PDA

View Full Version : சம்பள(ல)ம்



Mano.G.
12-08-2005, 12:22 PM
சம்பளம்.
மாதக் கடைசியில்
கையிலே வரும் பணம்
30 நாள் ஏ சி அறையில் காலாட்டி
மூளையை கசக்கி உழைத்த உழைப்புக்கும்
வெய்யிலில் முதுகெலும்பு உடைய
உழைத்த உழைப்புக்கும்
கொடுக்கப்படும் சன்மானம்
சம்பளம்
வாங்கும் முன்னே போடப்படும் பட்ஜட்
வாங்கிய பின் காணாமல் போவதேன்
முதல் இரண்டு வாரம் சொகுசு வாழ்க்கை
ஏ சி ரூம் காரருக்கு
வெய்யிலில் உழைப்பவருக்கோ
முதல் இரண்டு நாளே நல்ல சாப்பாடு
உழைப்புக்கு ஏற்ற சம்பளம்
எப்போது வாங்க போகிரோம்
சேமிக்க போகிரோம்.


மனோ.ஜி

pradeepkt
12-08-2005, 06:14 PM
மனோ அண்ணா
முதல் தேதி அப்படின்னு சிவாஜி நடிச்ச படம் ஒன்று உண்டு...

அதில் வரும் சில காட்சிகள் அப்படியே ஞாபகம் வந்தன உங்கள் கவிதை கண்டு.

பிரசன்னா
09-09-2005, 07:10 PM
ஆகா அருமை அருமை
அருமையான கவிதை