PDA

View Full Version : நாளை எனக்கு இல்லையேல்



Mano.G.
05-08-2005, 12:56 AM
நாளை எனக்கு வராவிட்டால்.




என்னை மன்னித்து விடுங்கள்
என்னையறியாமல் நான் ஏதும் கூறியிருந்தால்,


என்னை மன்னித்து விடுங்கள்
நான் செய்த செய்யாத காரியங்களுக்கு,


என்னை மன்னித்து விடுங்கள்
நான் உங்களை அலட்சியபடுத்தியதற்கு,


என்னை மன்னித்து விடுங்கள்
நான் செய்த காரியங்கள்
உங்களை சங்கடபடுத்தியிருந்தால்,


என்னை மன்னித்து விடுங்கள்
நான் உங்களை விட மேலானவன் போல் நடந்திருந்தால்,


என்னை மன்னித்து விடுங்கள்
நான் செய்த எல்லா தவறுகளுக்கும்,


நான் இப்படி கேட்பது ஏன் எனில் ?
நாளை எனக்கு வராவிட்டால்,
உங்களின் அரவணைப்போ அல்லது,
போய் வருகிரேன் என்று
சொல்லி
செல்லவோ வாய்ப்பு கிடைக்காதே,!!,
மன்னித்து விடுங்கள்.




நாளை எனக்கு வராவிட்டால்.





நான் படித்த கவிதை உங்களுக்காக. *மனோ.ஜி*

kavitha
05-08-2005, 03:40 AM
அண்ணா கவிதை மிக மிக அருமையாய் இருக்கிறது. ஆனால் இங்கே நமது சொந்த சரக்கிற்கு மட்டும் தான் இடம்! எனவே தயவுசெய்து இலக்கியப்பகுதிக்கு மாற்ற சொல்லுங்கள்.
அங்கே இன்னும் விரிவாக அலசுவோம்.

மன்மதன்
21-08-2005, 06:09 AM
மாற்றிவிட்டேன் கவி.. இனி அலசுங்கள்..

கவிதை பகிர்ந்து கொண்டதற்கு மனோ.ஜி அவர்களுக்கு நன்றி..

அன்புடன்
மன்மதன்.

suma
21-08-2005, 03:49 PM
நல்ல கவிதை எனக்கும் பிடித்த கவிதை. அனைவருக்கும் பொறுந்தும் கவிதை.

kavitha
22-08-2005, 06:38 AM
நான் இப்படி கேட்பது ஏன் எனில் ?
நாளை எனக்கு வராவிட்டால்,
உங்களின் அரவணைப்போ அல்லது,
போய் வருகிரேன் என்று
சொல்லி
செல்லவோ வாய்ப்பு கிடைக்காதே,!!,
மன்னித்து விடுங்கள்.


நெஞ்சை உருக்கிய வார்த்தைகள் அண்ணா இவை. எப்பேர்ப்பட்ட கொடூரன் ஆனாலும் விதி முடியும் முன்பு தான் செய்த நல்வினைத் தீவினைகளை ஆராய்ந்து அதற்காக மன்றாடுவார்களாம். நாளை எனக்குண்டு என்ற நம்பிக்கையும் இறுமாப்பும் தானே இன்றைய மனிதர்களை மதிக்கத் தவறி விடுகிறது!

நாளை என்பது வராது போனால்...? யோசிக்கவேண்டிய கேள்வி. "நன்றே செய்.. அதுவும் இன்றே செய்" என்பது நினைவுக்கு வருகிறது.

நாளை என்பது இல்லாது போனால்
நன்மைகள் என்பதை செய்யாது போனால்
தீமைகள் என்பது செல்லாது போனால்
போனாலும் போகட்டும் போமே!

Mano.G.
24-01-2006, 05:36 AM
இந்த கவிதை ஆங்கிலத்தில்
படித்து உங்களுக்கா தமிழாக்கம்
செய்தது.


மனோ.ஜி

இளசு
24-01-2006, 06:29 AM
நன்றி மனோஜி.

நன்றி, மன்னிப்பு, அன்புகாட்டல், கடமை இவற்றில் அன்றன்றைய பங்கை அன்றன்றே செய்துவிடுவது நல்லது.


பாக்கி வைக்க உகந்தவை அல்ல இவை.

கொடுக்கும் வாய்ப்பு வாராமலே போய்விடலாம்.

aren
25-01-2006, 03:05 AM
கவிதை நன்றாக இருக்கிறது மனோஜி. நாளை நாம் இருப்போம் என்ற இருமாப்பில்தானே பலர் பலவிதமான காரியங்களைச் செய்கிறார்கள். நாளை நமக்கில்லை என்று தெரிந்துகொண்டால் எல்லோரும் நல்லதே நினைப்பார்கள், நல்லதே செய்வார்கள்.

அறிஞர்
03-02-2006, 08:47 PM
நல்ல சிந்தனை... நல்ல மொழிபெயர்ப்பு ... நன்றி அண்ணா....

நம் வாழ்க்கை என்ன என்று தெளிவாக தெரிந்தால் எல்லாரும் நல்லதே செய்வர்.

தாமரை
23-03-2006, 01:25 PM
தன் வாழ்வில் நல்லதை மட்டுமே நினைத்து வாழும் நெஞ்சில் தான் இம்மாதியான கவிதைகள் / எண்ணங்கல் தோன்றும்..

யேசு கூட என் பிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள்.. இவர்களை மன்னிப்பீராக" எனத் தான் இறைஞ்சினார்.. தன்னை மன்னித்துவிடக் கோறும் மனித உள்ளம் அரிதினும் அரிது.. நன்றி மனோஜி.

Mano.G.
20-03-2007, 04:03 AM
இன்று
இந்த கவிதையை மறுபடியும் கண்ணில் பட்டது
மறுபடியும் எண்ணி பார்க்கிரேன்.
மனம் கனக்கிறது
நாளை எனக்கு இல்லாவிட்டால்.


மனோ.ஜி

மனோஜ்
20-03-2007, 08:24 AM
அருமையான கவிதை வரிகள் மனிதனை மனிதனாய் ஆக்ககும் வரிகள் இத்தனை கேல்விகளும் ஒருவன் மனதில் வந்து விட்டால் உன்மையில் அவன் சிறந்தவன் தான்
நன்றி மனோஜி அண்ணா அருமையான கவிதையை தமிழாக்கம்
செய்தமைக்கு

Mano.G.
03-02-2008, 04:50 AM
நாளை எனக்கு இருக்குமோ?
இல்லை என்றால் என்னை மன்னித்துவிடுங்கள்

Mano.G.
24-10-2012, 08:43 AM
இந்த பதிப்பை மீண்டும் தேடி படித்தேன்
ஏனோ தெரியவில்லை

நாளை எனக்கு இல்லையேல்

M.Jagadeesan
24-10-2012, 12:06 PM
தங்களுடைய எண்ணத்தில் ஒரு விரக்தி தெரிகிறது. நாளை இருப்போம் என்ற எண்ணத்தில்தான் இந்த உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது. " "இன்று புதிதாய்ப் பிறந்தோம் " என்ற பாரதியின் வரிகளை நினைவில் கொள்ளுங்கள். புதிய உற்சாகம் பிறக்கும்; செயலில் உத்வேகம் தோன்றும்.

கலைவேந்தன்
24-10-2012, 12:40 PM
நண்பரே..

இரண்டு முறை அட்டாக் வந்து பிழைத்திருக்கும் நான் இனி மூன்றாவது அட்டாக்குக்குப் பிழைப்பதே கடினம் என்று டாக்டர்கள் கூறி இருக்கும் நிலையிலும் எத்தனை உற்சாகமாக நான் பங்கெடுத்துக்கொண்டு நம்பிக்கையுடன் வாழ்கிறேன் என்பதை நீங்கள் அறிந்தால் இந்த விரக்தி உங்களுக்கு வந்திராது. எத்தனையோ மலையளவுச் சோகங்களை மனதில் புதைத்துக்கொண்டு இருக்கும் நாளில் அனைவரையும் மகிழ்வித்து வாழவேண்டுமென உறுதி எடுத்து வளைய வரும் என்னைப்பார்த்து நம்பிக்கையைக் கற்றுக்கொள்ள உங்களை வேண்டிக்கொள்கிறேன்.

இது சுயபிரதாபமோ சுயபுலம்பலோ இல்லை. ஒருவித அன்பான அறிவுறுத்தல் தான் என எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

கலை.

கும்பகோணத்துப்பிள்ளை
24-10-2012, 02:06 PM
நேற்றைய பதிவை தேடிபார்த்து
தெரிந்து கொண்டார்
நேற்றைய மறுநாளில் வாழ்திருந்தோமென்று!
இன்று இவர் மறுபடியும் பதிந்திருக்கிறார்
நாளைய தேடலுக்கான இன்றய பதிவை!

நாளை என்பதை நான் பார்த்ததில்லை!
நேற்று வாழ்ந்ததும் திரும்பகிடைத்ததில்லை!
இன்றுகூட எனக்காக வாழவில்லை!
என்றும் இருப்போமென்றே இருமாந்ததுமில்லை!
நன்று! நன்று! நடந்தவையெல்லாம்!
நன்றே! நன்றே! நடக்கபோவதெல்லாம்!

நம்பிக்கையோடு இருப்போம்
நட்போடுருப்போம் என்னென்றும்!

நாஞ்சில் த.க.ஜெய்
25-10-2012, 05:08 PM
எங்களுக்கு தங்கள் அனுபங்கள் மூலம் வழிகாட்ட வேண்டிய நீங்களே விசனபட்டா எப்படி ஐயா..