PDA

View Full Version : வருங்கால தொழிலதிபர்களே!பரஞ்சோதி
13-08-2005, 10:26 AM
நண்பர்களே!

இத்தலைப்பின் கீழ் சுயத்தொழில், மற்றும் தொழில்கள் சம்பந்தமாக விவாதம் செய்யலாம். ஒருவருக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு சொல்லலாம், தெரியாதவர்கள் தெரியவேண்டியதை இங்கே கேட்டு தெரிந்துக் கொள்ளலாம். உங்கள் வாழ்க்கையில் கிடைத்த அனுபவங்கள், உங்கள் எண்ணங்களை தைரியமாக சொல்லுங்கள், விவாதம் செய்யுங்கள்.

தமிழ் மன்றத்தில் ஏற்கனவே நமக்கு தெரிந்து தொழில் துறையில் இருப்பவர் நம்ம ஆரென் அண்ணா, மணியா அண்ணா, இளந்தமிழ் செல்வர், மன்மதன், பிரியன், அனிதன், மொபைல் பற்றி சந்தேகம் கேட்கும் நண்பர் இன்னும் பலர்.

நாம் அனைவரும் ஒன்று கூடி விவாதிக்கலாமா?

பரஞ்சோதி
13-08-2005, 10:30 AM
அனிதன், எங்க ஊரிலும் (திருச்செந்தூர்) ஏராளமான பனைமரங்கள் உண்டு. முக்கிய தொழிலே பதநீர் இறக்கி, காய்த்து, கருப்புகட்டி தயாரித்து விற்பனை செய்வதே.

நீங்க சொன்ன பனை பொருட்களை எங்கள் ஊரிலும் தயாரிக்கிறார்கள்.

உங்க ஊர் எது, என்ன என்ன பொருட்கள் தயாரிக்கிறீங்கள். படங்கள் கிடைத்தாலும் இங்கே கொடுங்க, பயனுள்ளதாக அமையும்.

இது ஒரு புது முயற்சி, வெற்றி பெற வைப்பது நம் கையில் இருக்குது.

anithanhitler
16-08-2005, 02:13 PM
அட நெருங்கிட்டோமே....
எங்க ஊர் உவரி தான்...

சில பொருள்கள் சில இடங்களில் மலிவாக கிடைக்கும். அதே பொருளின் தேவை மற்றொரு இடத்தில் அதிகம் இருக்கும்.. சரியான பொருளையும், சரியான இடத்தையும் கண்டுபிடித்தாலே போதும்.. இதுதான் ஏற்றுமதியின் வெற்றியின் ரகசியம் !!!

எங்கள் குழுவில் , பனை ஓலையால் ஆன அலங்கார பொருள்கல், தட்டுகல், இன்னும் நிறைய செய்கிறார்கள்...
நான் வேன்டுமானால் அதன் படங்களோடு கூடிய தகவலை அனுப்புகிறேன்...
அங்கு இத்தகைய பொருள்களுக்கு தேவை உள்ளதா???...

மேலும் , பல வகையான மெழுகுவர்த்திகளும் செய்கிரார்கள்... மிக அழகாக இருக்கும், பல வண்ண நிறங்களில், சுருள் சுருளாக மிக நேர்த்தியாக....

இதையும் பலர் விரும்பலாம்....

நாம் மிக சரியாக திட்டமிட்டு , உழைத்தால் நிச்சயம் பலன் பெறலாம்..

பரஞ்சோதி
16-08-2005, 02:19 PM
வாங்க அனிதன்,

அட உங்களுக்கு உவரியா?

நான் முதலில் நீங்க இலங்கை தமிழராக இருக்கக்கூடும் என்று நினைத்தேன்.

பரவாயில்லையே! நம்ம ஊர்க்காரரை இணையத்தில் அதிலும் தமிழ் மன்றத்தில் அதிலும் தொழில் துறையில் ஆர்வம் கொண்டவரை கண்டது மிக்க மகிழ்ச்சி.

கண்டிப்பாக படங்கள் கொடுங்கள், இங்கே சைனா பொருட்களில் ஆக்கிரமிப்பு அதிகம், அதையும் மீறி ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றால் தரம் மிக முக்கியம்.

உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள், சிறப்பான இடத்தை பிடிக்க வாழ்த்துகள்.

மேலும் விபரங்களுக்கு பின்னர் பேசுகிறேன்.

பிரியன்
16-08-2005, 03:05 PM
தாங்கள் உற்பத்தி செய்யும் பொருளுக்கு எந்த இடத்தில் மிக அதிக தேவை இருக்கிறது என்பதைப் பற்றிய முழுமையான அறிவும் அதற்குண்டான ஆய்வும் அவசியம் தேவை. இந்த வகையில் அந்த தொழிலை நெடுங்காலமாகச் செய்து வருபவர்களிடம் கருத்துகளைக் கேட்பது மிகவும் நல்லது. அவர்களின் அனுபவ உதவியோடு இன்றைய உலகிற்கு தேவையான மாற்றங்களுடன் செய்து கொடுத்தால் நல்லதொரு முன்னேற்றத்தை பெறலாம், இந்த ஒரு விசயத்தில் தெளிவாக இருந்துவிட்டால் போதும் விரைவில் வெற்றியாளராகலாம். ஏனென்றால் மழைபொழியும் நேரத்தில் குடைவிற்கலாம். மாவு விற்ககூடாது.
ஏதே என் சிற்றறிவிற்கு தோன்றியதை சொல்லிவிட்டேன்

பரஞ்சோதி
16-08-2005, 07:38 PM
தாங்கள் உற்பத்தி செய்யும் பொருளுக்கு எந்த இடத்தில் மிக அதிக தேவை இருக்கிறது என்பதைப் பற்றிய முழுமையான அறிவும் அதற்குண்டான ஆய்வும் அவசியம் தேவை. இந்த வகையில் அந்த தொழிலை நெடுங்காலமாகச் செய்து வருபவர்களிடம் கருத்துகளைக் கேட்பது மிகவும் நல்லது. அவர்களின் அனுபவ உதவியோடு இன்றைய உலகிற்கு தேவையான மாற்றங்களுடன் செய்து கொடுத்தால் நல்லதொரு முன்னேற்றத்தை பெறலாம், இந்த ஒரு விசயத்தில் தெளிவாக இருந்துவிட்டால் போதும் விரைவில் வெற்றியாளராகலாம். ஏனென்றால் மழைபொழியும் நேரத்தில் குடைவிற்கலாம். மாவு விற்ககூடாது.
ஏதே என் சிற்றறிவிற்கு தோன்றியதை சொல்லிவிட்டேன்

மிகவும் நல்ல கருத்து பிரியன், அதுக்கு தான் எந்த தொழிலுக்கும் மாற்றுத் தொழில் கூட வைத்திருக்க வேண்டும், ஒன்றில் போட்டி வந்தால் மற்றதில் தொற்றிக் கொண்டு போய் கொண்டே இருக்கலாம், அதில் போட்டி என்றால் அடுத்தது.

கண்டிப்பாக, நீங்க சொல்வது போல் அனுபவம் மிக மிக முக்கியம், எடுத்தேன், கவிழ்தேன் என்பது தொழிலில் கூடவே கூடாது. அனுபவம் தேடாமல் வராது, தேடுவதற்கு தொழிலில் இருக்கும் நண்பரின் ஆலோசனைகளை கேட்கலாம், அவர்களோ சென்று தொழிலை கற்கலாம். இது என் அனுபவம்.

இராசகுமாரன்
17-08-2005, 12:25 PM
வாங்க அனிதன்,

பக்கத்து ஊரில் இருந்து கொண்டு வியாபாரம் செய்கிறீர்கள், நம்மையும் கொஞ்சம் கண்டு கொள்ளுங்கள்.

பரஞ்சோதி கூற்றுப் படி எப்போதுமே 2 தொழில் இருக்க வேண்டும், ஒன்றில் இறங்கு முகமென்றால் மற்றொன்றில் தாவிக் கொள்ள வேண்டும்.

பிரியன், சரியாக சொன்னீங்க... சில சமயம் நம்ம நேரம் அப்படி ஆகிவிடும். மாவு விற்க போனால், காற்றடிக்கும்... உப்பு விற்க போனால் மழை வரும்.. அதற்க ஏற்றவாறு தயாராகிக் கொள்ள வேண்டும்.

anithanhitler
17-08-2005, 02:44 PM
அன்பர்களே,
நீங்கள் சொல்வது போல அனுபவம் மிக முக்கியம் தான்...
மிக சரியான நேரத்தில், மிக சரியாக திட்டமிட்டு ஆரம்பிக்கிற தொழில் நிச்சயம் வெற்றி பெறும்...

அப்புறம் , பரஞ்சோதி நண்பரே, எங்கள் தாத்தா, பாட்டி அனைவரும் இலங்கையில் இருந்து வந்தவர்கள் தான்....

இராசகுமாரன் அவர்களுக்கு எந்த ஊர் என தெரிந்து கொள்ளலாமா???...

இராசகுமாரன்
17-08-2005, 03:27 PM
இராசகுமாரன் அவர்களுக்கு எந்த ஊர் என தெரிந்து கொள்ளலாமா???...

ரொம்ப தூரம் இல்லை... உங்கள் வீட்டுக்கு எதிர் வீடு தான் என்று நினைத்துக் கொள்ளுங்கள்...

ரொம்ப பக்கத்தில் இருக்கிறேன்..

இலங்கை மூதாதையர்கள் என்றால், நீங்கள் சுயம்புலிங்க சுவாமி உவரியாக இருக்க வாய்ப்பில்லை..
நீங்கள் கப்பல் கோவில் உவரி தானே?

பரஞ்சோதி
17-08-2005, 05:58 PM
அனிதன் நண்பர் ராஜ்குமார், நான், இராகவன், இப்படி நிறைய பேர் நம்ம ஊர் சுற்றுவட்டாரம் தான்.

எங்க தாத்தாக்கள் இலங்கையில் சென்று வியாபாரம் செய்தார்கள், பின்னர் மலேசியா சென்றார்கள், மலேசியாவில் இன்னமும் எங்கள் தாத்தா தொடங்கிய கடை இருக்கிறது.

பரஞ்சோதி
17-08-2005, 06:09 PM
வாங்க அனிதன்,

பக்கத்து ஊரில் இருந்து கொண்டு வியாபாரம் செய்கிறீர்கள், நம்மையும் கொஞ்சம் கண்டு கொள்ளுங்கள்.

பரஞ்சோதி கூற்றுப் படி எப்போதுமே 2 தொழில் இருக்க வேண்டும், ஒன்றில் இறங்கு முகமென்றால் மற்றொன்றில் தாவிக் கொள்ள வேண்டும்.

பிரியன், சரியாக சொன்னீங்க... சில சமயம் நம்ம நேரம் அப்படி ஆகிவிடும். மாவு விற்க போனால், காற்றடிக்கும்... உப்பு விற்க போனால் மழை வரும்.. அதற்க ஏற்றவாறு தயாராகிக் கொள்ள வேண்டும்.

மிகச் சரியாக சொன்னீங்க.

போராடத்தெரிந்தவன் தான் மனிதன். கண்டிப்பாக கஷ்டப்படாமல் கிடைத்த கனி சுவையாக இருக்காது.

நானும் ஒரு முதலாளியில் என்னுடைய இளமைப்பருவத்தை சொல்ல நினைப்பதால், தொழில் சம்பந்தமான கருத்துகளை இங்கே பகிர்ந்துக் கொள்கிறேன்.

தொழில், வியாபாரம் என்றாலே நம்மவர்களுக்கு பயம் வருகிறது, ஏதோ ஒரு குறிப்பட்டவர்கள் தான் தொழில் செய்ய வேண்டும், அல்லது கடுமையாக உழைப்பவர்கள் தான் தொழில் செய்ய வேண்டும் அல்லது எதற்கு தயாரானவர்கள் தான் தொழில் செய்யவேண்டும் என்று நினைக்கும் மனப்பான்மையை நான் நிறைய பேரிடம் எதிர்பார்த்திருக்கிறேன்.

முதலில் தாழ்வு மனப்பான்மையை விட வேண்டும், என்னால் முடியும் என்ற நம்பிக்கை வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை எப்போவும் இவரால் செய்யமுடியும் போது என்னால் ஏன் முடியாது என்று நினைப்பேன்.

ஏன் தமிழ்மன்றத்தில் நான் வந்த போது எக்கச்சக்கமான ஜாம்பவான்கள் இருந்தார்கள், ஆனாலும் எனக்கும் நம்பிக்கை, இளசு அண்ணாவின் 8000+ பதிவுகள், பூவின் 6000+ பதிவுகளை கண்டு அரண்டு போகாமல், நாமும் ஏன் 7000+ அல்லது அதற்கு மேல் பதிய முடியாது, நாமும் ஏன் எல்லோருக்கும் தெரிந்த முகமாக மாற முடியாது, இளசு அண்ணா, பூவும் ஒரு நாள் நம்மை மாதிரி தானே புதியவராக அறிமுகம் ஆகியிருப்பாங்க, நாமும் முயற்சி செய்வோம், முடிந்தால் இவர்களுக்கு இணையாக அல்லது அதற்கும் மேலாக வரமுடியும் என்று 100% நம்பினேன், சாதித்தேன்.

சின்ன வயதில் என்னைவிட யாராவது உயர்வாக போற்றப்பட்டால் கண்டிப்பாக பொறாமை படுவேன், கெடுதல் செய்யவும் நினைப்பேன், ஆனால் முடியாது, காரணம் என் தாயாரின் கண்டிப்பும், கதைகளும், இறைவன் மீது இருந்த பயமும், அப்போ எப்படி பழிவாங்குவது, என்னை உயர்வாக்குவது, அதற்கு கிடைத்த ஆயுதம் தான் போராட்டம், பாடுபடு, நீ நினைத்ததை அடைவாய்.

ஆமாம் கடுமையாக போராடி பலரை பின்னுக்கு தள்ளியிருக்கேன், ஆனால் யாருக்கும் குழி தோண்டியதில்லை.

தற்போதைக்கு ஒரு எடுத்துக்காட்டு, நான் பள்ளிக்கு 4 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்லவேண்டும், புத்தகமூட்டையை தூக்கிக் கொண்டு செல்வேன், ரோட்டில் நடக்கும் போது தனியாக செல்வதால் ஒரு மாதிரியாக இருக்கும், என்னையே நான் பிஸியாக வைக்கவும், அந்த நேரத்தை வீணடிக்காமல் வைக்கவும், என்ன செய்வேன் தெரியுமா?

- அடுத்த பதிவில் உங்கள் ஆர்வம் கண்டு..

aren
18-08-2005, 07:03 AM
வாங்க அனிதன்,

அட உங்களுக்கு உவரியா?


மேலும் விபரங்களுக்கு பின்னர் பேசுகிறேன்.

பரஞ்சோதி அவர்களே,

உங்களுக்கு பக்கத்து ஊர் என்று அனிதன் சொல்கிறார். பார்த்து, உங்களுடைய வண்டவாளங்களை எல்லாம் எடுத்துவிடப்போகிறார்.

பரஞ்சோதி
18-08-2005, 07:13 AM
வாங்க ஆரென் அண்ணா, உங்களை இங்கே பார்த்தது மிக்க மகிழ்ச்சி.

நான் ரொம்ப ரொம்ப நல்ல புள்ளங்க.

எங்க ஊரில் எனக்கு ஊமைப்பூச்சி என்று பெயர், யார் கிட்டவும் பேசவே மாட்டேன். குனிந்த தலை நிமிராமல் செல்வேன்.

- நல்லதம்பி பரம்ஸ்.

aren
18-08-2005, 07:15 AM
சொந்தமாக தொழில் ஆரம்பிக்கும்பொழுது, நமக்குத் தெரிந்த தொழிலாக இருந்தால் நல்லது என்பது என்னுடைய கருத்து. ஏனெனில் அந்த தொழிலில் இருக்கும் நெளிவு சுளிவுகள் நமக்கு தெரிந்திருக்கும், ஆகையால் நெருக்கடியான சமயங்களில் நம்மை சமாளித்துக்கொள்ள முடியும். மேலும் நம்முடைய வாடிக்கையாளர்களை முன்பே தெரிந்திருக்கலாம் அல்லது எங்கே நம்முடைய வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள் என்று எளிதாக கண்டுகொள்ளமுடியும். ஆககயால் தெரிந்த தொழிலையே தொடங்குவது நல்லது. தொழில் நன்றாக வளர்ந்தபிறகு பின்னர் மற்ற வகையான தொழிலையும் நாம் முயற்சி செய்யலாம்.

நான் பதினைந்து வருடங்களாக Security Systems விற்பனையில் இருக்கிறேன். ஆகையால் நான் புதிதாக தொழில் தொடங்கியபொழுது நானும் அதே தொழிலில் ஈடுபட்டேன். என்னுடைய இப்பொழுது வாடிக்கையாளர்கள் அனைவரும் எனக்கு முன்பே பரிச்சயமானவர்களே. ஆகையால் புதிய பொருளாக இருந்தாலும் எனக்கு அவர்கள் பரிச்சையமானவர்களாக இருந்ததால் என்னுடைய பொருளை அவர்கள் வாங்குகிறார்கள்.

வியாபாரத்தில் இறங்குபவர்கள் நிறைய இழக்கவேண்டிவரும். நமக்கு தெரிந்தவர்களின் சுக துக்கங்களில் கலந்துகொள்ளமுடியாது. நேரத்திற்கு வீடு வர முடியாது. மனைவி பிள்ளைகளுடன் விடுமுறையை கொண்டாட முடியாது. இப்படி பல பிரச்சனைகள் வரும். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நாம் முயன்றால் நிச்சயம் நமக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடையவன் நான். அதனால்தான் நான் அனைத்தையும் எதிர்த்து நீச்சல் போட்டுக்கொண்டிருக்கிறேன். நிச்சயம் வெற்றியடைவேன் என்ற நம்பிக்கையிருக்கிறது. பார்க்கலாம் எப்படி போகிறதென்று.

நன்றி வணக்கம்
ஆரென்

பரஞ்சோதி
18-08-2005, 07:23 AM
வியாபாரத்தில் இறங்குபவர்கள் நிறைய இழக்கவேண்டிவரும். நமக்கு தெரிந்தவர்களின் சுக துக்கங்களில் கலந்துகொள்ளமுடியாது. நேரத்திற்கு வீடு வர முடியாது. மனைவி பிள்ளைகளுடன் விடுமுறையை கொண்டாட முடியாது. இப்படி பல பிரச்சனைகள் வரும். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நாம் முயன்றால் நிச்சயம் நமக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடையவன் நான். அதனால்தான் நான் அனைத்தையும் எதிர்த்து நீச்சல் போட்டுக்கொண்டிருக்கிறேன். நிச்சயம் வெற்றியடைவேன் என்ற நம்பிக்கையிருக்கிறது. பார்க்கலாம் எப்படி போகிறதென்று.

நன்றி வணக்கம்
ஆரென்

அண்ணா, உங்களில் தொழிலில் வெற்றிப் பெற இறைவனை வேண்டுகிறேன். 15 வருட அனுபவம் உங்களுக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கும், அதை எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

சரியாக சொன்னீங்க, தொழிலில் இறங்கி விட்டால் சுக துக்கங்களை இழக்க வேண்டும், பிடித்தவற்றை செய்ய முடியாது, கிரிக்கெட் போட்டி, படங்கள், சிரியல்கள் ஆகியவற்றை இழக்க வேண்டி வரும்.

மனைவி, குழந்தைகள், உற்றார், உறவினர்களின் மனகசப்புக்கும் ஆளாக வேண்டி வரும், நான் இதை எல்லாம் அனுபவித்திருக்கிறேன். ஆனால் அதனையும் திட்டமிட்டு செய்தால் வெற்றி பெறலாம், ஆயிரம் கோடி வந்தாலும் வாரத்தில் ஒரு நாள் குடும்பத்தோடு தான் என்ற வகையில் திட்டமிட்டால் பிரச்சனைகளில் இருந்து ஓரளவு தப்பிக் கொள்ளலாம்.

anithanhitler
18-08-2005, 03:00 PM
மிகச் சரியாக சொன்னீங்க.

போராடத்தெரிந்தவன் தான் மனிதன். கண்டிப்பாக கஷ்டப்படாமல் கிடைத்த கனி சுவையாக இருக்காது.

தற்போதைக்கு ஒரு எடுத்துக்காட்டு, நான் பள்ளிக்கு 4 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்லவேண்டும், புத்தகமூட்டையை தூக்கிக் கொண்டு செல்வேன், ரோட்டில் நடக்கும் போது தனியாக செல்வதால் ஒரு மாதிரியாக இருக்கும், என்னையே நான் பிஸியாக வைக்கவும், அந்த நேரத்தை வீணடிக்காமல் வைக்கவும், என்ன செய்வேன் தெரியுமா?

- அடுத்த பதிவில் உங்கள் ஆர்வம் கண்டு..என்ன செய்தீர்கள் பரஞ்சோதி , ஆர்வமாய் உள்ளது..
சொல்லுங்கள் உங்கள் பள்ளி நினைவுகளை...

தற்போது உங்கள் குடும்பம் திருச்செந்தூரில் உள்ளதா?..
நான் உங்களுக்கு கைவினை பொருள்கள் பற்றிய பதிவுகலை அனுப்புகிறேன்...


இராசகுமாரன் , நீங்கள் உவரிக்கு மேற்கேவா, கிழக்கேவா ?
நான் நினைக்கிறேன் நீங்கள் இடையன்குடி அல்லது திசையன்விளை யை சார்ந்தவராக இருக்கலாம்

பரஞ்சோதி
18-08-2005, 09:34 PM
என்ன செய்தீர்கள் பரஞ்சோதி , ஆர்வமாய் உள்ளது..
சொல்லுங்கள் உங்கள் பள்ளி நினைவுகளை...

தற்போது உங்கள் குடும்பம் திருச்செந்தூரில் உள்ளதா?..
நான் உங்களுக்கு கைவினை பொருள்கள் பற்றிய பதிவுகலை அனுப்புகிறேன்...


இராசகுமாரன் , நீங்கள் உவரிக்கு மேற்கேவா, கிழக்கேவா ?
நான் நினைக்கிறேன் நீங்கள் இடையன்குடி அல்லது திசையன்விளை யை சார்ந்தவராக இருக்கலாம்

அனிதன், நண்பர் ராசகுமாரனின் ஊர்ப்பெயரை அருமையாக சொல்லிட்டீங்க.

எனது மாமியார் ஊர் உடன்குடி, மாமனார் ஊர் இடையன்குடி அருகில் இருக்கும் ஆனைக்குடி.

படித்தது வெள்ளாளன்விளை (இந்தியாவின் முதல் பிஷப் அசரியா அவர்கள் பிறந்த ஊர், அதே பள்ளி), தேம்பா சகோதரிக்கும் நம்ம ஊர் தான், பின்னர் மெஞ்ஞானப்புரம் மேல்நிலைப்பள்ளி அப்புறம் சென்னை, குவைத் வந்தப்பின்பு சென்னையில் செட்டில் ஆகியாச்சு.

பரஞ்சோதி
18-08-2005, 09:44 PM
அனிதன் பள்ளிப்பருவத்தில் நடந்த சின்ன சம்பவத்தை சொல்கிறேன்.

நான் தினமும் பள்ளிக்குச் செல்லும் போது தனியாக நடந்து செல்வதால் போர் அடிக்கும், அதை தவிர்க்க, எனக்கு முன்னால் யார் போகிறார்களோ அவர்களை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் முந்துவேன் என்று கைக்கடிகாரத்தில் நேரம் பார்த்துவிட்டு, வேக வேகமாக நடப்பேன். அவரை முந்தியவுடன், அடுத்து எனக்கு முன்னால் யார் என்று பார்த்து, அவருக்கும் அதே மாதிரி நேரம் நிர்ணயம் செய்து, வேக வேகமாக நடந்து முந்துவேன், இது மாதிரி பள்ளி சென்றடையும் வரை எனக்கு நானே போட்டி வைத்துக் கொள்வேன்.

இப்போ கூட இங்கே வாக்கிங் டிராக்கில் நடக்கும் போது எனக்கு நானே ஒரு போட்டி வைத்துக் கொள்வேன், என் எதிரில் குறைந்த 10 பெண்கள் வருவார்கள் என்றும், ஒரு நாள் 5க்கும் குறைவான குழந்தைகள் என்றும் ஒரு நாள் என்னிடம் குறைந்தது 2 பேராவது பேசுவார்கள் (தெரிந்தவர்கள்) என்றும் நினைத்துக் கொள்வேன். வெற்றியும், தோல்வியும் மாறி மாறி கிடைக்கும்.

கிரிக்கெட் போட்டியில் கூட போட்டிக்கு முன்பே குறைந்தது 2 சிக்ஸர் அல்லது முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்த்துவேன் என்று எல்லாம் முடிவு செய்து விளையாடுவேன்.

அது மாதிரி தொழில் செய்யத் தொடங்கும் முன்பே நமக்கு நாமே ஒரு டார்கெட் வைத்துக் கொள்ள வேண்டும். முடியை கட்டி மலையை இழுக்கிறோம், வந்தால் மலை, போனால் முடி இது தான் என்னுடைய பாலிஸி. போனதைப் பற்றி கவலைப்பட மாட்டேன், ஏனென்றால் போனது என் முயற்சி தான், அடுத்த முயற்சியில் அதை சாதிக்கலாமே.

(அனிதன், இந்தப்பகுதி இப்படி தான் இருக்கும், கூடவே உங்கள் தொழில் விபரங்களையும், மற்றவர்கள் விபரங்களையும் கொடுக்கலாம்).

kavitha
19-08-2005, 05:27 AM
எனது மாமியார் ஊர் உடன்குடி, மாமனார் ஊர் இடையன்குடி அருகில் இருக்கும் ஆனைக்குடி.

படித்தது வெள்ளாளன்விளை (இந்தியாவின் முதல் பிஷப் அசரியா அவர்கள் பிறந்த ஊர், அதே பள்ளி), தேம்பா சகோதரிக்கும் நம்ம ஊர் தான், பின்னர் மெஞ்ஞானப்புரம் மேல்நிலைப்பள்ளி அப்புறம் சென்னை, குவைத் வந்தப்பின்பு சென்னையில் செட்டில் ஆகியாச்சு.
அட அப்படியா? :)
அது மாதிரி தொழில் செய்யத் தொடங்கும் முன்பே நமக்கு நாமே ஒரு டார்கெட் வைத்துக் கொள்ள வேண்டும். முடியை கட்டி மலையை இழுக்கிறோம், வந்தால் மலை, போனால் முடி இது தான் என்னுடைய பாலிஸி. போனதைப் பற்றி கவலைப்பட மாட்டேன், ஏனென்றால் போனது என் முயற்சி தான், அடுத்த முயற்சியில் அதை சாதிக்கலாமே.

நல்ல கொள்கை அண்ணா. உபயோகமான பதிவு. தொடருங்கள்.

anithanhitler
22-08-2005, 02:29 PM
நான் தினமும் பள்ளிக்குச் செல்லும் போது தனியாக நடந்து செல்வதால் போர் அடிக்கும், அதை தவிர்க்க, எனக்கு முன்னால் யார் போகிறார்களோ அவர்களை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் முந்துவேன் என்று கைக்கடிகாரத்தில் நேரம் பார்த்துவிட்டு, வேக வேகமாக நடப்பேன். அவரை முந்தியவுடன், அடுத்து எனக்கு முன்னால் யார் என்று பார்த்து, அவருக்கும் அதே மாதிரி நேரம் நிர்ணயம் செய்து, வேக வேகமாக நடந்து முந்துவேன், இது மாதிரி பள்ளி சென்றடையும் வரை எனக்கு நானே போட்டி வைத்துக் கொள்வேன்..சும்மா நடப்பதை விட, மனதில் ஒரு போட்டியை நினைத்துக்கொன்டு கொஞசம் கொஞ்சமாக முன்னேறுவதை நானும் சில நேரங்களில் அனுபவித்து இருக்கிறேன்...

அப்புறம் உங்களுடைய குடும்ப வம்சாவழியினர் உஙகள் ஊரில் இருப்பார்கள் அல்லவா?.. எப்போதாவது சொந்த கிராமத்திற்க்கு வருவதுண்டா?

பரஞ்சோதி
22-08-2005, 06:01 PM
சும்மா நடப்பதை விட, மனதில் ஒரு போட்டியை நினைத்துக்கொன்டு கொஞசம் கொஞ்சமாக முன்னேறுவதை நானும் சில நேரங்களில் அனுபவித்து இருக்கிறேன்...

அப்புறம் உங்களுடைய குடும்ப வம்சாவழியினர் உஙகள் ஊரில் இருப்பார்கள் அல்லவா?.. எப்போதாவது சொந்த கிராமத்திற்க்கு வருவதுண்டா?

அனிதன், கிராமத்தில் இன்னமும் என்னுடைய சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள். இந்தியா வரும் போது அங்கே தான் செல்வேன். தசரா பண்டிகையை மீண்டும் பார்க்க ஆசையாக இருக்குது, இந்த வருடம் முடியாது, அடுத்த முறை அதை ஒட்டி வரலாம் என்றும் ஆசை.

கண்டிப்பாக உங்கள் வீட்டிற்கு வருவோம். சக்திக்கு ஒரு தொப்பு தயார் செய்து கொடுங்கள் :)

anithanhitler
27-08-2005, 04:40 AM
எப்படி இருக்கிறீர்கள் பரஞ்சோதி??

கடந்த வாரம் கொஞ்சம் வேலை அதிகமாக இருந்துவிட்டது.அதனால்தான் தகவல் ஏதும் தர முடியவில்லை.

அப்புறம் நான் நம்ம ஊருக்கு தகவல் அனுப்பி இருக்கிறேன். விரைவில் அந்த அலங்கார பொருள்கள் பற்றிய படங்களை அனுப்பி வைப்பார்கள்..அது கிடைத்தவுடன் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.சரியா?

நான் தற்போது ஒரு மென்பொருள் த்யாரிப்பு கம்பெனியில் வேலை பர்க்கிறேன். தாங்கள் குவைத்தில் என்ன செய்கிறீர்கள் என தெரிந்து கொள்ளலாமா?

பரஞ்சோதி
27-08-2005, 05:06 AM
நன்றி அனிதன்,

வேலை நேரம் போக மீதி நேரம் வாங்க பேசலாம்.

பொதுவா எல்லோரும் நான் தமிழ்மன்றத்தில் வேலல செய்வதாக நினைப்பார்கள். ஹா! ஹா!

உங்களுக்கு தனிமடல் அனுப்புகிறேன்.

மன்மதன்
27-08-2005, 05:51 AM
நன்றி அனிதன்,

வேலை நேரம் போக மீதி நேரம் வாங்க பேசலாம்.

பொதுவா எல்லோரும் நான் தமிழ்மன்றத்தில் வேலல செய்வதாக நினைப்பார்கள். ஹா! ஹா!அப்ப இல்லையா ?? :rolleyes: :rolleyes:

anithanhitler
01-09-2005, 02:54 PM
நலமா பரஞ்ஜோதி,
நான் ஊருக்கு தகவல் அனுப்பியாயிற்று.. இன்னும் ஒரு சில தினங்களில் படம் அனுப்பி வைப்பார்கள். நான் உஙளுக்கு எப்படி அனுப்ப?.. இணையத்திலே அனுப்பவா? அல்லது தபாலில் அனுப்பவா?...

இங்கே அலுவலகத்தில் செம வேலை... என்ன பண்ண ?... எனக்கு சொந்த வியாபரத்தில் தான் நாட்டம் அதிகமாக உள்ளது...ம், ம் பார்ப்போம்.. நம் வாழ்க்கை நம் கையில்...

பரஞ்சோதி
01-09-2005, 07:33 PM
வாங்க அனிதன்.

படங்க இங்கேயே போடுங்கள். மேலும் அலுவலகத்தில் வேலை செய்து சம்பாதிக்க வேண்டும், அதை முதலாக போட்டு தொழில் செய்ய வேண்டும். அப்போ தான் இரண்டுக்கும் நல்லது.

anithanhitler
03-09-2005, 05:50 AM
வாங்க அனிதன்.

படங்க இங்கேயே போடுங்கள். மேலும் அலுவலகத்தில் வேலை செய்து சம்பாதிக்க வேண்டும், அதை முதலாக போட்டு தொழில் செய்ய வேண்டும். அப்போ தான் இரண்டுக்கும் நல்லது.

ஆமாம் பரஞ்ஜோதி,
நீங்கள் சொல்வது சரிதான்... முதலில் கொஞ்ச காலத்திற்கு, அலுவலகத்தில் வேலை பார்த்துக்கொன்டே தொழில் பார்ப்பது தான் நல்லது..தொழில் சிறப்பாக ஆகும் பட்சத்தில் அதை முழு நேர வேலையாக ஆக்கலாம்..
மிகச் சரியான முடிவு....

drjperumal
12-02-2007, 01:58 PM
ஆஹா அற்புதம் என்ன அருமையான உரையடல்கள்

அறிஞர்
12-02-2007, 02:45 PM
ஆஹா அற்புதம் என்ன அருமையான உரையடல்கள்
தாங்கள் படித்த நல்ல விசயங்களையும் பகிர்ந்துக்கொள்ளலாமே..

drjperumal
12-02-2007, 02:59 PM
தினமும் கவனிக்க வேண்டிய குறிப்புகள்

பன்னாட்டு தொழில் சுற்றுலா மேற்கொள்ளப் போகிறவர்கள் சந்திக்கின்ற சவால்கள், இடர்பாடுகள் பல வெளிப்படையாக தெரிந்தும் தெரியாமலும் நடக்கின்றன. சாதாரண தானியங்கி டெல்லர் எந்திரம் (TELLER) இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் போய்விடும். உணவகங்கள் தேவைப்படும் நேரத்தில் திறக்கப்படாமல் இருக்கலாம். இப்படி வளங்கள், வாய்ப்புகள் பல இருந்தபோதும் பயன்படுத்திக் கொள்ள முடியாத சிக்கல்கள் தோன்றும்.

அடிக்கடி பன்னாட்டு அளவிலான பயணங்களை மேற்கொள்ளும் மேலாளர்கள் கரடுமுரடான பல்வேறு சிக்கல்களினூடே தாங்கள் கற்றுக் கொண்டதை இங்கு பகிர்ந்து கொள்கின்றனர்.

நண்பர்களைக் கண்டுபிடியுங்கள்

எந்த நாடும் விதிவிலக்கின்றி, பல்வேறு தொழில்களும் இன்று உலகமயமாகி வருகின்றன. தொழில் நடவடிக்கைகளாகவோ, கிளை நிறுவனங்களாகவோ, முகவர்களாகவோ உலகெங்கிலும் பரந்து விரிந்துள்ளன. இதனால் "ஊக்கத்தோடு உலகெங்கிலும் தொடர்புகளை உருவாக்கிக் கொள்ள முனையுங்கள். அதுவும் உங்களின் பயணத்திற்கும் முன்பாகவே அந்நாட்டில் உள்ள நண்பர்களைப் பெறுவதற்கான வழிகளை திட்டமிட்டு விடுங்கள்"

திட்டங்களை வைத்திருங்கள்

"தொழில் கண்காட்சியில் பங்கேற்பதற்காக எப்போது சென்றாலும் 'திகிலூட்டும் பொருட்களடங்கிய பெட்டி'யை தூக்கிக்கொண்டு கஸ்டம்ஸ் வழியாகச் செல்வதற்கு திட்டமிடாதீர்கள். அப்படி செல்லும்போது 50 விழுக்காடு சிக்கல் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன"

"உங்கள் பெட்டியில் கண்காட்சிக்கான விவரக்குறிப்பேடுகள், அறிவிப்புகள் இடங்களைச் சுட்டும் வரைபடங்கள் இவற்றையெல்லாம் வைத்துக் கொண்டு செல்லலாம். உங்கள் தொழிலுக்கான அடையாள அட்டை, தங்கும் ஓட்டல் போன்ற விவரங்களோடு சென்றால் சிக்கல் எதுவும் வராது"


தொலைப்பேசியை சரியாகப் பயன்படுத்துங்கள்
விமானத்தில் பறக்கும் முன்பே அயல்நாடுகளில் உள்ள பணம் செலுத்திப்பேசும் தொலைபேசிகளை (Pay Phone) எப்படி, எவ்விதம் பயன்படுத்துவது என்பதை அறிந்து கொள்ளுங்கள்" மேலும் அங்குள்ள ஆப்ரேட்டர்கள் எவ்வித உதவியும் செய்யப்போவதில்லை, நீங்களேதான் அதை அறிந்து கொள்ள வேண்டும் . தொலைபேசியில் பேசுவதற்காக நீங்கள் வாங்கி வைத்திருக்கும் அழைப்பு 'அட்டை'களை முழுமையாகப் பயன்படுத்த அறிந்து கொள்ளுங்கள்.

பணத்தை பகிர்ந்து வையுங்கள்

உங்களுடைய பணத்தை பணப்பை (மணிபர்ஸ்), பாஸ்போர்ட், பெட்டிகள் இதர பைகள் என பலவற்றிலும் பகிர்ந்து வையுங்கள். "இந்த வழிதான் நீங்கள் ஏமாளியாகி விடாமல் தடுப்பதற்கான ஒன்றாக இருக்கும். அல்லது கடன் அட்டை (credit card) களை வைத்திருந்து பயன்படுத்தலாம், கடந்த இரண்டாண்டுகளுக்குமுன் இரண்டு வாரங்கள் தொடர்ச்சியாக உலகப் பயணம் ஒன்றை மேற்கொண்டேன். அப்பொழுதுதான் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்த பிறகு இந்த வழியையே கற்றுக் கொண்டேன்"

அறையைவிட்டுச் செல்லும் முன்...

உங்களுடைய அறையை பாதுகாப்பதற்கான வழிகளில் ஒன்று. நீங்கள் அறையைவிட்டுச் செல்லும்முன் அறைக்கதவில் 'யாரும் தொந்தரவு செய்யாதீர்கள், என்ற கதவொட்டிகளை (ஸ்டிக்கர்) ஒட்டி வைத்துவிடுங்கள்" அறைபுகுந்து திருடும் திருடர்களிடம் இருந்து பாதுகாப்பதற்காக தொலைக்காட்சியை ஓட விட்டோ, விளக்குகளை எறிய வைத்துவிட்டோ செல்லுங்கள். திரும்பி வந்தவுடன், செல்லும்போது இருந்தபடியே அறை இருக்கிறதா என்பதையும் ஆராய வேண்டும்.

இரண்டு அறைகளைப் பதிவு செய்யுங்கள்

வெளிநாட்டில் உள்ள நகரமொன்றுக்கு புதிதாகச் செல்கிறீர்கள் என்றால் இரண்டு வேறுபட்ட ஓட்டல்களில் இருவேறு அறைகளை முன்பதிவு செய்து விடுங்கள். "தங்களுக்கு இடம் கிடைக்காமல் சிரமப்படக்கூடிய வாய்ப்புகளைத் தவிர்ப்பதற்காக இருவேறு அறைகளைப் பதிவு செய்யுங்கள். ஒன்று கிடைக்கா விட்டால் இன்னொன்றைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதுவும் உங்களுக்குப் பழக்கமில்லாத நகரங்களுக்குச் செல்லும்போது, தங்குவதற்கு இடமின்றி அவதிப்படுவதை தவிர்க்கும் பொருட்டு இதை செய்தாக வேண்டும்" * புத்துணர்வோடு இருக்க

"பன்னாட்டு விமானங்களில் பறக்கும்முன் புதிய ஆடைகள் மற்றும் உள்ளாடைகள் எப்பொழுதும் எடுத்துச் செல்வேன்" மேலும், "விமானத்தை விட்டு இறங்கியவுடன் முதலில் நான் செய்யும் பணி என்னுடைய முகத்தை தூய்மையாகக் கழுவி, புத்துணர்வூட்டும் புதிய ஆடைகளை உடுத்தி, தலையை வாரி விடுவேன். இது மிகச்சிறிய ஒரு பணிதான் என்றாலும் பெரிய மாற்றத்தை செய்துவிடக்கூடிய ஒன்றாகும். இதனால் சோர்வூட்டும் எண்ணங்கள் நீங்கி விடும்"

அறிஞர்
12-02-2007, 03:24 PM
இளம் முதலாளிகளுக்கு.. டாக்டர். பெருமாளின் அறிவுரைகள்... அமுதமாக இருக்கிறது...

இன்னும் கொடுங்கள் டாக்டர்...

drjperumal
12-02-2007, 04:42 PM
வாழ்க்கையில் ஒரு குறிக்கோள்;

வாழ்க்கையில் ஒரு மனிதனுக்கு அவன் எந்த நிலையில் இருந்தாலும் ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அவன் வாழ்க்கையில் ஒரு அர்த்தமே இருக்காது. அவனும் பறவையினமும் மிருகங்களும் ஒன்றhகவே கருதப்படுவர்.
குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்ள ஆஸ்திக சம்பந்தமான நுhல்களை படிப்பது அதன் வழி நடக்க முயற்சிப்பது மிக அவசியம். அவ்வாறு தான் ஞானிகளும் சாதுக்களும் தங்களது அறிவுரைகளில் கூறுகிறhர்கள். கடவுளை அடைய பல சுலபமான வழிகளை விதிகளையும் போதிக்கிறhர்கள். மனிதன் தான் அன்றhடம் செய்யும் தனது தொழிலை செவ்வனே செய்து செய்யும் தொழிலே தெய்வம் என்று இருந்து வந்தால் கடவுள் அவனுக்கு வேண்டியதை வேண்டும்படி தந்து விடுவார்.

63 நாயன்மார்களில் அதி பக்த்த நாயனார் என்பவர் உலக பற்றா;று வாழ்ந்து வந்தவர். செம்படவர் (மீனவர்) குலத்தில் பிறந்தவர் எனினும் சிறந்த சிவ பக்தர். சிறந்த பக்தர்களைத்தான் ஆண்டவன் சோதிப்பது வழக்கம். அவருக்கு பலவித சோதனைகளை உருவாக்கினார். அவை அனைத்தையும் கடந்தும் அவர் தனது கொள்கையை கை விடவில்லை. இவர் தனது தொழில் மீன் பிடிப்பது என்பதையும் அதனை விற்றுத்தான் தனது குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்பதையும் அறிவார். ஆயினும் அவர் தனது வலையில் ஒவ்வொரு நாளும் முதலில் சிக்கும் மீனை மீண்டும் கடலிலேயே விட்டு விடுவார். இதை அவர் இறைவனுக்கு அற்பணிப்பதாக கருதி செய்து வந்தார். பிறகு கிடைக்கும் மீன்களையே தனது தொழிலுக்கு பயன்படுத்தி வந்தார். இப்படிப்பட்ட இவரை ஆண்டவன் கோதிக்க எண்ணினார். அதன் விளைவாக ஒரு நாள் அவரது வலையில் ஒருமீன் மட்டும் அகப்படும்படி செய்தார். அந்த மீனை பிடித்த பக்தர் மீண்டும் அப்படியே கடலில் செலுத்தி விட்டார். மீண்டும் பல நாள் அவருக்கு மீன் கிடைக்காமல் இருக்கும்படி செய்தார். ஆனாலும் அந்த பக்தர் தன் கொள்கையை கைவிடவில்லை. ஒரு நாள் அவரது வலையில் திடீரென ஒரு மீன் அகப்பட்டது அதன் உடல் முழுவது பொன்னாலும் அதன் மீது வைரங்கள் பதித்ததாகவும் அது காணப்பட்டது. மீனவர் (பக்தர்) அந்த மீனை பிடித்து மீண்டும் கடலிலேயே விட்டு விட்டார். அவனை சுற்றி இருந்த சுற்றத்தாரும் மற்றவர்களும் அவரை பலவாறு ஏசினார்கள். அவர் எதையும் பொருட்படுத்தவில்லை. அவர் அவர்களுக்கு நான் தினமும் முதலில் கிடைக்கும் மீனை இறைவனுக்கு அற்பணிப்பது என் வழக்கம் அதன்படி இன்று கிடைத்த அந்த மீனை இறைவனுக்கு அற்பணித்து விட்டேன். இனி வேறு மீன் கிடைப்பதும் கிடைக்காததும் இறைவனது கருணை என்றhர். மற்றவர்கள் அவரை தனியே விட்டு பிரிந்து சென்றுவிட்டனர். இவரது இத்தகைய இறை பக்தியை மெச்சிய சிவன் அவர் முன் தோன்றி அவரை தன்னுள் ஆட் கொண்டார