PDA

View Full Version : ஆகஸ்ட் 4, வியாழக்கிழமை மலேசிய செய்திகள்



Mano.G.
04-08-2005, 10:27 AM
மசீச தலைவர் தேர்தலில் வெளிச் சக்திளின் உதவிகள் இல்லை
மசீச தேசியத் தலைவர் பதவிக்கு அதன் நடப்புத் தலைவர் டத்தேஸ்ரீ ஒங் கா திங்கை எதிர்த்துப் போட்டியிடும் தமக்கு 'வெளிச் சக்திளின்' உதவி கிடைத்து வருகின்றது என்று கூறப்படுவதை சுவா ஜுய் மெங் நேற்று மறுத்தார்.
ஆகஸ்டு 20-ஆம் திகதி வாக்களிக்க இருக்கும் பேராளர்கள், தடுமாறிவிடக்கூடாது உன்று அவர் கூறினார். சீன சமூதாயத்தின் தேவைகளை அடிப்படையாக வைத்து பேராளர்கள் சொந்தமாக தங்களது முடிவை எடுக்க வேண்டும்.
கட்சியை பிளவுப்படுத்துவதற்காக தேசியத் தலைவர் பதவிக்கு தாம் போட்டியிடவில்லை என்றும் தங்களது தலைவரை தேர்ந்து எடுப்பதற்கு ஜனநாயக உரிமையை பயன்படுத்துவதற்கு பேராளர்களுக்கு வாய்ப்பு அளிப்பதற்காகவே தாம் இம்முடிவை எடுத்துள்ளதாகவும் டத்தோ சுவா செய்தியாளர்களிடம் கூறினார்.
______________________________________________________________________
மாணவர்கள் பேச்சுத்திறமையை அதிகரித்துக்கொள்ள வேண்டும்
மாணவர்கள் பொது உரையாற்றியும், பேசியும் தங்களின் திறமைகளை அதிகரித்துக்கொள்ள வேண்டும் என சுற்றுலாத்துறை மற்றும் நகர்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் Datuk Seri Wong Soon Koh தெரிவித்தார்.
இதுனால் வரையில் மாணவர்கள் அதிகம் பேசக்கூடாது என அறிவுறுத்தப்பட்டதாகவும், இதனால் அவர்கள் பேச்சுத்திறமையில் பிந்தங்கியுள்ளதாக ஆய்வுகள் விளக்குகின்றன. மேலும், மேற்கத்திய நாட்டு மாணவர்கள் பேச்சுத்திறமையில் சிறப்பாக விழங்குவதாக Wong Soon Koh சுட்டிக்காட்டினார்.

மாணவர்கள் மற்றவர்களிடம் இலகுவாக உறையாற்றும் பொழுது, அவர்களிடையே தன்னம்பிக்கை எற்படுவதோடு, பய உணர்வையும் அகற்றலாம்.
மலேசிய-தாய்லாந்து எல்லையில் இராணுவ பாதுகாப்பு
மலேசிய-தாய்லாந்து எல்லையில் இராணுவ பாதுகாப்பு படை அமைக்கப்படும் என இராணுவ தரைப்படை தளத்தின் தளபதி Lt.Jen Datuk Masood Zainal Abidin தெரிவித்தார். அத்துமீறுதல் மற்றும் கடத்தல் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு அப்படை அங்கு அமைக்கப்படவுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
இதன் மூலம், Perlis-லிருந்து Kelantan-வரை எல்லை பாதுகாப்பு பலப்படுத்தப்படும் எனவும் இராணுவ பாதுகாப்பு படை அமைக்கப்படுவது தொடர்பாக முழு அறிக்கை விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
தற்போது,தென் தாய்லாந்தில் நடக்கும் கலவரம் தொடர்பாக இதுவரை மலேசியாவிடமிருந்து தாய்லாந்து எவ்வித உதவியையும் நாடவில்லை எனவும் அவர் மேலும் கூறினார்.


மீனவத்துறையைச் சார்ந்த திட்டங்களை குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்
மீனவத்துறையைச் சார்ந்த அதிகமான திட்டங்களை, அத்துறையில் ஈடுபடாதவர்களுக்கு அரசாங்கம் வழங்கிவருவதை தொடர்ந்து, தெற்கு Kuala Terengganu கழகம் அதிருப்தி தெரிவித்துள்ளது. அரசாங்கம் இவ்வாறு செய்வதால், மீனவ கழகங்கள் மீனவர்களுக்கு உதவுவதில் சிரமத்தை எதிர்நோக்குவதாக அதன் நிர்வாகி Hasan Ismail தெரிவித்தார்.
அரசாங்க திட்டங்களை பெறுபவர்கள் பலர், மீனவத்துறையில் முன்னனுபவம் பெற்றிருக்கவில்லை எனவும், இதனால் அதிக திட்டங்கள் நிறைவடையாமல் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதனிடையே, இவ்விவகாரம் குறித்து மாநில அல்லது மத்திய அரசு தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் கருத்து தெரிவித்தார்.



பேருந்து கால்வாயில் கவிழ்ந்தது
கிளந்தான் Jeli, Batu Malintang 16-வது கிலோமீட்டரில் பேருந்து ஒன்று கால்வாயில் கவிழ்ந்ததில் ஒருவர் மரணமடைந்தார், மேலும் அப்பேருந்தில் பயணம் செய்த ஐந்து பேர் காயமுற்றனர்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் நண்பகல் 2 மணி அளவில், அப்பேருந்து ஈப்போவில் இருந்து கோத்தாபாரு சென்றுகொண்டிருக்கும் வேளையில் ஏற்பட்டதாக Jeli, பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு அதிகாரி Che Mohd Fauzi Che Omar தெரிவித்தார்.
மரணமுற்றவர் 26 வயது Norkamari @ Shukri Mohamad என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதனிடையே, அப்பேருந்து ஓட்டுனர் மேல் விசாரனைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.



Tan Sri Mohd Isa-வின் மேல் முறையீட்டிற்கு இன்னும் தீர்வு காணவில்லை
Tan Sri Mohd Isa Abdul Samad-ட்டிற்கு தற்கால பதவி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான மேல் முறையீடு விவகாரம் இன்னும் முடிவு பெறவில்லை என அம்னோ தலைமை நிர்வாகி Tan Sri Mohd Zuki Kamaluddin தெரிவித்தார்.
பண அரசியலில் ஈடுப்பட்டதால் அவருக்கு தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டது. அதன் தொடர்பில் நிறைய விவகாரங்கள் இன்னும் தீர்வு காணாமல் இருப்பதால் மேல் முறையீடு தொடர்பில் இன்னும் எந்தவொரு முடிவும் தெரியவில்லை என அவர் கூறினார்.



புயல் காற்றினால் வீடுகள் சேதம்
Port Dickson-னிலுள்ள Kampung Teluk Kemang மற்றும் Bukit Pelanduk ஆகிய பகுதிகளிலுள்ள பல வீடுகள் புயல் காற்றினால் சேதமடைந்துள்ளன. சுமார் 30 நிமிடங்களுக்கு வீசிய இப்புயல் காற்றினால் அப்பகுதியில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
நேற்று காலை 6.50 மணியளவில் ஏற்பட்ட இந்த புயல் காற்றினால் அப்பகுதியில் வசித்து வந்த சிறுமி ஒருவருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மாநில சட்டமன்ற உறுப்பினர் Mohd Faizal Ramli தெரிவித்தார்.
இந்த புயல் காற்றினால் அப்பகுதியில் சுமார் 34,000 ரிங்கிட் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இப்புயல் காற்றில் மரங்கள் சாலைகளில் விழுந்ததால் அங்கு சில மணி நேரங்களுக்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
_____________________________________________________________________
வெள்ளத்தில் சிக்கிய கார்களில் இருந்த மாணவர்கள் உட்பட 21 பேர் பலி
மகாராஷ்டிராவில் பெய்து வரும் பெரும் மழையால், மும்பை உட்பட பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளன. சாலைகளில் இடுப்பளவு வெள்ளம் ஓடுகிறது.
வாகனங்கள் சாலையில் ஸ்தம்பித்து நிற்கின்றன. மழை, வெள்ளத்தால் மாநிலம் முழுவதும் ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். நேற்று முன்தினம் வெள்ளத்தில் சிக்கிய கார்கள், 21 பேரின் உயிர்களை குடித்துள்ளன.
வெள்ளத்தின் வேகம் காரணமாக, கார் கதவுகளின் பூட்டுகள் சேதமடைந்து திறக்க முடியாமல் போய் இருக்கலாம் என தெரிய வந்துள்ளது.வெள்ளத்தில் சிக்கி கார்களுக்குள் இருந்த மாணவர்கள் உட்பட 21 பேர் பலியாகிவிட்டனர்.
_____________________________________________________________________
சூடான் பெரும் கலவரத்தில் 36 பேர் பலி
சூடான் அதிபர் ஜான் கராங் மறைவை அடுத்து நாட்டில் பெரும் கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் 36 பேர் வரையில் பலியாகி உள்ளனர். ஊரடங்கு உத்தரவு மூலம் நாட்டில் அமைதியை நிலைநிறுத்தும் பணியில் பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
கராங்குக்குப் பதில் சல்வா கீர் என்பவர் துணை அதிபராகப் பதவியேற்க உள்ளார். அதன்மூலம் உள்நாட்டு இனப் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஆப்ரிக்காவின் பெரிய நாடான சூடானில் கடந்த 20 ஆண்டுக்கும் மேலாக உள்நாட்டுக் கலவரம் நடக்கிறது. சூடான்
வடக்குப் பகுதியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையோர் வசிக்கின்றனர்.
சூடான் தென்பகுதியில் கிறிஸ்தவர்கள் உட்பட பல்வேறு பிரிவினர் வசிக்கின்றனர். இரு தரப்பினருக்கும் கோஷ்டி மோதல் உள்ளது. இந்நிலையில், சூடானில் இஸ்லாமிய சட்டத் திட்டத்தை முழுமையாக அமல்படுத்த அரசு முயற்சி மேற்கொண்டது.
இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது.கடந்த ஜூலை 9ம் தேதி சூடானின் முதல் துணை அதிபராக ஜான்கராங் பொறுப்பேற்றார். பதவியேற்று ஒரு மாதத்துக்குள் ஹெலிகாப்டர் விபத்தில் ஜான் கராங் காலமானதால், சூடானில் பெரும் கலவரம் வெடித்தது.
இதனால், அமைதி ஒப்பந்தத்தின் நிலை என்னவாகுமோ என்று ஐ.நா., அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகள் கவலை அடைந்துள்ளன. இதற்கிடையில், சூடான் கலவரத்தை அடக்க பாதுகாப்புப் படையினர் கூடுதலாகக் குவிக்கப்பட்டனர். காலை முதல் மாலை வரை ஊரடங்கு
உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கவச வாகனங்களில் தெரு தெருவாகப் பாதுகாப்புப் படையினர் சுற்றி வருகின்றனர்.

'டிஸ்கவரி' வெப்ப தகடுகளில் சேதம் : விண்வெளி வீரர்கள் பழுது பார்க்க முயற்சி

'டிஸ்கவரி'யின் வெப்ப பாதுகாப்புத் தகடுகளில் ஏற்பட்ட கோளாறை சீர் செய்ய தற்பொழுது முயற்சிக்கப்படுகிறது. இதற்காக, 'டிஸ்கவரி' வீரர்கள் மூன்றாவது முறையாக விண்வெளியில் நடக்க உள்ளனர்.
'டிஸ்கவரி' விண்வெளி ஓடம் செலுத்தப்பட்ட போது, அதிலிருந்து இரண்டு பாகங்கள் கழன்று விழுந்தன. 'டிஸ்கவரி'யின் இரண்டு வெப்ப பாதுகாப்புத் தகடுகளை அவைச் சேதப்படுத்தியுள்ளன.
இதனால், 'டிஸ்கவரி' பூமிக்குத் திரும்பும் போது வெடித்துச் சிதறும் அபாயம் உள்ளது. 'டிஸ்கவரி'யில் ஏழு வீரர்கள் சென்றுள்ளனர். விண்வெளி ஓடத்தில் ஏற்படும் சேதத்தை, விண்வெளியிலேயே சீர் செய்ய முயற்சிப்பது இதுவே முதல்முறை. இதில், வெற்றி ஏற்படுமா என்பது உறுதியாக கூறப்படவில்லை.

இஸ்லாமிய தலைவர்களுக்குப் பிரிட்டன் அரசு வேண்டுகோள்

பிரிட்டனில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் மத நல்லிணக்கத்தை மேம்படுத்த ஒத்துழைப்பு கொடுங்கள். தீவிரவாதிகளைப் பிடிக்க உதவி செய்யுங்கள் என்று இஸ்லாமியத் தலைவர்களுக்குப் பிரிட்டன் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் கடந்த மாதம் 8 மற்றும் 21ம் தேதிகளில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாகத் தீவிரவாதிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பலரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. லண்டன் குண்டு வெடிப்பை அடுத்து, முஸ்லிம்கள், சீக்கியர்கள் மீதான தாக்குதல்களும் ஆங்காங்கே நடந்தன. மசூதி, குருத்வாரா போன்ற வழிபாட்டுத் தளங்களிலும் தாக்குதல் நடந்தது. பிரிட்டன் முழுக்க எட்டு இடங்களில் இஸ்லாமியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பிரிட்டனில் ஏற்பட்டுள்ள இனப் பிரச்னைக்குத் தீர்வு காண்பது குறித்து அந்தக் கூட்டங்களில் விவாதிக்கப்படும். மேலும், பிரிட்டனில் வேரூன்றி உள்ள தீவிரவாதிகளைப் பிடிக்க இஸ்லாமியத் தலைவர்கள் உதவ வேண்டும். அதன்மூலம் பிரிட்டனில் மத நல்லிணக்கத்தை மேம்படுத்த வேண்டும் என்று பிரிட்டன் உள்துறை அமைச்சர் ஹஷல் பிளீர் தெரிவித்தார்.
______________________________________________________________________
Manchester United அணியிடம் வீழ்ந்த Wrexham அணி
Wrexham மற்றும் Manchester United அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற காற்பந்தாட்டத்தில் Manchester United அணி 3-1 என்ற கோல் எண்ணிக்கையில் Wrexham அணியை வீழ்த்தியது. ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்து இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின.
இருப்பினும், ஆட்டத்தின் இறுதியில் Wrexham அணி தோல்வியையே தழுவியது. இதனிடையே, Walsall மற்றும் Aston Villa அணிகளுக்கிடையே நடைபெற்ற மற்றுமொரு காற்பந்தாட்டத்தில் Aston Villa அணி 3-0 என்ற கோல் எண்ணிக்கையில் Walsall அணியை வீழ்த்தியது.

நன்றி வணக்கம்மலேசியா.காம்

மனோ.ஜி