PDA

View Full Version : என்கோடிங் (Encoding) பிரச்சனையா?



இராசகுமாரன்
16-08-2005, 06:59 AM
நண்பர்களே...


முன்பு திஸ்கி எழுத்துருவை உபயோகிக்கும் போது User Defined என்ற Encoding முறையை நமது உலாவியில், குறிப்பாக Internet Explorer-ல் --> View --> Encoding-ல் தேர்வு செய்தோம்.

யூனிகோட் எழுத்துருவிற்கு மாறிய பின் நமது உலாவில் தன்னிச்சையாகவே Western European (ISO) முறையை தேர்வு செய்து கொண்டது. இது யூனிகோட் எழுத்துரு வசதியை உள்ளடக்கியது. அதனால், உபயோகித்து வந்தோம். ஆனால், யூனிகோட் எழுத்துருவிற்கென்று தனியாகவும் ஒரு Encoding உண்டு, அது தான் Unicode (UTF-8) என்பது. நேற்று சில புதிய வசதிகள் சேர்க்க முற்படுகையில், நமது பழைய Western European (ISO)-விலிருந்து Unicode (UTF-8) முறைக்கு தானாக மாறிவிட்டது, அதனால் நேற்று பதித்த சில பதிப்புகளை வேறு கணணியில் என்னால் காணமுடியவில்லை. ஒவ்வொரு முறையும் என்கோடிங் மாற்றிய பின்பே படிக்க முடிந்தது. உங்களில் சிலருக்கும் இந்த பிரச்சனை இருந்திருக்குமென நம்புகிறேன்.

இப்போது இந்த பிரச்சனையை என்னால் முடிந்த அளவு சரி செய்திருக்கிறேன். இங்கு நான் சோதித்த கணணிகளில் ஒழுங்காக தெரிகின்றன. உங்களுக்கு இந்த பிரச்சனை வந்திருந்தால், இப்போது எப்படி தெரிகிறது? சரியாகிவிட்டதா?

இன்னும் இந்த பிரச்சனை இருந்தால்,
1) ஒரு முறை Log out செய்து விட்டு
2) View --> Encoding --> Western European (ISO) தேர்வு செய்து கொள்ளுங்கள்
3) மீண்டும் Log in செய்து பாருங்கள்

இப்போது இந்த பிரச்சனை தீர்ந்து விடும் என நம்புகிறேன். இன்னும் தீராவிடில்,

1) எந்தெந்த பதிப்புகள், அல்லது பதிப்புகளின் பாகங்கள் ஒழுங்காக தெரியவில்லை எனக் கூறவும்.
2) என்ன உலாவி (Browser) உபயோகிக்கிறீர்கள்?
3) உங்கள் உலாவியின் Encoding என்ன காட்டுகிறது எனக் கூறவும்.
4) என்ன OS உபயோகிக்கிறீர்கள்

இந்த சிறிய தடங்கலுக்கு வருந்துகிறேன்.

நன்றி..

ஜீவா
16-08-2005, 07:13 AM
எனக்கு இன்னும் அந்த பிரச்சினை இருக்கிறது..

எடுத்துக்காட்டாக
இந்த தலைப்பு எனக்கு தெரியவில்லை...
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5454

நான் நீங்கள் சொன்ன எல்லாம் முயற்சி பண்ணினேன்..

நான் IE6 உபயோகிக்கிறேன்..

மன்மதன்
16-08-2005, 07:15 AM
Post Quick Reply பண்ணும்போது இது மாதிரி செய்தி வருகிறது.. ஆனாலும் மெஸேஜ் போஸ்ட் ஆகிவிடுகிறது..

மன்மதன்
16-08-2005, 07:18 AM
எனக்கு இன்னும் அந்த பிரச்சினை இருக்கிறது..

எடுத்துக்காட்டாக
இந்த தலைப்பு எனக்கு தெரியவில்லை...
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5454

நான் நீங்கள் சொன்ன எல்லாம் முயற்சி பண்ணினேன்..

நான் IE6 உபயோகிக்கிறேன்..

encoding (unicode UTF+8) தேர்வு செய்தால் தெரிகிறது..

mania
16-08-2005, 07:20 AM
encoding (unicode UTF+8) தேர்வு செய்தால் தெரிகிறது..

:confused: ஆமாம். இல்லாவிட்டால் நிர்வாகி என்பது 24 செங்கல்களாகத்தான் தெரிகிறது...??:rolleyes: :D
அன்புடன்
மணியா...

pradeepkt
16-08-2005, 07:21 AM
Post Quick Reply பண்ணும்போது இது மாதிரி செய்தி வருகிறது.. ஆனாலும் மெஸேஜ் போஸ்ட் ஆகிவிடுகிறது..
இது மாதிரி செய்தி வரவில்லை.
ஆனாலும் Go Advanced போய்ப் பார்த்தால் போஸ்ட் ஆகியது போல் தெரிகிறது.

மன்மதன்
16-08-2005, 07:27 AM
நேற்றைய பதிவிலிருந்து, இன்றைய காலை பதிவு வரைதான் பிரச்சனையே.. இப்பொழுது இருப்பதாக தெரியவில்லை..
அன்புடன்
மன்மதன்

pradeepkt
16-08-2005, 07:32 AM
அட ஆமாய்யா, இப்ப எல்லாம் தெளிவாத் தெரியுது.
அத்தோட என்னோட கையெழுத்தையும் மாத்த வேண்டி இருந்தது.
நன்றி மன்மதன்.

மன்மதன்
16-08-2005, 07:36 AM
அட ஆமாய்யா, இப்ப எல்லாம் தெளிவாத் தெரியுது.
அத்தோட என்னோட கையெழுத்தையும் மாத்த வேண்டி இருந்தது.
நன்றி மன்மதன்.
மூன்று நாள் தொடர்ந்து லீவு வந்திடக்கூடாதே..:rolleyes: :rolleyes:
அன்புடன்
மன்மதன்

ஜீவா
16-08-2005, 07:37 AM
encoding (unicode UTF+8) தேர்வு செய்தால் தெரிகிறது..

அதை மாற்றினால் தெரியும் மன்மதா.. ஆனால் ஒவ்வொரு முறையும் மாற்றி கொண்டு இருக்க முடியாது அல்லவா...

pradeepkt
16-08-2005, 07:48 AM
Quote:
Originally Posted by மன்மதன்
மூன்று நாள் தொடர்ந்து லீவு வந்திடக்கூடாதே..:rolle yes: :rolleyes:
அன்புடன்
மன்மதன்

அடப்பாவி மக்கா...
இந்த மூணு நாளுமே ஆபீசில கடுமையான வேலை... :D
உங்க சாபம்தானா அது?

இராசகுமாரன்
16-08-2005, 04:30 PM
இப்போது சரியாகி விட்டதென்று நினைக்கிறேன்.

ஒரு சிறு எழுத்துப் பிழையால் Encoding மாறி விட்டிருந்தது.