PDA

View Full Version : ஆகஸ்ட் 13, சனிக்கிழமை மலேசியாவிலிருந்து செ



Mano.G.
13-08-2005, 01:53 AM
Northport மற்றும் Westport துறைமுகங்கள் வழக்கம் போல் இயங்கிவருகின்றன
போர்ட் கிள்ளானில் அனைத்து பகுதிகளிலும் உடனடியாக புகை மண்டல அவசரநிலைப் பகுதிகளாக அறிவித்தபோதும், Northport மற்றும் Westport துறைமுகங்கள் வழக்கம்போல் இயங்கி வருகின்றன.
இருப்பினும், சிரமங்களை சற்று எதிர்நோக்கியபோதும், மிக முக்கியமான துறைமுகங்களான Northport மற்றும் Westport துறைமுகங்கள் வழங்கம் போல் இயங்கி வருவதாக கிள்ளான் துறைமுக அமைப்பின் உயர் அதிகாரி Datin Paduka O.C Phang தெரிவித்தார்.
அதையடுத்து நிலைமை மேலும் மோசம் அடைந்தால், குறிப்பிட்ட சில நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
-----------------------------------------------------------------------
போர்ட் கிள்ளான் மற்றும் கோல சிலாங்கூர் பகுதிகளில் கட்டுமானப் பணிகளை நிறுத்த உத்தரவு
நாட்டில் நேற்று முன்தினம் புகைமூட்டம் காடுமையானதைத் தொடர்ந்து, போர்ட் கிள்ளான் மற்றும் கோல சிலாங்கூர் பகுதிகளில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அவ்வட்டாரங்களில் பொதுப்பணி அமைச்சின் கீழ் நடைபெற்று வரும் அனைத்து கட்டுமானப் பணிகளையும் தற்காலிகமாக நிறுத்தும்படி பொதுப்பணி அமைச்சர் Datuk Seri S. Samy Vellu நேற்று தெரிவித்தார்.
மேலும் அவ்விரு பகுதிகளிலும், நேற்று முன்தினம் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டதை தொடர்ந்து அந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். இதனிடையே அவசரநிலை பிரகடனம் ரத்து செய்யப்பட்டால், மீண்டும் இக்கட்டுமானப்பணிகள் தொடரும் என அவர் தெரிவித்தார்.


திங்கட்கிழமை வரையில் பள்ளி விடுமுறைகள் நீடிக்கப்படுமா?
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காற்றுத் தூய்மைக்கேட்டின் அளவைப் பொருத்தே பள்ளிகளுக்குத் திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மோசமான புகை மூட்டத்தின் காரணமாக வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறைகள் வழங்கப்பட்டன.
இந்த விடுமுறைகள் திங்கட்கிழமை வரையில் நீடிப்பது காற்றுத் தூய்மைக்கேட்டின் அளவைப் பொருத்தே இருப்பதாக கல்வித்துறை¢ தலைமை இயக்குனர் Datuk Dr Ahamad Sipon தெரிவித்தார்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை நேரத்தில் காற்றுத் தூய்மைக்கேட்டின் அளவு 300-ஆக இருக்குமானால் பள்ளிகளுக்குத் திங்கட்கிழமை விடுமுறை வழங்குவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவ்வாறு தெரிவித்தார்.

BSN-வங்கிக்கு ஐந்து நாட்கள் வேலைத் திட்டம்

அரசாங்கம் பொது ஊழியர்களுக்கு ஐந்து நாட்கள் வேலைத் திட்டத்தை அமல்படுத்தியதைத் தொடர்ந்து எதிர்வரும் 15-ஆம் திகதி ஆகஸ்ட் மாதத்திலிருந்து Bank Simpanan Nasional வங்கியும் வாரத்தில் ஐந்து நாட்களுக்கு மட்டுமே தனது சேவையை வழங்கவுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க பொது ஊழியர்களுக்குக் கடந்த ஜூலை 1-ஆம் திகதியிலிருந்து வாரத்தில் ஐந்து நாட்கள் வேலைத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து BSN வங்கிக்கும் இத்திட்டம் 15-ஆம் திகதியிலிருந்து அமலுக்கு வரவுள்ளதாக அவ்வங்கி வெளியிட்டிருந்த ஓர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து BSN வங்கி காலை 9.00 மணியிலிருந்து மாலை 4.30 மணி வரையில் திறந்திருக்கும் எனவும் பேரங்காடிகளில் உள்ள வங்கிகள் காலை 10.00 முதல் 5.30 மணி வரையில் திறந்திருக்கும் எனவும் அவ்வறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.

புகை மூட்டத்தினால் சுதந்திர தின நிகழ்ச்சி பாதிக்கப்படாது

எதிர்வரும் 31-ஆம் திகதி ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கும் சுதந்திர தின நிகழ்ச்சி தற்பொழுது மலேசியாவில் பல பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் புகை மூடத்தினால் எந்தவொரு பாதிப்பும் அடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சுதந்திர நிகழ்ச்சியைக் கொண்டாடுவதற்கு இன்னும் நாட்கள் இருப்பதால் அதுவரையில் இந்த புகை மூட்டம் நீடிக்காது என தகவல் துறை அமைச்சர் Datuk Seri Abdul Kadir Sheikh Fadzir தெரிவித்துள்ளார்.
திட்டமிட்டப்படியே சுதந்திர தின நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக எந்தவொரு தடையுமின்றி நடைபெறும் என அவர் உறுதியளித்துள்ளார். சீனா நாட்டிற்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருக்கும் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசிய வேளையில் அவ்வாறு தெரிவித்தார்.


கொடூரமான முறையில் ஆடவர் கொலை
சிரம்பானிலுள்ள Ladang Linsum Jalan Rantau-Linggi-யில் ஆடவர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்ட நிலையில் அவரது சடலம் போலீசாரால் கண்டெடுக்கப்பட்டது.
நேற்று காலை சுமார் 9.45 மணியளவில் அவ்வாடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக சிரம்பான் மாநில குற்றப்புலனாய்வுத் துறை தலைவர் Bon Jeen தெரிவித்தார். உடல் முழுவதும் எரியூட்டப்பட்டுவிட்டதால் கொலை செய்யப்பட்ட அவ்வாடவரை அடையாளம் காண்பதில் போலீசார் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
அவ்வாடவர் வேறு இடத்தில் கொலை செய்யப்பட்ட பின்னர் இந்த செம்பனைத் தோட்டத்தில் எரியூட்டப்பட்டிருக்கலாம் என அப்போலீஸ் அதிகாரி கூறினார். இதன் தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
-----------------------------------------------------------------------
மும்பையில் விஷக்காய்ச்சல்: 37 பேர் பலி
மும்பையில் வேகமாகப் பரவி வரும் விஷக்காய்ச்சலுக்கு இதுவரை 37 பேர் பலியாகி விட்டனர். மேலும் 250க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
மகராஷ்டிர மாநிலத்தில் கடந்த மாதம் பெய்த வரலாறு காணாத மழைக்கு 1200க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர். மும்பையில் மட்டும் 700க்கும் அதிகமானோர் பலியானார்கள். பல இடங்களில் இன்னும் வெள்ள நீர் வடியவில்லை. பல கிராமப்பகுதிகள் இன்னும் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கின்றன.
வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் உடல்கள் உடனுக்குடன் அப்புறப்படுத்தாததால் மும்பையில் தொற்று நோய் வேகமாக பரவி வருகிறது. இங்கு கடந்த சில தினங்களாக பரவி வரும் விஷக்காய்ச்சலுக்கு இதுவரை 37 பேர் பலியாகி விட்டனர். மேலும் 250க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-----------------------------------------------------------------------
ஈரானில் மழை வெள்ளம்: 27 பேர் பலி
ஈரானின் வடகிழக்கு மாநிலமான கோலஸ்தானில் பெய்த கடும் மழை மற்றும் வெள்ளத்திற்கு 27 பேர் பலியாகிவிட்டனர். கோலஸ்தானில் ஒரு நாள் இரவு முழுவதும் பெய்த கடும் மழையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
வெள்ளத்தில் பசுக்கள், குளிர்சாதன பெட்டிகள், அறுவடை செய்யும் இயந்திரங்கள் மற்றும் டிராக்டர்கள் அடித்துச் செல்லப்பட்டது. உயிருடன் உள்ளவர்களை மீட்பதற்காக ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக ரெட் கிரசன்ட் அவசரகால பணியாளர்கள் தெரிவித்தனர்.
மேலும், கடும் மழையால் விவசாயநிலங்கள், சாலைகள் மற்றும் கட்டிடங்கள் ஆகியவை மிகவும்
பாதிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய வானொலி அறிவித்துள்ளது. அப்பகுதியில் மழை தொடர்ந்து பெய்துக் கொண்டிருப்பதால் பழி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

ஈராக்கில் புதிய மாநிலம் உருவாக்க தீவிரவாத அமைப்பு கோரிக்கை

ஈராக்கின் தென்பகுதிகளில் ஷியா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை ஒருங்கிணைத்து தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என ஈராக் அரசியல் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியும், தீவிரவாத அமைப்பும் கோரிக்கை விடுத்துள்ளன.
ஈராக்கில் பாதர் பிரிகேட்ஸ் என்ற தீவிரவாத அமைப்பின் தலைவராக இருப்பவர் ஹாதில் அல் அமிரி. ஈரான் ஷியா பிரிவு முஸ்லிம் தீவிரவாத இயக்கத்தினரிடம் பயற்சி பெற்றவர். இவர் ஈராக்கின் தென் பகுதியில் உள்ள ஷியா பிரிவு முஸ்லிம்களின் புனித தலமான நிஜாப் நகரத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ஷியா முஸ்லிம்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார்.
அப்போது , ஈராக்கின் அனைத்து பகுதிகளிலும் கூட்டாட்சி முறை உருவாக வேண்டும். ஈராக்கில் ஷியா முஸ்லிம்கள் கூட்டாட்சி அமைப்பு முறையை அனுபவிக்க முடியாமல் தடுக்கப்படுகின்றனர். இதுவரை ஈராக் அரசாங்கத்திடமிருந்து சாவைத் தவிர வேறு என்ன கிடைத்தது? நமக்கு உரிமைகள் கிடைப்பதற்கு நமது எதிரிகள் தடைகளை ஏற்படுத்தி வருகின்றபோது, கூட்டாட்சி உரிமையை நாம் கண்டிப்பாக அடைந்திருக்க வேண்டும்.
எனவே, ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கென ஈராக்கின் தென் பகுதியில் சொந்த மாநிலம் உருவாக்க வேண்டும் என வலியுறுத்துவோம்' என்று அவர் தமது உரையில் கூறியுள்ளார்.

இஸ்லாம் மதத்தில் சீர்திருத்தங்கள் அவசியம் என்கிறார் சல்மான் ருஷ்டி

பழமைவாதத்தை கைவிட்டுவிட்டு நவீன யுகத்திற்கு தகுந்தார்ப் போல் இஸ்லாமிய மதத்தில் சீர்திருத்தங்கள் செய்யப்படவேண்டும் என சர்ச்சைக்குரிய நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி கூறியுள்ளார். இஸ்லாமிய மதத்தில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டியது அவசியம். அந்த சீர்திருத்தங்கள் நவீன யுகத்திற்கு தகுந்தார்ப் போல இருக்க வேண்டும்.
அதற்கு என தனி இயக்கம் உருவாக வேண்டும். அது பழமைவாதத்திற்கு அப்பாற்பட்ட இயக்கமாக மட்டுமல்லாது, சீர்திருத்த இயக்கங்களுக்கு சற்றும் குறைவில்லாத இயக்கமாக இருக்க வேண்டும். அவ்வாறு இஸ்லாம் மதத்தில் செய்யப்படும் சீர்திருத்தங்கள் வெறும் பூகாத்களுக்கு எதிராக மட்டுமல்லாது, பழமைவாதிகளின் தூசு படிந்த தத்துவங்களுக்கும், அடக்குமுறைக்கு எதிரானதாகவும் இருக்கவேண்டும்.
அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்ட சமுதாயத்தின் ஜன்னல்களை திறந்துவிட்டு, சுதந்திர காற்றை சுவாசிக்கச் செய்வதாக இருக்கவேண்டும். இவ்வாறு லண்டனில் இருந்து வெளிவரும் "டைம்ஸ்' பத்திரிக்கையில் சல்மான் ருஷ்டி எழுதியிருக்கிறா.

----------------------------------------------------------------------
Formula 1 கார் பந்தயங்கள் குறித்து விழிப்புணர்வு
Cricket போன்று Formula 1 கார் பந்தயங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் இதுகுறித்து மக்களை அறியச் செய்ய வேண்டும் எனவும் Formula 1 கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் கூறினார்.
ESPN மற்றும் Star Sports சார்பில் தற்போது புதிதாக இரு விளையாட்டுச் Channel-களிலும் 'பிராண்ட் அம்பாசிடராக' நரேன் கார்த்திகேயன் இணைந்துள்ளார்.
தற்போது இந்தியாவில் கார் பந்தயம் பிரபலமாகி வருவதை எண்ணி சந்தோஷப்படுவதாகவும், தெற்கு ஆசியாவிலும் விரைவாக கார் பந்தயம் பற்றிய விழிப்புணர்வு பரவி வருகிறது எனவும் நரேன் கார்த்திகேயன் மேலும் தெரிவித்தார்.

நன்றி வணக்கம்மலேசியா.காம்


மனோ.ஜி