PDA

View Full Version : ஆகஸ்ட் 9, செவ்வாய்க்கிழமை மலேசிய செய்திகள



Mano.G.
09-08-2005, 08:40 AM
பொருட்களின் வகைகளைக் குறித்தே, அவற்றின் விலை அதிகரிப்பு செய்யப்படும்
குறிப்பிட்ட ஒரு விழுக்காட்டின் அடிப்படையில் சந்தையில் பொருட்களின் விலையை அதிகரிப்பு செய்ய வேண்டும் எனும் திட்டத்தை அமல்படுத்த முடியாது என துணைப் பிரதமர் Datuk Seri Najib Tun Razak தெரிவித்தார்.
பொருட்களின் வகைகளைக் குறித்தே, அவற்றின் விலை அதிகரிப்பு செய்யப்படும் எனவும், அவ்விலையேற்றம் நியாயமானதா என்பது குறித்தும் முதலில் ஆராயப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, பெட்ரொல் மற்றும் டீசல் எண்ணெய் விலையேற்றத்தை காரணம் காட்டி, வியாபாரிகள் பொருட்களின் விலையை அதிகரிக்க கூடாது எனவும், அவ்வாறு செய்பவர்களின் மேல் உள்நாட்டு வாணிக பயனீட்டாளர் விவகார அமைச்சு கடும் நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
-----------------------------------------------------------------------
மலேசியாவிற்கு அணுசக்தி தேவையில்லை
பெட்ரோல் விலையேற்றம் தொடர்பாக,அதை நிவர்த்தி செய்யும் விதமாக அணுசக்தி மலேசியாவிற்கு தேவையில்லை எனவும் இதர பல மூல சக்திகள் மலேசியாவிடம் உள்ளன எனவும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறை துணை அமைச்சர் Datuk Kong Cho Ha தெரிவித்தார்.
மலேசியாவில், அணுசக்தி தொழிற்சாலையை நிர்மாணிக்க போதிய அளவு மனித ஆற்றல் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் இல்லை எனவும் அவ்வாறு நிறுவ, குறைந்தது 15 ஆண்டுகள் கால அவகாசம் தேவை எனவும் அவர் மேலும் கூறினார்.
கோலாலம்பூரில் FNCA எனும் ஆசிய அணுசக்தி ஒருங்கிணைப்பு தொடர்பான கருத்தரங்கில் அவர் அவ்வாறு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


மக்கள் ஒருங்கிணைப்பு இலாகாவிற்கு மேலும் 24 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு
நம் நாட்டின் பல்லின மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கவும் மேலும் வலுப்படுத்தவும் தகுந்த பல நடவடிக்கைகளை மேற்கொள்ள தேசிய இன ஒற்றுமை அல்லது மக்கள் ஒருங்கிணைப்பு இலாகாவிற்கு மேலும் 24 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது, அவ்விலாகாவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மொத்த தொகை சுமார் 40 மில்லியன் ரிங்கிட்டாகும்.
பொது வசதிகளான பொது மண்டபம்,'Rukun Tetangga' மையம்,மக்கள் ஒருங்கிணைப்பு மையம் போன்றவற்றை ஏற்படுத்த அந்நிதி ஒதுக்கீடு மாநில வாரியாக பிரித்து வழங்கப்படும் என பிரதமர் துறை அமைச்சர் Datuk Dr Maximus Ongkili தெரிவித்தார்.நேற்று,Tumpat-இல் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அமைச்சர் அவ்வாறு கூறியுள்ளார்.



மாநில அரசாங்கத்தால் இனி போதைப்பொருள் பிரச்சனையைக் கையாள முடியாது

குவாந்தானில் அதிகரித்து வரும் போதைப் பொருள் பிரச்சனையை இனி மாநில அரசாங்கத்தால் கையாள முடியாது என்று பகாங் முதலமைச்சர் Datuk Seri Adnan Yaakob தெரிவித்துள்ளார்.
1952 போதைத்தடுப்பு சட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசாங்கம் தொடர்ந்து
மேற்கொண்ட போதிலும் அப்பகுதியில் இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண முடியவில்லை என அவர் கூறினார்.
குவாந்தானில் மட்டும் இவ்வருடம் 258 சதவிகித போதைப்பித்தர்கள் அதிகரித்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
கடந்த வருடம் ஆரம்பம் முதல் 7 மாதங்கள் வரையில் அப்பகுதியில் போதைப்பித்தர்களின் எண்ணிக்கை 171-ஆக இருந்ததாகவும் அதே காலக்கட்டத்தில் இவ்வருடம் இந்த எண்ணிக்கை 613-ஆக உயர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.



பேருந்து நாற்பது பயணிகளுடன் பள்ளத்தில் கவிழ்ந்தது
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 243.8-வது கிலோமீட்டரில் நாற்பது இந்தோனிசிய பணியாளர்கள் பயணம் செய்த பேருந்து ஒன்று, எதிரே சென்றுக்கொண்டிருந்த லாரியுடன் மோதி, அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்தது.
இச்சம்பவம் நேற்று அதிகாலை நான்கு மணி அளவில் அப்பேருந்து ஜொகூரில் இருந்து கோலாலம்பூரை நோக்கி சென்றுக் கொண்டிருக்கும் பொழுது ஏற்பட்டதாக போலீஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அப்பேருந்தில் பயணம் செய்த அனைவருக்கும், முகம் மற்றும் உடம்பு பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
அவசர அழைப்பு கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து, பதினாறு தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு வீரர்கள் அவ்விடத்துக்கு விரைந்ததாகவும், காயமுற்றவர்கள் தற்போது சிரம்பான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


போதை மாத்திரைகள் விநியோகம் முறியடிப்பு

போதை மாத்திரைகள் வைத்திருந்ததன் சந்தேகத்தின் பேரில் ஒரு 17 வயது இளைஞன் உட்பட 3 ஆடவர்களை போலீசார் தடுத்து வைத்துள்ளனர்.
KOTA BAHARU-வில் உள்ள பொதுமக்கள் கொடுத்த புகார்கள் தொடர்பில், 'Metaphetamine' எனும் 269 போதை மாத்திரைகளை வைத்திருந்த அம்மூவரும் கைதுசெய்யப்பட்டதாக கிளந்தான் மாநில போதைப்பொருள் தடுப்பு இலாகாவின் அதிகாரி DSP Zaaba Budin தெரிவித்தார்.
பல நாட்களாக KOTA BAHARU-வில் சந்தேகம் கொள்ளும்படியாக நடந்துக் கொண்ட அம்மூவரும் போதை மாத்திரைகளை மற்றவர்களுக்கு விநியோகித்து வந்ததாக கூறப்படுகிறது.மேல் விசாரணைக்காக அம்மூவரும் KOTA BAHARU காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-----------------------------------------------------------------------
உத்தராஞ்சலில் நிலச்சரிவு : 11 பேர் பலி
உத்தராஞ்சலில் பெய்து வரும் கன மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். பலர் தங்கǢ வீடுகளை இழந்தனர். கைலாஷ் மானசரோவர் யாத்திரையும் பாதிக்கப்பட்டு உள்ளது. மகாராஷ்டிராவைத் தொடர்ந்து உத்தராஞ்சலில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது.
கடும் மழையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பித்தோரகார்க் மாவட்டம் ராஞ்சி கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் பல தரைமட்டமாயின.
இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்ட பிணங்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டனர்.
---------------------------------------------------------------------
துனிசியா விமான விபத்தில் 16 பேர் பலி
விமான இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவசரமாக தரையிறங்க இருந்த துனிசியா நாட்டு விமானம் கடலில் விழுந்ததில் அதில் பயணம் செய்த 16 பயணிகள் பலியாயினர்.
39 பயணிகளுடன் துனிசியா நாட்டு விமானம் ஏடிஆர்&72 இத்தாலி அருகேயுள்ள சிசிலி தீவின்
கேப்கேலோவிற்கு அருகே பறந்து கொண்டிருந்த போது திடீரென அதன் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது.
இதனால், சிசிலியில் அவசரமாக விமானத்தைத் தரையிறக்க விமானி முயற்சி செய்தார். ஆனால், அதற்கு முன்பாக சிசிலி தீவை ஒட்டிய கடல் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது.விமானத்தில் பயணம் செய்த 39 பயணிகளில் 16 பேர் விபத்தில் பலியாயினர்.

ஈராக்கில் மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு 2 போலீசார் பலி

ஈராக்கில் திக்ரித் நகரில் நேற்று முன்தினம் மனித வெடிகுண்டுத் தாக்குதல் நடந்தது. இத்தாக்குதலில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் பலியானார்கள்.
போலீஸ் நிலையத்தை தகர்க்கும் நோக்கத்தில் காலியான எரிபொருள் கலத்தை ஓட்டிக்கொண்டு பயங்கரவாதி வந்தார். போலீஸ் நிலையம் அருகே வந்தவுடன் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தார்.
இதில் 2 போலீஸ் அதிகாரிகள் பலியானதுடன் 13 பேர் காயமடைந்தனர். இதனிடையே பாக்தாத் நகரில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த ஈராக் படைவீரர்கள் 3 பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜப்பானில் நிலநடுக்கம்

ஜப்பானின் தலைநகர் தோக்கியோவிலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இபராக்கி எனப்படும் கடற்கரை பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று முன் தினம் இரவு 10.30 மணியளவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5-ஆக பதிவாகியுள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையத்தின் நிபுணர்கள் தெரிவித்தனர்.
எனினும் இந்நிலநடுத்தினால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும் மேலும் இந்நிலநடுக்கத்தின் அதிர்வுகள் ஜப்பானிலுள்ள பல பகுதிகளில் உணரப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
-----------------------------------------------------------------------
வெற்றி பெற்ற Marcus Gronholm
Finland-இல் நேற்று நடைபெற்ற Rally கார் பந்தைய போட்டியில், அந்நாட்டைச் சேர்ந்த Marcus Gronholm வாகை சூடினார். Peugeot ரக காரை செலுத்திய அவர், 2 மணி நேரம் 38 நிமிடங்கள் மற்றும் 18 வினாடிகள் பதிவு செய்தார்.
இப்போட்டியின் இரண்டாவது இடத்தை France நாட்டை சேர்ந்த Sebsatien Loeb வென்றார். மேலும், இப்போட்டியின் மூன்றாவது இடத்தை Markko Martin வென்றார்.


நன்றி வணக்கம்மலேசிய.காம்

மனோ.ஜி

மன்மதன்
09-08-2005, 08:58 AM
செய்திகளுக்கு நன்றி மனோ.ஜி.
அன்புடன்
மன்மதன்