PDA

View Full Version : மின் புத்தகங்கள் - பண்பட்ட உறுப்பினர்கள்



இராசகுமாரன்
15-08-2005, 07:12 AM
இனிய தமிழ் சொந்தங்களே...

உங்கள் அனைவருக்கும் என் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்...!

மின் புத்தகங்கள் பகிர்தல் இடையில் மென்பொருள் மாற்றத்திற்கு பிறகு நின்று விட்டிருந்தது. அதற்காக ஒரு தனி வசதி ஏற்பாடு செய்வதற்காக காத்திருந்தேன். இப்போது அந்த வசதி ஏற்பாடு செய்யப் பட்டுவிட்டது என்ற நற்செய்தியுடன் வந்துள்ளேன்.

நான் மின் புத்தகங்களை இங்கே வெளியிடும் வரை காத்திருக்க வேண்டாம் என்பதற்காக இந்த வசதி செய்யப் பட்டுள்ளது. நீங்களே பதிவேற்றம் செய்யவும், பதிவிறக்கம் செய்யவும் வசதி உண்டு. ஆனால், சோதனையோட்டமாக முதலில் இந்த வசதியை இங்குள்ள மேற்பார்வையாளர்களுக்கு மட்டுமே கொடுக்கிறேன்.

அடுத்த மாதத்திலிருந்து மன்றத்தில் தொடர்ந்து பங்காற்றும் நம் மன்ற நண்பர்கள் அனைவருக்கும் கொடுக்க இருக்கிறேன். அதற்காக நம் பழைய அனுமதி முறையான "பண்பட்ட உறுப்பினர்" என்ற தகுதி மீண்டும் வருகிறது.

இந்த தகுதி பெற முன்பு போல் குறிப்பிட்ட தமிழ் பதிவுகள் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப் போவது கிடையாது. தமிழில் எழுதுகிறீர்கள் என்பதற்கு சான்றாக ஒன்றிரண்டு பதிப்புகள் இருந்தாலே போதும்.

தேவையில்லாமல் நம் மன்றத்து பதிவிறக்கங்களை அதிகமாக இறக்கி நமது மன்றத்துக்கு ஊறு விளைவிக்க நினைப்பவர்களிடம் இருந்து காக்க இங்கு ஒரு தலைப்பு ஆரம்பிக்கப் பட்டு அதில் விண்ணப்பிபவர்களுக்கு மட்டும் இதற்காக அனுமதி கேட்பவர்களுக்கு மட்டும் கொடுக்கப் படும்.

தமிழ் மன்றத்தைக்கும், தமிழ் மன்றத்து நண்பர்களுக்கும் தீங்கு விளைவிக்க நினைக்காத அத்தனை பேருக்கும் இங்கே அனுமதி உண்டு.

நண்பர்களுடன் பழகும் நல்ல மனமும், தரமான குணமும், கொண்ட அனைத்து தமிழ்மன்றம் உறுப்பினர்களுக்ககும் இந்த அனுமதி உண்டு.

சுட்டி... இங்கே (http://www.tamilmantram.com/vb/downloads.php)

விரைவில் இது மேலே உள்ள மெனுவில் தோன்றும்.

மன்மதன்
15-08-2005, 07:23 AM
நல்ல முடிவு.. வரவேற்கிறேன் நண்பரே..
அன்புடன்
மன்மதன்

Mathu
15-08-2005, 11:31 AM
சிறந்த நோக்கம் இதன் பயன் அனைவரையும் சென்றடையட்டும்.

Mathu
15-08-2005, 11:38 AM
அனுமதிக்கான சுட்டி சரியாக வேலை செய்யவில்லை என்று நினைக்கிறேன்.

இங்கு தோன்றும் எழுத்துருவிலும் ஏதோ பிரச்சனை இருப்பதாக தோன்றுகிறது..!

இராசகுமாரன்
17-08-2005, 05:46 AM
Mathu அவர்களே,

அது அனுமதிக்கான சுட்டி அல்ல.
மின் புத்தகங்கள் கொடுக்கப் போகும் இடத்தின் சுட்டி.
இடையில் என்கோடிங் பிரச்சனை வந்ததால், அனுமதிகள் இன்னும் வழங்கப் படவில்லை.

இன்று தான் அனுமதிக்கான தலைப்பை ஆரம்பித்துள்ளேன்.
அது இங்கே உள்ளது. (http://www.tamilmantram.com/vb/showthread.php?goto=newpost&t=5458)

விண்ணப்பித்தவுடன் 24 மணி நேரத்திற்குள் அனுமதிகள் கொடுக்க முயற்சி செய்கிறேன்.

நன்றி..


அனுமதிக்கான சுட்டி சரியாக வேலை செய்யவில்லை என்று நினைக்கிறேன்.

இங்கு தோன்றும் எழுத்துருவிலும் ஏதோ பிரச்சனை இருப்பதாக தோன்றுகிறது..!

gragavan
17-08-2005, 06:02 AM
நல்ல முடிவும் முயற்சியும். இந்த முயற்சி வெற்றி பெற எனது வாழ்த்துகள்.

aren
17-08-2005, 08:17 AM
மின்புத்தகங்கள் மறுபடியும் கிடைக்கப்போவது குறித்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

mukilan
23-08-2005, 11:04 PM
நண்பர்களே!

தண்ணீர் தேசம் மின் புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. அந்த தளச் சுட்டி முறையாக இணைக்கப் பட்டிருக்கிறதா?

____________
முகிலன்.

அறிஞர்
09-09-2005, 02:07 PM
நன்றி அன்பரே.. பல புத்தகங்களை படிக்க வாய்ப்பு உண்டு.....

Mano.G.
10-09-2005, 04:23 AM
நண்பர்களே!

தண்ணீர் தேசம் மின் புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. அந்த தளச் சுட்டி முறையாக இணைக்கப் பட்டிருக்கிறதா?

____________
முகிலன்.

எனக்கும் இதே பிரச்சனை தான் தண்ணீர்தேசம் பதிவிறக்கம் செய்யமுடியவில்லை.

மனோ.ஜி

பிரசன்னா
10-09-2005, 07:04 PM
என் பெயரை தமிழில் மாற்றுவது எப்படி?

உதவுங்கள்

அறிஞர்
12-09-2005, 03:42 AM
என் பெயரை தமிழில் மாற்றுவது எப்படி?

உதவுங்கள்விரைவில் மாற்றி தருகிறோம் அன்பரே.. என்ன பெயர் வேண்டும் அன்பரே. பதிப்புக்களை பதிக்கும் போது இடம் பார்த்து பதியுங்கள்..

kumar_physics
15-11-2005, 01:57 PM
தங்களின் முயற்சி பாராட்டுக்குறியது,வாழ்த்துக்கள்

pradeepkt
16-11-2005, 04:51 AM
வணக்கம் குமார்.
உங்களைப் பற்றி ஒரு அறிமுகத்தை அறிமுகம் பகுதியில் போடுங்கள்

ilanthirayan
03-12-2005, 10:18 PM
நன்மைபயக்கும் திட்டம். எல்லோரும் பயன் பெறுவார்கள் என்று நம்பலாம்.

அழகன்
04-01-2006, 09:19 AM
இதைதான் தேடினேன் கிடைத்துவிட்டது தங்களின் புதியமுயற்சிக்கு வாழ்த்துக்கள் இராசகுமாரன் அவர்களே.
நன்றி

மயூ
15-03-2006, 06:01 AM
நான் சேலைமலை இளவரசி, பார்த்தீபன் கனவு ஆகிய 2 புத்தகங்களை பதிவேற்றியுள்ளேன். பகுப்பு (category) பிழைத்துவிட்டது. யாராவது அதிகரிகள் கவனம் எடுக்கவும்.

இராசகுமாரன்
15-03-2006, 07:40 AM
உங்கள் பதிவேற்றங்களின் பகுப்பை மாற்றியுள்ளேன்.
இப்போது சரியாக உள்ளதா என்று பாருங்கள் நண்பரே..

sarcharan
15-03-2006, 08:49 AM
வணக்கம் குமார்,:) :)
மன்றத்துக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...:D :D :D
உங்களைப் பற்றி ஒரு சிறு அறிமுகத்தை அறிமுகம் பகுதியில் பதியுங்களேன்..
:D :D :D :D :D

மயூ
17-03-2006, 07:41 AM
உங்கள் பதிவேற்றங்களின் பகுப்பை மாற்றியுள்ளேன்.
இப்போது சரியாக உள்ளதா என்று பாருங்கள் நண்பரே..
இப்போது சரி. நண்றிகள் அன்பரே

சுபன்
17-03-2006, 02:36 PM
மின் புத்தகங்கள் பகுதியில் சிவகாமியின் சபதம் நூலின் நான்கு பாகங்களையும் ஏற்றிவிட்டேன்

Mano.G.
18-03-2006, 07:20 AM
நன்றி சுபன்
மிக்க நன்றி
மனோ.ஜி

மயூ
24-03-2006, 10:14 AM
சொலை மலை இளவரசி இ-புத்தகம் தவறுதலாக computer e-books பகுதியில் உள்ளது. இது பற்றிக் கவனம் எடுக்கவும்.