PDA

View Full Version : மன்றம் கண்டேன் களிப்புற்றேன்.



Prabhu
06-08-2005, 09:53 AM
நான் பிரபு, பரமகுடியில் பிறந்து வளர்ந்து படித்து
இப்பொழுது மலேசியாவில் பணிபுரிகிரேன்

மனோ சார் அறிமுகத்தால் தமிழ் மன்றம் கண்டேன்
களிப்புற்றேன். நானும் எனது படைப்புக்களை படைக்கலாம்
என்று எண்ணி உள்ளேன். உங்கள் ஆதரவும் அரவணைப்பும் மிக மிக தேவை

பிரபு.

karikaalan
06-08-2005, 10:01 AM
பிரபுஜி

மன்றத்தில் தங்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். அதிலும், மனோஜியின் அறிமுகம் என்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சி. பல அரங்குகளிலும் பங்கு கொள்ளுங்கள். மகிழுங்கள். மகிழச் செய்யுங்கள்.

===கரிகாலன்

Birundan
06-08-2005, 01:02 PM
வாருங்கள் பிரபு உங்கள் வரவு நல்வரவாகுக.
அன்புடன் பிருந்தன்

aren
07-08-2005, 01:43 AM
வாருங்கள் பிரபு அவர்களே. உங்களை வருக வருக என்று வரவேற்கிறேன். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

நன்றி வணக்கம்
ஆரென்

Prabhu
07-08-2005, 05:12 AM
உங்கள் அனைவரின் நலம் அறிய ஆவலய் உள்ளேன், இங்கு மலேசியாவும் அதன் மக்களும் எனக்கு மிக பிடித்துள்ளது.

எனது கணனியில் தமிழ் ஃபாண்ட் சரியாக அமையவில்லை ஆகவே தமிழில் டைப் செய்ய படவில்லை.
மன்னிக்கவும்.

பிரபு

thempavani
07-08-2005, 05:21 AM
நண்பர் பிரபு அவர்களுக்கு வணக்கம்..

வாருங்கள்...நம் மன்றத்தின் பல பகுதிகளுக்கும் சென்று படியுங்கள்..பின் பல விடயங்கள் படையுங்கள்...

அதுசரி..நீங்கள் தமிழிலேயே எழுதலாமே..

pradeepkt
08-08-2005, 06:50 AM
ஆகா, ஏற்கனவே அறிமுகம் இட்டு விட்டீர்களா...
வணக்கம் பிரபு
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
அண்ணன் மனோ அவர்களின் அறிமுகம் என்பது உங்களிடம் அதிகம் எதிர்பார்க்க வைக்கிறது. உலவுங்கள். உலவி உங்கள் கருத்துகளையும் படைப்புகளையும் அனுபவங்களையும் பதியுங்கள்.

வாழ்த்துகளுடன்,
பிரதீப்

மன்மதன்
09-08-2005, 05:59 AM
மனோ.ஜியின் நண்பர் பிரபு அவர்களை அன்புடன் மன்றத்திற்கு வரவேற்கிறேன்..
அன்புடன்
மன்மதன்

Mano.G.
24-08-2005, 12:15 PM
வாங்க பிரபு வந்து நாளாச்சா
நம்ம மன்றத்துல உங்கல எதிர்பார்த்து
காத்து இருந்தேன் வந்த்துட்டீங்க
வாங்க


மனோ.ஜி

பாரதி
25-08-2005, 04:38 PM
வணக்கமும் வரவேற்பும் அன்பு பிரபு. தமிழ்மன்றத்தில் உங்களைக் காண்பதில் மிக்க மகிழ்ச்சி.

சுவேதா
26-08-2005, 01:14 AM
வாருங்கள் பிரபு அண்ணா உங்களை வருக வருக என வரவேற்கின்றேன்! உங்கள் படைப்புக்களையும் கருத்துக்களையும் எதிர் பார்க்கின்றோம் அண்ணா!