PDA

View Full Version : காதல்

Nanban
15-08-2005, 05:56 PM
சூர்ய வெம்மையிலும்
மழைக்காலத்தின் ஈரக்கசிவில்
நேசம் படர்ந்தும் கிளர்ந்தும்
நெகிழ்த்தும் தருணத்தில்
ஆமோதித்தல்
நிராகரித்தலென்ற எல்லைகளில்
ஏதாவதொன்றைத் தாங்கிக் கொள்ளத்
தயார்படுத்திக்கொண்டு தான்
உன்னிடம் சொன்னேன்.

ஏற்பும் மறுப்புமே வாழ்வல்ல -
அலட்சியப்படுத்துதலிலும்
ஒளிந்திருக்குமுனது சம்மதமென்று
எனக்கு சொல்லித் தர யாருமின்றியே
காலக்கழிவில் ஒட்டடை பிடித்து
பரணில் கிடக்கிறது இந்த காதல்!

mukilan
15-08-2005, 06:16 PM
ஆஹா! "ஏற்பும் மறுப்புமே வாழ்வல்ல -
அலட்சியப்படுத்துதலிலும்
ஒளிந்திருக்குமுனது சம்மதமென்று" என்ன அருமையான் வரிகள். தங்கள் வலைப்பூ கண்ட பின் என்ன நம் நண்பர் மன்றத்தில் தற்பொழுது எதுவும் பதிப்பதில்லையே எனக் காத்திருந்தேன்.நல்ல வேளை என் காத்திருப்பு ஒட்டடை பிடிக்கும் முன் அதை தூசு தட்டி விட்டீர்கள். வாழ்த்துக்கள்.

ஜீவா
16-08-2005, 03:58 AM
அருமையான கவிதை நண்பா...ஆழ்ந்த அர்த்தங்கள்..

kavitha
16-08-2005, 04:48 AM
ஆஹா! "ஏற்பும் மறுப்புமே வாழ்வல்ல -
அலட்சியப்படுத்துதலிலும்
ஒளிந்திருக்குமுனது சம்மதமென்று" என்ன அருமையான் வரிகள். தங்கள் வலைப்பூ கண்ட பின் என்ன நம் நண்பர் மன்றத்தில் தற்பொழுது எதுவும் பதிப்பதில்லையே எனக் காத்திருந்தேன்.நல்ல வேளை என் காத்திருப்பு ஒட்டடை பிடிக்கும் முன் அதை தூசு தட்டி விட்டீர்கள். வாழ்த்துக்கள்.

நண்பரின் அடுத்த கவிதைக் காண காத்திருந்தவர்களில் நானும் ஒருவர். அருமையான கவிதை.

யார் சொல்லித் தெரியவேண்டும்?
உன்னை நான்
எவ்வளவு நேசிக்கிறேன் என்பதை!

யார் சொல்லித் தெரியவேண்டும்?
நீ இல்லாத வெறுமை
எனக்கு எத்தனைக் கொடுமை என்பதை!

யார் சொல்லித் தெரியவேண்டும்?
எனக்குள் நீ நிறைந்திருப்பதை போல
உனக்குள் நான் எங்கேயோ ஒளிந்திருக்கிறேன் என்பதை!

உன் மனம் உன்னிடம்
பேசுவதே இல்லையா?

உன்னைப்போலவே
உன் மனதிற்கும் பிடித்த மொழி
மௌனம் தானோ!

mukilan
16-08-2005, 04:52 AM
கவிதா நீங்க ஏதோ சொல்லி இருக்கிறீங்க. ஆனா என்னன்னு என்னால படிக்க முடியலை. மென்பொருள் வல்லுனர்களே! சீக்கிரம் வாங்கய்யா! இல்லை சாபம் விட்டிடுவேன்.

kavitha
18-08-2005, 11:05 AM
கவிதா நீங்க ஏதோ சொல்லி இருக்கிறீங்க. ஆனா என்னன்னு என்னால படிக்க முடியலை. மென்பொருள் வல்லுனர்களே! சீக்கிரம் வாங்கய்யா! இல்லை சாபம் விட்டிடுவேன்.

ஏதாவது எழுத்துரு பிரச்சனையா? எனக்கு வாசிக்கமுடிகிறதே!

pradeepkt
18-08-2005, 11:14 AM
நண்பன் அவர்களின் அருமையான கவிதைக்குச் சகோதரியின் பதில் கவிதையும் அருமை.
ஆமோதித்தல் நிராகரித்தல் என்ற எல்லைகளுக்கு இடையில் இருக்கும் உலகம் பரந்து விரிந்தது. எனக்கென்னவோ நாம் அனைவரும் அந்த உலகத்தை விட்டு எல்லைகளை மட்டுமே சார்ந்திருப்பது போல் தோன்றியது.

முகிலன்,
என்ன பிரச்சினை?
என்னால் படிக்க முடிகிறதே?

gragavan
18-08-2005, 11:32 AM
அலட்சியப் படுதலும் காதலின் ஒரு முகம்தானோ! உண்மை நண்பனே!

அப்படியானால் அடக்கி வைப்பது!
சொல்லப் பயந்து
சொல்லில் மறந்து
அடக்கம் செய்யப் பட்ட காதலும் உண்டு.

மன்மதன்
18-08-2005, 11:38 AM
சூர்ய வெம்மையிலும்
மழைக்காலத்தின் ஈரக்கசிவில்
நேசம் படர்ந்தும் கிளர்ந்தும்
நெகிழ்த்தும் தருணத்தில்
ஆமோதித்தல்
நிராகரித்தலென்ற எல்லைகளில்
ஏதாவதொன்றைத் தாங்கிக் கொள்ளத்
தயார்படுத்திக்கொண்டு தான்
உன்னிடம் சொன்னேன்.

ஏற்பும் மறுப்புமே வாழ்வல்ல -
அலட்சியப்படுத்துதலிலும்
ஒளிந்திருக்குமுனது சம்மதமென்று
எனக்கு சொல்லித் தர யாருமின்றியே
காலக்கழிவில் ஒட்டடை பிடித்து
பரணில் கிடக்கிறது இந்த காதல்!

என் மனதுக்கு பிடித்த கவிதைகளில் இந்த கவிதை இடம் பெறுகிறது .....

என்னுடைய கண்ணோட்டத்தில் இது ஒரு பெண் சொல்வது மாதிரி அமைந்து விட்டது போலுள்ளது. பொதுவாகவே ஆண்களின் காதல் மலரும் தருணத்தில் பெண்களின் அலட்சியபார்வையிலேயே காதலை வளர்க்கிறார்கள்.. பரணுக்கு அனுப்பவதில்லை.. ஆனால் ஒரு பெண்ணுக்கு காதல் வருமேயாயின், ஆண்களின் பதில் உடனடியாக தேவைப்படுகிறது.. ஒரு சில அலட்சியங்களுக்கு அப்பால் அந்த காதல் காணாமல் போகும் வாய்ப்பு இருக்கிறது. என்ன நினைக்கிறீர்கள் நண்பர்களே..

அன்புடன்
மன்மதன்

gragavan
18-08-2005, 12:36 PM
மன்மதன் நல்ல திறனாய்வு. பொதுவாக இரண்டும் இருபாலாரிடமும் நடக்குமென்பது கண்கூடு. ஆனால் பெரும்பான்மையாக எப்படியிருக்கும்?

பெண் அலட்சியப் படுத்தினால் ஆணுக்கு இன்னும் ஆவேசம் வரும். கிறுக்குத்தனமாக ஏதாவது செய்து வைப்பான்.

ஆண் அலட்சியப் படுத்தினால் பெரும்பாலான பெண்கள் காதலைப் பரணில் போட்டு விட்டு வேறு கலியாணம் செய்து கொண்டு போய் விடுவார்கள்.

நண்பனின் கவிதையின் பார்வைக் கோணத்தைப் பாராட்டியே ஆக வேண்டும். அதை அகழ்ந்தெடுத்த உனக்கும் பாராட்டுதான்.

பாரதி
18-08-2005, 03:27 PM
நல்ல கவிதை நண்பரே... வாழ்த்துக்கள்.

அலட்சியங்ளையும்
அலங்காரமாய்
நினைத்துக்கொண்டு...

பரணில் கிடந்தாலும்
பார்வையில் படாமல் இருந்தாலும்
எப்போதும் போலவே
இன்னும் புதிதாய்....

தரையிலும்
தாமரை இலையிலும்
விழும் மழை நீராய்
வாழ்க்கை...

kavitha
19-08-2005, 04:55 AM
மன்மதன் நல்ல திறனாய்வு. பொதுவாக இரண்டும் இருபாலாரிடமும் நடக்குமென்பது கண்கூடு. ஆனால் பெரும்பான்மையாக எப்படியிருக்கும்?

பெண் அலட்சியப் படுத்தினால் ஆணுக்கு இன்னும் ஆவேசம் வரும். கிறுக்குத்தனமாக ஏதாவது செய்து வைப்பான்.

ஆண் அலட்சியப் படுத்தினால் பெரும்பாலான பெண்கள் காதலைப் பரணில் போட்டு விட்டு வேறு கலியாணம் செய்து கொண்டு போய் விடுவார்கள்.

ஆஹா! அப்படியா?!!!! :eek:

gragavan
19-08-2005, 05:59 AM
ஆஹா! அப்படியா?!!!! :eek:ஏன் அப்படி இல்லையா?

kavitha
19-08-2005, 10:58 AM
அண்ணா... போட்டு வாங்க பார்க்கிறீர்களா? ஹி ஹி ஹி நான் சமத்து.... விடு ஜீட்

பிரசன்னா
09-09-2005, 06:32 PM
கவிதை அருமை வாழ்த்துக்கள்

Nanban
17-09-2005, 06:02 PM
என் மனதுக்கு பிடித்த கவிதைகளில் இந்த கவிதை இடம் பெறுகிறது .....

என்னுடைய கண்ணோட்டத்தில் இது ஒரு பெண் சொல்வது மாதிரி அமைந்து விட்டது போலுள்ளது. பொதுவாகவே ஆண்களின் காதல் மலரும் தருணத்தில் பெண்களின் அலட்சியபார்வையிலேயே காதலை வளர்க்கிறார்கள்.. பரணுக்கு அனுப்பவதில்லை.. ஆனால் ஒரு பெண்ணுக்கு காதல் வருமேயாயின், ஆண்களின் பதில் உடனடியாக தேவைப்படுகிறது.. ஒரு சில அலட்சியங்களுக்கு அப்பால் அந்த காதல் காணாமல் போகும் வாய்ப்பு இருக்கிறது. என்ன நினைக்கிறீர்கள் நண்பர்களே..

அன்புடன்
மன்மதன்

அப்படியா உங்கள் அனுபவம்?

நான் காதலைச் சொன்ன போது இருந்த மனநிலையைத் தான் சொன்னேன்.

மூன்று முறை

முதல் முறை - சொல்லியும் ஏற்கப்படவில்லை.

இரண்டாவது முறை - சொல்லும் முன்னே அவளுக்குத் திருமணம். (கல்லூரியின் முதல் ஆண்டின் முதல் மாதத்திலே யாராவது திருமணம் செய்து கொள்வார்களா, என்ன?)

மூன்றாவது முறை - சொல்லிய பின்னும் ஒரு வருடம் ஆமோதிப்பு கிடைக்கவில்லை. என்றாலும் நட்பு தொடர்ந்தது. பார்வைகள் தொடர்ந்தன. கண்கள் பேசியவற்றை மொழி பெயர்க்கத் தெரியாமல் திணறிக் கொண்டிருந்தன. கடைசியாக என்ன தான் சொல்லுகிறாய் என்று எரிச்சலுடன் கேட்ட பொழுது, ''சொன்னால் தான் காதலிப்பதாக ஏற்றுக் கொள்வாயா?" என்று கேட்ட பொழுது தான் நான் எத்தனை (இனிமையான) முட்டாளாக இருந்திருக்கிறேன் என்று புரிந்தது.

(நண்பர்கள் அடித்த கமெண்ட் : அடுத்த ஜுனியர் செட் வந்தாச்சு. இனிமேலும் அலைக்கழித்தால் வேறிடத்தில் விண்ணப்பம் போடக்கூடாதே என்று தான் - "Yes" )

பரணில் கிடப்பதெல்லாம் முதலிரண்டு காதலின் நினைவுகள் தான்....

Nanban
17-09-2005, 06:05 PM
பதிலாக இந்த நன்றி இத்தனை தாமதமாக வருவதற்கு மன்னிக்கவும்.

கவிதை வாசித்து கருத்து சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் மனமுவந்த நன்றிகள்.