PDA

View Full Version : ஆகஸ்ட் 11, வியாழக்கிழமை மலேசிய செய்திகள்Mano.G.
11-08-2005, 03:26 AM
படுசமான காற்றுத் தூய்மைக்கேட்டிற்கு காரணம் என்ன?
மலேசியாவின் பல மாநிலங்களில் ஏற்பட்டிருக்கும் மோசமான காற்றுத் தூய்மைக்கேடு உள்நாட்டில் உள்ள காடுகளிலோ அல்லது புதர்களிலோ ஏற்பட்ட தீயினால் ஏற்படவில்லை எனவும் அண்டை நாட்டு காடுகளில் ஏற்பட்ட தீயினால்தான் இங்கு காற்றுத் தூய்மைக்கேடு ஏற்பட்டுள்ளது எனவும் தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு துறையின் தலைமை இயக்குனர் Datuk Hamzah Abu Bakar தெரிவித்தார்.
தீபகற்ப மலேசியா,சபா மற்றும் சரவாக்கில் பல இடங்களில் தீ ஏற்பட்டிருந்தாலும் அவற்றை உடனடியாக தீயணைப்பு படையினர் அணைத்துள்ளனர்;கட்டுப்பாடிற்குள் கொண்டு வந்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
அது மட்டுமின்றி,திறந்த வெளியில் குப்பைகளை எரித்து நிலைமையை மேலும் மோசமடைய வைக்க வேண்டாமென பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.
---------------------------------------------------------------------

மலேசியாவிற்கு மேலும் கட்டுமான குத்தகைகள்
இந்தியாவில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவது பொருட்டு மலேசிய நிறுவனங்களுக்கு கட்டுமான குத்தகைகளைப் பெற்றுத் தர New Delhi-யில் இந்திய பிரதமர் Manmohan Singh-உடன் பொதுப்பணி அமைச்சர் Datuk Seri S. Samy Vellu பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
1.3 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான திண்டிவனம்-திருச்சி-மதுரை பகுதிகளை இணைக்கும் நெடுஞ்சாலைகளை அமைப்பது தொடர்பாக மலேசியாவிற்கு மேலும் அதிகமான கட்டுமான குத்தகைகளைப் பெற்று தரும் முயற்சியில் Datuk Seri S. Samy Vellu இந்திய பயணம் மேற்கொண்டுள்ளார்.
1995-ஆம் ஆண்டிலிருந்து சுமார் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான 39 கட்டுமான திட்டங்களை மலேசியா மேற்கொண்டுவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தேடப்படும் தீவிரவாதிகளுக்கு எதிராக புத்தகம்
நாட்டில் தீவிரமாக தேடப்பட்டு வரும் 20 குற்றவாளிகளின் படங்களைச் சித்தரிக்கும் வகையில் சரவாக் மாநில போலீசார் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இப்புத்தகம், தீபகற்ப மலேசியாவில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பப்படவுள்ளதாக மாநில போலீஸ் ஆணையர் Datuk Talib Jamal தெரிவித்தார். இப்புத்தகத்தில் அவர்களின் படங்கள், அடையாள அட்டை எண்கள் மற்றும் இருதியாக அவர்கள் தங்கியிருந்த முகவரியும் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தேடப்பட்டு வரும் இவர்கள், பல கொலைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகவும், இப்புத்தகத்தின் வழி இவர்களை எளிதில் அடையாளம் காண முடியும் என அவர் மேலும் கூறினார்.6,000 கள்ளக்குறுந்தட்டுகளை பள்ளி மாணவர்கள் சேகரித்தனர்

St Paul இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் சுமார் 6,000 கள்ள CD மற்றும் VCD-களைச் சேகரித்துள்ளனர். கள்ளக்குறுந்தட்டுகளை அழிக்கும் கருத்தரங்கின் மூலம் மாணவர்கள் இந்நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
சுமார் 20 மாணவர்கள் இந்நடவடிக்கைகளில் விடாமுயற்சியுடன் ஈடுப்பட்டதாக நெகிரி செம்பிலான் வாணிப மற்றும் பயனீட்டாளர் துறை துணை இயக்குனர் V. Ravichandran தெரிவித்தார்.
இம்மாணவர்கள் மேற்கொண்ட இந்த நற்செயல் மிகவும் பாராட்டுக்குரியது எனவும் பெருமைப்படக்குரியது எனவும் அவர் கூறினார். அவர்கள் சேகரித்த இந்த கள்ளக்குறுந்தட்டுகள் அனைத்தும் அழிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

ஈப்போவில் புதிய பேரங்காடி
ஈப்போவில் Bandar Meru Raya பகுதியில் விரைவில் பேரங்காடி ஒன்றை நிர்மானிக்கவிருப்பதாக ஒரு நிறுவனம் அறிவித்துள்ளது.
இப்பேரங்காடியை நெகிரி செம்பிலானிலுள்ள Bandar Baru Nilai Tiga நிறுவனம் நிறுவவிருப்பதாக Menteri Besar Datuk Seri Tajol Rosli Ghazali தெரிவித்தார்.
குறிப்பிட்ட அப்பகுதியில் பொது மக்கள் விற்பனை பொருட்களை வாங்குவதற்கு பேரங்கடிகளோ அல்லது கடைகளோ இல்லாததால் அங்கு ஒரு பேரங்காடியை நிர்மானிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.
----------------------------------------------------------------------
நேப்பாளத்தில் 2 நாளாக நீடித்த சண்டையில் 26 தீவிரவாதிகள் பலி
நேப்பாளத்தில் ராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் நடந்த சண்டையில் 26 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
களிகோட் மாவட்டத்தில் உள்ள தற்காலிக ராணுவ தளம் மீது தீவிரவாதிகள் தாக்குதலை ஆரம்பித்தவுடன் சண்டை மூண்டது. ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இத்தாக்குதல் நேற்று வரை நீடித்தது.
இத்தாக்குதலில் ராணுவ வீரர்கள் இருவர் பலியானார்கள். தீவிரவாதிகளின் மற்றொரு தாக்குதலில் 2 போலீசார் பாலியானார்கள். மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர்.
_---------------------------------------------------------------------

லண்டன் குண்டுவெடிப்புக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை - அதிபர் முஷாரப்
லண்டன் வெடிகுண்டு தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறினார்.லண்டனில் கடந்த மாதம் 7ம் தேதி மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் இருவர் பாகிஸ்தானுக்கு வந்து சென்றது உண்மை தான்.
ஆனால், அவர்கள் இருவரும் பாகிஸ்தானில் தீவிரவாதப் பயிற்சி பெறவில்லை. பிரிட்டனிலேயே தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள். அவர்கள் பிரிட்டனில் 20 ஆண்டுகளாக இருந்துள்ளனர். அப்போதெல்லாம் பிரிட்டன் அரசு எந்த நடவடிக்கையிலும் இறங்காதது ஏன்?
தீவிரவாத நடவடிக்கைகளை கடுமையாக ஒடுக்க பிரிட்டன் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை. லண்டன் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அதிபர் முஷாரப் கூறினார்.


வியட்நாமில் பறவைக் காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலி
வியட்நாமில் Bird Flu எனப்படும் பறவைக் காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். இவருடன் சேர்த்து வியட்நாமில் கடந்த 2003-ம் ஆண்டிலிருந்து பறவைக் காய்ச்சலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 42-ஆக உயர்ந்துள்ளது.
இறந்த மற்றும் நோய்வாய்ப்பட்ட பறவைகள் மூலமாக இந்நோய் பரவுவதால் பறவைகளுக்கு நோய்த் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் இந்நோயைக் கட்டுப்படுத்துவதற்கான பல நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.


இந்திய வம்சாவளி டாக்டர் மீது லண்டனில் பயங்கர தாக்குதல்
லண்டன் வெடிகுண்டு தாக்குதலுக்குப் பின், இன டதியான தாக்குதல்கள் அதிகரித்து விட்டன. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் மீது பயங்கர கல்வீச்சு நடந்தது. படுகாயம் அடைந்த டாக்டர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
லண்டனில் கடந்த மாதம் 7ம் தேதி மற்றும் 21ம் தேதியில் பயங்கர வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. தீவிரவாதிகள் பலர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் முஸ்லிம்கள் என்பதால், லண்டனில் வசிக்கும் மற்ற முஸ்லிம்கள் மீது வெள்ளை இனத்தவர்கள் கடும் தாக்குதல் நடத்தினர். மசூதிகளுக்குத் தீ வைக்கப்பட்டது.
சீக்கியர்களும் முஸ்லிம்களைப் போலவே தோற்றத்துடன் இருப்பதால், அவர்கள் மீதும் குருத்வாரா மீதும் தாக்குதல் நடந்தது. இன டதியான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த பிரிட்டன் போலீசார் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
----------------------------------------------------------------------
வெற்றி பெற்ற Manchester United அணி
Manchester United மற்றும் Debrecen அணிகளுக்கிடையே நடைபெற்ற காற்பந்தாட்டத்தில் Manchester United அணி 3-0 என்ற கோல் எண்ணிக்கையில் Debrecen அணியை வீழ்த்தியது.
ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே இரு அணிகளும் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின. Manchester United அணியின் முதல் கோலை, ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் Rooney புகுத்தினார்.
அவ்வணியின் இரண்டாவது கோலை 49-வது நிமிடத்தில் van Nistelrooy புகுத்தினார். இறுதியாக, Manchester United அணியின் மூன்றாவது கோலை ஆட்டத்தின் 63-வது நிமிடத்தில் Ronaldo புகுத்தினார்.
---------------------------------------------------------------------

நன்றி வணக்கம்மலேசியா.காம்

மனோ.ஜி

pradeepkt
11-08-2005, 10:01 AM
செய்திகளுக்கு மிக்க நன்றி மனோ அண்ணா