PDA

View Full Version : ஆகஸ்ட் 6,சனிக்கிழமை உலக செய்திகள்



Mano.G.
06-08-2005, 01:02 AM
தமிழ்மன்ற உறவுகள் கலக்கலுடன் ஒன்றுகூடுதல்.

இன்று ஆகஸ்ட் 6 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு,
தமிழ்நாடுத் தலைநகர் சிங்கார சென்னையில் புகழ்பெற்ற
எழுச்சிமிக்க, தமிழ்பால் பற்று கொண்ட , தமிழ் பேசும் மக்களிடையே
சகோதர பாச உணர்வை தூண்டி துளிர்விட்டு வளரசெய்யும்,
பார்போற்றும் "தமிழ்மன்ற" உறவுகள் ஒன்று கூடும் நிகழ்வு
கலக்கலுடன் நடைபெறவுள்ளது.மன்ற உறவுகள் அனைவரும்
கலந்து சிறப்பிக்க அழைக்கப்படுகிரோம்.
_______________________________________________________________________

மலேசியா தீவிரவாதத்தை வளர்க்கும் நாடல்ல - டத்தோஸ்ரீ நஜீப்
மலேசியா தீவிரவாதத்தை வளர்க்கும் நாடல்ல எனவும் தாய்லாந்து அரசாங்கமே அதை ஒப்புக் கொண்டுள்ளது எனவும் துணைப் பிரதமர் Datuk Seri Najib Tun Razak தெரிவித்துள்ளார்.
மலேசியா தீவிரவாதத்தை வளர்க்கும் நாடல்ல; மாறாக இராணுவமே மலேசியாவின் பாதுகாப்பு கவசமாகும் என தாய்லாந்து அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.மலேசியாவிற்குள் தாய்லாந்து நாட்டவர்களும் தாய்லாந்து நாட்டிற்குள் மலேசியர்களும் வந்து போகலாம்.
ஆனால்,சட்டத்திற்கு புறம்பான செயலையோ தீவிரவாத நடவடிக்கையையோ எந்த தரப்பினர் மேற்கொண்டாலும் அந்நடவடிக்கையை உடனே ஒடுக்கவும் சம்பந்தப்பட்ட நபர்களை சட்டத்திற்குமுன் நிறுத்தவும் இரு நாட்டு அரசும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

______________________________________________________________________
MIED கல்விக் கடனுதவியைத் திரும்ப செலுத்தாதவர்களின் பெயர்கள் நாளிதழ்களில் வெளிவராது
ம.இ.கா-வின் நிறுவனமான MIED அல்லது கல்விக் கடனுதவி வாரியம் மூலம் நிதியுதவி பெற்று பின் அதை திரும்ப செலுத்தாதவர்களின் பெயர்களை நாளிதழ்களில் ம.இ.கா அம்பலப்படுத்தாது என ம.இ.கா-வின் தேசிய தலைவர், MIED நிறுவன தலைவர் மற்றும் பொதுப்பணி அமைச்சருமான Datuk Seri S. Samy Vellu தெரிவித்தார்.
சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை நாளிதழ்களில் அறிவித்தால், அச்செயல் அவர்களுக்கு பெருத்த அவமானமாக இருக்கும் எனவும் அதுவே அவர்கள் பணியிடங்களில் பல பிரச்னைகளை எதிர்நோக்கக்கூடும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
முறையான சட்ட விதிப்படியே சம்பந்தப்பட்டவர்களோடு பிரச்னையைத் தீர்த்துக் கொள்ள ம.இ.கா விரும்புகிறது என அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.


இவ்வாண்டின் முதல் 6 மாதங்களில் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை உயர்வு
இவ்வாண்டின் முதல் 6 மாதங்களில் நம் நாட்டிற்கு வருகை புரிந்த சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை 3.5 சதவீதம் உயர்ந்துள்ளதாக சுற்றுலா துறை அமைச்சர் Datuk Dr Leo Michael Toyad தெரிவித்தார்.
பறவை சளிக்காய்ச்சல்,டிங்கி நோய் பரவுதல் மற்றும் இயற்கை பேரிடர் ஆசிய வட்டாரங்களில் ஏற்பட்டாலும் கடந்த ஆண்டைவிட இவ்வாண்டின் முதல் 6 மாதங்களில் நம் நாட்டிற்கு வருகை புரிந்த சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது ஆச்சரியம் அளிக்கும் வகையில் உள்ளதென அவர் மேலும் தெரிவித்தார்.
உள்ளூர் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையும் 11.4 சதவீதம் உயர்ந்துள்ளதாக அவர் கூறினார். வட ஆசிய வட்டாரங்களிலிருந்துதான் அதிகமான சுற்றுப்பயணிகள் மலேசியாவிற்கு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


3 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள பட்டாசுகளும் வான வெடிகளும் பறிமுதல் செய்யப்பட்டன
பினாங்கு சுங்கத்துறை இலாகாவினர் சுமார் 3 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகளையும் வான வெடிகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இப்பட்டாசுகளும் வானவெடிகளும் எதிர்வரும் ஹரி ராயா பெருநாள் மற்றும் சீன பெருநாள் காலங்களில் சந்தையில் விற்பனை லாரியில் ஏற்றிக் கொண்டு வரப்பட்டதாக சுங்கத் துறையின் துணைத் தலைமை இயக்குனர் Noorhaini Safian தெரிவித்தார்.
இதன் தொடர்பில் அந்த லாரியின் ஓட்டுநரையும் அவரது உதவியாளர் ஒருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனிடையே மற்றொரு சம்பவத்தில் சுங்கத்துறையினர் சுமார் 20 டன் கொண்ட பட்டாசுகளை பட்டவொர்த் வட்டாரத்தில் கைப்பற்றினர். இதன் தொடர்பில் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.


கிளந்தான் காடுகளில் வெட்டு மர நடவடிக்கைகள் வெகுவாக குறைந்துள்ளது
கிளந்தான் மாநிலத்திலுள்ள காடுகளில் தற்பொழுது சட்டவிரோத வெட்டு மர நடவடிக்கைகள் இருப்பதில்லை என தெரிய வந்துள்ளது.
வெட்டு மர நடவடிக்கைகளுக்கு எதிராக சட்டத்திட்டங்கள் கடுமையாக்கப்பட்டதிலிருந்து இந்நடவடிக்கைகள் பெருமளவில் குறைந்துள்ளதாக கிளந்தான் வன இலாகா தலைமை இயக்குனர் Dahlan Taha தெரிவித்தார்.
வெட்டு மர நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது 50,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படலாம். இந்த சட்டத் திட்டத்தின் மூலம் கிளந்தான் மாநிலத்தில் வெட்டு மர நடவடிக்கைகள் பெருமளவில் குறைந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

நான்கு வீடுகள் தீக்கிரை

Kampung Malaysia Tambahan, Sungai Besi-யில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 வீடுகள் முற்றாக அழிந்தன. இதனால் சுமார் 18 பேர் இருப்பிடங்களை இழந்து தவிக்கின்றர்.
அங்குள்ள ஒரு வீட்டில் சிறுவர்கள் தீயைப் பயன்படுத்தி விளையாடியதால் இத்தீவிபத்து நிகழ்ந்ததாக தீயணைப்பு வீரர் Baharom Osman தெரிவித்தார்.
எனினும் இத்தீவிபத்தில் ஏற்பட்ட சேதங்கள் இன்னும் தெரியவில்லை எனவும் மேலும் இதில் உயிரிழப்பு ஏதுவும் நிகழவில்லை எனவும் அவர் கூறினார்.
________________________________________________________________________

சவுதி புதிய மன்னருக்கு ஜனாதிபதி வாழ்த்து
சவுதி அரேபியாவின் புதிய மன்னராக பதவியேற்றுள்ள அப்துல்லா பின் அப்துல் அஜிஸ் அல் சவுத்திற்கு ஜனாதிபதி அப்துல் கலாம் வாழ்த்து தெரிவித்துள்ளார். சவுதி மன்னர் பாத் பின் அப்துல் அஜிஸ் கடந்த திங்கட்கிழமையன்று மறைந்ததால், அவரது சகோதரர் அப்துல்லா புதிய மன்னராக பொறுப்பேற்றார்.
அவருக்கு ஜனாதிபதி அப்துல் கலாம் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது: புதிதாக நீங்கள் மன்னராக பதவியேற்றது குறித்து எங்கள் அரசின் சார்பாகவும் இந்திய மக்களின் சார்பாகவும் என் சார்பாகவும் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடைய வழிகாட்டுதலில் சவுதி அரேபிய அரசு வளர்ச்சியும் முன்னேற்றத்தையும் காண வேண்டும்.
இந்தியாவுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே பாரம்பரியமாக உள்ள நெருக்கம் மேலும் பலப்பட வேண்டும். அதிக நாட்களும் நல்ல படியுமாக உங்கள் ஆட்சி அமையவும் நீங்கள் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் பெறவும் மற்றும் சவுதி அரேபிய மக்கள் மகிழ்ச்சியும், வளர்ச்சியும் பெறவும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
_______________________________________________________________________
டிஸ்கவரி ஓடத்தில் பழுது பார்க்கும் பணி தொடரும்
பூமிக்கு பத்திரமாகத் திரும்பச் செல்வதை உறுதிபடுத்தும் நோக்கத்தில், டிஸ்கவரி விண்வெளி ஓடத்தில் மேலும் பழுதுபார்க்க வேண்டுமா என்பதை நாசா விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
பழுதுபார்க்கும் பணி அவசியம் எனும் பட்சத்தில், விஞ்ஞானிகள் நான்காவது முறையாக விண்வெளியில் நடந்து சென்று பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். திரும்பு பயணத்துக்கான ஏற்பாட்டை டிஸ்கவரி விஞ்ஞானிகள் தீவிரமாகச் செய்து வருகின்றனர்.
பூமிக்குத் திரும்பும்போது ஓடத்துக்கு வேறு ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ என தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது.


விபத்துக்குள்ளான விமான கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு
கனடாவில் தரையிறங்கும்போது ஓடுபாதையில் வழுக்கி விபத்துக்குள்ளான விமானத்திலிருந்த கருப்புப் பெட்டி கைப்பற்றப்பட்டுள்ளது ஏர் பிரான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஏர்பஸ் & ஏ340 என்ற விமானம் பாரிசிலிருந்து நேற்று முன்தினம் இரவு கனடாவுக்கு வந்தது.
அங்கு டொரான்டோ வில் உள்ள பியர்சன் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விமானம் வழுக்கிக் கொண்டு 200 மீட்டர் தூரத்திற்கு ஓடி இரண்டாக பிளந்தது. தீப்பிடித்தும் எரிந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிர் தப்பினர். 43 பயணிகளுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.
விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்திடம் உள்ள இந்தப் பெட்டி ஒட்டாவா ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
கருப்பு பெட்டியில் பதிவாகியுள்ள குரல் பதிவுகள் மற்றும் விமானம் பற்றிய குறிப்புகள் ஆய்வுக் கூடத்தில் ஆய்வு செய்யப்படும். இதன் மூலம் விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் கண்டறியப்படும்.

பிளேரின் முடிவால் லண்டன் அழியும்: எச்சரிக்கிறார் Al-Qaeda தலைவர்

பிரிட்டிஷ் பிரதமர் டோ னி பிளேரின் கொள்கைகள் லண்டனில் மேலும் அழிவை ஏற்படுத்தும், என Al-Qaeda தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவர் அய்மன் அல்&ஜாவாக்ரி கூறியுள்ளார். லண்டனில் கடந்த மாதம் 7 மற்றும் 21ம் தேதிகளில் பல இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் 57 பேர் பலியாயினர். 700க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
பொதுமக்களின் நம்பிக்கையை குலைக்கும் வண்ணம் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் சம்பவங்கள் மக்களிடையே பீதியை ஏற்படுத்தின. குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்களை தேடும் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், துபாயில் இருந்து ஒளிபரப்பாகும் அல்ஜசீரா "டிவி'யில் நேற்று முன்தினம் Al-Qaeda தீவிரவாத அமைப்பின் முக்கிய தலைவர் அய்மன் அல்&ஜாவாக்ரியின் கேசட் ஒளிபரப்பானது.
அதில் அல் ஜாவாக்ரி லண்டனில் இருமுறை நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்குப் பின்னரும் பிரதமர் டோனி பிளேர் எடுத்துவரும் கொள்கை டதியான முடிவுகள் லண்டனை மேலும் அழிவுக்குக் கொண்டு செல்லும் என எச்சரித்துள்ளார்.
________________________________________________________________________
இங்கிலாந்து ஒரே நாளில் 407 புள்ளிகளைக் குவித்தது
எட்பாஸ்டன் டெஸ்டில் மெக்ராத் இல்லாதது இங்கிலாந்துக்கு சாதகமாக அமைந்தது. துவக்கத்தில் டிரஸ்கோதிக், பிளின்டாப், பீட்டர்சன் அதிவிரைவாக புள்ளிகள் சேர்க்க, இங்கிலாந்து அணி ஒரே நாளில் 407 புள்ளிகளைக் குவித்தது.
ஆஸ்திரேலிய பந்துவீச்சு படுமோசமாக அமைய, பவுண்டரி, சிக்சர் சாதாரணமாக பறந்தன. இங்கிலாந்து வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா 1&0 என்ற முன்னிலையில் உள்ளது. இரண்டாவது போட்டி நேற்று எட்பாஸ்டனில் துவங்கியது.
இங்கிலாந்து அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியில் மெக்ராத்துக்கு பதிலாக காஸ்பரோவிச் வாய்ப்பு பெற்றார்.


நன்றி வணக்கம்மலேசிய.காம்


மனோ.ஜி