PDA

View Full Version : பத்திரிக்கைkavitha
05-08-2005, 10:52 AM
பிஞ்சுகளை வெம்பவிடும்.
மலர்களை மணம் பரப்பும்.
காய்ந்த சருகுகளுக்கு கம்பளம் விரிக்கும்.

மக்களுக்கு முகம்பார்க்கும் கண்ணாடி
மந்திரிகளுக்கு மாயாஜால கண்ணாடி
திரையுலகுக்கு அணியும் தங்கக்கண்ணாடி

உருப்படியான பக்கம் இல்லாமல் கூட இருக்கும்
உருவங்களால் பலானம் இல்லாமல் இருக்காது

நான்கு உண்மைகளில்
நாற்பது பொய்கள்

கூவத்தின் சரக்குகளுக்கு
கூவிக் கூவி வியாபாரம்

நாடிப் படிக்க வேண்டியவை
இன்று
நாடிப்பிடிக்கும்படி!

karikaalan
05-08-2005, 10:57 AM
பத்திரிக்கை இல்லா உலகில்...... நினைத்துப் பார்க்கவே நன்றாக இருக்கிறது....

வாழ்த்துக்கள் கவிதாஜி!

===கரிகாலன்

Birundan
05-08-2005, 11:32 AM
கவிதை நண்று பாராட்டுக்கள்
அன்புடன் பிருந்தன்

pradeepkt
08-08-2005, 06:24 AM
கூவத்தின் சரக்குகளுக்கு
கூவிக் கூவி வியாபாரம்

நாடிப் படிக்க வேண்டியவை
இன்று
நாடிப்பிடிக்கும்படி!

நாடிப்படிக்க வேண்டியவை
இன்று
நாடி பிடிக்கும்படி
இருக்கும்வரை
நாடிப்படித்தான் இழிந்திருக்கும்
வீடெப்படித்தான் வாழ்ந்திருக்கும்?

அருமையான வரிகள் சகோதரி.

gragavan
08-08-2005, 07:05 AM
பத்திரிகைகள் கத்தரிக்கைகளாக இருப்பதுதான் இன்றைய தலையாய பிரச்சனை. இந்நிலை மாற வேண்டும்.

மன்மதன்
10-08-2005, 06:03 AM
பத்திரிக்கை பற்றி உண்மையின் வெளிப்பாடு. கவிதை அருமை கவி..
அன்புடன்
மன்மதன்

kavitha
10-08-2005, 11:08 AM
பத்திரிக்கை இல்லா உலகில்...... நினைத்துப் பார்க்கவே நன்றாக இருக்கிறது....

வாழ்த்துக்கள் கவிதாஜி!

===கரிகாலன்

பத்திரிக்கை இல்லா உலகம்! என்னால் நினைத்தே பார்க்க முடியவில்லை அண்ணா!
ஒருவேளை அப்படி வந்தால் "புறங்கூறுதலும்", "ஒட்டுக்கேட்டலும்" ஓகோ என்று இன்னும் வளர்ந்திருக்கும்.

kavitha
10-08-2005, 11:11 AM
கவிதை நண்று பாராட்டுக்கள்
அன்புடன் பிருந்தன்
நன்றி பிருந்தன்

kavitha
16-08-2005, 04:59 AM
நாடிப்படிக்க வேண்டியவை
இன்று
நாடி பிடிக்கும்படி
இருக்கும்வரை
நாடிப்படித்தான் இழிந்திருக்கும்
வீடெப்படித்தான் வாழ்ந்திருக்கும்?

அருமையான வரிகள் சகோதரி.
நன்றி பிரதீப். தாமத பதிலுக்கு மன்னியுங்கள். நேரமின்மையால் அன்று பிழை திருத்தலை மட்டும் செய்துவிட்டுச் சென்றுவிட்டேன்.

சந்திப்பிழையை நிவர்த்தி செய்வது எப்படி என்று கூறுங்கள். தனித்தலைப்பில் உரையாடினாலும் சம்மதமே!
-------------

kavitha
16-08-2005, 05:08 AM
பத்திரிகைகள் கத்தரிக்கைகளாக இருப்பதுதான் இன்றைய தலையாய பிரச்சனை. இந்நிலை மாற வேண்டும்.

வியாபார நோக்கமாக மட்டுமே செயல்படும் இந்தமாதிரி குப்பை இதழ்களை ஒதுக்கினால் தீர்வு காணலாம். இதில் எத்தனைப் பிரதி விற்றது என்பது வேறு தம்பட்டமாக இருக்கிறது. இதழுக்காகக் கொடுக்கும் பணத்தை விட அவர்கள் தரும் இலவசப்பொருள்களின் விலை அதிகம்! எனில் வாசகர்களை ஈர்ப்பது மட்டுமே முதன்மையாக இருக்கிறது என்பது தெள்ளத் தெளிவு! இதற்கு ஒரு மளிகைக் கடையை வைத்து கடைக்கு ஆடல் அழகிகளின் படங்களை ஒட்டவைத்து வியாபாரம் செய்யலாம்.

kavitha
16-08-2005, 05:10 AM
பத்திரிக்கை பற்றி உண்மையின் வெளிப்பாடு. கவிதை அருமை கவி..
அன்புடன்
மன்மதன்

நன்றி மன்மதன்

பிரசன்னா
09-09-2005, 06:05 PM
ஆகா அருமை அருமை
அருமையான கவிதை

ஆதவா
07-01-2007, 01:22 PM
மக்களுக்கு முகம்பார்க்கும் கண்ணாடி
மந்திரிகளுக்கு மாயாஜால கண்ணாடி
திரையுலகுக்கு அணியும் தங்கக்கண்ணாடி

ஆமாமாம். எளிதில் உடையாத கண்ணாடி

உருப்படியான பக்கம் இல்லாமல் கூட இருக்கும்
உருவங்களால் பலானம் இல்லாமல் இருக்காது

தினமணியை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.

நான்கு உண்மைகளில்
நாற்பது பொய்கள்
பொய்யில்லாமல் மீடியா இல்லீங்க, சில நேரத்தில பொய் ரொம்ப அவசியம்.

கூவத்தின் சரக்குகளுக்கு
கூவிக் கூவி வியாபாரம்

எதற்க்கு சிவப்பு வண்ணம். எழுத்துப் பிழையா? அல்லது பத்திரிக்கைகளை பிழையா?

ஓவியா
04-04-2007, 11:29 PM
அருமையான கவிதை, சிக்கனமாக செதுக்கியுள்ளீர்கள். சபாஷ்

நாழிதள்களின் சிறப்பும் நன்மையும் பெருக பெருக - அதன்
தரம் தரையைத் தோடுமாளவு தடம்புரண்டுள்ளது.


நன்றி கவிதா

ஓவியா
04-04-2007, 11:36 PM
[I]நான்கு உண்மைகளில்
நாற்பது பொய்கள்
பொய்யில்லாமல் மீடியா இல்லீங்க, சில நேரத்தில பொய் ரொம்ப அவசியம்.


ஹி ஹி ஹி

ஆதவா எங்க ஊரில் நான் தினமும் (6 முக்கிய) நாழிதல்களில் முதல் 8 பக்கங்களை தினமும் புரட்டிடுவேன். இல்லனா மண்டை வெடித்து விடும் இங்கு வந்ததும். சீ.என்.என் மற்றும் பி.பி.சி.....சில மாதங்களாக அதுவும் கிடையாது....இப்போ அக்கவோட ஐகிஃயு 0%. நாழிதல்களினால் பல நன்மைகளே. சில தீமைகள்.


கூவத்தின் சரக்குகளுக்கு
கூவிக் கூவி வியாபாரம்

கடைசி வரி விளம்பர தாரர்களுக்கோ!!!!!
சாட்டையடி வரி.

அரசன்
05-04-2007, 06:46 AM
நான்கு உண்மைகளில்
நாற்பது பொய்கள்


பத்திரிக்கைகள் ஒரு நாட்டின் உயிர் நாடி. அது இன்று வியாபாரதிற்காகவும், விளம்பரத்திற்காகவும் மாறி வருகிறது என்பதை நயமாக காட்டியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்! தொடரட்டும் உங்கள் சேவை சமூக உணர்வில்

ஷீ-நிசி
05-04-2007, 07:32 AM
பத்திரிக்கைகள் இன்று கட்சி சாயம் பூசிக்கொண்டு வளர்ந்து நிற்கின்றன.. உண்மையான, நடுநிலையான பத்திரிக்கைகள் நிலைத்து நிற்பதில்லை.. நிலைத்து நிற்கும் பத்திரிக்கைகளில் உண்மைதன்மை இருப்பதில்லை..

கவிதை அருமை தோழி

மனோஜ்
05-04-2007, 07:55 AM
பத்திரிக்கை இன்று பத்து விற்கை மட்டுமெ பத்திகள் விரிக்கையில் பத்து வரிகள் மட்டும் உண்மை
அருமை கவிதை நன்றி கவியாறே

பரஞ்சோதி
05-04-2007, 08:00 AM
பத்திரிகைகளின் சீர்கேட்டை அருமையாக சொல்லியிருக்கீங்க.

ஆதவரின் ஆதங்கம் புலப்படுகிறது. இதை எல்லாம் எப்படி சரி செய்வது என்று தெரியலை. பொய்யும் புரட்டுமே இன்றைய பத்திரிகைகளின் மூலதனமாகி விட்டது.

ஓவியன்
05-04-2007, 08:08 AM
உண்மையைக் கூறும் பத்திரிகைகள் ஒடுக்கப் படும், உண்மையைக் கூறும் பத்திரிகையாளர்கள் உயிரெடுக்கப் படும் தேசத்திலிருந்து வந்தவனாகையால் சொல்கின்றேன் - அவர்களும் (பத்திரிகையாளர்கள்) என்ன செய்வது அவர்களுக்கும் உயிர் வாழ வேண்டிய தேவை உள்ளது. அவர்களும் உழைக்க வேண்டிய தேவை உள்ளது - சினிமாவின்றி பத்திரிகை வந்தால் வாங்குவார்களா நம் மக்கள், அல்லது வாசிக்கத் தான் செய்வார்களா?

எங்கு பத்திரிகையாளனுக்கு உயிர் மேல், தன் உடமை மேல் தகுந்த உத்திரவாதம் கிடைக்கிறதோ அங்கே உண்மையான பத்திரிகைகள் வெளிவரும்.

இளசு
06-04-2007, 07:13 AM
கவீ..

இதழியலும் ஒரு தொழில்..பிழைப்பாகி நாளாச்சு..
போட்டி, விளம்பரம், விற்பனையில் முதல் இடம்...


கல்லடுப்பு, மண்பானை, சம்பா அரிசி, வாழை இலை மாறி
மைக்ரோவேவ், ஹாட்பேக், பீட்சா, பேப்பர் நாப்கின்..

எதைக் கொடுத்தாலும் புசிக்க பசித்த வாசகர்களாய் நாம்!

பாராட்டுகள் இப்பார்வைக்கு!


-----------------------------------------------------

ஹைக்கூ போட்டியில் ஓவியா
நாளிதழின் வியாபார நோக்கத்தைச் சாடியதைக்காண-

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8393

kavitha
10-04-2007, 11:04 AM
நன்றி அண்ணா

kavitha
10-04-2007, 11:11 AM
கூவத்தின் சரக்குகளுக்கு
கூவிக் கூவி வியாபாரம்

எதற்க்கு சிவப்பு வண்ணம். எழுத்துப் பிழையா? அல்லது பத்திரிக்கைகளை பிழையா?
__________________
image.php?u=2100&type=sigpic&...ine=1171052542 (http://www.tamilmantram.com/vb/image.php?u=2100&type=sigpic&dateline=1171052542)

உன் கண்ணில் நீர் வடிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
கவிதை எழுதுவது எப்படி? (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8497) இது ஒரு அனுபவத்தின் குவியல்
ஆமாம் ஆதவா..எழுத்துப்பிழையைத்திருத்தியதற்கான அறிகுறி.. உங்கள் வாசிப்பிற்கு நன்றி

kavitha
10-04-2007, 11:24 AM
உண்மையைக் கூறும் பத்திரிகைகள் ஒடுக்கப் படும், உண்மையைக் கூறும் பத்திரிகையாளர்கள் உயிரெடுக்கப் படும் தேசத்திலிருந்து வந்தவனாகையால் சொல்கின்றேன் - அவர்களும் (பத்திரிகையாளர்கள்) என்ன செய்வது அவர்களுக்கும் உயிர் வாழ வேண்டிய தேவை உள்ளது. அவர்களும் உழைக்க வேண்டிய தேவை உள்ளது - சினிமாவின்றி பத்திரிகை வந்தால் வாங்குவார்களா நம் மக்கள், அல்லது வாசிக்கத் தான் செய்வார்களா?

எங்கு பத்திரிகையாளனுக்கு உயிர் மேல், தன் உடமை மேல் தகுந்த உத்திரவாதம் கிடைக்கிறதோ அங்கே உண்மையான பத்திரிகைகள் வெளிவரும்.
உண்மைதான். ஆனால் மானத்தை விற்று பிழைப்பது போல் இது இருக்கிறது.ஷீ-நிசி, பிரசன்னா, ஓவியா, பரம்ஸ் அண்ணா, பிரதீப், மனோஜ், மூர்த்தி மற்றும் பதித்த அனைவருக்கும் என் நன்றிகள்.

lolluvathiyar
22-05-2007, 11:30 AM
உன்மை, அருமை, வாழ்த்துகள் கவிதா
வார்த்தைகள் அருமை.
பத்திக்கையின் தவறல்ல
அடுத்தவன் வீட்டில் என்ன நடகிறது என்ற நம்
ஆவல் இருக்கும் வரை பத்திரிக்கை இந்த கதை தந்தாக வேண்டுமே.