PDA

View Full Version : சோகம் (பழைய திஸ்கியிலிருந்து)



Mano.G.
12-08-2005, 11:29 AM
சோகம்.


சோகம் மனதை தழுதழுக்க
கண்ணீர் துளிகள் கண்களின் ஓரத்தில் முட்டி நிற்க
ஆண் என்ற அகம்பாவம் அழவிடாமல் தடுக்கிறதே
அழுவதென்றால் பெண் தானா
ஏன் ஆண் அழக்கூடாதோ


மனோ.ஜி.

gragavan
12-08-2005, 12:48 PM
ஆண்கள் கண்டிப்பாக அழலாம். தவறேயில்லை. நான் அழுதிருக்கிறேன். வெளிப்படையாக பலரும் பார்க்கும் இடத்தில். வெளிப்படையாகச் சிரிக்க முடியும் பொழுது அழுவதில் என்ன தவறு?

நால்வருக்கு முன் அழக்கூடாது என்ற உணர்வே உயர்ந்த மனப்பாங்கும் கோழைத்தனமும் கலந்தது என்று நான் சொல்வேன். உணர்ச்சிகளை காட்டிவிட வேண்டும். குறிப்பாக அன்பு, சிரிப்பு, அழுகை.

pradeepkt
12-08-2005, 05:28 PM
உயர்ந்த மனப்பாங்கோ என்ன மண்ணாங்கட்டியோ... எனக்கு என்னமோ சாதாரணமா அழுகை வந்ததே கிடையாது... அதுவும் ஏதேனும் சோகம் வந்திருச்சுன்னா முடிந்த அளவு அதுக்கு அடுத்தது என்னன்னுதான் பாக்கணும்.

அழுகை என்பது ஒரு வடிகால். எனக்கு எவ்வளவு சோகம் இருந்தாலும் கொஞ்ச நேரம் பாட்டுகள் கேட்டுக் கண்ணை மூடிக் கொண்டிருந்தால் கரைய ஆரம்பித்து விடும். சிரிப்பை எட்டூருக்குக் காட்டிருவேன்

பிரசன்னா
09-09-2005, 06:12 PM
ஆகா அருமை அருமை
அருமையான கவிதை