PDA

View Full Version : தமிழ் விசைப்பலகை (Tamil Keyboard layout)இராசகுமாரன்
07-08-2005, 04:15 PM
நாம் உபயோகப் படுத்தும் விசைப் பலகை (Keyboard) ஒலியியல் (Phonetic) விசைப் பலகை, அதன் மூலம் தமிழில் எப்படி எழுத்துக்களை கோர்ப்பது, என்ற பட்டியலை கீழே கொடுத்துள்ளேன்.

http://www.tamilmantram.com/pic/anjalkbd.gif

kavitha
10-08-2005, 04:38 AM
நன்றி இராசகுமாரன்; படித்து பயனுறுகிறோம். திரைக்குப் பின்னணியில் மட்டும் வந்து போகும் தாங்கள் அடிக்கடி திரைமுன்னும் இதுபோல் வந்தால் மகிழ்ச்சியே! :)

மன்மதன்
10-08-2005, 04:55 AM
நன்றி நண்பரே.. அறிஞருக்கு 'ஞ' போட முடியாமல் திணறிக்கொண்டிருந்தேன்.. இப்ப எல்லா எழுத்துக்களும் தடை இல்லாமல் எழுதலாம்..
அன்புடன்
மன்மதன்

Mano.G.
10-08-2005, 05:04 AM
நன்றி இராசகுமாரன்; படித்து பயனுறுகிறோம். திரைக்குப் பின்னணியில் மட்டும் வந்து போகும் தாங்கள் அடிக்கடி திரைமுன்னும் இதுபோல் வந்தால் மகிழ்ச்சியே! :)

இவருக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை தங்கை கவி,
இவரின் சேவையும் தமிழ் தொண்டும் நம்மை ஒன்று சேர்த்து
வைத்தது கண்டு அவரும் கண்டிப்பாக மகிழ்வு கொள்வார் என
நானும் மனதார எதிர்பார்க்கிரேன்.

மனோ.ஜி

pkchandran
19-08-2005, 08:55 AM
நீங்கள் கடவுள் ஜ்யா

இராசகுமாரன்
20-08-2005, 04:46 PM
நீங்கள் கடவுள் ஜ்யா

நண் pkchandran,
யாரைக் கூறுகிறீர்கள்?
இது ரொம்ப மிகப் படுத்தப் பட்ட சொல்.
மனிதன் மனிதனாக இருந்தாலே போதும்.

omnlog03
21-01-2007, 02:09 PM
Is there any software which can translate what i type in english - which means i too can express myself in tamil.

leomohan
21-01-2007, 02:24 PM
Is there any software which can translate what i type in english - which means i too can express myself in tamil.

There is no Tamil To English Translation.

ஆனால் நீங்கள் ஆங்கிலத்தில் ammA என்று அடித்தால் தமிழில் அம்மா என்று வரும். இதற்கு eKalappai என்று மென்பொருட்களை பயன்படுத்தலாம். அல்லது இந்த மென்பொருள் இறக்கி உபயோகிக்கலாம்.


http://theni.etheni.com/MSPhi.msi

அறிஞர்
22-01-2007, 04:14 PM
Is there any software which can translate what i type in english - which means i too can express myself in tamil.
உங்களுடைய எண்ணங்களை (ஆங்கிலத்தில் உள்ளதை) முழுவதுமாக தமிழில் மொழிபெயர்க்க... எந்த மென்பொருளும் இல்லை.

மோகன் கூறுவது போல்..... இகலப்பை உபயோகியுங்கள்.. ஆங்கிலத்தில் டைப் செய்து.. கீழ் காணும் யுனிகோட் கன்வெர்ட்டர் மூலம் தமிழுக்கு மாற்றுங்கள்

praveen
20-02-2007, 11:25 AM
உங்களுடைய எண்ணங்களை (ஆங்கிலத்தில் உள்ளதை) முழுவதுமாக தமிழில் மொழிபெயர்க்க... எந்த மென்பொருளும் இல்லை

ஆம், ஐயா, அதே போல தமிழில் voice recognition அதாவது குரல் கேட்டு அதனை தமிழில் தானாக தட்டச்சு செய்யும் மென்பொருளும் உருவாக்கப்படவில்லை என்று நினைக்கிறேன்.

ஆனால் தமிழில் OCR (Optical character recognition)அதாவது தமிழ் அச்சிட்ட பக்கங்களை பார்த்து டைப் செய்யாமல் அதை வருடி மூலம் ஒரு பைலாக சேமித்து பின் திருத்தும் படியாக மாற்றித்தரும் ஒரு தமிழ் மென் பொருள் பொன்விழி (http://www.ildc.gov.in/GIST/LearnFun/PonVizhi-TamilOCR.zip) இந்திய அரசு நிறுவனம் இலவசமாக் வெளியிட்டதை எவ்வளவு பேர் பயன்படுத்தினார்கள் என்று தெரியவில்லை.

vichu49
03-05-2007, 02:54 PM
கிரந்த எழுத்துக்களை எப்படி உபயோகிப்பது?

விச்சு

அறிஞர்
03-05-2007, 07:18 PM
கிரந்த எழுத்துக்களை எப்படி உபயோகிப்பது?

விச்சு
கிரந்த எழுத்துக்களை நாம் அதிகமாக உபயோகிப்பதில்லையே விச்சு...

கிரந்த எழுத்து என்றால் என்ன என பலர் கேட்பார்கள்... அவர்களுக்காக இதோ...

http://upload.wikimedia.org/wikipedia/ta/6/6d/Grantham_Vowels.jpg

அமரன்
04-05-2007, 09:21 AM
நன்றி அறிஞரே. நான் இதுவரை அறிந்துகொள்ளாத புதிய விடயம். தமிமன்றத்தில் உங்கள் மூலம் அறிந்துகொண்டேன். ரொம்ப நன்றி.

suthesigan
05-05-2007, 06:16 AM
மிக்க நன்றி. மிகப்பெரிய உதவி.

leomohan
05-05-2007, 08:53 AM
கிரந்த எழுத்துக்களை எப்படி உபயோகிப்பது?

விச்சு

அநேகமாக விச்சு அவர்கள் வடமொழி எழுத்துக்களை குறிக்கிறார் என்று நினைக்கிறேன்.

ஷ ஸ ஜ ஹ ஸ்ரீ க்ஷ ஸ்ர த்ர போன்றவை. சரிதானே

இராசகுமாரன்
05-05-2007, 12:14 PM
கிரந்த எழுத்துக்களை எப்படி உபயோகிப்பது?

விச்சு

நண்பரெ,

இந்த திரியின் முதல் பதிப்பில் உள்ள படத்தில் உள்ளதே? கவனிக்கவில்லையா? அது திஸ்கி எழுத்துருவுக்கானது. இருந்தாலும் அது யூனிகோடுக்கும் பொருந்தும்.

ஜ = ja
ஹ = ha
ஸ = Sa
ஷ = sha
ஸ்ரீ = sr

அறிஞர்
05-05-2007, 03:08 PM
அநேகமாக விச்சு அவர்கள் வடமொழி எழுத்துக்களை குறிக்கிறார் என்று நினைக்கிறேன்.

ஷ ஸ ஜ ஹ ஸ்ரீ க்ஷ ஸ்ர த்ர போன்றவை. சரிதானே
பொதுவாக இவற்றை வடமொழி எழுத்துக்கள் என்போம்..

கிரந்த வார்த்தைகள் என்று குறிப்பிட்டதால்... இந்த வார்த்தைகளை தேடிக்கொடுத்தேன்.

மயூ
05-05-2007, 03:14 PM
ஃபொனட்டிக் முறை பழக இலகு என்றாலும் வரைவில் தமிழ் 99 அல்லது பாமினி முறைக்கு மாறுவது நன்று.. இதன் மூலம் கீ ஸ்ரோக்குகளின் எண்ணிக்கை மிகவும் குறையும் என்பதால் வேகமாகத் தட்டச்சிடலாம்..

ஆயினும் தற்போது இருக்கும பிரைச்சனைப்படி பயனர்களைத் தமிழில் தட்டச்சிட வைக்க ஃபொனட்டிக்குடன் ஆரம்பிப்பது பரவாயில்லை!!

அன்புரசிகன்
06-05-2007, 06:36 PM
ஸ்ரீ ஐ பாமினி எழுத்துருவில் எவ்வாறு பதிப்பது,???

இராசகுமாரன்
06-05-2007, 09:34 PM
ஸ்ரீ ஐ பாமினி எழுத்துருவில் எவ்வாறு பதிப்பது,???

sri என்று அடித்துப் பாருங்கள்.
எனக்கு வருகிறதே!

அன்புரசிகன்
07-05-2007, 04:14 AM
sri என்று அடித்துப் பாருங்கள்.
எனக்கு வருகிறதே!

நீங்கள் கூறுவது அஞ்சல் அல்லது ரோமானிஷ் வகை. நான் கூறியது பாமினி இ-கலப்பையில். சாதாரண பாமினி எழுத்துருவில் = ஐ அழுத்த ஸ்ரீ வரும்.

பாமினி இ-கலப்பையில் எப்படி ஸ்ரீ உருவக்கலாம்.?

மயூ
07-05-2007, 01:15 PM
நீங்கள் கூறுவது அஞ்சல் அல்லது ரோமானிஷ் வகை. நான் கூறியது பாமினி இ-கலப்பையில். சாதாரண பாமினி எழுத்துருவில் = ஐ அழுத்த ஸ்ரீ வரும்.

பாமினி இ-கலப்பையில் எப்படி ஸ்ரீ உருவக்கலாம்.?
ஸ்ரீ -];rpp

இப்ப அடிச்சுப் பாருங்க!!!!! உண்மையில் முதலில் ஸ் அடித்தபின்னர்.... ரீ இடைவெளி விடாமல் அடித்தால் ஸ்ரீ வரும்!!!!

அன்புரசிகன்
07-05-2007, 06:33 PM
ஸ்ரீ -];rpp

இப்ப அடிச்சுப் பாருங்க!!!!! உண்மையில் முதலில் ஸ் அடித்தபின்னர்.... ரீ இடைவெளி விடாமல் அடித்தால் ஸ்ரீ வரும்!!!!

];upp

நன்றி ஸ்ரீலஸ்ரீ மயூரேசன்.

மயூ
08-05-2007, 01:00 PM
];upp

நன்றி ஸ்ரீலஸ்ரீ மயூரேசன்.
நமக்குள்ள எதுக்குப்பா நன்றியெல்லாம்!!! ஹி.. ஹி...

அரசன்
13-05-2007, 09:49 AM
நீங்கள் கூறுவது அஞ்சல் அல்லது ரோமானிஷ் வகை. நான் கூறியது பாமினி இ-கலப்பையில். சாதாரண பாமினி எழுத்துருவில் = ஐ அழுத்த ஸ்ரீ வரும்.

பாமினி இ-கலப்பையில் எப்படி ஸ்ரீ உருவக்கலாம்.?s,r இரண்டையும் அழுத்திப் பாருங்கள்

அரசன்
13-05-2007, 09:52 AM
இ-கலப்பை இறக்கியிருக்கிறேன். என்னால் வேர்ட் டாகுமெண்டில் தமிழில் டைப் செய்தால் சரியான எழுத்து வராமல் பாதிமறைந்து வருகிறது. நான் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துகிறேன். எவ்வாறு வேர்ட் டாகுமெண்டில் தமிழில் டைப் செய்ய வேண்டும்? கூறுங்களேன்.

அன்புரசிகன்
13-05-2007, 10:33 AM
இ-கலப்பை இறக்கியிருக்கிறேன். என்னால் வேர்ட் டாகுமெண்டில் தமிழில் டைப் செய்தால் சரியான எழுத்து வராமல் பாதிமறைந்து வருகிறது. நான் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துகிறேன். எவ்வாறு வேர்ட் டாகுமெண்டில் தமிழில் டைப் செய்ய வேண்டும்? கூறுங்களேன்.

நீங்கள் இ-கலப்பையில் எதை பாவிக்கிறீர்கள்? ஆனாலும் ஒருமுறை உங்கள் MS WORD இல் Arial Unicode MS எனும் எழுத்துருவை தெரிவுசெய்துவிட்டு பின்னர் உங்கள் இ-கலப்பைமூலம் தட்டச்சு செய்து பாருங்கள். பதில் என்ன என கூறுங்கள்.

மற்றும் sr அழுத்தி பாமினி இ-கலப்பையில் ஸ்ரீ வரவைக்க முடியாது. அதற்கு ];uP என பதிக்கவேண்டும். (மயூரேசன் எனக்கு அதற்காக உதவியிருந்தார்)

அரசன்
13-05-2007, 02:21 PM
நீங்கள் இ-கலப்பையில் எதை பாவிக்கிறீர்கள்? ஆனாலும் ஒருமுறை உங்கள் MS WORD இல் Arial Unicode MS எனும் எழுத்துருவை தெரிவுசெய்துவிட்டு பின்னர் உங்கள் இ-கலப்பைமூலம் தட்டச்சு செய்து பாருங்கள். பதில் என்ன என கூறுங்கள்.
Arial Unicode MS வேர்டில் இல்லையே. இ-கலப்பை 2.0 ன்னு சொல்லிட்டு, ஆனால் அஞ்சல் இல்லைன்னு நினைக்கிறேன். வேர்டில் எப்படி Arial Unicode Ms செட் பண்ணுவது.

அன்புரசிகன்
13-05-2007, 02:41 PM
Control pannel>Regional and Language Options> Language (tab) ல் Install files for East Asian languages என்றிருப்பதை தெரிவு செய்யுங்கள். பின்னர் Apply-OK கொடுத்தால் சிலவேளை XP operating system CD கேட்க்கும். அதை CD ROM இல் போட்டுவிட்டு தொடங்குதல் நலம்.
இது தான் Unicode ஐ set பண்ணும் வழி என எனக்கு தெரியாது. இதையும் செயற்படுத்திப்பாருங்கள்.
அத்துடன் இன்னொன்று; சாதாரணமாக Arial Unicode MS எனும் எழுத்துரு இருக்கும். சிலவேளை இவற்றை செய்தபின்னர்தான் வருமோ தெரியாது. முயற்சித்துப்பாருங்கள்.

அன்புரசிகன்
14-05-2007, 06:45 AM
Arial Unicode MS வேர்டில் இல்லையே.

Arial Unicode MS எழுத்துருவை இங்கே (http://bb.1asphost.com/sendoor/thamasu/mantram/ARIALUNI.TTF) ஏற்றிவைத்திருக்கிறேன். பதிவிறக்கிக்கொள்ளவும். 22.1MB அளவு காட்டுகிறது.
பின்னர் உங்கள் கணிணியிd; control panel>Font ல் சென்று இந்த எழுத்துருவை paste செய்துவிடுங்கள். (உங்கள் கணிணி Windows XP ஐ தானே கொண்டுள்ளது?)
பின்னர் word ல் இவ்வெழுத்துருவை தெரிவுசெய்து பின் உங்கள் இ-கலப்பையைதெரிவுசெய்து முயன்றுபாருங்கள்.
சரியாக வருகிறதா?

srimariselvam
22-08-2007, 11:09 AM
வணக்கம்.
நான் இளங்கோ இன்டர்பேசை தமிழ் எடிட்டராக பயன்படுத்தி வருகிறேன். எனக்கு மாடுலர் கீபோர்டு மட்டுமே தெரியும்.
இளங்கோ யுனிக்கோடிற்கு சப்போர்ட் செய்வதில்லை. இளங்கோ நிறுவனமும் பல முறை மெயில் அனுப்பியதற்கு பதில் தரவில்லை. மாடுலர் கீபோர்டுக்கு உதவிசெய்யும் அதேநேரத்தில் யுனிக்கோடு எழுத்துருவிற்கு உதவும் எடிட்டர்கள் ஏதாவது இருந்தால் நண்பர்கள் உதவுங்களேன்.

namsec
22-08-2007, 02:23 PM
வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி

தளபதி
22-08-2007, 02:33 PM
ரொம்ப ரொம்ப நன்றி.

அன்புரசிகன்
22-08-2007, 02:41 PM
வணக்கம்.
மாடுலர் கீபோர்டுக்கு உதவிசெய்யும் அதேநேரத்தில் யுனிக்கோடு எழுத்துருவிற்கு உதவும் எடிட்டர்கள் ஏதாவது இருந்தால் நண்பர்கள் உதவுங்களேன்.

நீங்கள் எதை கூறுகிறீர்கள் என தெரியவில்லை. ஆனால் எமது மன்றத்தில் கீழே உள்ள Unicode Converter ஐ பயன்படுத்திப்பாருங்கள்.

srimariselvam
25-08-2007, 08:41 AM
அன்புரசிகன் மாடுலர் கீபோர்டு பயன்படுத்தி யுனிகோடு பான்டுகளால் ஆன டெக்ஷ்ட் யெலுத உதவும் சாப்ட்வர் இருந்தால் தாரும்.

பாரதி
28-09-2007, 05:39 PM
நண்பர்களே,

இ-கலப்பை மூலம் ஒருங்குறியில் தட்டச்சு செய்யும் போது "சை"(sai) என்று தட்டச்ச முடிகிறது. ஆனால் "ஷ" எழுத்தைக் கொண்டு "ஷை" என்று தட்டச்சு செய்ய இயலவில்லை. "ஷஇ" (shai)என்றே வருகிறது. இதே எழுத்தை ரோமனைஸ்டு முறையில் தட்டச்சி, மன்றத்தில் உள்ள எழுத்துரு மாற்றியில் மாற்றம் செய்தால் "ஷை" என்று சரியாக வருகிறது. திஸ்கி முறையிலும், இ-கலப்பை ஒருங்குறி முறையிலும் அவ்விதம் "ஷை" வராததற்கு என்ன காரணம்? சரி செய்ய வழிகள் ஏதேனும் உண்டா..?

அறிஞர்
28-09-2007, 06:03 PM
பாரதி போல் எனக்கு சில சமயம் பிரச்சனை வந்தது உண்டு...

ஆனால் ஷை பிரச்சனை இல்லை. எனக்கு நன்றாக தட்ட்டச்சு செய்ய வருகிறது.

அன்புரசிகன்
28-09-2007, 09:21 PM
இ-கலப்பை மூலம் பிரச்சனை இல்லையே. Romanised முறை இகலப்பையில் shai உம் பாமினி முறையில் i\ உம் ஷை ஐ கொண்டுவருதே........... நமது Unicode Converter ல் முயன்று பார்த்தீர்களா?

பாரதி
29-09-2007, 12:35 AM
இ-கலப்பை மூலம் பிரச்சனை இல்லையே. Romanised முறை இகலப்பையில் shai உம் பாமினி முறையில் உம் ஷை ஐ கொண்டுவருதே........... நமது Unicode Converter ல் முயன்று பார்த்தீர்களா?

அன்பு நண்பரே,
இ-கலப்பை கொண்டு, நோட்பேட் அல்லது மன்றத்தில் நேரடியாக தட்டச்சும் போதுதான் இந்த பிரச்சனை. நமது மன்ற எழுத்துரு மாற்றியிலும் தட்டச்சும் போது இதே பிரச்சனை வருகிறது. ஆனால் மன்ற எழுத்துரு மாற்றியில் ரோமனைஸ்டு முறையில் தட்டச்சினால் எந்தப்பிரச்சனையும் இல்லை. நண்பர்களுக்கு அந்த பிரச்சனை இல்லை என்பது குறித்து மகிழ்ச்சி. என்ன காரணத்தால் இவ்விதம் நிகழ்கிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டும் - இண்டர்நெட் எக்ஸ்புளோரரிலா, இகலப்பையிலா அல்லது எழுத்துருவிலா என்று. நன்றி.

அன்புரசிகன்
29-09-2007, 07:51 PM
உங்கள் Notepad ல் TSCu_Paranar என்ற எழுத்துரு தெரிவுசெய்யப்பட்டுள்ளதா? உங்களது கணிணியில் compatibility configuration ஆனது unicode ற்கு ஏதுவாக்கப்பட்டுள்ளதா?

பாரதி
29-09-2007, 11:42 PM
உங்கள் Notepad ல் TSCu_Paranar என்ற எழுத்துரு தெரிவுசெய்யப்பட்டுள்ளதா? உங்களது கணிணியில் compatibility configuration ஆனது unicode ற்கு ஏதுவாக்கப்பட்டுள்ளதா?

பரணனரையும் நிறுவியுள்ளேன் நண்பரே. ஆனால் நான் பாவிப்பது தீனியுனிடிஎக்ஸ் என்ற எழுத்துரு. எனது உலாவியும் (இண்டர்நெட் எக்ஸ்புளோரர்) ஒருங்குறிக்கு ஏதுவாக்கப்பட்டுள்ளது. தமிழ் வலைத்தளங்களாகட்டும், எழுத்துருக்களாகட்டும் தெளிவாக தெரிகின்றன. "ஷஇ" தவிர, தட்டச்சுவதிலும் இது வரை எந்தப்பிரச்சனையும் இல்லை.

சாலைஜெயராமன்
08-01-2008, 12:56 PM
NHM New Type writer - அற்புதமான தமிழ் தட்டச்சு முறை, அனைத்து எழுத்துக்களுக்கும் வழிகாட்டிபோல் லேஅவுட் முறை இருக்கிறது மிகவும் பயனுள்ள ஒரு வசதி. இருப்பினும் இலை என அடிக்க வேண்டி வந்தால் புதிய முறையில்தான் முடிகிறது. பழைய லை (அதாவது ல விற்கு முன்னால் கொம்புக்குறியுடன் உள்ள எழுத்து) கொண்டுவர என்ன செய்யவேண்டும்.

பாரதி
08-01-2008, 01:07 PM
NHM New Type writer - அற்புதமான தமிழ் தட்டச்சு முறை, அனைத்து எழுத்துக்களுக்கும் வழிகாட்டிபோல் லேஅவுட் முறை இருக்கிறது மிகவும் பயனுள்ள ஒரு வசதி. இருப்பினும் இலை என அடிக்க வேண்டி வந்தால் புதிய முறையில்தான் முடிகிறது. பழைய லை (அதாவது ல விற்கு முன்னால் கொம்புக்குறியுடன் உள்ள எழுத்து) கொண்டுவர என்ன செய்யவேண்டும்.

அன்பு நண்பரே,
நீங்கள் குறிப்பிட்ட முறையில் எழுத்து கிடைப்பது அரிதினும் அரிது என்று எண்ணுகிறேன். கணினியில் தமிழ் தட்டச்சில் "லை" என்று மட்டுமே தட்டச்ச இயலும். இவ்விதமான எழுத்து மாற்றம் பத்திரிகைப் பதிப்பிற்கும், எழுத்துக்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கும் சீர்திருத்தும் போது கொண்டு வரப்பட்டது.

ஆர்.ஈஸ்வரன்
08-01-2008, 01:17 PM
நன்றி. வின்டோஸ் 98ல் யூனிக்கோடு பாண்டு ஸாப்ட்வேரை எப்படி எதன் மூலம் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.

பாரதி
08-01-2008, 01:33 PM
நன்றி. வின்டோஸ் 98ல் யூனிக்கோடு பாண்டு ஸாப்ட்வேரை எப்படி எதன் மூலம் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.

அன்பு நண்பரே,

கீழ்க்கண்ட சுட்டியில் விண்டோஸ்_98*ல் தமிழில் தட்டச்சுவதற்கான வழிமுறைகள் தரப்பட்டுள்ளன. நீங்கள் இ*_கலப்பை நிறுவி இருந்தால் தனியாக எழுத்துரு (font) நிறுவ வேண்டி இருக்காது. புதிய தமிழ் ரைட்டர் விண்டோஸ் 98_ல் வேலை செய்கிறதா என்று எனக்குத்தெரியவில்லை.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5330

esan
10-01-2008, 04:47 PM
hi
how can i wright in tamil pls help me

அன்புரசிகன்
11-01-2008, 12:46 PM
hi
how can i wright in tamil pls help me

தமிழ் எழுத்துரு உதவி (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=2) பகுதியில் உலாவந்தீர்களாயின் உங்களாலும் மிக இலகுவில் தமிழால் பதிக்க முடியும்.

அறிமுகப்பகுதியில் அறிமுகம் செய்யுங்கள்.

மேலதிக சந்தேகங்களை கேட்டு தெளியுங்கள்.

அனுராகவன்
17-02-2008, 03:29 AM
நன்றி இராசகுமாரன்..
நானும் முயற்சித்தேன்..
ம்ம் என் வாழ்த்துக்கள்..

sarathecreator
17-02-2008, 10:59 AM
நான் முதலில் மையிலைப்ளைன் எழுத்துரு பாவித்தேன். ( 1997 - 1998)
பிறகு அமுதம் - தட்டெழுத்து பாவித்தேன் (1999 - 2006)
இப்போது லதா - ஒருங்குறி பாவிக்கிறேன். எல்லாமே எளிதாகக் கைவந்தவை தான்.
(2006 முதல் ஒருங்குறிக்கு மாறிவிட்டேன்.)
காலத்துக்கேற்றபடி நாமும் கண்ணியும் மாறிக்கொண்டே இருத்தலே நலம்

தங்களது தகவலுக்கு நன்றி சொல்லிப் போகவே இங்கே வந்தேன்

சாலைஜெயராமன்
17-02-2008, 11:56 AM
அன்பு சரத்,

இந்த ஒருங்குறி, Romanized, Tab. Mayilai. Bamini போன்றவற்றின் வேறுபாடுகளை சற்று விளக்க வேண்டுகிறேன்.

நான் திவ்யா என்ற Font மூலமாகத்தான் முன்பெல்லாம் தட்டச்சு செய்து வந்தேன். அப்போதெல்லாம் திவ்யா எழுத்துறு எந்தக் கணிணியில் இருக்கிறதோ அதில் தான் படிக்க முடிகிறது.

தற்போது Unicode முறையில் டைப் செய்தாலும், யாஹூ போன்றவற்றில் எழுதினால் படிக்க முடியவில்லையே.

என்ன செய்வது. கொஞ்சம் விளக்க வேண்டும்.

அன்புரசிகன்
17-02-2008, 03:20 PM
திவ்யா கீதப்பிரியா நல்லூர் போன்ற எழுத்துருக்கள் யுனிக்கோடிற்கு ஏதுவானவை அல்ல. அவை பாமினி எழுத்துருவை ஒத்த எழுத்துரு. யுனிக்கோடல்லாத எழுத்துருக்களை அந்த எழுத்துரு இல்லாத கணினிகளில் படிக்க முடியாது. யுனிக்கோட் எழுத்துக்களை யுனிக்கோட் நிறுவாத கணினிகளில் படிக்க முடியாது.... ஆனால் தற்காலத்தில் WINDOWS XP ல் யுனிக்கோட் நிறுவியே வருகிறது. (லதா மற்றும் Arial Unicode MS ஆகிய எழுத்துருக்களால்)

யுனிக்கோட் முறையில் பதிந்தும் படிக்க முடியாததற்கு காரணம் உங்கள் கணினி யுனிக்கோடிற்கு ஏதுவாக்கப்படவில்லை என்பதே...

சாலைஜெயராமன்
18-02-2008, 05:46 PM
நன்றி திரு அன்பு ரசிகன். நான் முதலில் கேட்ட சந்தேகத்திற்கும் விளக்கம் தர வேண்டுகிறேன். அதாவது Romanized, Tab, Mayilai போன்ற அமைப்புகளின் பயன்பாடு மற்றும் அதன் செயல்பாடு பற்றி.

அறிஞர்
26-02-2008, 02:42 PM
நன்றி திரு அன்பு ரசிகன். நான் முதலில் கேட்ட சந்தேகத்திற்கும் விளக்கம் தர வேண்டுகிறேன். அதாவது Romanized, Tab, Mayilai போன்ற அமைப்புகளின் பயன்பாடு மற்றும் அதன் செயல்பாடு பற்றி.
பாரதி, பிரவீன் அல்லது சுபன் தங்களுக்கு உதவுவார்கள்...

சுபன்
27-02-2008, 02:22 AM
நன்றி திரு அன்பு ரசிகன். நான் முதலில் கேட்ட சந்தேகத்திற்கும் விளக்கம் தர வேண்டுகிறேன். அதாவது Romanized, Tab, Mayilai போன்ற அமைப்புகளின் பயன்பாடு மற்றும் அதன் செயல்பாடு பற்றி.


அவை ஒவ்வொன்றும் வித்தியாசமான Font முறைகள். முன்பு யுனிகோட் வரும் முன்னர் தமிழர்கள் வித்தியாசமான Font முறைகளை பயன்படுத்தி வந்தனர்.

ஒவ்வொன்றும் வித்தியாசமானது

எ,கா A என தட்டினால்

Romanized அ
Bamini ய

என எழுத்துக்கள் வரும்.

ஒவ்வொரு ஆங்கில எழுத்துக்கும் அவை தரும் தமிழ் எழுத்துக்கள் வித்தியாசமானவை. இன்னும் விளக்கமாக பின்னர் கூறுகிறேன்

praveen
27-02-2008, 03:43 AM
நன்றி திரு அன்பு ரசிகன். நான் முதலில் கேட்ட சந்தேகத்திற்கும் விளக்கம் தர வேண்டுகிறேன். அதாவது Romanized, Tab, Mayilai போன்ற அமைப்புகளின் பயன்பாடு மற்றும் அதன் செயல்பாடு பற்றி.


http://www.tamilnation.org/digital/Tamil%20Fonts%20&%20Software.htm

மேலே கண்ட சுட்டி சென்று முடிந்தால் ஆரம்பத்திலிருந்து இல்லை, நீங்கள் கேட்டதற்கு பாதியில் இருந்து பார்த்தால் ஐயம் தீரலாம். விவரமாக தமிழில் டைப் செய்ய நேரமில்லை அன்பரே.

சாலைஜெயராமன்
27-02-2008, 01:56 PM
நன்றி நண்பர்களே. தொடர்ந்து படித்து வருகிறேன். கொஞ்சம் புரிகிறது.

santhan
18-05-2008, 03:50 PM
நன்றி இராசகுமாரன்.அவர்களே தமிழில் எழுத காடியதற்கு.விரைவில் பழகிடுவன்.

அமரன்
18-05-2008, 08:54 PM
நன்றி இராசகுமாரன்.அவர்களே தமிழில் எழுத காடியதற்கு.விரைவில் பழகிடுவன்.
முயற்சி திருவினையாக்கும். உங்கள் எண்ணங்கள் தமிழ் வரிவடிவம் பெறும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன்..

sasi6666
07-06-2008, 11:02 AM
an payar sasi

sownthar
24-06-2008, 07:40 PM
செளந்தர்: உதவி செய்யவும், நான் நலினம் தமில் பயன்படுதுகிறேன் அதை எப்படி தமிலிருந்து அ�*கிலதிற்கு மாற்றுவது....

sownthar
24-06-2008, 07:50 PM
செளந்தர் தமிழ் மன்ற இனையதொடு இணைவதில் இமலய மகிழ்ச்சி...............

அக்னி
24-06-2008, 08:44 PM
¦ºÇó¾÷: ¯¾Å¢ ¦ºöÂ×õ, ¿¡ý ¿Ä¢Éõ ¾Á¢ø ÀÂýÀÎи¢§Èý «¨¾ ±ôÀÊ ¾Á¢Ä¢ÕóÐ «�*¸¢Ä¾¢üÌ Á¡üÚÅÐ....


¦ºÇó¾÷ ¾Á¢ú ÁýÈ þ¨É¦¾¡Î þ¨½Å¾¢ø þÁÄ Á¸¢ú...............
நண்பரே...
உங்களது முதற்பதிவுகளை ஒருங்குறியில் தானே பதிவிட்டீர்கள்...
இப்போது திஸ்கி எழுத்துருவில் பதிகின்றீர்கள்.
இனியும் தொடர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

நீங்கள் மன்றத்தில் இணைந்தது எங்களுக்கும் மகிழ்ச்சியே. அதையே அனைத்து இடங்களிலும் பதிவது அவசியமற்றது.

உங்களை அறிமுகம் செய்து கொள்க (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=38)
இங்கே உங்களது அறிமுகத்தை இட்டு, மன்றத்தோடு இணைந்து மகிழ்ந்திடுங்கள்.

ஆரோக்கியமான பதிவுகளைத் தங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்.

நன்றி!

பொறுப்பாளர்
~அக்னி