PDA

View Full Version : புலி உன்னிடத்தில் பூனையாகின்றது



Birundan
10-08-2005, 12:04 PM
மறத்தமிழர் இன்னமும் மறையவும் இல்லை
அவர் மானம் அழியவும் இல்லை!
அவர் யாருக்கும் பயந்ததும் இல்லை
எதற்காகவும் கை ஏந்தவும் இல்லை!
என்றும் எதற்க்கும் தலை குனிந்ததும் இல்லை
உனைக்கான மட்டும் தலை குனிந்தான்!
உனைக் கண்டு அவன் தணிந்தான்
நீயே வாழ்க்கைத்துணையென துணிந்தான்!
சினம் கொண்ட வீரனை சிரிக்க வைத்தமுல்லையே
எண்றும் உனது இளமை இரவுகளில் தொல்லையே!
இனி என்றும் உனை அவன் மறப்பதில்லையே
அவனைக்கான பறத்துவாடி கிள்ளையே!
எதிரியை புறமுதுகிட துரத்துவான்
தலைகளைக் கொய்து கொல்லையில் பரத்துவான்!
படைதன்னை பொங்கியெழ குரல் உரத்துவான்
இன்று உன்னைக்கண்டு விறைத்து அவன்!
உன் கண் அசைவில் அவன் செயல் இருக்கு
உன்னில் அவன் வாழ்விருக்கு!
உன் பேச்சில் அவன் மூச்சிருக்கு
உனக்காக அவன் வாள்வீச்சிருக்கு.
அன்புடன் பிருந்தன்

pradeepkt
10-08-2005, 01:04 PM
மறத்தமிழர் மங்கையரின் முகத்தினிலே மயங்குவதென்ன
புதிதா பிருந்தன்
நல்ல முயற்சி, வாழ்க

பிரசன்னா
09-09-2005, 06:06 PM
ஆகா அருமை அருமை
அருமையான கவிதை

ஆதவா
07-01-2007, 01:23 PM
அருமைதான். அரசர்கால கவிதை படித்த உணர்வு

ஷீ-நிசி
07-01-2007, 02:00 PM
கவிதையை விட கவிதையின் தலைப்பு கவருகிறது

ஓவியா
07-01-2007, 11:42 PM
எல்லாம் இருந்தும் என்ன....கூடவே ஈகோவும் இருக்கே....:cool: :cool:

கவிப்பாடிகொண்டே இருந்தா காதல் கோவிந்தாதான்.....
துணிந்து சொல்லிட வேண்டிதான்.....:D :D