PDA

View Full Version : ஜிமெயிலில் திஸ்கி மின்னஞ்சல்களை படிக்க:



பாரதி
13-08-2005, 03:31 PM
அன்பு நண்பர்களே,

நமது மன்றத்தில் இருக்கும் பல உறுப்பினர்களும் பல மின்னஞ்சல் குழுக்களில் இணைந்திருக்கின்றனர். இப்போது தமிழிலேயே மின்னஞ்சல் அனுப்புவது வழக்கமாகி வருகிறது. யுனிகோட் தமிழில் மின்னஞ்சல் அனுப்புவது பெரும்பாலானோருக்கு தெரியும். இன்னும் திஸ்கி முறையில் மின்னஞ்சல் அனுப்பி வரும் மரத்தடி போன்ற குழுக்களின் மடல்களை ஜிமெயிலில் சரியாக காண இயலாது. அதை சரியாக்குவது எப்படி என்று எனக்கு வந்த ஒரு குழு மடலில் 'உமர்' விளக்கி இருக்கிறார்.

அந்த மடல் உங்கள் பார்வைக்கு:

சமீப காலமாக கூக்ளிக்கு மாறியவர்கள் யாஹ குழுமத்திலிருந்து வரும் அஞ்சல்களைப் படிப்பதில்(திஸ்கியில்தான்) சிக்கல் இருப்பதாக அவ்வப்போது எனக்கு எழுதிக் கேட்டிருந்தார்கள். சொந்தக் காரணங்களால் அவர்களுக்கெல்லாம் பதிலஞ்சல் எழுத இயவில்லை. இதோ அவர்களுக்கும் சேர்த்தமாதிரி இந்த அஞ்சல்.

கூக்ளியின் அஞ்சல் சேவை பிறந்தபோது யுனிகோடில் மடலாடிக் கொள்ளுவது எளிதாக ஆக்கபட்டது. ஆனால் அது யுனிகோடிற்காகவே என்ற தோற்றத்தையும் நம்மில் சிலர் கொள்ளும்படி ஆகிவிட்டது. போதாக் குறைக்கு தமிழ் யாஹ குழுமங்களிலிருந்து வரும் அஞ்சல்களைப் படிப்பதிலும் சிக்கல் இருப்பதால் கூளியின் வசதிகளை விட இயலாமலும் தமிழ் (திஸ்கி) அஞ்சல்களைப் படிக்க இயலாமலும் பலர் தவிக்கின்றனர்.

இதோ IE வைத்திருப்போர் இந்தச் சிக்கலில் இருந்து விடுபட வழி:

கீழ்க்காணும் வரிகளை அப்படியே வெட்டி Notepad இல் ஒட்டி "mystyle.css" என்ற பெயரில் சேமித்துக் கொள்ளுங்கள். (சேமிக்கும்போது பெயருக்கு முன்னும் பின்னும் quote (") இட மறவாதீர்கள்).
/*=======================================*/
/*yahoo group*/
p.group-description {font-family: TheneeUniTx,
TSCu_Paranar, TSCu_InaiMathi, TSC_Avarangal, !
important}
#ygrp-msg-exp .ygrp-contentblock {font-family:
TheneeUniTx, TSCu_Paranar, TSCu_InaiMathi,
TSC_Avarangal ! important; padding:0;}
#ygrp-msg-exp .msgheader {font-family: TheneeUniTx,
TSCu_Paranar, TSCu_InaiMathi, TSC_Avarangal, !
important; padding:10px 0 10px 15px;
background-color:#f0f0f0;}
#ygrp-msg-exp td.source {font-family: TheneeUniTx,
TSCu_Paranar, TSCu_InaiMathi, TSC_Avarangal, !
important; padding:10px 15px;}
#ygrp-msg-exp td.msg {font-family:TheneeUniTx;
padding:0; border-top:0px; }
td.message {font-family: TheneeUniTx, TSCu_Paranar,
TSCu_InaiMathi, TSC_Avarangal ! important;}
tt {font-family: TheneeUniTx, , ArulMathiTSC,
TSC_AvarangalFxd ! important}
div.messagetext {font-family:TheneeUniTx,
TSCu_Paranar, TSCu_InaiMathi, TSC_Avarangal !
important, georgia, times new roman, serif;}
.form-div {font-family: TheneeUniTx, TSCu_Paranar,
TSCu_InaiMathi, TSC_Avarangal ! important;
display:inline;
}
.msgarea {font-family: TheneeUniTx, TSCu_Paranar,
TSCu_InaiMathi, TSC_Avarangal ! important;
padding:10px 15px;
}
.msgarea div {font-family: TheneeUniTx, TSCu_Paranar,
TSCu_InaiMathi, TSC_Avarangal ! important;
clear:right;
clear:none;
}
/*gmail*/
div.msg_0, span.p, div#mb_0, div.ygrp-msg, div#msgs
{font-family: TheneeUniTx, TSCu_Paranar,
TSCu_InaiMathi, TSC_Avarangal ! important;}
/*==========================================*/
இனி IE இல் Tools > Internet Options க்குச்சென்று Accessibility பொத்தானை அழுத்துங்கள். வரும் பக்கத்தில் எந்தச் சதுரங்களும் சொடுக்கப் படாமல் இருக்கிறதா என்று பர்த்துக் கோல்லுங்கள். User Style Sheet என்ற பகுதியில் காணும் "Format documents using my style sheet" என்ற சதுரத்தைச் சொடுக்குங்கள். Browse பொத்தானை அழுத்தி சேமித்த mystyle.css கோப்பைத் தேர்ந்தெடுங்கள். OK பொத்தானை அழுத்தி நிறைவு செய்யுங்கள்.

இப்போது யாஹவிலிருந்து வரும் அஞ்சல்களையும் ஜிமெயிலில் திஸ்கியில் படிக்க இயலும்.

வாழ்த்துக்கள்.

அன்புடன்,
உமர்

நன்றி : உமர்.

pradeepkt
14-08-2005, 06:12 AM
தகவலுக்கு மிக்க நன்றி.
ஆனால் இது யாஹூவுக்கு மட்டும்தான் சரிவருமா?
அல்லது திஸ்கி அனுப்பும் எந்தக் குழுவுக்கும் பொருந்துமா