PDA

View Full Version : அம்மா



Birundan
05-08-2005, 11:14 AM
அம்மா என்காத உயிர் இல்லையே
அவள் இல்லையேல் வாழ்வு தொல்லையே!
எம் தொல்லை என்றும் பொறுத்திருப்பாள்
எம்மை கண் இமைபோண்று காத்திருப்பாள்!
எம்மை காக்க அரும்பாடுபட்டாள்
எம்மை சாண்றோனாக்க பெரும்பாடுபட்டாள்!
திட்டி பேசினாலும் வட்டிலில் சோறு வைப்பாள்
நாம் பட்டினி கிடந்தால் மனம் துடித்திருப்பாள்!
எமை காக்க இரவில் விளித்திருப்பாள்
எமக்காகவே உயிர் கொடுத்திருப்பாள்!
தன் வயிறு பசித்திருந்து எம்வயிறு புசிக்க!
தன் வயிறு கொதித்திருந்து எம்வயிறு குளிர!
தன் வயிறு தகித்திருந்து எம்வயிறு தணிய!
தன் உணவு சேர்த்து எம்வட்டிலில் போட்டு
நாம் உண்ணும் அழகு கண்டு தன்மனம் களித்து!
எம் திருப்தி கண்டு
தன் உள்ளம் குளிர்ந்து!
தன் உயிர் கொடுத்து
எம் உயிர் வளர்தாள் அன்னை!
அவள்தான் நான் உலகில்
கண்ட முதல் தெய்வம்.
அன்புடன் பிருந்தன்

mukilan
05-08-2005, 02:50 PM
நிச்சயமாக பிருந்தன் இவ்வுலகில் தாயே முதல் தெய்வம்.அருமையான கவிதை இன்னும் நிறைய எழுதுங்கள்.

முகிலன்

Birundan
06-08-2005, 12:41 AM
நண்றி முகிலன் எம்மை போன்றவருக்கு,பாராட்டுதான் உற்சாகமருந்து.
அன்புடன் பிருந்தன்

Mano.G.
06-08-2005, 01:17 AM
தாயை போற்றும் மற்றோரு
கவிதை அருமை வாழ்த்துக்கள்
பிருந்தன்

மனோ.ஜி

Birundan
07-08-2005, 12:20 AM
வாழ்த்துக்கு நண்றிகள் மனோஜி அண்ணா.
அன்புடன் பிருந்தன்

மன்மதன்
10-08-2005, 09:56 AM
கவிதை நடையில் இருப்பதாக தெரியவில்லை.. இருந்தாலும் வரிகள் ரொம்ப ஆழமாக.. நன்றாக இருக்கிறது பிருந்தன்..

பரஞ்சோதி
10-08-2005, 09:59 AM
தாயின் பெருமையை போற்றிய நண்பா, நீ வாழ்க.

pradeepkt
10-08-2005, 10:41 AM
நல்ல கவிதை நண்பரே

gragavan
10-08-2005, 11:02 AM
பிருந்தன் தாயின் பெருமையை தரணிக்குணர்த்த நல்ல கவிதை எழுதியுள்ளீர்கள். பாராட்டுகள். இன்னும் தொடருங்கள்.

ஆங்காங்கே சில எழுத்துப் பிழைகள் உள்ளன....
எ-டு
திட்டி பேசி.... திட்டிப் பேசி என்றிருக்க வேண்டும்
விளித்திருப்பாள்........விழித்திருப்பாள் என்று இருக்க வேண்டும். விளித்தல் என்றால் அழைத்தல்.

உங்கள் கவிதைக் கடல் பொங்கி மன்றத்தில் கவிதைச் சுனாமி வர வாழ்த்துகள்.

Birundan
10-08-2005, 11:23 AM
நண்பர்கள் அனைவருக்கும் நண்றிகள், உங்கள் கருத்துக்கள் என்னை சீர்படுத்தி
வழப்படுத்தும், நண்றிகள்.
அன்புடன் பிருந்தன்

பிரசன்னா
09-09-2005, 06:09 PM
ஆகா அருமை அருமை
அருமையான கவிதை