் இடையே தற்போது வேலி எதுவும் இல்லாததால் புதிய இந்தியாவை உருவாக்கி சாதனை படைப்போம் என பிரதமர் தமது உரையில் தெரிவித்தார்.
--------------------------------------------------------------
புலிகள் அலுவலகம் மீது குண்டுவீச்சு
இலங்கையில் மட்டக்களப்பு பகுதியில் உள்ள விடுதலைப் புலிகள் அலுவலகத்தில் நேற்று நண்பகலில் சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டன. இதனால் அங்கு பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் கதிர்காமர் வெள்ளிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கதிர்காமரின் கொலைக்கு புலிகள் தான் காரணம் என்று இலங்கை அரசு குற்றம் சாட்டுகின்ற போதிலும் அதை புலிகள் மறுத்துள்ளனர்.
இந்நிலையில் இலங்கையில் மட்டக்களப்பு பகுதியிலுள்ள விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு அலுவலகத்தின் மீது நேற்று குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் அலுவலகத்தின் மீது சரமாரியாக குண்டுகளை வீசினர். அப்போது அந்த அலுவலகத்தினுள் புலிகளின் அரசியல் பிரிவை சேர்ந்த 5 பேர் இருந்தனர். இவர்கள் அனைவரும் இத்தாக்குதலில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பினர். இத்தாக்குதலில் அலுவலகத்திற்கு சேதம் ஏற்பட்டது. மேலும் அங்கிருந்த பொருட்கள் மற்றும் ஆவணங்கள் சேதமடைந்தன.
தங்கள் அலுவலகம் மீது நடந்த தாக்குதலுக்கு இலங்கை ராணுவம் தான் காரணம் என்று விடுதலைப் புலிகள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இதற்கிடையே கதிர்காமரின் கொலைக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என புலிகள் கூறியுள்ளதை ஏற்க இலங்கை அரசு மறுத்துள்ளது.


ஈராக்கில் குண்டு வெடிப்பு: 5 அமெரிக்க வீரர்கள் பலி
தீவிரவாதிகள் சாலை ஓரம் புதைத்து வைத்த வெடிகுண்டுகளில் சிக்கி அமெரிக்க பாதுகாப்பு படை வீரர்கள் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இத்தாக்குதலில் மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர்.
கடந்த வெள்ளியன்று பாக்தாத்திலிருந்து 180 கி.மீ., தொலைவில் உள்ள தும்ஸ் நகரில் அமெரிக்க படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தீவிரவாதிகள் புதைத்து வைத்த சாலையோர வெடிகுண்டு வெடித்ததில் மூன்று அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் நடைபெற்ற 24 மணி நேரத்தில் பாக்தாத் நகரிலும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த
அமெரிக்க ராணுவ வாகனம், தீவிரவாதிகள் புதைத்து வைத்த வெடிகுண்டில் சிக்கியது. இதில் அமெரிக்க படைவீரர் ஒருவர் உயிரிழந்தார்.
நேற்று முன்தினம் அதிகாலை பாக்தாத்தின் வடக்கு பகுதியின் ஜோர்டான் நாட்டின் எல்லையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு அமெரிக்க படைவீரர் உயிரிழந்தார். இந்த மூன்று சம்பவங்களிலும் ஐந்து பேர் காயமடைந்தனர்.


செசன்யாவில் குண்டு வீச்சு: மூன்று ரஷ்ய அதிகாரிகள் பலி
செசன்ய தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் ரஷ்ய அதிகாரிகள் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இரண்டு பேர் படுகாயமடைந்தனர். செசன்யாவின் தென்பகுதியில் உள்ள ரஷ்ய உயர் அதிகாரியின் வீட்டில் செசன்ய தீவிரவாதிகள் தீ வைத்தனர். அவரது மகனையும் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.
இச்சம்பவத்தில் உயர் அதிகாரி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனையடுத்து ராணுவ கமாண்டர் தலைமையில் அதிகாரியின் மகனை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
நேற்று முன்தினம் அதிகாலை தேடுதல் வேட்டையின் போது ரஷ்ய ராணுவத்திற்கும் செசன்ய தீவிரவாதிகளுக்கும் இடையே சண்டை மூண்டது. அப்போது தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு வீச்சில் ரஷ்ய ராணுவ கமாண்டர் உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இரண்டு ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர். தீவிரவாதிகள் பிடியில் இருந்த உயர் அதிகாரியின் மகன் அவர்களிடம் இருந்து தப்பிவிட்டான்.
--------------------------------------------------------------
Michael Essien Chelsea அணிக்கு விளையாடவுள்ளார்
Lyon காற்பந்து அணியின் ஆட்டக்காரர் Michael Essien அவ்வணியில் இருந்து விலகி Chelsea அணிக்கு விளையாடவுள்ளதாக French குழுவின் தலைவர் Jean-Michel Aulas தெரிவித்தார்.
22 வயது Michael Essien, Lyon அணியில் இருந்து விலகுவதை குறித்து தாம் மிகவும் வருத்தம் அடைவதாக Jean-Michel மேலும் தெரிவித்தார். இருப்பினும், Michael Essien, Lyon அணியில் இருக்க ஆசைப்படுவதாகவும், அவர் இம்முடிவை திடீரென்று எடுத்தார் என அவர் Jean-Michel தெரிவித்தார்.

நன்றி வணக்கம்மலேசியா.காம்

மனோ.ஜி

பரஞ்சோதி
16-08-2005, 11:02 AM
செய்திகளுக்கு நன்றி அண்ணா.

பிரதமர், முன்னால் பிரதமர் மகாதீர் மாதிரியே தைரியமானவராக தெரிகிறார்.