PDA

View Full Version : மனங் கொத்தி!



mukilan
09-08-2005, 10:59 PM
எனக்கும் கவிதை எழுத வேண்டும் என்ற ஆர்வக்கோளாறு! தட்டியோ! குட்டியோ! மொத்தத்தில் சொல்லிக் கொடுங்கள் நண்பர்களே!

மனங்கொத்தி!

உன் இளமையின் சாரங்கள்
எனக்கு வேணிற் கால
வென் பனிக் கூழாகப் பட்டன!
ஆனால் உருகியது என்னவோ நீ அல்ல!


இருபது ஆண்டு சினேகமும்
ஒற்றை இரவில்
அந்நியமாகி
விட்டதே! "அறிஞர்" வந்து
விளக்க முடியாத அதிசயம் தான்!

காளையை அடக்க கற்றுக்
கொடுத்த தமிழ்ப் பாக்கள்
பசுக்களிடம் தோற்றுப் போகச்
சொல்லாமல் சொல்வதெப்படி?

திருடுவது தெரியாமலே உள்ளம் திருடிய
நீ களவு பயின்ற பல்கலைக் கழகம் யாதடி?
எந்த தேசத்தில் இருந்து
வந்த மனங்கொத்திப் பறவை நீ?

Mano.G.
10-08-2005, 01:09 AM
ஆகா அருமை அருமை
அருமையான கவிதை

காளையை அடக்க கற்று
கொடுத்த தமிழ் பாக்கள்
பசுக்களிடம் தோற்று போகச்
சொல்லாமல் சொல்வது எப்படி?

மேலும் தொடருங்கள் முகிலன்
வாழ்த்துக்கள்.

மனோ.ஜி

mukilan
10-08-2005, 02:25 AM
மனோஜி! உங்களின் கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!

kavitha
10-08-2005, 03:49 AM
கவிதை நன்றாக இருக்கிறது முகிலன். தொடருங்கள்

mukilan
10-08-2005, 04:50 AM
நன்றி கவிதா! உங்கள் போல அனுபவ மிக்கவர்களின் ஊக்கம், விமர்சனம் என்னை செம்மை படுத்த நிச்சயம் உதவும்.

மன்மதன்
10-08-2005, 06:02 AM
கவிதை மிக அருமை.. தொடக்கமே அமர்க்களமாக அமைகிறது.. வரிகளை இன்னும் சீரமையுங்கள்..
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
10-08-2005, 06:30 AM
ஆகா முதல் நான்கு வரிகள் புரியவில்லை, பின்னர் ஆகா அருமையான கவிதை.

வித்தியாசமான கருத்துகள், கலக்குங்க நண்பரே!.

(ஆமாம் யார் அந்த தேவதை ???? )

gragavan
10-08-2005, 06:47 AM
முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தாடே
முகிலன் என்பவரே நம் மன்றம் என்பதிலே
......
யாரந்தப் பெண்
ஒரு நடிகையம்மா
அந்தக் கழுதையை நீ கொஞ்சி அணைப்பது தவறு...... (சினிமா பாட்டுதாங்க....

முகிலன். நல்ல முயற்சி. முதல் நான்கு வரிகள் மட்டும் புரியவில்லை. ஆனால் அதற்குப் பிறகு நல்ல முயற்சி. இன்னும் எழுதுங்கள்.

gragavan
10-08-2005, 06:50 AM
ராஜாதி ராஜனுக்கு ராணி மேலே காதலடி என்று ஒரு அருமையான பாட்டு உண்டு. அதில் வரும் இரண்டு வரிகளை நினைவு படுத்தி விட்டீர்கள் முகிலம்.

மரங்கொத்திப் பறவையைப் போலே
மனித மனங்கொத்திப் போவது யாரோ.... (கண்ணதாசன் எழுதியது.....

Birundan
10-08-2005, 11:15 AM
கவிதை படித்தேன், நண்று. மேலும் மேலும் எழுத வாழ்த்துக்கள்.
அன்புடன் பிருந்தன்

mukilan
10-08-2005, 02:23 PM
நண்பர்கள் மன்மதன், பரஞ்சோதி, ராகவன் மற்றும் பிருந்தன் தங்கள் அனைவரின் வாழ்த்துக்களுக்கும் விமர்சனத்திற்கும் நன்றி! (வெய்யில் காலத்தை வேணிற் காலமாக நினைத்துக் கொண்டேன்; ஐஸ் கிரீம் வென் பனிக் கூழாக மாற்றி விட்டேன்) முதல் 4 வரி புரியாமல் போனதில் வியப்பொன்றுமில்லை.இனி திருத்திக் கொள்கிறேன்.

அன்புடன்,
முகிலன்.

pradeepkt
10-08-2005, 02:30 PM
நல்ல கவிதை நண்பரே, இன்னும் நிறைய எழுத வாழ்த்துகள்

mukilan
10-08-2005, 02:34 PM
நன்றி பிரதீப்! நிச்சயம் எழுதுவேன்! பின்னே என் குறைகளை யார் திருத்துவது?

Mathu
10-08-2005, 10:14 PM
கவிதை என்றாலே பொயும் உண்மையும் சேர்ந்து செய்த கலவை தனே....
சில அனுபவ உமை சில தெரியாத பொய், ஆனாலும் ரசிக்க கூடியவை
தொடருங்கள் முகிலன். :) :p

mukilan
12-08-2005, 04:02 AM
கவிதை என்றாலே பொயும் உண்மையும் சேர்ந்து செய்த கலவை தனே....
சில அனுபவ உமை சில தெரியாத பொய், ஆனாலும் ரசிக்க கூடியவை
தொடருங்கள் முகிலன். :) :p
நன்றி மதன். என்னால் முடிந்த மட்டிலும் எழுதுவதாக எண்ணிக் கொண்டிருக்கிறேன்

பிரியன்
15-08-2005, 10:58 AM
எனக்கும் கவிதை எழுத வேண்டும் என்ற ஆர்வக்கோளாறு! தட்டியோ! குட்டியோ! மொத்தத்தில் சொல்லிக் கொடுங்கள் நண்பர்களே!

மனங்கொத்தி!

உன் இளமையின் சாரங்கள்
எனக்கு வேணிற் கால
வென் பனிக் கூழாகப் பட்டன!
ஆனால் உருகியது என்னவோ நீ அல்ல!



அதுதானே காதலின் இலக்கணம்.

காதலில்தானே சூரியன் கரைய நிலவுகள் இறுக்கமாகிவிடும் நிகழ்வுகள் நடந்துவிடுகிறது.

அழகான கவிதை. ஆனால் முதல் நான்கு வரிகளோடு ஒட்டாமலே கவிதையின் பிற வரிகள் இருக்கிறது. கவிதையின் முதல் நான்கு வரிகள் இறுதிவரிக்கு முன்னதாக வந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். ஆரம்பபே அழகான அதிர்வை கவிதையாக்கி இருக்கிறீர்கள்..

நிறைய எதிர்பார்க்கிறேன் உங்களிடமிருந்து.. வாழ்த்துக்கள்

mukilan
16-08-2005, 01:59 AM
நன்றி பிரியன். தங்களின் அறிவுறுத்தல் மிகப் பயனுள்ளதாக உள்ளது.

பிரசன்னா
09-09-2005, 06:03 PM
ஆகா அருமை அருமை
அருமையான கவிதை

பென்ஸ்
04-08-2006, 06:13 PM
அட நம்ம முகில்ஸ் என்ன இப்போ கவிதை எழுதுறது இல்லை....
எதோ இடக்கு முடக்க இருக்கு சமச்சாரம் ...

இளசு
04-08-2006, 10:27 PM
வெண்ணெய் உணங்கல் போல்
தன்னை மீறி தன்னை இழக்கும்
கையறு நிலையை அழகாய்ச் சொன்ன முகிலனுக்கு
பாராட்டுகள்..


முகிலனின் தற்போதைய 'நிலைமை' என்ன?

பென்ஸ் கேட்டுச் சொல்லவும்..

ஓவியா
13-11-2006, 05:51 PM
எனக்கும் கவிதை எழுத வேண்டும் என்ற ஆர்வக்கோளாறு! தட்டியோ! குட்டியோ! மொத்தத்தில் சொல்லிக் கொடுங்கள் நண்பர்களே!

மனங்கொத்தி!

உன் இளமையின் சாரங்கள்
எனக்கு வேணிற் கால
வென் பனிக் கூழாகப் பட்டன!
ஆனால் உருகியது என்னவோ நீ அல்ல!


இருபது ஆண்டு சினேகமும்
ஒற்றை இரவில்
அந்நியமாகி
விட்டதே! "அறிஞர்" வந்து
விளக்க முடியாத அதிசயம் தான்!

காளையை அடக்க கற்றுக்
கொடுத்த தமிழ்ப் பாக்கள்
பசுக்களிடம் தோற்றுப் போகச்
சொல்லாமல் சொல்வதெப்படி?

திருடுவது தெரியாமலே உள்ளம் திருடிய
நீ களவு பயின்ற பல்கலைக் கழகம் யாதடி?
எந்த தேசத்தில் இருந்து
வந்த மனங்கொத்திப் பறவை நீ?

ரசித்தேன்

அழகிய வரிகள்.......

பாரட்டுக்கள்

பூமகள்
22-07-2008, 06:00 PM
முகில்ஸ் அண்ணாவின் குளிர் கா(கூ)தல் நடுக்க கவிதை...

கடைசி வரிகளில்.. அன்பு மிளிர்கிறது...

பாராட்டுகள் முகில்ஸ் அண்ணா.. இப்போது எப்போது கவிதை எழுதுவீர்கள்??

கவிதை எழுதும் கேரட் விவசாயியே... வாழ்க வாழ்க..!! :D:D

mukilan
22-07-2008, 06:21 PM
இதெல்லாம் பார்த்தா எனக்கு சிரிப்பா வருது. நானும் அந்தக் காலத்தில ஏதோ எழுதி இருக்கேனே.

பென்ஸ் எடக்கு ம்டக்கெல்லாம் ஒன்னுமில்லை. இருந்தா சொல்லிடப் போறேன்.

அண்ணா தற்போதைய நிலையில் மாற்றம் இல்லை. ஆண்டுகள் கடந்ததே தவிர ஆசைகள் கடக்கவில்லை எனக்கு. அதே கையறு நிலைதான்.!

ஆகா! கவிதாயினி ஓவியாவின் பாராட்டா? நன்றி! நன்றி!

பூ இதெல்லாம் ஓவர். குளிர்ல நடுங்கிதான் போட்டிருக்கேன். கவிதையா எழுதவா... இன்னமும் கற்றுக்கொண்டிருக்கிறேன் மன்றத்தின் கவிப்பேரரசு(சி) களிடம்.

அறிஞர்
22-07-2008, 06:22 PM
திருடுவது தெரியாமலே உள்ளம் திருடிய
நீ களவு பயின்ற பல்கலைக் கழகம் யாதடி?
எந்த தேசத்தில் இருந்து
வந்த மனங்கொத்திப் பறவை நீ?
ஆஹா... முகிலா இன்று தான் படித்தேன்...
இவ்வளவு அழகா எழுதுறீங்க...
என் இப்பொழுது தொடர்வதில்லை...