PDA

View Full Version : தகராறு

சுவேதா
03-08-2005, 08:31 PM
இது நான் முதல் முதலாகb எழுதும் ஹைக்கூ சரியா எப்படி என்று தெரியவில்லை பார்த்து சரி பிழைகளை கூறுங்கள்!

தகராறு

வானுக்கும் மேகத்திற்கும்
ஏற்படும்தகராரில்
வானம்அழுவது
மழை .

mukilan
03-08-2005, 09:46 PM
சகோதரி பாராட்டுக்கள்!. தகரா"றி" (ரி என்ற தட்டச்சுப் பிழை) ல் தான் சிறு தகராறு !

Birundan
04-08-2005, 02:46 AM
செந்தாழம் பூ என நான் இருந்தேன்
அருகில் சென்று தொட்டு பார்தபோதுதான் தெரிந்தது
அவள் செந்தாழம் பூ அல்ல செந்தனல் பூ என்ற
[COLOR="Green"]அன்புடன் பிருந்தன்

ஜீவா
04-08-2005, 05:54 AM
கடன் பிரச்சனையால்
குடும்பமே தற்கொலை..
பணக்கட்டுகளுடன் L.I.C ஏஜென்ட்

pradeepkt
04-08-2005, 08:21 AM
தகராறு

வானுக்கும் மேகத்திற்கும்
ஏற்படும் தகறாரில்
வானம்அழுவது
மழை .

இப்போது சகோதரி ஹைக்கூவிற்கும் வந்தாச்சா?
வரவேற்புகள்... நன்றாக இருக்கிறது.
இன்னும் நிறைய எழுதம்மா.

pradeepkt
04-08-2005, 08:22 AM
கடன் பிரச்சனையால்
குடும்பமே தற்கொலை..
பணக்கட்டுகளுடன் L.I.C ஏஜென்ட்
நச்சுனு யாரோ முகத்தில் குத்தியது போலிருந்தது உங்கள் ஹைக்கூ...
இன்னும் நிறைய எழுதுங்கள் ஜீவா.

Mano.G.
04-08-2005, 08:28 AM
செந்தாழம் பூ என நான் இருந்தேன்
அருகில் சென்று தொட்டு பார்தபோதுதான் தெரிந்தது
அவள் செந்தாழம் பூ அல்ல செந்தனல் பூ என்ற
[color="Green"]அன்புடன் பிருந்தன்

"செந்தனல்" நெருப்பு என சொல்லாமல் சொல்லியுள்ளீர்
அருமை பிருந்தன் அருமை தொடர வாழ்த்துக்கள்.

மனோ.ஜி

pradeepkt
04-08-2005, 08:33 AM
செந்தாழம் பூ என நான் இருந்தேன்
அருகில் சென்று தொட்டு பார்தபோதுதான் தெரிந்தது
அவள் செந்தாழம் பூ அல்ல செந்தனல் பூ என்ற
[color="Green"]அன்புடன் பிருந்தன்

எல்லாமே எல்லா நேரங்களிலும் நம் எதிர்பார்ப்புகள் போல் நடந்துவிடுமா என்ன?
நல்ல ஹைக்கூ... இன்னும் நிறைய எழுதுங்கள் பிருந்தன்.

kavitha
04-08-2005, 10:05 AM
குறும்பா எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் தங்கை.

ஹைக்கூவிற்கென்று சில இலக்கணம் வகுத்துள்ளனர்டா..
பழைய மன்றத்தில் இலக்கியப்பகுதியில் சென்று பார்.
அருமையான தொகுப்பு ஒன்று உள்ளது.

பொதுவாக மூன்று வரிகளில் இருக்கவேண்டும்.
முதல் இரண்டு வரிகளும் ஒன்றிற்கு ஒன்று தொடர்பின்றி இருக்கவேண்டும்.
மூன்றாவது வரியில் ஒரு முத்தாய்ப்பு அல்லது, இந்த இரண்டு வரியையும் இணைக்கும் பாலமாக அது இருக்கவேண்டும்.

ஒரே வார்த்தை மீண்டும் மீண்டும் வருவதையும், தேவையற்ற எழுத்துக்களையும் செதுக்கி இருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும்டா.. பழகப் பழக அது வந்துவிடும். மேலும் நிறைய எழுது.

சுவேதா
04-08-2005, 01:21 PM
இப்போது சகோதரி ஹைக்கூவிற்கும் வந்தாச்சா?
வரவேற்புகள்... நன்றாக இருக்கிறது.
இன்னும் நிறைய எழுதம்மா.

நன்றி பிரதீப் அண்ணா!!

சுவேதா
04-08-2005, 01:23 PM
குறும்பா எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் தங்கை.

ஹைக்கூவிற்கென்று சில இலக்கணம் வகுத்துள்ளனர்டா..
பழைய மன்றத்தில் இலக்கியப்பகுதியில் சென்று பார்.
அருமையான தொகுப்பு ஒன்று உள்ளது.

பொதுவாக மூன்று வரிகளில் இருக்கவேண்டும்.
முதல் இரண்டு வரிகளும் ஒன்றிற்கு ஒன்று தொடர்பின்றி இருக்கவேண்டும்.
மூன்றாவது வரியில் ஒரு முத்தாய்ப்பு அல்லது, இந்த இரண்டு வரியையும் இணைக்கும் பாலமாக அது இருக்கவேண்டும்.

ஒரே வார்த்தை மீண்டும் மீண்டும் வருவதையும், தேவையற்ற எழுத்துக்களையும் செதுக்கி இருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும்டா.. பழகப் பழக அது வந்துவிடும். மேலும் நிறைய எழுது.

மிக்க நன்றி அக்கா!!!
அது போலவே எழுதி பழகுகின்றேன்!

பிரசன்னா
09-09-2005, 06:28 PM
அட்டகாசமான கவிதை

சுவேதா
09-09-2005, 08:08 PM
நன்றி அண்ணா! எங்கே உங்கள் அறிமுகத்தை கொடுங்களேன்!

மன்மதன்
10-09-2005, 05:38 AM
ஹைக்கூ எழுத துவங்கியிருக்கும் சுவேதாவுக்கு வாழ்த்துகள்..

சுவேதா
10-09-2005, 12:47 PM
நன்றி மன்மதன்!