PDA

View Full Version : இந்தியாவின் சிறந்த பொருட்கள்



இராசகுமாரன்
14-08-2005, 08:48 AM
இந்தியாவிலிருந்து இரண்டு காரணங்களுக்காக பொருட்கள் ஏற்றுமதி செய்யப் படுகிறது.

1) அந்த நாட்டில் வாழும் இந்தியர்களுக்காக..
2) வெளிநாட்டவர் நம் பொருட்களை விரும்புவதனால்.

உலகெங்கும் இந்தியர்கள் பரவி இருப்பதினால், அவர்கள் எங்கு சென்றாலும் சில குறிப்பிட்ட இந்திய பொருட்களை மறப்பதே இல்லை. அதனால் இந்தியாவிலிருந்து அவை அதிகமாக ஏற்றுமதி செய்யப் படுகிறது. சிறிய அப்பளம், ஊறுகாயிலிருந்து, மிக்ஸி,கிரைண்டர் வரை வெளியே ஏற்றுமதியாகிறது.

வெளி நாட்டவர்கள் முன்பு நமது கைவினைப் பொருட்களை அதிகம் விரும்பினார்கள், இப்போது வேறு என்னவெல்லாம் விரும்புகிறார்கள் என்று உங்கள் அபிப்பிரயாங்களை இங்கு கொடுங்களேன்.

இராசகுமாரன்
14-08-2005, 08:51 AM
வெளிநாட்டில் நம்மவர் விரும்பும் பொருட்கள் Brand பெயர்கள் :

துணி: Vimal / Ramonds
உணவு: பல உண்டு, குறிப்பாக அப்பளம், ஊறுகாய், அமுல் பட்டர், அரிசி
மருந்துகள்: அமிர்தாஞ்சன், விக்ஸ், ஜண்டு பாம், மூவ், ப்ரான்ஞ் ஆயில், நாட்டு மருந்துக்கள்.

வெளிநாட்டவர் விரும்பும் நம் பொருட்கள்:

1) கைவினைப் பொருட்கள்
2) துணிகள்??
3) கடல் வாழ் உணவுப் பொருட்கள்
4) உணவு தானியங்கள்

aren
14-08-2005, 09:14 AM
உறுகாய் வகைகளில் பல பிராண்டுகள் உள்ளன. குறிப்பாக

777, ருச்சி, பிரவின், அஷோகா, பிரியா போன்றவை.

மருந்து வகைகளில்:

ரான்பாக்ஸி மருந்துகள் பல உண்டு. குறிப்பாக Garlic Pearls.

aren
14-08-2005, 09:15 AM
இனிப்பு வகைகளில் Haldiram மிகவும் பிரசித்தம்.

aren
14-08-2005, 09:18 AM
Readymade இட்லி போன்ற வகைகளுக்கு GITS

மன்மதன்
14-08-2005, 09:50 AM
உணவு பொருட்கள் அதிகம் விரும்புவார்கள்.. என்னதான் இங்கே (துபாயில்) பல தரப்பட்ட ஹோட்டல்கள் இருந்தாலும், இந்திய உணவகத்திற்குத்தான் முதல் ஓட்டு கிடைக்கும்.

துணிகளில் கூட இந்திய ஸ்டேண்டர்டு பார்க்கிறார்கள். (ஆலன் சோலி, வான் ஹௌசன் போன்றவை..)

அன்புடன்
மன்மதன்..

Mano.G.
15-08-2005, 01:12 AM
உணவு வகைகள் தான் இங்கு மலேசியாவில் மிக மிக பிரசித்த பெற்றது.
சைவ அசைவ உணவுகள் அனத்து இன மக்களாலும் விரும்ப படுகிரது.
அதிலும் இங்கு இந்திய வகை இனிப்பு பலகாரங்கள் ( கிருஷ்ணா ஸ்வீட்ஸ், ஆனந்த பவன் போன்ற) இன்னமும் முழுமையான அளவுக்கு
யாரும் ஈடுபடவில்லை.


மனோ.ஜி