PDA

View Full Version : வாழ்க வளமுடன்


babu
13-08-2005, 05:33 PM
ஹாய் நண்பர்களே.........

நான் பாபு.......

வயது 26.5{வீட்டுல பொண்ணு பாக்குறாங்க}

தென்காசி பக்கம்ங்க

இப்ப புவ்னேஷ்வர்ல்ல குப்பை கொட்டுறேங்க?

நம்ம சாதிசனம் பாக்காம காஞ்சி கருவாடா இருந்தேனுக்ன்க.....

கொஞ்சம் நம்மளையும் உங்களோட சேர்த்துக்கோங்க......அண்ணாச்சி...

அம்மினிகளா

Birundan
13-08-2005, 09:09 PM
வாங்க பாபு உங்க வரவு நல்வரவாக வாழ்த்துக்கள்
அன்புடன் பிருந்தன்

சுவேதா
14-08-2005, 01:39 AM
வாங்க பாபு அண்ணா உங்கள் வரவு கண்டு மிக்க மகிழ்ச்சி உங்கள் கருத்துக்களையும் ஆக்கங்களையும் எதிர் பாக்கின்றோம் உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

thempavani
14-08-2005, 04:08 AM
கலக்கலாக வீட்டிற்கு வந்திருக்கும் நண்பர் பாபு அவர்களை வரவேற்கிறோம்..
(பிரதீப்பு கண்டுக்கோ..உங்க அணிக்கு ஒத்துவருவார் எனத் தோன்றுகிறது)

சுவேதா
14-08-2005, 04:52 AM
அடடா அப்படியும் இருக்கா அக்கா???:rolleyes: :rolleyes:

aren
14-08-2005, 04:54 AM
வாருங்கள் பாபு அவர்களே. உங்களை வருக வருக என்று வரவேற்கிறேன். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

நம் மன்றம் அனைவரையும் இரு கரம் நீட்டி அழைக்கும். ஆகையால் பயப்படாமல் உங்களை இங்கே இணைத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் வரவு மன்றம் மேலும் சிறப்பாகட்டும். அதற்கு என் வாழ்த்துக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

mukilan
14-08-2005, 06:45 AM
வாங்க மக்கா! நம்ம மன்றத்து சொந்தங்களின் அன்பு மழையில் நீங்களும் நனைந்து உங்களின் அருமையான படைப்பினால் அனைவரையும் மகிழ்வியுங்கள்.

pradeepkt
14-08-2005, 07:26 AM
வாங்க வாங்க ...
பாபுவிற்குத் தமிழ்மன்றம் இருகரம் நீட்டி வரவேற்பு தருகிறது.
அதுவும் எங்க அணிக்குச் சாதகமா இருப்பீங்கன்னு சகோதரி தேம்பா வேற சொல்லிட்டாங்க... அதனால ஸ்பெஷல் வரவேற்பு.
அனைத்துப் பகுதிகளிலும் உலாவி, உங்கள் கருத்துகளையும் படைப்புகளையும் இடுங்கள். ஆவலுடன் காத்திருக்கிறோம்.

அன்புடன்,
பிரதீப்

பரம்ஸ்
14-08-2005, 07:33 AM
வாங்க பாபு, என்ன அட்டகாசமான அறிமுகம்.

கலக்கிட்டீங்க.

உங்க கூட பொண்ணு பார்க்க வரலாமே!

படையப்பா படம் மாதிரி என்றால் கூட மன்மதனுன், பிரதீப்பும் தயார்.

பரம்ஸ்
14-08-2005, 07:37 AM
யப்பூ

நமக்கும் உங்க பக்கத்து ஊருதாம்லே.

மன்மதன்
14-08-2005, 07:53 AM
தென்காசி பாபுவை அன்புடன் வரவேற்கிறேன்.. (சென்ற மாதம்தான் தென்காசி (குற்றாலம்) போயிட்டு வந்தேன்.. தென்காசில 'சின்னா' படம் பார்த்தேன்..)
அன்புடன்
மன்மதன்

சுவேதா
14-08-2005, 02:07 PM
ஆகா பரம்ஸ் அண்ணா சொல்கின்ற மாதிரி நல்ல வடிவாத்தான் பார்ப்பார்கள்:):):):) கூட்டிட்டு போகலாமே.....

babu
14-08-2005, 05:00 PM
அய்யோ கொன்னுட்டீக மவராசன்களா..............[.......ராசிகளா}

நானு அந்த அளவுக்கு படிக்கலை...........

படிக்கறப்ப புறா பிடிக்க அலைஞ்சுட்டு இப்ப தான் தமிழையே படிக்கப்போறேன்......

ஆமா நெசமாத்தேன் எல்லோரும் வெளி நாட்டில இருக்கீகளா?

pradeepkt
15-08-2005, 12:04 AM
இருக்காகள்ல...
என்னப்பு இப்படி கேட்டுட்டீய...
ஆமா புறா புடிக்கறதுன்னா என்ன ராசா?