PDA

View Full Version : கணிப்பொறி திருவிளையாடல்

ஜீவா
14-08-2005, 04:45 AM
காட்சி 1

மதுரை மக்களே எழுந்திருங்கள்.
நாட்டு மக்களுக்கோர் ஓர் நற்செய்தி நமது பாண்டிய மன்னருக்கு ஏற்பட்டுள்ள
சந்தேகத்தை தீர்த்து வைக்கக்கூடிய சி புரோகிராமை எழுதிக்கொண்டு வரும்
புரோகிராமருக்கு ஆயிரம் அமெரிக்கன் டாலர்கள் பரிசளிக்கப்படும்

டும் டும் டும் டும் டும்

தருமி கூட்டத்தை முண்டியடித்துக்கொண்டு முன்னால் வந்து தெளிவாய் கேட்கிறான்.

எவ்வளவு? ஆயிரம் அமெரிக்க டாலரா?

யானை மீதிருக்கும் அந்த அரசாங்க ஊழியன் கூறுகிறான்

ஆமாம் ஆயிரம் அமெரிக்க டாலர்கள்

தருமி சந்தோஷத்தை கட்டுபடுத்த முடியாமல் தனக்குத்தானே புலம்பிக்கொண்டு போகிறான்.
-------------------------

காட்சி 2

தருமிக்கும் சிவனுக்கு இடையே உரையாடல் ஆரம்பிக்கிறது

தருமி : யாரு என்கிட்டேயேவா என்கிட்டேயேவா என்கிட்டேயே
மோதப்பார்க்கிறியா..நான் ஆளு பார்க்கிறதுக்கு சுமாராகத்தான்
இருப்பேன்..ஆனா என் புரோகிராமிங் பத்தி உனக்கு
தெரியாது..தயாரா இரு

சிவன் : அப்படியா கேள்விகளை நீ கேட்கிறாயா? அல்லது
நான் கேட்கட்டுமா?

தருமி : ஆங்.. நானே கேட்கிறேன்..எனக்கு கேட்கத்தான் தெரியும்.ம் ம் ம்

தருமி தொடர்கிறான் : பிரிக்க முடியாதது என்னவோ?
சிவன் : பில்கேட்ஸ{ம் விண்டோஸ{ம்

தருமி : சேர்ந்தே இருப்பது?
சிவன் : விண்டோஸ{ம் பக்கும்

தருமி : சொல்லக்கூடாதது?
சிவன் : கிளைண்டிடம் உண்மை

தருமி : சொல்லக்கூடியது?
சிவன் : செமினாரில் பொய்கள்

தருமி : கோடுக்கு அழகு?
சிவன் : கமெண்டுடன் இருப்பது

தருமி : ரோடுக்கு அழகு?
சிவன் : குண்டும் குழியுமாய் இருப்பது

தருமி : கமெண்டெனப்படுவது?
சிவன் : புரியாமலிருப்பது

தருமி : ஓ எஸ்ஸ{க்கு
சிவன் : யுனிக்ஸ்

தருமி : லாங்குவேஜ்க்கு?
சிவன் : சி

தருமி : டே;டாபேஸ{க்கு
சிவன் : ஆரக்கிள்

தருமி : வெப் சைட்டுக்கு
சிவன் : கூகிள்

தருமி : ஆப் சைட்டுக்கு
சிவன் : நீ

தருமி : ஆன் சைட்டுக்கு
சிவன் : நான்

தருமி : யப்பா ஆளை விடு

தருமி சிவனின் காலில் விழுகின்றான்.

தருமி : அய்யா நீர் புரொகிராமர்
சிவன் : நீ

தருமி : இல்லை நான் புரொகிராமர் இல்லை..டேட்டா என்ரி ஆபரேட்டர்.
எங்கே அந்த புரொகிராமைக்கொடுங்கள். மன்னர் என்ன கொடுக்கிறாரோ அதை
அப்படியே தங்களிடம் கொடுக்கிறேன். நீர் பார்த்து ஏதாவது செய்யும்

சிவன் தன் கையிலிருக்கும் சிடியை தருமியிடம் கொடுக்கின்றான்.

-------------------------

காட்சி 3

தருமி சிவன் கொடுத்த சிடியை பாண்டிய மன்னனிடம் கொடுக்கிறான். பாண்டிய
மன்னனோ அரசவை டே;டா என்ரி ஆபரேட்டரிடம் அதனை கொடுக்க அவன் அதனை
கணிப்பொறியில் இட்டு சி புரோகிராமை ஓபன் செய்கிறான்.

#include
void main()
{
a = 13*3;
printf("%d\n",a);
}

பாண்டிய மன்னன் உணர்ச்சிவசப்படுகிறான்

பாண்டிய மன்னன் : ஆ என்ன அருமையான லாஜிக் ஆழ்ந்த சின்டக்ஸ் தீர்ந்தது சந்தேகம்

தருமி : மன்னா பரிசு

பாண்டிய மன்னன் : யார் அங்கே ஆயிரம் அமெரிக்க டாலர்கள் எடுத்து வாருங்கள்

தருமி ( மனதுக்குள்) : முதல்ல இந்த சிடிகாரன் கடனை தீர்க்கணும்

பாண்டிய மன்னன் : ஆ என்ன அருமையான லாஜிக் ஆழ்ந்த சின்டக்ஸ் தீர்ந்தது சந்தேகம்

தருமி : மன்னா பரிசு

பரிசு வருகிறது. தருமி பரிசை பெறுவதற்கு தயாரகி விடுகிறான்.திடீரென்று
நக்கீரர் எழுந்திருக்கிறார்

நக்கீரன் : மன்னா சற்றுப்பொறுங்கள் புரொகிராமரே சற்று இப்படி வருகிறீர்களா..?

தருமி : முடியாது பரிசை வாங்கிகொண்டுதான் வருவேன்..மன்னா போடு

நக்கீரன் : அதில்தான் பிரச்சனை இருக்கிறது

தருமி நக்கீரன் அருகே செல்கிறான்.

தருமி : வேந்தே என்னய்யா பிரச்சனை?

நக்கீரன் : இந்த புரோகிராமை எழுதியது நீர்தானோ?

தருமி : நான் நான் நானேதான் எழுதினேன் பின்ன இண்டர்நெட்டுல இருந்து டவுண்லோட்
பண்ணிகிட்டா வந்தேன்? என்னுடையதுதான் என்னுடையதுதான்
என்னுடையதுதான் அய்யா!

நக்கீரன் : அப்படியானால் அதை கம்பைல் செய்துவிட்டு பிறகு பரிசை பெற்று செல்லலாமே

தருமி : மன்னருக்கே விளங்கி விட்டது இடையில் நீர் என்ன?
மன்னா நான் ரொம்ப கஷ்டப்படுறேன் இவர் வேறு கம்பைல்
செய்ய சொல்லுகிறார்

இதற்கிடையில் நக்கீரன் புரொகிராமை கம்பைல் செய்கிறார். அது பிழை என வருகிறது.

எ நாட் டிபைண்ட்

நக்கீரன் : சரியான ஒரு புரொகிராமுக்கு என் மன்னவன் பரிசளிக்கிறான்
என்றால் அதைக்கண்டு சந்தோஷப்படும் முதல் மனிதன் நான்தான். அதே சமயம் கென்
தாம்ஸ்ஸனும் டென்னிஸ் ரிச்சும் கட்டிக்காத்த இந்த சாப்;ட்வேர்
திருச்சபையிலே தவறான ஒரு புரொகிராமுக்கு பாண்டியன் பரிசளிக்கிறான்
என்றால் அதைக்கண்டு வருத்தப்படுபவனும் நான்தான்

-------------------------

காட்சி 4

சிவன் : ( நக்கீரனிடம்) எங்கு குற்றம் கண்டீர்? சின்டக்ஸ்லயா இல்ரைல லாஜிக்லயா?

நக்கீரன் : லாஜிக்கில் இல்லை சின்டக்ஸில்தான் குற்றம் இருக்கிறது

சிவன் : என்ன குற்றம்?

நக்கீரன் : எங்கே உமது புரோகிராமை காட்டும்?

சிவன் :

#include
void main()
{
a = 13*3;
printf("%d\n",a);
}

நக்கீரன் : இதன் பொருள்?

சிவன் : பதிமூன்றையும் மூன்றையுமு; பெருக்கி எ என்ற வேறியபலில்
வைக்கிறேன். புpறகு எவை பரிண்ட
செய்கிறேன்

நக்கீரன் : இதன்மூலம் தாங்கள் மன்னருக்கு சொல்ல விரும்புவது?

சிவன் : ஹா ஹா புரியவில்லை? "int a;" வென்கிற டிக்லரேசன்
தேவையில்லை என்பது என்னோட
முடிவு

நக்கீரன் : ஒருக்காலும் இருக்க முடியாது. முதலிலையே டிக்லர் செய்வதனால்
மட்டுமே ஒரு வேரியபிலை உபயோகிக்க முடியுமே தவிர டிக்லர் பண்ணாமல்
உபயோகிக்க முடியாது

சிவன் : சி ப்ளஸ் ப்ளஸ் - யிலும் அப்படித்தானோ?

நக்கீரன் : ஆம்

சிவன் : ஜாவாவில்

நக்கீரன் : ஜாவா என்ன..எல்லா ஹை லெவல் லாங்குவேஜிலும் அப்படித்தான்.

சிவன் : உனது ப்ராஜக்ட் மேனேஜருக்கும் அப்படித்தானோ?

நக்கீரன் : ப்ராஜக்ட் மேனேஜர் என்ன..நான் அன்றாடம் வழிபடும்
கெர்னிக்குக்கு இடப்பக்ம் அமர்ந்திருக்கிறானே ரிட்சி அதே விதிப்படித்தான்
(Kernigh Ritchie )

சிவன் : நிச்சயமாக?

நக்கீரன் : நிச்சயமாக

சிவன் : உமது சாப்ட்வேர் புலமை மீது ஆணையாக?

நக்கீரன் : எனது சாப்ட்வேர் கன்ஸல்டன்ஸிமீது ஆணையாக

சிவன் : நக்கீரா என்னை நன்றாக பார்..
( மின்னல் தெறித்து சிவன் ஒளிப்பிழப்பாகிறார்;)
நான் எழுதிய சி புரோகிராம் குற்றமா?

நக்கீரன் : நீர் என் மவுஸை புடுங்கினாலும் ஹார்ட்டிஸ்கை எரித்தாலும்
குற்றம் குற்றமே

( சிவன் நக்கீரனின் கம்ப்யூட்டரின் ஹார்ட்டிஸ்க்கை எரிக்கிறார்)

பாண்டியன் : இறைiவா பிழை பொறுத்தருள வேண்டும். சுPனியர் சிஸ்டம்
அனைலைஸ்ட் நக்கீரனின் ஹார்ட்டிஸ்க்கை திரும்ப தந்துவிடு

( சிவனின் உருவம் பெரிதாகிறது)

சிவனின் : பாண்டியா.. நக்கீரனின் ஹார்ட்டிஸ்க் இப்போது சரியாகிவிடும்

( ஹார்ட்டிஸ்க் சரியாகிவிடுகிறது)

நக்கீரன் : யுனிக்ஸ{ம் நீயே..விண்டோஸ{ம் நீயே
சியும் நீயே..ஜாவாவும் நீயே
வேரியபிலும் நீயே..கான்ஸ்டன்டும் நீயே
க்ளைண்டும் நீயே புரோகிராமரும் நீயே
வாழ்க தமிழகம் வளர்க புரோகிராமிங்

aren
14-08-2005, 06:08 AM
அருமை. நன்றாக வாய்விட்டு சிரிக்கலாம்.

pradeepkt
14-08-2005, 06:21 AM
படித்துப் படித்து ரசித்து ரசித்துச் சிரித்தேன்...
ஆனால் இதை இப்படி ரசிப்பதற்கு "சி" தெரிந்திருக்க வேண்டுமோ???

மன்மதன்
14-08-2005, 06:45 AM
ஹாஹ்ஹாஹ்.. சரியான சிரிப்பு .. அருமை..
அன்புடன்
மன்மதன்

இராசகுமாரன்
14-08-2005, 08:36 AM
அருமையான நவீன திருவிளையாடல்..

பரஞ்சோதி
14-08-2005, 09:48 AM
மன்னன்: யார் இங்கே? ஜீவாவை உடனே பாதாள சிறையில் அடை.

மந்திரி: ஏன் மன்னவா? அவர் என்ன குற்றம் செய்தார்?

மன்னன்: அவரால் எனக்கும், நாட்டு மக்களுக்கும், குறிப்பாக தமிழ் மன்ற உறுப்பினர்களுக்கு பிரச்சனை.

மந்திரி: ஜீவாவால் பிரச்சனையா? நம்ப முடியவில்லை, நான் வணங்கும் கோயிந்சாமியை விட ஜீவாவை அதிகமாக தெரியும். அவர் நல்லவராச்சே!

மன்னன்: நல்லவர் தான், அவர் தொடர்ந்து கொடுக்கும் சிரிப்புகளை படித்து அனைவரும் வயிற்று வலியில் துடிக்கிறோம், அதான் இந்த தண்டனை.

karikaalan
14-08-2005, 12:34 PM
வயிற்றுவலி மருந்தும் கூடவே தரவேண்டும் அல்லவோ!!

சுவேதா
14-08-2005, 01:22 PM
சூப்பர் ஜீவா அண்ணாவுடைய சிரிபுக்களுடன் பரம்ஸ் அண்ணாவின் சிரிப்பும் அருமை பாராட்டுக்கள்!

யார் அங்கே இருவருக்கும் பரிசளியுங்கள்!!!!!

ஜீவா
14-08-2005, 02:39 PM
மன்னன்: யார் இங்கே? ஜீவாவை உடனே பாதாள சிறையில் அடை.

மந்திரி: ஏன் மன்னவா? அவர் என்ன குற்றம் செய்தார்?

மன்னன்: அவரால் எனக்கும், நாட்டு மக்களுக்கும், குறிப்பாக தமிழ் மன்ற உறுப்பினர்களுக்கு பிரச்சனை.

மந்திரி: ஜீவாவால் பிரச்சனையா? நம்ப முடியவில்லை, நான் வணங்கும் கோயிந்சாமியை விட ஜீவாவை அதிகமாக தெரியும். அவர் நல்லவராச்சே!

மன்னன்: நல்லவர் தான், அவர் தொடர்ந்து கொடுக்கும் சிரிப்புகளை படித்து அனைவரும் வயிற்று வலியில் துடிக்கிறோம், அதான் இந்த தண்டனை.

நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு...
:D :D :D :D :D :D

mukilan
14-08-2005, 04:29 PM
நான் அவதாரைப் பார்த்தவுடனே நினைச்சேனய்யா! இவரு பெரிய குசும்பருன்னு. கலக்கிட்டீங்க ஜீவா. கலங்கிப்போய் கிடக்கிறோம். வாழ்த்துக்கள்.

Mathu
14-08-2005, 09:45 PM
படித்துப் படித்து ரசித்து ரசித்துச் சிரித்தேன்...
ஆனால் இதை இப்படி ரசிப்பதற்கு "சி" தெரிந்திருக்க வேண்டுமோ???

இல்லை "தி" தெரிந்திருந்தால் போதும். ;)

இடை இடையே முளிக்க வைத்தாலும் நினைக்க நினைக்க
வயிற்று வலி தான்.

கூடவே பரம்ஸ்ஸின் குசும்பு வேறு.

அசத்தல்........ :) :p

pradeepkt
14-08-2005, 11:07 PM
நான் அவதாரைப் பார்த்தவுடனே நினைச்சேனய்யா! இவரு பெரிய குசும்பருன்னு. கலக்கிட்டீங்க ஜீவா. கலங்கிப்போய் கிடக்கிறோம். வாழ்த்துக்கள்.
சந்தடி சாக்கில நக்கலைப் பாருங்க...

mukilan
15-08-2005, 04:17 AM
சந்தடி சாக்கில நக்கலைப் பாருங்க...
ஐயா! பிரதீப்பு! எம்புட்டு நாளா இப்படிக் காத்துக்கிட்டிருந்தீக. வேண்டாம்......வேண்டாம். நல்லா இல்லை !!! அழுதிடுவேன்... நான் ஆவலுடன் எதிர்பார்த்த பாட்டில் சேர் காதையில் அவைக்குறிப்பில் இருந்து நீக்கியவற்றை தனி மடலில் எதிர் பார்க்கிறேன். ஆமா! அறிஞர் சுவேதாவைப் பாராட்டிப் பேசினால் உமக்கு ஏனய்யா வயிறு எரிகிறது? (சுவேதா கண்டு கொள்க)

கொளுத்திப் போட்ட சந்தோசத்தில்,
முகிலன்.

பரஞ்சோதி
15-08-2005, 04:32 AM
நான் அவதாரைப் பார்த்தவுடனே நினைச்சேனய்யா! இவரு பெரிய குசும்பருன்னு. கலக்கிட்டீங்க ஜீவா. கலங்கிப்போய் கிடக்கிறோம். வாழ்த்துக்கள்.

முகிலன், இப்போவாது புரிந்தததே, ரொம்ப சந்தோசம்.

என்ன யாருக்கும் புரியலையா?

ஆளை(அவதாரை)ப் பார்த்து எடை போடக்கூடாது? :D

- நாட்டாம்மை பரம்ஸ் (ஜீவா வைக்கும் வெடியில் வேட்டாம்மை ஆகப்போகிறேன்).

பரஞ்சோதி
15-08-2005, 04:37 AM
நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு...
:D :D :D :D :D :D

மன்னன்: கரிகாலன் அண்ணாவின் சிபாரிசுக்கு தலை வணங்கியும், ஜீவாவின் குரலுக்கு குரல் கொடுக்கவும் முடிவு செய்து, தீர்ப்பை மாற்றி எழுதுகிறேன், மந்திரி, ஜீவாவை உடனே சுவேதாவிடம் அனுப்பி நல்லா மேக்கப் போடச் சொல்லி அவைக்கு வரச் சொல்லுங்க. அருமையான பதவி இருக்கிறது.

ஜீவா துண்டக்காணோம், துணியைக் காணோம் என்று ஓட... ஏன் என்று மன்னன் வினவ..

மந்திரி: இளவரசி சக்தி, சுவேதாவிடம் மேக்கப் போட போய், முகத்தத கண்ணாடியில் பார்த்தது தான் சரி, அதன் பின்பு தன் அறையை விட்டு வெளியே வரவே மாட்டேங்கிறார்.

மன்னன்: யாரேங்கே, அந்த சுவேதாவை ... வேண்டாம், வேண்டாம், நான் இனிமே தீர்ப்பே சொல்ல மாட்டேன்.

- மன்னாதி மன்னன், மரண கடி மன்னன் பரம்ஸ்
:D :D :D :D :D :D[/quote]

Quote:
Originally Posted by ஜீவா

15-08-2005, 04:39 AM
ஐயா! பிரதீப்பு! எம்புட்டு நாளா இப்படிக் காத்துக்கிட்டிரு஠ ?்தீக. வேண்டாம்......வேண்டா஠ ?். நல்லா இல்லை !!! அழுதிடுவேன்... நான் ஆவலுடன் எதிர்பார்த்த பாட்டில் சேர் காதையில் அவைக்குறிப்பில் இருந்து நீக்கியவற்றை தனி மடலில் எதிர் பார்க்கிறேன். ஆமா! அறிஞர் சுவேதாவைப் பாராட்டிப் பேசினால் உமக்கு ஏனய்யா வயிறு எரிகிறது? (சுவேதா கண்டு கொள்க)

கொளுத்திப் போட்ட சந்தோசத்தில்,
முகிலன்.

முகிலன், நீங்க ஊசி பட்டாசைத் தான் கொளுத்துவீங்க, தம்பி பிரதீப் அணுகுண்டையே கொழுத்துவார், எதுக்கும் ஜாக்கிரதை.

ஜீவா
15-08-2005, 04:42 AM
நெட்டுல இருந்து சுட்டுப்போட்ட கைப்பிள்ளை(ஜீவா:D ) க்கே இந்த பாராட்டுன்னா இதை எழுதுனவன்க்கு என்னா பாராட்டு கெடைச்சிருக்கும்..

கொஞ்சம் மெல்லிய சவுண்டில்..

என்ன பரம்ஸ் அண்ணா.. இன்னமுமா ஊருக்குள்ள (மன்றத்துக்குள்ள) நம்மள நம்பிக்கிட்டு இருக்காய்ங்க.. ஹய்யோ ஹய்யோ.. :D :D :D :D :D :D

இவன்
கைப்பிள்ளை ஜீவா..

பரஞ்சோதி
15-08-2005, 04:48 AM
தம்பி சுக்ரீ-ஜீவா,

தமிழ் பாட்டி, அவ்வையே சுட்ட பழம் கேட்டவராச்சே!

- ஜாம்பவான் பரம்ஸ்

மன்மதன்
15-08-2005, 05:04 AM
கமெண்டுகள் அருமை.. அதுவும் பரம்ஸ், ஜீவா(ஹைய்யோ..ஹைய்ய௠ ?..) செம காமெடி போங்கோ..
அன்புடன்
மன்மதன்

mukilan
15-08-2005, 05:18 AM
ஜீவா கட்டத்துரை வந்துகிட்டு இருக்கிறதா கேள்வி???

ஜீவா
15-08-2005, 05:28 AM
ஜீவா கட்டத்துரை வந்துகிட்டு இருக்கிறதா கேள்வி???

கட்டத்துரைக்கு கட்டம் சரியில்லைன்னு நினைக்கிறேன்.. அதனால.. நான் என் வட்டத்துக்குள்ளே போய்க்கிறேன்.. எஸ்கேப்ப்ப்ப்ப்ப௠ ?..:D :D

mukilan
16-08-2005, 04:45 AM
எனக்கு இப்பொழுது இங்குள்ள பதிப்புக்கள் என்னவென்றே தெரியாத எழுத்துருக்களாக தெரிகின்றன. இது எனக்கு மட்டுந்தானா? இல்லை நண்பர்கள் அனைவருக்கும் இப்படிதான் தெரிகிறதா?

பரஞ்சோதி
16-08-2005, 05:30 AM
ஒவ்வொரு முறையும் Encoding போய், Unicode 8 கிளிக் செய்தால் வருகிறது.

ஜீவா
16-08-2005, 05:44 AM
எனக்கும் இதே பிரச்சனைதான்.. நேற்றிலிருந்து இந்த பிரச்சினை...

பரஞ்சோதி
16-08-2005, 05:54 AM
மன்ற தானியங்கி எழுத்துருவில் பிரச்சனை இருக்குமோ?

சுவேதா
17-08-2005, 03:07 AM
ஐயா! பிரதீப்பு! எம்புட்டு நாளா இப்படிக் காத்துக்கிட்டிரு஠ ?்தீக. வேண்டாம்......வேண்டா஠ ?். நல்லா இல்லை !!! அழுதிடுவேன்... நான் ஆவலுடன் எதிர்பார்த்த பாட்டில் சேர் காதையில் அவைக்குறிப்பில் இருந்து நீக்கியவற்றை தனி மடலில் எதிர் பார்க்கிறேன். ஆமா! அறிஞர் சுவேதாவைப் பாராட்டிப் பேசினால் உமக்கு ஏனய்யா வயிறு எரிகிறது? (சுவேதா கண்டு கொள்க)

கொளுத்திப் போட்ட சந்தோசத்தில்,
முகிலன்.

:D :D வயிற்றெரிச்சல் ஒன்னும் இல்லை அண்ணா. அது தங்கைப் பாசம். எல்லோருக்கும் முன்னால் சொன்னா கண்ணு பட்டிருமெல்லா அதுதான்.:D :D :cool: :cool:

சுவேதா
17-08-2005, 03:19 AM
மன்னன்: கரிகாலன் அண்ணாவின் சிபாரிசுக்கு தலை வணங்கியும், ஜீவாவின் குரலுக்கு குரல் கொடுக்கவும் முடிவு செய்து, தீர்ப்பை மாற்றி எழுதுகிறேன், மந்திரி, ஜீவாவை உடனே சுவேதாவிடம் அனுப்பி நல்லா மேக்கப் போடச் சொல்லி அவைக்கு வரச் சொல்லுங்க. அருமையான பதவி இருக்கிறது.

ஜீவா துண்டக்காணோம், துணியைக் காணோம் என்று ஓட... ஏன் என்று மன்னன் வினவ..

மந்திரி: இளவரசி சக்தி, சுவேதாவிடம் மேக்கப் போட போய், முகத்தை
கண்ணாடியில் பார்த்தது தான் சரி, அதன் பின்பு தன் அறையை விட்டு வெளியே வரவே மாட்டேங்கிறார்.

மன்னன்: யாரேங்கே, அந்த சுவேதாவை ... வேண்டாம், வேண்டாம், நான் இனிமே தீர்ப்பே சொல்ல மாட்டேன்.

- மன்னாதி மன்னன், மரண கடி மன்னன் பரம்ஸ்

:D :D
நல்லாத்தான் எழுதியிருக்கிறிங்க :) ஆனா கதைதான் எழுதி தாறிங்க இல்ல.

மந்திரி; ஏன் மன்னா இந்த ஒட்டம் ஒடுகிறார்:rolleyes:

சேவகன் ; ஒன்னும் இல்ல இந்த சுவேதாண்ட அண்ணன் பரம்ஸ் வருகிறார் அதுதான் மன்னர் பயத்துடன் ஒடுகிறார்.

பரஞ்சோதி
17-08-2005, 04:34 AM
:D :D
நல்லாத்தான் எழுதியிருக்கிறிங்க :) ஆனா கதைதான் எழுதி தாறிங்க இல்ல.

மந்திரி; ஏன் மன்னா இந்த ஒட்டம் ஒடுகிறார்:rolleyes:

சேவகன் ; ஒன்னும் இல்ல இந்த சுவேதாண்ட அண்ணன் பரம்ஸ் வருகிறார் அதுதான் மன்னர் பயத்துடன் ஒடுகிறார்.

:D :D :D :D :D :D :D

சும்மா சொல்லக்கூடாது, சகோதரி அருமையாக பதில் கொடுக்கிறீங்க, பாராட்டுகள்.

gragavan
17-08-2005, 04:40 AM
:D :D
நல்லாத்தான் எழுதியிருக்கிறிங்க :) ஆனா கதைதான் எழுதி தாறிங்க இல்ல.

மந்திரி; ஏன் மன்னா இந்த ஒட்டம் ஒடுகிறார்:rolleyes:

சேவகன் ; ஒன்னும் இல்ல இந்த சுவேதாண்ட அண்ணன் பரம்ஸ் வருகிறார் அதுதான் மன்னர் பயத்துடன் ஒடுகிறார்.பரம்ஸ் என்பதால் மன்னர் ஓடுகிறாரா? இல்லை அவர் சுவேதாவின் அண்ணன் என்பதால் ஓடுகிறாரா?

மன்மதன்
17-08-2005, 05:18 AM
பரம்ஸ் என்பதால் மன்னர் ஓடுகிறாரா? இல்லை அவர் சுவேதாவின் அண்ணன் என்பதால் ஓடுகிறாரா?

இந்த ஐய்யப்பாட்டை நீக்குபவர்களுக்கு ஐய்யா பட விசிடி வழங்கப்படும்..டும்..டும்..டும்..:D :D :D
அன்புடன்
மன்மதன்

ஜீவா
17-08-2005, 05:34 AM
பரம்ஸ் என்பதால் மன்னர் ஓடுகிறாரா? இல்லை அவர் சுவேதாவின் அண்ணன் என்பதால் ஓடுகிறாரா?

இந்த ஐய்யப்பாட்டை நீக்குபவர்களுக்கு ஐய்யா பட விசிடி வழங்கப்படும்..டும்..டும்..டும்..:D :D :D
அன்புடன்
மன்மதன்

மன்(மத)னனே.. இதோ உங்கள் சந்தேகத்தை தீர்க்க இந்த ஜீவதருமி வந்துள்ளேன்..

மன்னருக்கு கால் இருப்பதால்தான் ஓடுகிறார்... கால் இல்லையென்றால்.. சுவேதா என்ன.. சுவேதாவோட அண்ணனோட அண்ணன் வந்தாலும் முடியாது அல்லவா??

இவண்
அறிவாளி ஜீவா:D :D :D :D :D :D :D :D

மன்மதன்
17-08-2005, 05:49 AM
அய்யா.. ஜீவதருமி அவர்களே.. என் சந்தேகம் தீர்ந்தது... பரிசு ஏற்கனவே கொடுத்தாச்சு என்று 'ரக்ஷாபந்தனை ' காட்டி த்ரிஷா என்னிடம் சொன்னா. :D :D
அன்புடன்
மன்மதன்

ஜீவா
17-08-2005, 05:53 AM
அய்யா.. ஜீவதருமி அவர்களே.. என் சந்தேகம் தீர்ந்தது... பரிசு ஏற்கனவே கொடுத்தாச்சு என்று 'ரக்ஷாபந்தனை ' காட்டி த்ரிஷா என்னிடம் சொன்னா. :D :D
அன்புடன்
மன்மதன்

மன்னா.. இது அநியாயம்.. ஒரு ஆளு எத்தனை ரோல்தான் நடிக்கிறது ஒரே நேரத்தில.. இங்க மன்(மத)னனை தேடுகிறேன் தீர்ப்பு கிடைக்க.. மன்மதிரிஷனை அல்ல.. :lol:

gragavan
17-08-2005, 08:05 AM
மன்(மத)னனே.. இதோ உங்கள் சந்தேகத்தை தீர்க்க இந்த ஜீவதருமி வந்துள்ளேன்..

மன்னருக்கு கால் இருப்பதால்தான் ஓடுகிறார்... கால் இல்லையென்றால்.. சுவேதா என்ன.. சுவேதாவோட அண்ணனோட அண்ணன் வந்தாலும் முடியாது அல்லவா??

இவண்
அறிவாளி ஜீவா:D :D :D :D :D :D :D :Dஅடேங்கப்பா............என்ன அறிவு.....என்ன அறிவு....ஜீவாவுக்குச் சுத்திப் போடுங்கப்பா :)

மன்மதன்
17-08-2005, 08:30 AM
மன்னா.. இது அநியாயம்.. ஒரு ஆளு எத்தனை ரோல்தான் நடிக்கிறது ஒரே நேரத்தில.. இங்க மன்(மத)னனை தேடுகிறேன் தீர்ப்பு கிடைக்க.. மன்மதிரிஷனை அல்ல.. :lol:
:D :D :D ... த்ரிஷாவை இழுத்ததுமே பயந்திட்டாரு இந்த த்ரிஷதருமி....:rolleyes: :rolleyes:
அன்புடன்
மன்மதன்

மன்னனின் தீர்ப்பு 50 கசையடி.. திரிஷாதான் கிடைச்சிட்டால்ல..கொஞ்சம் வாங்கிகங்களேன்..:D :D

ஜீவா
17-08-2005, 08:56 AM
:D :D :D ... த்ரிஷாவை இழுத்ததுமே பயந்திட்டாரு இந்த த்ரிஷதருமி....:rolleyes: :rolleyes:
அன்புடன்
மன்மதன்

மன்னனின் தீர்ப்பு 50 கசையடி.. திரிஷாதான் கிடைச்சிட்டால்ல..கொஞ்சம் வாங்கிகங்களேன்..:D :D

நான் அடி வாங்கிடுவேன்.. ஆனா உங்க தங்கச்சி திரிஷாதான் மூக்கால அழுது மேல் முறையீடு பண்ண சொல்லுது.. :D :D :D :D

மன்மதன்
17-08-2005, 10:17 AM
நான் அடி வாங்கிடுவேன்.. ஆனா உங்க தங்கச்சி திரிஷாதான் மூக்கால அழுது மேல் முறையீடு பண்ண சொல்லுது.. :D :D :D :D

அவ நடிகை. நல்லா நடிப்பா..நம்பிடாதிங்க..:rolleyes: :rolleyes: ...ஒரு திருத்தம்.. அவ என் தங்கச்சி கிடையாது... அக்கா..-க்காமக்கா...:D :D
அன்புடன்
மன்மதன்

சுவேதா
17-08-2005, 10:28 PM
:D :D :D :D :D :D :D

சும்மா சொல்லக்கூடாது, சகோதரி அருமையாக பதில் கொடுக்கிறீங்க, பாராட்டுகள்.

:):) நன்றி அண்ணா!