PDA

View Full Version : ஒரு புதிய முயற்சி....

anithanhitler
10-08-2005, 03:39 PM
இதுவரை நாம் நமது கருத்து பரிமாற்றங்கலுக்கு இந்த நிலையத்தை உபயொகப்படுதி வருகிறோம்.
என்னுடய கருத்து என்னவெனில், நாம் ஏன் இதை வியாபாரம் குறித்த தகவல்களுக்கும் ப்யன்படுத்த கூடாது?..

நான் இப்போது பனை ஓலை கைவினை பொருள்கள் வியபாரம் செய்கிறேன். நான் இந்த தகவலை தந்தால் வேறு யாராவது அதில் விருப்பம் உள்ளவர்கள் அந்த நாட்டில் உள்ள பயனுள்ள தகவலை தருவார்கள் அல்லவா?.

முழுக்க முழுக்க சம்பந்தபட்ட இரு நபர்களின் பரஷ்பர நம்பிக்கை மட்டுமே... மன்றம் இந்த தகவல்களுக்கு பொறுப்பு ஏற்காது எனலாம்..

இது மன்ற விதிகளுக்கு அப்பாற்பட்டதா?
பரிசீலனை செய்யலாமா என சொல்லுங்களேன்....

பரஞ்சோதி
11-08-2005, 09:23 AM
நல்ல முயற்சி அனிதன்.

மன்றத்தில் தொழில்துறையில் விருப்பம் கொண்டவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

நானும் கூட ஒரு தலைப்பு தொடங்கினேன், பின்னர் தொடரவில்லை. அதில் தொழில் சம்பந்தமாக பேசலாம் என்று சொல்லியிருந்தேன்.

உங்கள் தொழில் விபரம், மற்ற தகவல்கள் கொடுங்க. மற்றவர்களுக்கு உதவும்படியாக இருந்தால் நலம்.

மன்றத்தில் தனிப்பட்ட விளம்பரம் செய்ய முடியாது, காரணம் பலதரப்பட்ட விளம்பரங்கள் கொடுத்து மன்றத்தின் தன்மை குறைந்து விடும்.

மேற்பார்வையாளர்கள் இதைப் பார்த்து ஒரு முடிவு சொல்லட்டும்.

anithanhitler
11-08-2005, 02:22 PM
நல்ல முயற்சி அனிதன்.

மன்றத்தில் தொழில்துறையில் விருப்பம் கொண்டவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

நானும் கூட ஒரு தலைப்பு தொடங்கினேன், பின்னர் தொடரவில்லை. அதில் தொழில் சம்பந்தமாக பேசலாம் என்று சொல்லியிருந்தேன்.

உங்கள் தொழில் விபரம், மற்ற தகவல்கள் கொடுங்க. மற்றவர்களுக்கு உதவும்படியாக இருந்தால் நலம்.

நல்லது பரஞ்சோதி அவர்களே..

மேற்பார்வையாளர்கள் நினைத்தால் நிச்சயம் வரைமுறைக்கு உட்பட்ட ஒரு வியாபார தொடரை உருவாக்கலாம்.. நாம் கலைத் துறையில் மட்டுமல்லாமல் வியாபரத்திலும் நமது எண்ணங்களை பகிர்ந்து கொள்ளலாம்...

நண்பரே, நாங்கள் பனை ஓலையால் செய்த கைவினை பொருள்களை ஏற்றுமதி செய்யலாம் என்று நினைக்கிறேன்...எங்கள் கிராமத்தில் பல பெண்கள் ஒன்று சேர்ந்து கிராம சுய உதவிக் குழு என்கிற பெயரில் இதை நடத்துகிறோம். தற்போது உள் நாட்டில் மட்டுமே விற்பனை செய்து வருகிறோம்...கிராம முன்னேற்றமும் ஆயிற்று, வியாபாரமும் ஆயிற்று அல்லவா...

உங்களுக்கு இதில் விருப்பம் இருந்தால் , உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்...

அன்புடன் அனிதன்

பரஞ்சோதி
13-08-2005, 10:17 AM
நன்றி அனிதன். நீங்க தொழில் பற்றி பேச வேற தலைப்பை பயனுள்ள தகவல்கள் பகுதியில் தொடங்கலாம். அங்கே பேசலாம்.

நானே தலைப்பை தொடங்கி சுட்டி தருகிறேன்.

பரஞ்சோதி
13-08-2005, 10:31 AM
நல்லது பரஞ்சோதி அவர்களே..

மேற்பார்வையாளர்கள் நினைத்தால் நிச்சயம் வரைமுறைக்கு உட்பட்ட ஒரு வியாபார தொடரை உருவாக்கலாம்.. நாம் கலைத் துறையில் மட்டுமல்லாமல் வியாபரத்திலும் நமது எண்ணங்களை பகிர்ந்து கொள்ளலாம்...

நண்பரே, நாங்கள் பனை ஓலையால் செய்த கைவினை பொருள்களை ஏற்றுமதி செய்யலாம் என்று நினைக்கிறேன்...எங்கள் கிராமத்தில் பல பெண்கள் ஒன்று சேர்ந்து கிராம சுய உதவிக் குழு என்கிற பெயரில் இதை நடத்துகிறோம். தற்போது உள் நாட்டில் மட்டுமே விற்பனை செய்து வருகிறோம்...கிராம முன்னேற்றமும் ஆயிற்று, வியாபாரமும் ஆயிற்று அல்லவா...

உங்களுக்கு இதில் விருப்பம் இருந்தால் , உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்...

அன்புடன் அனிதன்

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5439

அனிதன், மேலே இருக்கும் சுட்டியில் விவாதிக்கலாம் வாங்க.

இராசகுமாரன்
14-08-2005, 08:24 AM
இது நல்ல முயற்சி தான், என் ஆதரவு உண்டு.
தமிழ் மன்றத்திற்கு எந்த பொறுப்பும் இல்லாமல் தனி நபராக நீங்கள் கருத்துக்களை பரிமாரிக் கொள்ளலாம்.

எனக்கு தெரிந்து இங்கேயே நிறைய தொழிலதிபர்கள் இருக்கிறார்கள். நானும் தொழில் முயங்குவோன் பற்றி நிறைய எழுத நினைத்து துவங்கினேன், இடையில் சிறிது வேலைகள் கூடிவிட்டன, சுதந்திர தினத்தை கொண்டாடி விட்டு பிறகு தொடருகிறேன்.

முன்பு கல்வி, மருத்துவம், வணிகம் என்று வைத்திருந்த தலைப்பை பின்னர் கல்வி, மருத்துவம், பொருளாதாரம் என்று மாற்றி பொருளாதாரத்தின் கீழ் நிறைய தலைப்பு அடங்கும் என விட்டு விட்டேன். அங்கேயே இது பற்றி கலந்துரையாடலாமே!

http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=61

பரஞ்சோதி, விருப்பமிருந்தால் உங்கள் தலைப்பையும் அங்கே மாற்றிக் கொள்ளலாம்.

பரஞ்சோதி
14-08-2005, 08:29 AM
நன்றி நண்பர் இராஜ்குமார்.

நீங்களே அத்தலைப்பை அங்கே கொண்டு செல்லுங்கள். அங்கேயே விவாதிக்கலாம். உங்கள் வருகையினால் நிறைய விசயங்களை கற்றுக் கொள்ள முடியும்.

மன்மதன்
14-08-2005, 09:46 AM
விவாதிக்க நானும் ரெடி..
அன்புடன்
மன்மதன்

kavitha
16-08-2005, 04:33 AM
நல்ல முயற்சி! வாழ்த்துக்கள் அனிதன்.

உதயா
16-08-2005, 04:54 AM
இது ஒரு நல்ல எண்ணம். இப்படி பரிமாரிக்கொள்வதால் நமக்கு தெறியாத பல விஷயங்களை அறிந்து கொள்ள நல்ல வாய்ப்பு.

இளசு
12-10-2005, 09:06 PM
அனிதன் அவர்களின் கிராம முன்னேற்ற எண்ணம் நிறைவேற வாழ்த்துகள்..