PDA

View Full Version : ஆகஸ்ட் 10, புதன் கிழமை மலேசிய செய்திகள்Mano.G.
10-08-2005, 01:00 AM
AP பெர்மிட்டுகள் தொடர்பில் ரபிடா இன்று அமைச்சரவையில் விளக்கமளிக்க வேண்டும் - பிரதமர்
AP பெர்மிட்டுகள் தொடர்பில் அனைத்துலக வணிப மற்றும் தொழிலியல் துறை அமைச்சர் Datuk Seri Rafidah Aziz இன்று நடைபெறவிருக்கும் அமைச்சரவை கூட்டத்தில் கட்டாயம் விளக்கமளிக்க வேண்டும் என பிரதமர் Datuk Seri Abdullah Ahmad Badawi தெரிவித்துள்ளார்.
இந்த AP பெர்மிட்டுகள் தொடர்பில் பல பிரச்சனைகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருப்பதால் இதன் தொடர்பில் ரபிடா கண்டிப்பாக இன்று விளக்கமளிக்க வேண்டும் என அவர் கூறினார்.
அவரிடமிருந்து பல விவரங்கள் AP பெர்மிட்டுகள் தொடர்பில் தேவைப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டார். எனவே, இன்று அதற்கான விரிவான விளக்கத்தை ரபிடா அமைச்சரவையில் தெரிவிப்பார் என தாம் எதிர் பார்ப்பதாக அவர் மேலும் கூறினார்.
அமெரிக்காவிற்கான தனது ஒரு வாரக்கால பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று நாடு திரும்பிய பிரதமர் KLIA அனைத்துலக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வேளையில் இவ்வாறு தெரிவித்தார்.
---------------------------------------------------------------------
பொருட்களின் விலையை உயர்த்துபவர்கள் கண்டிக்கத்தக்கவர்கள்
பெட்ரோல் விலையேற்றத்தைக் காரணம் காட்டி, பொருட்களின் விலையை உயர்த்தும் பொறுப்பற்ற வியாபாரிகளின் செயல் கண்டிக்கத்தக்கது என துணைப்பிரதமர் Datuk Seri Najib Tun Razak தெரிவித்தார்.
இவ்விவகாரம் தொடர்பாக,உள்நாட்டு வாணிபம் மற்றும் பயனீட்டாளர் விவகார துறை அமைச்சு நாடளவில் சிறப்பு கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்தார்.
கோலாலம்பூரில்,2005-ஆம் ஆண்டின் நிலம் தொடர்பான உயிரியல் தொழில்நுட்ப கண்காட்சி மற்றும் மாநாட்டை தொடக்கி வைத்து உரையாற்றியபோது அமைச்சர் அவ்வாறு செய்தியாளர்களிடம்
தெரிவித்தார். அது மட்டுமின்றி, தற்போது அரசு எவ்வித புதிய நில திட்டத்தையும் அறிவிக்கும் திட்டம் வைத்திருக்கவில்லை என அவர் மேலும் கூறினார்.


போக்குவரத்து பிரச்சனையைக் களைய ITIS
ITIS எனப்படும் ஒருங்கிணைந்த போக்குவரத்து தகவல் திட்டம்வழி, அதிக மக்கள் தொகை கொண்ட கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் ஏற்படுகின்ற போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முடியுமென பொதுப்பணித் துறை அமைச்சர் Datuk Seri S. Samy Vellu தெரிவித்தார்.
380 மில்லியன் ரிங்கிட் மதிப்பில் உருவாக்கப்பட்ட ITIS திட்டத்தினால் சாலைகளில் ஏற்படும் விபத்துகள், போக்குவரத்து நெரிசல், போக்குவரத்து நிலை ஆகியவை உடனுக்குடன் கண்டறியப்படும் எனவும் அத்தகவல்கள் VMS அல்லது 'Variable Message Signs' எனும் ஸ்கிரீனில் அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
நேற்று,NEW DELHI-யில் நடைப்பெற்ற ITIS ஆசிய-பசிபிக் தொடர்பான கண்காட்சி மற்றும் மாநாட்டில் கலந்து கொண்டபோது அவர் அவ்வாறு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


தேசிய சேவை பயிற்சித் திட்டம் மறு ஆய்வு செய்யப்படும்
தேசிய சேவை பயிற்சித் திட்டத்தின் நடவடிக்கைகளை இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்குப் போதிக்க அரசாங்கம் ஆலோசித்து வருவதாக பிரதமர் துறை அமைச்சர் Datuk Dr Maximus Johnity Ongkili தெரிவித்தார்.
இந்த ஆலோசனை தொடர்பில் அரசாங்கம் தற்பொழுது ஆய்வுகளை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார். தேசிய சேவை பயிற்சித் திட்டம் மாணவர்களுக்கிடையில் இன ஒற்றுமையையும் தன்னம்பிக்கையையும் வளர்க்கிறது.
இப்பயிற்சியை மாணவர்கள் படிக்கும் பருவத்திலேயே கற்றுக் கொள்வதற்காக அரசாங்கம் இடைநிலைப்பள்ளியிலேயே அதனைப் போதிக்க ஆலோசித்து வருவதாக அவர் விளக்கமளித்தார். மேலும் இப்பயிற்சித் திட்டத்தில் இன்னும் அதிகமான மாணவர்கள் கலந்துக் கொள்வதற்கு அரசாங்கம் அதன் தொடர்பில் மறு ஆய்வு செய்யும் என அவர் தெரிவித்தார்.


மோசமடைந்துள்ள காற்றுத் தூய்மைக்கேடு
நேற்று ஏற்பட்ட கடுமையான காற்றுத் தூய்மைக்கேட்டினால் மலாக்கா நீரிணை போக்குவரத்து வழி சுமார் 1 கிலோமீட்டர் தூரம் முழுமையாக மறைக்கப்பட்டது என தேசிய வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அவ்வழியைப் பயன்படுத்துவோருக்கு, குறிப்பாக திசைக்காட்டி இல்லாத தரப்பினருக்கு இது மிகவும் ஆபத்தான ஒன்றாகும் என அம்மையம் மேலும் தெரிவித்துள்ளது.
Sumatera-விலிருந்து கிளம்பியுள்ள எரிபுகை தீபகற்ப மலேசியாவிலும் பரவியுள்ளதால் நாட்டின் பல பகுதிகளில்,குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் காற்றுத் தூய்மைக்கேடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.


பிரதமர் நாடு திரும்பினார்
பிரதமர் Datuk Seri Abdullah Ahmad Badawi அமெரிக்காவிற்கான தனது ஒரு வார காலப் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று மலேசியா திரும்பினார்.
புற்றுநோயினால் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த தனது துணைவியார் Datin Seri Endon Mahmood-க்கு சிகிச்சையை மேற்கொள்ளவும் மேலும் அவருக்கு துணையாக இருக்கவும் பிரதமர் இப்பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
நேற்று நண்பகல் 12 மணியளவில் அவர் KLIA அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்தார். அவரை வரவேற்க துணைப் பிரதமர் Datuk Seri Najib Tun Razak உட்பட இதர அமைச்சர்களும் விமான நிலையத்திற்கு வருகை புரிந்திருந்தனர்.
----------------------------------------------------------------------
நாமக்கல் அருகே கார்&லாரி மோதி 5 பேர் பலி
ஈரோடு சம்பத்நகர் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள் ஒரு காரில் திருச்சியில் இருந்து ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்த வேளையில் அவர்களின் கார் விபத்துக்குள்ளானது.
அந்த காரை எதிரே வந்த லாரி ஒன்று மோதியதால் இவ்விபத்து நிகழ்ந்ததாக தெரிய வந்துள்ளது. இவ்விபத்தில் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே 5 பேர் பலியாகிவிட்டனர். இவ்விபத்தில் ஒருவர் மட்டும் உயிர் தப்பியதாக தெரிய வந்துள்ளது.
----------------------------------------------------------------------
டிஸ்கவரி ஓடத்தை இன்று தரையிறக்க நாசா விஞ்ஞானிகள் முயற்சி
டிஸ்கவரி ஓடம் நேற்று முன்தினம் தரையிறங்குவதாக இருந்தது. ஆனால், மோசமான வானிலை காரணமாக அப்பொழுது தரையிறக்க முடியவில்லை.
இதைனையடுத்து இன்று மதியம் 2 மணியளவில் புளோரிடா மாநிலத்தில் உள்ள நாசா விண்வெளி மையத்தில் அதனை தரையிறக்க
விஞ்ஞானிகள் முயற்சி செய்கின்றனர்.
அப்படி இறக்க முடியாவிட்டால், கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள எட்வர்ட் விண்வெளி மையத்தில் தரையிறக்கவும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.


ஈராக்கில் மணல் புயல்: 1000 பேர் பாதிப்பு
குண்டு வெடிப்புகளால் நிலை குலைந்து போயிருக்கும் ஈராக்கை நேற்று மணல் புயல் தாக்கியது. பாக்தாத், அதை சுற்றி உள்ள பகுதிகள் மற்றும் சில நகரங்களில் சுழன்று அடித்த காற்றில் மணல் குவியல் குவியலாக சாலைகளில் கொட்டியது.
சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாமல் நிலைக் குத்தி நின்றன. இதனால் சாலை நெரிசல்களும் ஏற்பட்டன. ஏராளமான மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. பலருக்கு மூச்சி திணறல் பிரச்சனையும் ஏற்பட்டது. இந்த மணல் புயல் காரணமாக சுமார் 1000 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக விமானம் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது. இன்னும் 2 நாட்களுக்கு இந்த மணல் புயல் நீடிக்கும் என வானிலை மையம் எச்சரித்து உள்ளது.


சுரங்கம் தோண்டி வங்கியில் ரூ.322 கோடி கொள்ளை
பிரேசில் நாட்டின் சியாரா நகரில் உள்ள செண்டிரல் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்டது. அங்கிருந்த லாக்கரில் இருந்து 322 கோடி ரூபாயை கொள்ளையர்கள் கட்டுக்கட்டாக எடுத்துச் சென்றுவிட்டனர்.
வங்கியை காலையில் திறந்த வேளையில்தான் கொள்ளை நடந்தது தெரிய வந்தது. வங்கி வரை 200 மீட்டர் தூரத்துக்கு சுரங்கம் தோண்டி இந்த கொள்ளையை வெற்றிகரமாக நடத்தி உள்ளனர்.
-----------------------------------------------------------------------
டென்னிஸ் தரவரிசையில் சானியாவிற்கு 48வது இடம்
இளம் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா முதல் 50 இடங்களுக்குள் முன்னேறினார். இவர் தற்போது உலக டென்னிஸ் தர வரிசையில் 48வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இதனை உலக டென்னிஸ் Association முறைப்படி நேற்று வெளியிட்டுள்ளது. டென்னிஸ் விளையாட்டில் தற்பொழுது சானியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி வணக்கம்மலேசியா.காம்


மனோ.ஜி

மன்மதன்
10-08-2005, 04:10 AM
டென்னிஸில் சானியா முன்னேறி வருவது பெருமையாக இருக்கிறது..

செய்திகளுக்கு நன்றி மனோ.ஜி

அன்புடன்
மன்மதன்

kavitha
10-08-2005, 04:41 AM
"பொருட்களின் விலையை உயர்த்துபவர்கள் கண்டிக்கத்தக்கவர்கள் "

இது நல்லா இருக்கே