PDA

View Full Version : கல கல கற்பனைக் கலாட்டாkavitha
05-08-2005, 10:49 AM
நிகழ்ச்சி நிரல் - பொறுப்பாளர்கள்

1. தமிழ்த் தாய் வாழ்த்து - ராக(ம்)வன் குழுவினர்
2. வரவேற்புரை - கவிதா
3. குழுவினர் அறிமுகம் - தலை
4. சென்னை - ஓர் அலசல் - சேரன்
5. தமிழகமும் அ(ச)ண்டை மாநிலங்களும் – பிரதீப்
6. ஆராய்ச்சி செய்யும் முன் கவனிக்கவேண்டியன- ஓர் விளக்க உரை -அறிஞர், உபகரண உதவி - பிரதீப்
7. பந்திக்கு முந்து - மன்மதன்
8. கலக்கு கண்ணா கலக்கு - பூ
9. மொய் வைக்காமல் எஸ்கேப் ஆவது எப்படி? - இளந்தமிழ்ச்செல்வன்
10. நீங்களும் விழிக்கலாமே - தேம்பாவின்ரெப்ரசென்டேட்டிவ்
11. நன்றியுரை - பாரதி
12. தேசிய கீதம் - மாமி&மகளிர் அணி

1. தமிழ்த் தாய் வாழ்த்து - இராகவன் குழுவினர்

இராகவன்:
“குமாரி...
குமாரி...
என் வார்த்தைக் கடல் வற்றிவிட்டதே!”

தலை: இன்னும் நீ பொண்ணு பார்க்க போன சிட்சுவேஷன்லேர்ந்து வரலையா! சரி விடு நாங்களே பாடிக்கிறோம்.
அனைவரும் சேர்ந்து பாடுகிறார்கள் “ நீராரும் கடலுடுத்த..”


2. வரவேற்புரை - கவிதா

அனைவரையும் வாருங்கள், வந்து வாருங்கள் என வரவேற்கிறேன்.
சென்னை எழும்பூர் நிலையம் முதல் செங்கல்பட்டு ரயில் நிலையம் வரை குப்பைகள் அதிகரித்து வருவதினால் நீளமான அங்கவஸ்திரம் அணிந்தவர்களை வருக வருக என வரவேற்கிறேன்.
பின்னறிவிப்பு: குர்தா போட்டவர்களுக்கு குலாப்ஜாமுன் கிடையாது

என்று கூற மன்மதன் முறைக்கிறார்.


3. குழுவினர் அறிமுகம் - தலை

அனைவரும் தலை நம்மைப்பற்றி என்ன சொல்லப்போகிறாரோ... என்று ஆவலுடன் காத்திருக்க,

தலை: (கர்ஜனையுடன் எழுந்து) அனைவரும் அவரவரே அறிமுகப்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
(தலை அவரைப்பற்றி மட்டும் சொல்லி அமருகிறார்... )


4. சென்னை -ஓர் அலசல் - சேரன்

டிரியோனா டிரியோ டிரியோ... டிரியோனா டிரியோ

"மெட்ராஸை சுத்திக்காட்டப்போறேன்.. மெரினாவில் சுண்டல் வாங்கப்போறேன்...
இது தானே நேரு ஸ்டேடியம் பாரேன்.. அதுக்கு எங்கப்பன்பேர் வைக்க சொல்லப்போறேன்."

ராகவன்: நாங்கல்லாம் புனைபெயரில்லாம வந்திருக்கோமே! எங்க பேரை வைக்க சொல்லமாட்டீங்களா?

5. தமிழகமும் அ(ச)ண்டை மாநிலங்களும் - பிரதீப்

வந்தால் காவேரி... வராவிட்டால் மழைதேவி!
மணந்தால் மாகாதேவி... இல்லையேல் மரணதேவி!
(சத்தமாக பேசியதில் மூச்சு வாங்குகிறது... டேபிளில் இருந்த பாலாற்றுத் தண்ணீரை அருந்தியவாறே அமருகிறார்)

6. ஆராய்ச்சி செய்யும் முன் கவனிக்கவேண்டியன - ஓர் விளக்க உரை - அறிஞர்
உபகரண உதவி - பிரதீப்

அறிஞர்: ஒரு பால்காரன் எத்தனை லிட்டர் பாலுக்கு எத்தனை லிட்டர் தண்ணீர் சேர்க்கவேண்டுமோ...
அதைவிடவும் கவனமாக நாம்..... (உதவிக்கு பிரதீப் கண்ணாடி குப்பி(/கோப்பை)களை எடுத்து கொடுக்க)
(மற்றவர்கள் காதைப்பொத்திக்கொள்கிறார்கள்)
(பெண்கள் மூக்கைப்பொத்திக்கொண்டு அங்கிருந்து ஜீட் விடுகிறார்கள்)
அறிஞர் விடாப்பிடியாகத் தொடர தாங்கமுடியாமல் அங்கேயிருந்த கண்ணாடிக்கோப்பைகள் தாமாகவே உடைகின்றன.
பிரதீப் தான் உடைத்து விட்டார் என்று மன்மதன் போட்டுக்கொடுக்க அறிஞர் தனது 'சுருக்குப்'பேச்சை அத்துடன் முடித்துக்கொள்கிறார்.

7. பந்திக்கு முந்து - மன்மதன்

பந்தியை கவனிக்கும் சாக்கில், சாக்கில் (பாலிதீன்) இருந்த அப்பளங்களையும், ஐஸ்கிரீம் குப்பிகளையும் அபேஸ் செய்தவாறே முன்வரிசையில் கர்ச்சீப் போட்டு வைக்க...
தலை, "இங்கே அதிகமாக கொட்டிக்காதே.... அப்புறம் அடுத்த ரவுண்டில் காலி பண்ண முடியாது"
அப்படியும், வாழைப்பழங்களை தனது குர்தா பாக்கெட்டுக்குள் ஒளித்து வைத்துக்கொள்கிறார்.

8. கலக்கு கண்ணா கலக்கு - பூ

அறிஞர் சொன்ன ·பார்முலா விதிப்படி பூ கலக்கியவாறே,
பூ: "கலக்கல்கள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்
பாடல்கள் பலவிதம்
எ ன் பா ட் டு ஒருவிதம்" என்று பாட

தலை: கண்ணா.... ஒன்னு சொல்றேன்.. நல்லா கேட்டுக்கோ....
"கோப்பை எடுத்தவனெல்லாம் கண்ணதாசன் ஆகமுடியாது..
அதிகமாக ஊத்திக்கிட்டா பேலன்ஸ் பண்ணி ஆட முடியாது... "
ஹா, ஹா, ஹா இது எப்படி இருக்கு!


9. மொய் வைக்காமல் எஸ்கேப் ஆவது எப்படி? - இளந்தமிழ்செல்வன்

இ.த.செ: இப்படித்தான் நான் ஒரு கல்யாணத்துக்கு போய் மொய்யே வைக்கல...

பிரதீப்: எப்டி?எப்டி?எப்டி?

இ.த.செ : எதுக்கு இத்தனை எப்படி?

பிரதீப்: இல்லப்பா... மொய் வைக்கலன்னா சாப்பிடவுடமாட்டானுங்களே...
அதான் எப்படீனு....தெரிஞ்சுக்கலாம்ன்னு....கேட்டேன்பா...
(வடிவேலு மாதிரி பம்மறார்)

இ.த.செ: தெரிஞ்சவங்க, உறவுக்காரங்க கல்யாணத்துக்கு போனாதானே நம்மள கேட்பானுங்க...
ஏதாவது ஒரு கல்யாணத்துக்குள்ள நுழைஞ்சா... எவன் கேட்பான்?

பிரதீப் : அட, இது தெரியாம நான் போன மாசம் நாலு கல்யாணத்துக்கு போய் மொய் வச்சுட்டேனேப்பா... :(

அறிஞர்: இ.த.செ நீங்க ரெண்டு செருப்பும் வேற வேற கலர்ல மாத்தி போட்டுட்டு வரும்போதே நான் யோசிச்சேன்


10. நீங்களும் விழிக்கலாமே - தேம்பாவின் ரெப்ரசென்டேட்டிவ்

ஒன்றும் பேசாமல் 'திரு திருவென விழித்து' செய்கையால் விளக்குகிறார்.


11. நன்றியுரை - பாரதி

யுனிகோடில் நன்றியுரை வழங்குகிறார் நமது பாரதி.
·புல்லான மக்களுக்கு அது கோடு கோடாகத்தெரிகிறது.
அதை லோக்கல் டமிழில் மொழி பெயர்க்கிறார் நமது பிரதீப்.

அதன் மொழிபெயர்ப்பு பின்வருமாறு:-

அனைவருக்கும் வணக்கம் - எல்லாத்துக்கும் வணக்கம்.
தைவானிலிருந்து வந்திருக்கும் அறிஞர் அவர்களுக்கும் - பக்கத்து நாட்லேருந்து வந்திருக்க அறிஞருக்கும்
பெங்களூரிலிருந்து வந்திருக்கும் ராகவன், பிரதீப்புக்கும் - பக்கத்து வூட்லேருந்து வந்திருக்க ராகவன்,பிரதீப்புக்கும்
தமிழகத்தின் வட தென் பகுதிகளில் வசித்தாலும் - நம்ம வூட்லேயே அங்கின இங்கின பொழப்ப ஓட்டினாலும்
குழுமத்தில் பங்கு கொண்ட நண்பர்களுக்கும் - சோதியில் ஐக்கியமான தோஸ்த்துகளுக்கும்
அனைவரையும் ஒன்று திரட்டிய தலை அவர்களுக்கும் - எல்லாத்தையும் ஒன்னா இட்டாந்திருக்கும் நம்ம நைனாக்கும்
மன்றம் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் - மன்றம் வழியா தேங்க்ஸ்பா!


12. தேசிய கீதம் - மாமி&மகளிர் அணி

"முண முண முண முண...." இங்கே ஆரம்பிக்கும் தேசியகீதம் வீடு வரை அனைவரது வீட்டிலும் தொடர்கிறது.

(நமக்கு 'மத்தள சத்தத்தின் எக்கோ' மட்டும் கேட்கிறது )

சுபம்!

விடு ஜீட் - கவிதா

karikaalan
05-08-2005, 10:55 AM
கவிதாஜி

நீங்க நாளைக்குத்தான் ரன்னிங் கமெண்டரி கொடுக்கப் போறீங்கன்னாங்க.... அதுக்குள்ளயே தயார் பண்ணிட்டீங்களா!! நல்லாவே இருக்குது. "கலந்து"க்கிட்டப்புறமும் ஒரு தடவை எழுதுங்க.... புரியுதுல்ல...

===கரிகாலன்

kavitha
05-08-2005, 11:08 AM
கவிதாஜி

நீங்க நாளைக்குத்தான் ரன்னிங் கமெண்டரி கொடுக்கப் போறீங்கன்னாங்க.... அதுக்குள்ளயே தயார் பண்ணிட்டீங்களா!! நல்லாவே இருக்குது. "கலந்து"க்கிட்டப்புறமும் ஒரு தடவை எழுதுங்க.... புரியுதுல்ல...

===கரிகாலன்

நான் செல்வது இன்னும் உறுதி ஆகவில்லை அண்ணா. அப்படியே சென்றாலும் என்னால் முழு நேரம் இருக்கமுடியாது. இராகவன், சிறப்புப் பதிவு தருவார் என நம்புகிறேன்.

Mano.G.
05-08-2005, 11:21 AM
இத தான் நானும் எதிர்பர்த்தேன்
தங்கையே உன் பாணியில் விமர்சனத்தை எதிர்பார்க்கிரேன்


மனோ.ஜி

mania
05-08-2005, 11:22 AM
நாளைய சந்திப்பு எப்பிடி போகுமோ தெரியாது...:rolleyes: .உன்னுடைய இந்த கற்பனை பதிவு செம கலக்கல்ஸ் கவி.....:D .(எனக்கு தனிமடலில் அனுப்பியிருந்தால் நான் அதை 7ம் தேதி போட்டு பதித்திருப்பேன் )....:rolleyes: அப்பிடியே நைசா ஏதோ சாக்கு போக்கு காட்டுற மாதிரி தெரியுதே.....????:angry: உனக்காக நான் .......:angry: வேண்டாம் அப்பறம் சொல்றேன்....பாராட்டுக்கள் கவி...
அன்புடன்
மணியா...:D

poo
05-08-2005, 12:47 PM
தலை நானும்.. டவுட்டுதேன்ன்ன்ன்ன்....

சுவேதா
05-08-2005, 01:36 PM
சூப்பர் ஆமா பிரதீப் அண்ணா என்ன மொய் எழுதாம போய் சாப்பிடப் போகின்றிர்களா?

gragavan
05-08-2005, 05:52 PM
அடடா! கவிதாவின் கமெண்டரி பிரமாதம். பிரமாதம். நாளைக்கு இப்படித்தான் இருக்கப் போகுதோ!!!!!!!!!!!!!!!!!! கூமாரீஈஈஈஈஈஈஈஈஈஈஈ ச்சீச்சி குமாரி.........

pradeepkt
08-08-2005, 06:39 AM
அருமை அருமை...
நல்ல வேளை அங்க வந்து கலந்துக்கறதுக்கு முன்னாடியே எழுதிட்டீங்க...
அப்புறமா எழுதியிருந்தீங்கன்னா... பாவம் மக்களுக்குப் புரிந்திருக்காது...

pradeepkt
08-08-2005, 06:41 AM
சூப்பர் ஆமா பிரதீப் அண்ணா என்ன மொய் எழுதாம போய் சாப்பிடப் போகின்றிர்களா?
பொய் எழுதாமல் சொல்கிறேன்... மொய் எழுதாமல் சாப்பிடுவது என் குறிக்கோள் அல்ல... நட்பு கெட்டுறக் கூடாதேன்னுதான்.

gragavan
08-08-2005, 06:54 AM
பொய்யும் மெய்யும்
மொய்யைப் பற்றியா?
எல்லாரும் மொய்த்த கூட்டத்திலும்
மொய் வைத்தவர் பிரதீப்!

Mathu
08-08-2005, 09:55 AM
ஆஹா அசத்தல் கவி...
இன்னும் ஒன்றை எதிர்பார்க்கிறோம். அதில் தலையின் தலை தவழ்ந்ததை
கொஞ்சம் விரிவாக..... :p ;)

mania
08-08-2005, 10:01 AM
ஆஹா அசத்தல் கவி...
இன்னும் ஒன்றை எதிர்பார்க்கிறோம். அதில் தலையின் தலை தவழ்ந்ததை
கொஞ்சம் விரிவாக..... :p ;)

:D ஹா.......ஹா......ஹா......உனக்கு இந்த முன் ஜாக்கிறதை முத்தண்ணாவை தெரியுமா....!!!????:rolleyes: :rolleyes:
அன்புடன்
மணியா...:D :D

Mathu
08-08-2005, 10:49 AM
:D ஹா.......ஹா......ஹா......உனக்கு இந்த முன் ஜாக்கிறதை முத்தண்ணாவை தெரியுமா....!!!????:rolleyes: :rolleyes:
அன்புடன்
மணியா...:D :D

தெரியுமே தலை..... 2 ரவுண்டு வரை முன்ஜாக்கிரதை முத்தண்ணா :eek:
3க்கு மேல முத்தவழ் அண்ணா..... ஹி ஹி ஹி..... :D

pradeepkt
08-08-2005, 10:57 AM
அவர் எங்க முத்தமிழ் அண்ணா!!!
அவர் ஏன் தவழணும்?

Mathu
08-08-2005, 11:44 AM
அவர் எங்க முத்தமிழ் அண்ணா!!!
அவர் ஏன் தவழணும்?

அது சரி தோள் குடுக்க நீங்க இருக்கும் போது அவர் ஏன் தவழணும் :D :p :rolleyes:

இளந்தமிழ்ச்செல்வன்
23-08-2005, 06:08 PM
கவிதா, நீங்க சொன்ன பிறகு இன்னைக்குத்தான் இதை பார்க்கிறேன். நன்றாகவே எழுதி இருக்கீங்க.

ஆனால் அதில் என்னை பாதித்தது, உண்மையிலேயே என்னால் கலந்துகொள்ள முடியாமல் போனது தான். அடுத்தமுறை யார் எழுதினாலும் நான் கலந்து கொள்வதாகவே எழுதுங்கள் நண்பர்களே. என்னால் இன்னமும் அதை ஜீரணிக்க முடியவில்லை. சரி சரி நெம்ப பீல் பண்ணாதிங்க, அது சரி கவிதா அது எப்படி குடுகுடுப்பைகாரன்(ரி) போல முதல் நாளே போட்டு தாக்கிட்டீங்க?

பிரதீப் அப்புறம் சவகாசமாய் மொய் வைக்காமல் எஸ்கேப் ஆவது பற்றி சொல்லித்தாரேன் என்ன?

kavitha
02-09-2005, 09:40 AM
அது சரி கவிதா அது எப்படி குடுகுடுப்பைகாரன்(ரி) போல முதல் நாளே போட்டு தாக்கிட்டீங்க?
அடுத்த நாள் நடப்பது கற்பனையாக இருக்க முடியாதே! நிஜத்தை அல்லவா சொல்லவேண்டி இருக்கும். அதற்குமுன் கொடுத்தால் சூடாக இருக்குமென்றெண்ணியே தந்தேன் இ.த.செ.

நீங்களும், பூ வும் வர இயலாமற்போனது வருத்தத்தை அளித்த போதிலும் பிரியன் வந்து அதைச் சமன் செய்து விட்டார். அடுத்த முறை தவற விட்டுவிடாதீர்கள்.

kavitha
02-09-2005, 09:45 AM
Ţ׸ ̧ ç . ç Ǣ ӾĢ Ȣ.


உனக்காக நான் ....... வேண்டாம் அப்பறம் சொல்றேன்....பாராட்டுக்கள் கவி...
அன்புடன்
மணியா

எதையோ சொல்ல வந்து பிறகு மாற்றிவிட்டார்போல தெரிகிறதே.. இப்பொழுதாவது சொல்லுங்களேன்.

Nanban
02-09-2005, 04:55 PM
ஒரு சந்திப்பு - எத்தனை விதமான பாதிப்புகள்? ஒருபுறம் பிரியன், மறுபக்கம் பிரதீப், அப்புறம் இப்பொழுது தான் பார்க்கிறேன் கவிதாவின் இந்தப் பதிவை. நான் ஒரு ஆலோசனை சொல்லுகிறேன்.

அந்த சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் - ஒரே பதிவில் தங்கள் மனநிலை எவ்வாறிருந்தது என்றும், ஒருவரைப் பற்றி மற்றவர் கொண்டிருந்த எண்ணங்களும் பின் நேரில் சந்தித்த பொழுது எத்தனை தூரம் ஒத்துப் போனது அல்லது மாறிப் போனது, மற்றும் ஒருவர் மீதான மற்றவர்களின் எண்ணங்கள் இவற்றைப் பற்றியெல்லாம் எழுதினால் சிறப்பாக இருக்கும்.

எதற்காகச் சொல்கிறேனென்றால் - ஐவர் அணிக்கு வெளியில் அதிகம் புழங்காத மணியா அவர்களின் நகைச்சுவையை மற்ற இடங்களிலும் வாசிக்க முடியுமே!!! அதற்குத் தான்.

mania
03-09-2005, 05:20 AM
Ţ׸ ̧ ç . ç Ǣ ӾĢ Ȣ.எதையோ சொல்ல வந்து பிறகு மாற்றிவிட்டார்போல தெரிகிறதே.. இப்பொழுதாவது சொல்லுங்களேன்.

:) அது ஒன்னும் பெரிய மேட்டரில்லை கவி. நான் சொன்னது 6ம் தேதிக்கு முன்னாலே.....உன்னை எப்படியாவது வரவழைக்கவேண்டுமென்று ஒரு மாதிரியா மாமியை சம்மதிக்க வைத்து....சேரனையும் அவர் மனைவியை கூட்டிக்கொண்டு வருமாறு ஏற்பாடு செய்திருந்தேன்.....அதான் ஒரு வேளை நீ வரவில்லையென்றால்......:rolleyes: ..அதான் அப்புறம் சொல்கிறேன் என்றேன்....
அன்புடன்
மணியா...:)

mania
03-09-2005, 05:28 AM
ஒரு சந்திப்பு - எத்தனை விதமான பாதிப்புகள்? ஒருபுறம் பிரியன், மறுபக்கம் பிரதீப், அப்புறம் இப்பொழுது தான் பார்க்கிறேன் கவிதாவின் இந்தப் பதிவை. நான் ஒரு ஆலோசனை சொல்லுகிறேன்.

அந்த சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் - ஒரே பதிவில் தங்கள் மனநிலை எவ்வாறிருந்தது என்றும், ஒருவரைப் பற்றி மற்றவர் கொண்டிருந்த எண்ணங்களும் பின் நேரில் சந்தித்த பொழுது எத்தனை தூரம் ஒத்துப் போனது அல்லது மாறிப் போனது, மற்றும் ஒருவர் மீதான மற்றவர்களின் எண்ணங்கள் இவற்றைப் பற்றியெல்லாம் எழுதினால் சிறப்பாக இருக்கும்.

எதற்காகச் சொல்கிறேனென்றால் - ஐவர் அணிக்கு வெளியில் அதிகம் புழங்காத மணியா அவர்களின் நகைச்சுவையை மற்ற இடங்களிலும் வாசிக்க முடியுமே!!! அதற்குத் தான்.

:) நண்பன்.....உங்கள் பதிவுகள் அவ்வளவையும் வியப்புடன் படிப்பவன் நான்...... :) மற்ற பக்கங்களிலே நீங்கள் அனைவரும் சீரியசா விவாதித்துக்கொண்டிருக்கும்போது நான் வந்து காமெடியாயிடக்கூடாதே என்று தான் ஒதுங்கியிருக்கிறேன்......:) மற்றபடி நான் உன் தீவிர ரசிகன்.....எங்கே ஒரு குறுக்கெழுத்து போட்டி கொடுங்கள் பார்க்கலாம்.....?:D
உங்களுடைய கருத்தை நானும் வரவேற்கிறேன். ஆனால் அன்று கூடியவர்களில் அனைவரையும் (பிரியனை தவிர ) நான் முன்னாடியே சந்தித்து விட்டிருந்தேன்.....மற்றவர்களின் கருத்தை நான் இங்கே எதிர்பார்க்கிறேன்...:)
அன்புடன்
மணியா