PDA

View Full Version : ஆகஸ்ட் 8, திங்கட்கிழமை மலேசிய செய்திகள்Mano.G.
08-08-2005, 12:51 AM
பொருட்களின் விலையை அதிகரிக்கும் வியாபாரிகளின் மேல் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்
அமையில் ஏற்பட்ட பெட்ரொல் மற்றும் டீசல் எண்ணெய் விலையேற்றத்தை காரணம் காட்டி, வியாபாரிகள் பொருட்களின் விலையை அதிகரிக்க கூடாது எனவும், அவ்வாறு செய்பவர்களின் மேல் அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசாங்கம் பொருட்களின் விலையேற்றத்தைக் குறித்து எந்த ஒரு அறிக்கையும் வெளியிடும் முன், வியாபாரிகள் பெருட்களின் விலையை அதிகரிக்க கூடாது என துணைப் பிரதமர் Datuk Seri Najib Tun Razak நேற்று தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு மேலும் 10 காசும், டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு 20 காசும் உயர்வு கண்டது. இதனிடையே, பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, குறிப்பாக வாகன ஓட்டுநர்களும் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
----------------------------------------------------------------------
டீசல் கடத்தல் நடவடிக்கைகள் அதிகரிப்பு
டீசல் விலை உயர்வு கண்டாலும் மற்ற நாடுகளுக்கான டீசல் கடத்தல் தொடர்ந்து நடைப்பெற்று வருவதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் பயனீட்டாளர் விவகார துறை அமைச்சர் Datuk Mohd Shafie Apdal தெரிவித்தார்.
சுற்றுலாவின் பேரில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மலேசியாவிற்குள் வந்து போவதால் டீசல் கடத்தல் நடவடிக்கைகளை ஒடுக்க சிரமம் ஏற்படுவதாக அவர் கூறினார்.
நாட்டின் எல்லை பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தவும், அவ்விடங்களில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தவும் இன்னும் ஏராளமான அதிகாரிகள் பணியமர்த்தப்படுவர் என அமைச்சர் மேலும் கூறினார்.
நேற்று, MERDEKA அரங்கத்தில் 'Larian Pengguna 2005' எனும் நிகழ்வை தொடக்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் அவர் அவ்வாறு தெரிவித்தார்.


பொது பல்கலைக்கழக மாணவர்களிடையே சிறுநீர் பரிசோதனை
அடுத்த மாதம் முதல், அனைத்து பொது பல்கலைக்கழக மாணவர்களிடையே சிறுநீர் பரிசோதனை செய்யப்படும் என உயர்கல்வி அமைச்சு மற்றும் இளைஞர் விளையாட்டு துறை அமைச்சு தகவல் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக, நாட்டின் 17 பொது பல்கலைக்கழகங்களின் HEP எனப்படும் மாணவர் பிரிவு அதிகாரிகளுடன் இவ்விரு அமைச்சுகளும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள மாணவர்களை அடையாளம் காண்பதற்கும், அப்படிப்பட்ட மாணவர்களுக்கு முறையான சிகிச்சையளிக்கவும் இந்நடவடிக்கை உதவும் என உயர்கல்வி துறை அமைச்சர் Datuk Dr Shafie Mohd Salleh தெரிவித்தார்.
அது மட்டுமின்றி, போதைப்பொருளை அடியோடு ஒழிக்கும் நோக்கிலும், போதைப்பொருள் தொடர்பான தீமைகளை மாணவர்கள் உணரச் செய்யவும் வகையிலும் இந்நடவடிக்கை பேருதவியாக அமையுமென அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறினார்.


சுமத்ராவில் நிலநடுக்கம்
வடக்கு சுமத்ராவில் நேற்று காலை 9.23 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கம் தீபகற்ப மலேசியாவில் சில பகுதிகளிலும் உணரப்பட்டது. இந்நிலநடுக்கம் 4.8-ஆக ரிக்டர் அளவில் பதிவானது என வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டிருந்த ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Nias தீவு மற்றும் இந்தோனிசியாவில் பல பகுதிகளிலும் இந்நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டது. இந்நிலநடுக்கத்தினால் எந்தவொரு பாதிப்போ அல்லது சேதமோ அப்பகுதிகளில் ஏற்படவில்லை என தெரிய வந்துள்ளது.'Talasemia' நோய் கண்டவர்களை ஒதுக்காதீர்கள் - Rosmah Mansor
அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் 'talasemia' எனும் நோய் கண்டவர்கள் தங்களிடம் வேலை தேடிவந்தாலோ அல்லது வேலைக்கு மனு செய்திருந்தாலோ அவர்களிடம் பாரபட்சம் காட்ட வேண்டாம் என துணைப்பிரதமர் Datuk Seri Najib Tun Razak-இன் துணைவியார் Datin Seri Rosmah Mansor கேட்டுக்கொண்டுள்ளார்.
அந்நோய் உள்ளவர்களும் மற்றவர்களைப் போலவே மதிக்கத்தக்கவர்கள்; பழகக்கூடியவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
வேலை வாய்ப்புகள் மற்றும் இதர உரிமைகள் அவர்களுக்கும் சரிசமமாக அளிக்கப்பட வேண்டுமெனவும் 'talasemia' நோயின் காரணத்தினால் மட்டுமே அவர்களது வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படக்கூடாது எனவும் கோலாலம்பூரில் 'Jalan Kaki Amal Batik' எனும் நிகழ்ச்சியை தொடக்கி வைத்தபோது அவர் அவ்வாறு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
----------------------------------------------------------------------
புதுவை முதல்வர் டில்லி பய
புதுவை முதல்வர் ரங்கசாமியும், மாநில காங்கிரசின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சண்முகம் நேற்று முன்தினம் காலை டில்லி புறப்பட்டுச் சென்றனர்.
அகில இந்திய காங்கிரஸ் மேலிடத்தின் உத்தரவுப்படி புதுவை மாநில காங்கிரசின் தலைவராக இருந்த நாராயணசாமி மாற்றப்பட்டு, புதிய தலைவராக சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், புதுவை முதல்வர் ரங்கசாமியும், புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சண்முகம் நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டில்லி புறப்பட்டுச் சென்றனர். காங்கிரஸ் தலைவி சோனியாவை சந்திக்க இவர்கள் இருவரும் டில்லி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
-----------------------------------------------------------------------
டிஸ்கவரி இன்று தரையிறங்குகிறது: வீரர்களைப் பத்திரமாக மீட்க உச்சகட்ட நடவடிக்கை
டிஸ்கவரி விண்கலன் இன்று தரையிறங்குகிறது. இதனைத் தொடர்ந்து டிஸ்கவரியில் வரும் வீரர்களைப் பத்திரமாக மீட்க உச்சகட்ட பாதுகாப்பு நடவடிக்கைளை நாசா எடுத்துள்ளது.
இன்று வானிலை சரியில்லாவிட்டால் நாளை மறுநாள் டிஸ்கவரி விண்கலத்தை தரையிறக்கவும் நாசா முடிவுசெய்துள்ளது. விஞ்ஞானிகள் பத்திரமாக தரையிறங்க பல நடவடிக்கைகளை நாசா நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.


ஈரானின் புதிய அதிபராக அகமதினி பொறுப்பேற்பு
பழமைவாத தலைவரான முகமது அகமதினிஜாத், ஈரான் அதிபராக நேற்று முன்தினம் பொறுப்பேற்றார். ஈரானில் கடந்த ஜூனில் பொதுத் தேர்தல் நடந்தது.
ஈரான் தலைநகர் டெஹரானின் முன்னாள் மேயரும், பழமைவாத தலைவருமான முகமது அகமதினிஜாத் வெற்றி பெற்றார்.

ஈரானின் பலமிக்க தலைவரான அயதுல்லா அலி கொமேனியும் அவருக்கு அங்கீகாரம் வழங்கினார். இதைத் தொடர்ந்து, அதிபர் பதவியை அகமதினிஜாத் நேற்று ஏற்றுக் கொண்டார்.


ஜப்பான், சீனாவில் நிலநடுக்கம்: 9 பேர் காயம்
சீனாவில் யுனான் மாநிலத்தில் நேற்று முன்தினம் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.3ஆக இந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டது. இந்நிலநடுக்கத்தால் 9 பேர் காயம் அடைந்தனர். இதனிடையே ஜப்பானிலும் அதே நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
தோக்கியோ பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7ஆக பதிவு செய்யப்பட்டது. எனினும் அப்பகுதியில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என வானிலை ஆராய்ச்சி மையத்தினர் தெரிவித்தனர்.
-----------------------------------------------------------------------
Luton அணியிடம் வீழ்ந்த Crystal Palace அணி
Crystal Palace மற்றும் Luton அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற Championship காற்பந்தாட்டத்தில் Luton அணி 2-1 என்ற கோல் எண்ணிக்கையில் Crystal Palace அணியை வீழ்த்தியது. ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்து இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின.
Luton அணியின் முதல் கோலை ஆட்டத்தின் 44-வது நிமிடத்தில் Howard புகுத்தினார். அவ்வணியின் இரண்டாவது கோலை ஆட்டத்தின் 79-வது நிமிடத்தில் Brkovic புகுத்தினார். இதனிடையே, Crystal Palace அணியின் ஒரே கோலை, ஆட்டத்தின் 52-வது நிமிடத்தில் Johnson புகுத்தினார்.


நன்றி வணக்கம்மலேசியா.காம்

மனோ.ஜி

பரஞ்சோதி
08-08-2005, 05:03 AM
இன்றைய செய்திகளுக்கு நன்றி அண்ணா.

டிஸ்கவரி இறங்குவது பற்றி செய்தி தான் இன்றைய முக்கிய செய்தியாகும். வெற்றிக்கரமாக இறங்கி, விண்வெளி வீரர்கள் பத்திரமாக பூமி திரும்ப இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.