PDA

View Full Version : லக்ஸ்மன் கதிர்காமர் சுட்டுக்கொலைஇளையவன்
13-08-2005, 01:23 AM
சிறீலங்காவின் வெளிநாட்டமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.
http://www.eelampage.com/d/p/lr/kadir20050813.jpg

இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கும் 11 மணிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது.

சினைப்பர் தாக்குதலில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட போதிலும், நள்ளிரவுக்குப் பின்னர் மரணமானதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தனது நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட பின்னர் வீடு திரும்பிய இவர், அங்கு தனது இல்லத்திலுள்ள நீச்சல் தடாகத்தில் குளித்துவிட்டு, வீட்டுக்குள் உள்நுழையச் சென்ற போதே தூர மறைந்திருந்த இனந்தெரியாத நபர்கள் இவர்மீது குறிவைத்துச் சுட்டுள்ளார்கள்.

அதிவிசேட பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த கதிர்காமருக்கு சிறிலங்கா இராணுவத்தின் சிறப்பு படைப்பிரிவைச் சேர்ந்த 100 படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்த பாதுகாப்பிற்கு மத்தியிலேயே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலுள்ள விஜயராம மாவத்தையிலுள்ள இவரது வீட்டில் இச்சம்பவம் இடம்பெற்றதையடுத்து கொழும்பு 7 ஆம் வட்டாரத்திற்கு செல்லும் பாதைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதோடு குறிபார்த்துச் சுட்ட துப்பாகிதாரிகளை தேடும் வேட்டைகள் பலமாக இடம்பெற்று வருகின்றன.

இதற்கு சிறிலங்காவின் வான்படையின் உலங்குவானூர்திகள் வெளிச்சம் பாய்ச்சி உதவி வருவதுடன் பரா வெளிச்சக்குண்டுகளும் விண்ணுக்கு ஏவப்பட்டு தேடுதல்கள் இடம்பெற்றன.

இச்சம்பவத்தை தொடர்ந்து கொழும்பு அதன் சுற்றுப்புறமும் பலத்த பதற்றத்துக்குள்ளாகியிருப்பதாக அங்கிருந்து தற்போது கிடைக்கப்பெறும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சிறீலங்கா இராணுவத்தில் பணிபுரிந்த ராஜன் செல்வநாயகத்தின் மகனான கதிர்காமர் கொழும்பிலேயே பிறந்து கொழும்பையே தனது முழுமையான வதிவிடமாகக் கொண்டிருந்தார். அத்தோடு தனது மேற் கல்வியை இங்கிலாந்தில் தொடர்ந்தார். இவரது குடும்பம் தமிழர்களுடனான முற்றாகத் தொடர்பற்ற ஒரு குடும்பமாகவும், உயர்மட்டச் சிங்கள அரசியல் தலைவர்களுடனும் நெருக்கமான குடும்பமாகவுமே இருந்தது.

தனது இளமைக் காலத்தில் சட்டத்தரணியாகவும், பல மேற்கத்தைய அமைப்புக்களின் பிரதிநிதியாகவும் பணியாற்றிய கதிர்காமர், சந்திரிகாவினால் அரசியலிற்கு இழுத்து வரப்பட்டார். இதற்கு கதிர்காமருடன் சந்திரிகாவிற்கு இருந்த நெருக்கமான உறவே காரணமாகக் காட்டப்பட்டது. அவ்வகையில், ஆரம்பகாலத்திலிருந்து சிறிமாவோ பண்டாரநாயக்காவின் குடும்பத்தினருடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்த கதிர்காமர், சந்திரிகாவின் ஆலோசகராகப் பதவியேற்று பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதோடு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.

சிறீலங்காவின் இராணுவ உயர் குடும்பத்தைச் சேர்ந்த சுகந்தி என்வரை மூன்றாவது மனைவியாகத் தற்போது கொண்டிருந்த 73 வயதுடைய கதிர்காமருக்கு, சுமார் சில வருடங்களிற்கு முன்பு சிறுநீரக மாற்றுச் சிகிச்சை மேற்கொண்டிருந்த போது பௌத்த பிக்கு ஒருவரே இவருக்கு சிறுநீரகத்தைத் தானமாகக் கொடுத்திருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக கதிர்காமர், வெளிநாட்டு அமைச்சின் இராஜாங்க துறையில் பணிபுரியும் தமிழர்களையும் சந்திரிகாவின் அடிவருடிகளாகவும் தமிழ் ஆயுதக்குழுக்களாக செயற்படும் தமிழர்களையும் ஏறெடுத்துப் பார்க்காதவராகவும் தன்னை ஒரு சிங்களவராக காட்ட விருப்பப்பட்டவராகவுமே கதிர்காமர் இருந்ததாக கொழும்பு தமிழ் ஊடகங்கள் கடந்த காலங்களில் தெரிவித்திருந்தன.

சிறீலங்காத் தரப்பின் வன்முறைகளை மறைத்து மேற்கத்தைய நாடுகளில் தமிழர்களிற்கு எதிரான பிரச்சாரங்களை முன்னிலைப்படுத்துவதில் பெரிதும் வெற்றிபெற்ற கதிர்காமர், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிற்கு பெரிதும் அழுத்தத்தைக் கொடுக்கும் ஒரு நபராகவும் 1990களின் நடுப்பகுதியிலிருந்து கதிர்காமர் திகழ்ந்து வந்தார்.

சிறீலங்கா அரசின் நடவடிக்கைகள் கண்டனத்திற்குள்ளாகும் போது அவற்றை வன்மையான முறையில் மறுதலிக்கும் பாங்கைக் கடைப்பிடித்த கதிர்காமர், புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற குண்டுவீச்சை ஐ.நா. கண்டித்த போது, மலேரியா நுளம்பிற்கு மருந்தடிக்கும் வேலையை நீங்கள் கவனித்தால் போதும், சிறீலங்காவின் இதர விவகாரங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம் என்ற பாணியில் பதிலிறுத்தார்.

எனினும், புலிகளின் ஓயாத அலைகள்-3 மற்றும் ஓயாத அலைகள்-4 தாக்குதல்கள் களநிலமைகள் மற்றும் சர்வதேச அரங்கில் ஏற்படுத்திய மாற்றங்களால் இவரது வாதங்கள் வெளியுலகில் பெரிதும் எடுபடாதவையாகவே இருந்து வந்தன.

அத்தோடு, கடந்த காலங்களில் சர்வதேச அரங்கில் பிரபல்யம் பெற்றவராக இருந்த கதிர்காமர், கடந்த சில ஆண்டுகளிற்கு முன்பு இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் செயலருக்கான பதவிக்கு அவ் அமைப்பின் சம்பிரதாயங்களிற்கு ஒவ்வாத வகையில் போட்டியிட்டவர் என்பதும்,

நிறவாதத்தைக் காரணங்காட்டி, ஆபிரிக்க மற்றும் ஆசிய வாக்குக்களைக் கவர இவர் எடுத்த முயற்சியால் மேற்கத்தைய இராஜதந்திர வட்டாரத்தில் இவரது செல்வாக்குச் பெருஞ்சரிவைச் சந்தித்திருந்தது.

இந்நிலையில் மீண்டும் இந்தியாவினூடான உறவை வலுப்படுத்தி தனது நிலையை ஸ்திரப்படுத்தும் வகையிலான முறையிலேயே அவர் பெரிதும் முனைந்து நின்றார். அதன் ஒரு அங்கமாக தற்போதைய நோர்வேயின் சமாதான முயற்சிகளை முற்றாக வெறுத்தவராகவும், அதனை நிராகரிப்பவருமாகவே கதிர்காமர் இருந்து வந்தார்.

தமிழர்களின் பிரதேசங்கள் குறித்த எந்தவித அறிவுமற்றவராகவும், சிங்களவர்களிற்கு தமிழர்களைப் பற்றித் தெரிந்த விடயங்கள் கூட தெரியாதவராகவும் இருந்து வந்த கதிர்காமரை, நியமன நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்து, அவர் ஒரு தமிழர் என்ற பெயரில் தங்களின் காரியங்களை செவ்வனே செய்து வந்த சிங்கள அரசியற் தலைமைக்கு இவரது இழப்பு எந்தவகையிலும் ஈடுசெய்ய முடியாத ஒன்று.

நன்றி:புதினம் (www.puthinam.com)

Mano.G.
13-08-2005, 03:51 AM
தமிழர்களின் பிரதித்துவமில்லாத ஒருவரை தமிழராக
காட்டி சிங்கள அரசின் ஏமாற்று வேலை இப்பொழுது அம்பலமாகியுள்ளது
போல் இருக்கிறதே.


மனோ.ஜி

http://sooriyan.com/index.php?option=content&task=view&id=2135

பரஞ்சோதி
13-08-2005, 04:56 AM
அன்னாரின் மறைவுக்கு என்னுடைய இரங்கல்.

பல செய்தி தாட்களில் அவரை சுட்டுக் கொன்றது புலிகள் தான் என்று சொல்கிறார்கள்.

இளையவன்
13-08-2005, 12:34 PM
கதிர்காமரின் கொலைக்கும் தமக்கும் எந்தவித தொடர்புமில்லையென விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் கூறியுள்ளார்.

பரஞ்சோதி
13-08-2005, 01:29 PM
நன்றி இளையவன்,

நானும் பார்த்தேன்.

சுவேதா
13-08-2005, 01:56 PM
ஆமாம் இதே போல் நேற்று பகல் பிரபல அறிவிப்பாளர் ரேலங்கி செல்வராஜா அவர்களையும், அவர் கணவரும் இனம் தெரியாதோரால் சுட்டுக்கொள்ளப்பட்டார். அதன் பின் லஷ்மன் கதிர்காமன். ம்ம்ம் ஒரே கொலை அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.