PDA

View Full Version : குதிரை சவாரி

kavitha
04-08-2005, 10:16 AM
அது ஒரு அழகான குதிரை
ஆனால் அங்கும் இங்கும் பார்க்கும்
மிக பலமானது
மிக வேகமானது
புத்தி கூர்மையானது
வேடிக்கை பார்க்காதவரை
அது சாதாரண மனிதனைவிட புத்திசாலி
எது எல்லையோ
அதை அடையும்வரை
அது வேடிக்கை பார்க்கக்கூடாது
கடிவாளமிட்டேன்
ஏறி அமர்ந்தேன்
லட்சியம் என்பதை கண்ணிலும்
கடிவாளத்தைக் கையிலும் வைத்து
எனது பயணம் லட்சியத்தை நோக்கி
நானும் வேடிக்கை பார்க்கக்கூடாது
குதிரையையும் வேடிக்கை
பார்க்கவிடக்கூடாது
புத்திசாலிக்குதிரையோ
மேயும், நடக்கும்
சண்டித்தனம் செய்யும்
விடாமல் விரட்டவேண்டும்
அது ஓடும்போது
எனது கவனமும் சிதறக்கூடாது
குதிரையின் கண் ஒரு கண்
லட்சியத்தின் கண் மறு கண்
ஓடு ஓடு விரட்டு விரட்டு!

Birundan
04-08-2005, 11:39 AM
கவிதை நண்று, ஒரு கருத்து லட்சியத்தை அடையும் போது காலம் கடந்துவிடும்
பயனித்தபாதைக்கு திரும்ப போகமுடியாது, வரும் வழியில் கண்ட அழகிய நதிகளையும், அழகியகாட்சிகளையும் ரசிக்கமுடியவில்லயே,நல்ல மனிதர்களுடன்
பழகமுடியவில்லயே என இறுதியில் மனம் ஏங்காதா?

kavitha
05-08-2005, 03:36 AM
கவிதை நண்று, ஒரு கருத்து லட்சியத்தை அடையும் போது காலம் கடந்துவிடும்
பயனித்தபாதைக்கு திரும்ப போகமுடியாது, வரும் வழியில் கண்ட அழகிய நதிகளையும், அழகியகாட்சிகளையும் ரசிக்கமுடியவில்லயே,நல்ல மனிதர்களுடன்
பழகமுடியவில்லயே என இறுதியில் மனம் ஏங்காதா?

உங்கள் கருத்திற்கு நன்றி பிருந்தன். நம்மைக் கட்டுப்படுத்த தெரிந்த பிறகு, குதிரையைக் கட்டுப்படுத்துவது மிக எளிதான வேலை. ரசிப்பதில் தவறில்லை. ஆனால் அங்கேயே நின்று விட்டால், காலம் கடந்துவிடும்.

காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை.