PDA

View Full Version : நெட்டில் சுட்டது!mukilan
31-07-2005, 06:02 AM
கங்குலியின் மோசமான ஆட்டங்களையும், அவரது பொருப்பற்ற தன்மையையும் கண்டு வெகுண்ட நமது " அம்பி" அந்நியனாக மாறி கங்குலியிடம் உரையாடும் காட்சி!

அம்பி: மிஸ்டர் கங்குலி! நீங்க அவுட் ஆயிட்டேள்! ஆனா வெளியே போறதை விட்டுட்டு ஏன் இப்படி அம்பயர் கிட்ட போய் சண்டை போடரேள்! அது சட்டப்படி தப்பு!

கங்குலி : டே குடுமி! நான் யார் தெரியுமா பெங்கால் டைகர். அப்படிதாண்டா கத்துவேன்.

அம்பி: கென்யா, பங்களாதேஸ் கூட எல்லாம் சதம் அடிக்கறேள்.ஆனா ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் கூட எல்லாம் "ஒன் பாத்ரூம்" போரேளே! ஏன்?

கங்குலி: நான் "தாதா" டா. நான் தாதாடா! தேவையானா மட்டும் தான் ஆடுவேன்.

அம்பி: மிஸ்டர் கங்குலி! பாண்ட்டிங், ஸ்மித்,இன்சி போன்ற கேப்டன்ஸ் எல்லாம் நல்லா ஆடி அவங்க டீமை ஜெயிக்க வைக்கறா, ஆனா நீங்க ஆடவே மாட்டேங்கரேளே!

கங்குலி : டே குடுமி! அதான் சச்சின், சேவாக், ட்ராவிட் எல்லாம் சதம் அடிக்கிறங்கல்ல! அப்புறம் நான் ஏன் ஆடனும்.!

அம்பி: மிஸ்டர் கங்குலி!அலட்சியமா பேசாதேள்!அடுத்தவா டேலண்ட்ல "ஃபேம்" கெயின் பன்றது தப்பு!

கங்குலி : போடா குடுமி!எனக்கே அட்வைஸ் பன்றியா?


அந்நியன் : டே மாடு!

கங்குலி: யாருங்க நீங்க! கில்லெஸ்பி போல ஹேர்ஸ்டைல் வச்சிருக்கீங்க.

அந்நியன்: நான் அவன் இல்லடா ! எமன்! ஏண்டா?ரன் அடிக்கவே மட்டேங்கரே!

கங்குலி :பேட்டிங் ஃபார்ம் அப்போ அப்போ வரும் போகும். கிரிக்கெட்டில் இதெல்லாம் சகஜம்தானுங்க.

அந்நியன்: இப்படி சொல்லி தப்பிக்கலாம்னு பார்க்கறியா? 5 ரன் எடுத்தால் தப்பா?

கங்குலி : ஒன்னும் தப்பு இல்லீங்க!

அந்நியன்: 5 மேட்ச்ல 5 ரன் எடுத்தா தப்பா?

கங்குலி: தப்பு போலதாங்க தெரியுது!

அந்நியன்: 5 வருசமா, 5, 5 மேட்சா 5 ரன் எடுத்தா தப்பா?

கங்குலி : பெரிய தப்பு தாங்க!

அந்நியன் : அதை தாண்டா ஒரு ஒரு மேட்ச்லயும் நீ செய்ற! உனக்கு தண்டனை "பால் போஜனம்" தாண்டா.

நீதான் "ஸ்டம்ப்" அக்தர், சமீ,முரளி, மெக்ராத், எல்லாம் உன்ன வச்சிதான் பவுலிங் ப்ராக்டிஸ் செய்யப் போறாங்க!!!!!!!!!!!!!!!!!!!!

கங்குலி : :eek: :eek: :angry: :angry: :mad: :confused: :confused: :mad:

பரஞ்சோதி
31-07-2005, 06:14 AM
முகிலன், கலக்கலாக இருக்குது, சிரித்து சிரித்து வயிறு வலிக்குது.

சுட்ட பழம் தான் இனிக்கும்.

gragavan
31-07-2005, 07:11 AM
பால் போஜனஸ் திரியம்பகம்......கங்குலி.....பரிதாபம்.

aren
31-07-2005, 01:40 PM
கங்குலி பல ஆட்டங்களை சிறப்பாக ஆடியிருக்கிறார். அதையும் கொஞ்சம் பாராட்டலாமே.

இந்திய குழுவை இதுவரை சிறப்பாக தலைமை ஏற்று நடத்தியவர்.

சுவேதா
31-07-2005, 03:57 PM
சூப்பர்ரா கலக்கிட்டிங்க அம்பி சொன்னான் கேக்கல அவன் ஆனா "போல் போஜனம்" தண்டனை அன்னியன் கொடுத்ததும் அவன் பாடு.......
அண்ணா வாழ்த்துக்கள் கலக்கல் சூப்பர்!

mukilan
31-07-2005, 05:21 PM
பரம்ஸ்,ராகவன்,ஆரென்,சுவேதா தங்களின் கருத்துக்களுக்கு நன்றி! ஆரென் அவர்களே நிச்சயமாக கங்குலியின் முந்தைய பங்களிப்பு பற்றி சந்தேகமில்லை. எனினும் பதியப்பட்டது எனது சொந்தக் கருத்துக்களும் அல்ல்.

அன்புடன்,
முகிலன்.

இராசகுமாரன்
07-08-2005, 05:04 PM
வெகு நாளைக்கு பிறகு ரசித்த ஒன்று.
கலக்குங்கள் முகிலன்.

Mathu
07-08-2005, 10:43 PM
ஆஹா நீண்ட் நாட்களுகு பின் இப்படி நினைச்சு நினைச்சு சிரிக்க வச்சீங்க, நன்றி தொடர்ந்து அசத்துங்க......

Mathu
07-08-2005, 11:15 PM
கங்குலி பல ஆட்டங்களை சிறப்பாக ஆடியிருக்கிறார். அதையும் கொஞ்சம் பாராட்டலாமே.

இந்திய குழுவை இதுவரை சிறப்பாக தலைமை ஏற்று நடத்தியவர்.

அரேன்ஜி உங்கள் கருத்துக்கு மாற்று கருத்து இல்லை, அது உண்மை...... ஆனால் அது தான் எங்கள் பலவீனமும் பின்னடைவும் என்பதை நீங்களும் அறிவீர்கள் என்று நினைக்கிறேன்.

டெண்டுல்கருடன் சேர்ந்து பல சதனைகளையும் வெற்றிகளையும்
குவித்தவர் தான் யாரும் மறக்க முடியாது, ஆனாலும்

ஒருகுதிரை ஓடும் மட்டும் தான் அதன் தேவை நொண்ட ஆரம்பித்து விட்டாலே
சுட்டு தள்ள வேண்டியது தான் மீண்டும் ஓடும் ஒட்டும் என்று
பழய பல்லவி பாடுவது இன்றைய விரைய உலகின் வேண்டாமை.


இந்திய குழுவை இதுவரை சிறப்பாக தலைமை ஏற்று நடத்தியவர்
என்பது கொஞ்சம் அதிகம் இவரின் பங்கும் இருந்தது ஆனால் அணியின் பலமும் மிளிர்ந்தது.

தயவு செய்து இனியாவது கடந்தகால புகழ்பாடமல் நிகழ்கால திறமையை முன்வைப்போம்.

aren
08-08-2005, 02:31 AM
நான் சொன்னது, அவருடைய பழைய சாதனைகளை மதித்தாவது அவரைபற்றி இப்படி எழுதாமல் இருக்கலாமே என்றுதான். அவரை அணியில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று நான் வாதிக்கவில்லையே.

Mano.G.
08-08-2005, 04:50 AM
நல்ல நகைச்சுவை அருமை
மேலும் தொடருங்கள்

வாழ்த்துக்கள்

மனோ.ஜி

மன்மதன்
08-08-2005, 01:51 PM
நல்ல நகைச்சுவை.. ரசிக்க வைத்தது..
( முகிலன் அவர்கள் அந்த இரண்டு கெட்ட (திட்டும் ) வார்த்தைகளை நீக்கிவிடுவார் என எதிர்பார்க்கிறேன்.. )
அன்புடன்
மன்மதன்

mukilan
08-08-2005, 03:55 PM
நன்றி ராசகுமாரன், மனோ, மதன் மற்றும் மன்மதன். இனி வரும் பதிப்புக்களில் திட்டும் வார்த்தைகள் இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன் நண்பரே!

மன்மதன்
09-08-2005, 05:06 AM
மிக்க நன்றி முகிலன்....
அன்புடன்
மன்மதன்

rajasi13
25-09-2005, 06:42 AM
கங்குலி பல ஆட்டங்களை சிறப்பாக ஆடியிருக்கிறார். அதையும் கொஞ்சம் பாராட்டலாமே.

இந்திய குழுவை இதுவரை சிறப்பாக தலைமை ஏற்று நடத்தியவர்.
அஸாருதீனை விடவா இவர் நல்ல தலைவர். அவரையே பந்தாடிடாங்க, அவரது தனிப்பட்ட நிகழ்வுகளுக்கு நான் போக விரும்பவில்லை. அவர் இந்திய வரலாற்றிலேயே சிறந்த தலைவர் என்பதை மறுக்க முடியாது. ஆனால் கங்குலி வந்தது முதலே (அரசியல் ) ஆட்டம் தொடங்கி விட்டது. ஆனால் இப்பொதைக்கு அவரை விட்டால் தலைமை பண்பில் சிறந்தவர் எவருமில்லை என்பது ஒத்துக்கொள்ளகூடியது.

Narathar
02-10-2005, 03:28 AM
நல்ல நகைச்சுவை........................

நன்றி

அறிஞர்
04-10-2005, 10:14 PM
அருமையான பதிவு.. வெகு நாளைக்கு பிறகு இன்று படித்து ரசித்தேன்...

இன்னும் கொடுக்கலாமே....

gankrish
06-10-2005, 10:10 AM
முகிலன் நல்ல தொகுப்பு

kiruba_priya
06-01-2006, 07:26 PM
அவன்: ஏன் கங்குலியோட இன்னொரு பேட்ஸ்மேனும் சேர்ந்து பேட்டிங்கிற்குப் போறாங்க..
இவன்: கங்குலி அவுட் ஆனவுடன இன்னொரு பேட்ஸ்மேனை அனுப்பறதுக்கு டயம் வேஸ்ட் செய்ய வேண்டாம்னுதான்.


கங்கூலியும், அவரோட ரசிகர்களும் மன்னிக்க...

-- நெட்டில் சுட்டது!!

[சமிப காலமாக கங்கூலியின் ஆட்டம் தேவலாம். பழைய நிலைக்கு வராமல் இருந்தால் சரியே]

அறிஞர்
06-01-2006, 07:35 PM
அவன்: ஏன் கங்குலியோட இன்னொரு பேட்ஸ்மேனும் சேர்ந்து பேட்டிங்கிற்குப் போறாங்க..
இவன்: கங்குலி அவுட் ஆனவுடன இன்னொரு பேட்ஸ்மேனை அனுப்பறதுக்கு டயம் வேஸ்ட் செய்ய வேண்டாம்னுதான்.


கங்கூலியும், அவரோட ரசிகர்களும் மன்னிக்க...

-- நெட்டில் சுட்டது!!

[சமிப காலமாக கங்கூலியின் ஆட்டம் தேவலாம். பழைய நிலைக்கு வராமல் இருந்தால் சரியே]

இப்பொழுது அவரை விட்டால் பெங்கால் டீமிற்கு வேறு ஆள் இல்லை

aren
07-01-2006, 01:12 AM
பெங்கால் டீமை தனியாளாகநின்று இந்த வருடம் மூன்றாவது நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார். இரண்டாவது இடம் கிடைத்திருக்கும், ஆனால் தமிழ்நாட்டுடன் தோற்றுவிட்டதால், மூன்றாவது இடத்தில் இருக்கிறார்கள்.

கங்குலியை கேலிசெய்யும் அளவிற்கு அவர் மோசமான ஆட்டக்காரர் இல்லை. ரன் அடிக்காதது ஒரு குறையே இருந்தாலும் அது ஒரு சிறிய சரிவேயன்றி மட்டமான ஆட்டக்காரர் கிடையாது.

பின் குறிப்பு: நான் கங்குலி ரசிகர் கிடையாது.

நன்றி வணக்கம்
ஆரென்

அறிஞர்
09-01-2006, 11:00 PM
ஆரென்.... கங்குலி பாகிஸ்தானில் சாதிக்க காத்திருக்கிறாராம்...

முதல் இடம் பேட்டிங்கிற்கு சாதகமான இடமாக இருப்பதால் என்ன செய்கிறாரென பார்ப்போம்

வட்டா
18-01-2006, 03:23 PM
நல்ல சுடரிங்க, இப்படி மேலும் மேலும் சுட்டுப்போட எனது வாழ்த்துக்கள. :D :D :D ்

அறிஞர்
19-01-2006, 04:54 PM
நல்ல சுடரிங்க, இப்படி மேலும் மேலும் சுட்டுப்போட எனது வாழ்த்துக்கள. :D :D :D ் நீங்களும் சேர்ந்து சுடுங்க.. அன்பரே

aren
20-01-2006, 12:56 AM
ஆரென்.... கங்குலி பாகிஸ்தானில் சாதிக்க காத்திருக்கிறாராம்...

முதல் இடம் பேட்டிங்கிற்கு சாதகமான இடமாக இருப்பதால் என்ன செய்கிறாரென பார்ப்போம்

முதல் டெஸ்டில் கங்குலிதான் தொடக்க ஆட்டக்காரராக இறங்குவார் என்றார்கள். ஆனால் பிட்சில் உயில் இல்லையென்று தெரிந்தவுடன் கங்குலி இறங்கி ரன் குவித்துவிட்டால் என்ன செய்வது என்ற காரணத்தால் திராவிட் உள்ளே தொடக்க ஆட்டக்காரராக இறங்கினார் என்று சொல்கிறார்கள்.

திராவிட் ஒரு நாள் ஆட்டத்திற்கு சரியில்லை என்று சச்சின் டீமை விட்டு தூக்கினார். ஆனால் கங்குலி திராவிடை உள்ளே கூப்பிட்டு வந்து விக்கெட் கீப்பராகவும் திராவிட் இருப்பார், அதனால் டீமில் இருக்கட்டும் என்று கூறி அவரை உள்ளே தள்ளினார். அதே திராவிட் இன்று கங்குலி டீமில் கூடாது என்று சாப்பலுடன் சேர்ந்துகொண்டு ஒற்றறக்காலில் நிற்கிறார். இதுதான் காலம் என்பது.

தமிழ்நாட்டின் வெங்கட்ராகவனுக்குக் கிடைக்காத அவமதிப்புகளா, கங்குலிக்கு கிடைக்கிறது என்று கேட்கிறீர்களா? அதுவும் சரிதான். மேற்கு இந்திய தீவுகளுடன் 74 - 75-ல் ஆடிய டெஸ்ட் தொடரில், டில்லி டெஸ்டில் காப்டனாக வெங்கட் இருந்தார், அடுத்த டெஸ்டான சென்னையில் அவரை 12வது ஆட்டக்காரராக போட்டு தண்ணீர் கோப்பையை தூக்கவைத்தார்கள். இந்தமாதிரி அவமானம் கங்குலிக்கு கொடுக்கமாட்டார்கள் என்று நம்புவோம்.

இது இந்திய டீமின் சாபம் என்று நினைக்கிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

வட்டா
20-01-2006, 02:18 PM
நீங்களும் சேர்ந்து சுடுங்க.. அன்பரே

ஹி..ஹி..ஹி.... (வழிதல்) :D

சுபன்
28-01-2006, 12:20 AM
கலக்கல்

பென்ஸ்
03-02-2006, 06:15 AM
இன்று இ-மெயிலில் வந்ததுசெல் பேசும்
வார்தை
புரிவதில்லை

காத்திருந்தல்
மெசேஜ்
வருவதில்லை

ஓரு முறை
அனுப்பி மறு
முறை அனுப்ப
நான் ஒன்றும்
கிறுக்கன் இல்லை....

எனக்கு பில்
கட்ட வழியுமில்லை...

கேள் பிரன்டு
இருந்தும்
எஸ்.எம்.எஸ் அனுப்ப
நெட்வொர்க்
கவரேஜ்
கிடைப்பதில்லை.....

கஸ்டமர்
கேருக்கு
கால் பன்ன
பதில் ஒன்றுமே
கிடைப்பதில்லை....

ஒருமுறை தான்
நான் கால் செய்தால்...
வருகின்ற பில்
அவள்
அறிவதில்லை....

இரவினுலும்
தினம்
பகலினிலும்....

கரைகின்ற
பேலன்ஸ்
தெரிவதில்லை ..................

இளசு
03-02-2006, 07:14 AM
முகிலன் முதல் பென்ஸ் வரை..

ஒவ்வொருமுறை இந்த திரியை படிக்கும்போதும் வரும் வெடிச்சிரிப்பு..
அதிலேயே பதில் எழுதாமல் வயிற்றைப் பிடித்துக்கொண்டு ஓடவைக்கும்...


இப்பவும் வாய்விட்டு ரெயின்போ பாட்டைப்பாடி..
கிறுக்கனாய் சிரிக்கவைத்த பென்ஸை
எப்படி தண்டிச்சால் தகும்?

அறிஞர்
03-02-2006, 09:28 PM
பெஞ்சமின்... அமெரிக்கா மாதிரி.. இரவில், வாரக்கடைசியில் இலவசமாக பேசும் சூழலை இந்தியாவுக்கு கொண்டு வந்தால் அப்பாவி காதலர்களுக்கு வசதியா இருக்கும்.....

பென்ஸ்
04-02-2006, 06:29 AM
ஆமா, பெரிய வசதி... என்னத பெரிசா பேச போறாங்க...

ம்ம்ம்ம்.. சொல்லு...
வேறா....
அப்புறம்....
ஐயோ..ஐயோ... (இப்ப கொஞ்ஜ நாளா இதையும் சேத்துகிட்டாங்க)

இதையே நாள் முளுக்க பேசுறாங்க... :-((

அறிஞரே... இவங்களை திருத்தவே முடியாது...

அறிஞர்
06-02-2006, 09:24 PM
ஆமா, பெரிய வசதி... என்னத பெரிசா பேச போறாங்க...

ம்ம்ம்ம்.. சொல்லு...
வேறா....
அப்புறம்....
ஐயோ..ஐயோ... ... உங்களுக்கு எக்ஸ்பீரியண்ஸ் இல்லை என எண்ணுகிறேன்..... பிரதீப்பிடம் சென்று தனி வகுப்பு மூலம் பயின்று வாருங்கள்

sarcharan
07-02-2006, 04:29 AM
எப்படி எப்படி எப்படி இது? உங்களுக்கும் இது தெரிஞ்சு போச்சா?
புத்திச்சாலி...


உங்களுக்கு எக்ஸ்பீரியண்ஸ் இல்லை என எண்ணுகிறேன்..... பிரதீப்பிடம் சென்று தனி வகுப்பு மூலம் பயின்று வாருங்கள்

pradeepkt
07-02-2006, 05:06 AM
நக்கலு... ம்ம்ம்...
இருக்கட்டும் இருக்கட்டும் ! :D :D

அறிஞர்
08-02-2006, 04:07 AM
நக்கலு... ம்ம்ம்...
இருக்கட்டும் இருக்கட்டும் ! :D :D அப்ப உமக்கு தனி வகுப்பு தேவையா...

mania
08-02-2006, 04:26 AM
அப்ப உமக்கு தனி வகுப்பு தேவையா...

:rolleyes: :rolleyes: இதுக்கெல்லாம் கூட தனி வகுப்பு இருக்கா என்ன....????:rolleyes: :confused: :D
அன்புடன்
அப்பாவி மணியா....:D :D :D

பென்ஸ்
08-02-2006, 10:04 AM
காதலும் கல்யாணமும்....


காதல்
என்பது ரஜினி மாதிரி
அது எப்ப வரும் எப்படி வரும்னு
யாருக்கும் தெரியாது
ஆனா
வரவேண்டிய நேரத்திற்க்கு
சரியா வந்திடும்
கல்யாணம் என்பது
சத்தியராஜ் மாதிரி
அதோட
கேரக்டரையே
புரிஞ்சுக்க முடியாது:rolleyes: :rolleyes: :rolleyes: :D :D :D :D

தாமரை
08-02-2006, 10:14 AM
காதலும் கல்யாணமும்....


காதல்
என்பது ரஜினி மாதிரி
அது எப்ப வரும் எப்படி வரும்னு
யாருக்கும் தெரியாது
ஆனா
வரவேண்டிய நேரத்திற்க்கு
சரியா வந்திடும்
கல்யாணம் என்பது
சத்தியராஜ் மாதிரி
அதோட
கேரக்டரையே
புரிஞ்சுக்க முடியாது:rolleyes: :rolleyes: :rolleyes: :D :D :D :D
அதுக்காக உங்க கல்யாணத்தை
லொள்ளு 50%
ஜொள்ளு 50%

கலந்து முடிக்கலாம்னு முயற்சி பண்ணாதீங்க..

sarcharan
08-02-2006, 11:44 AM
இது பென்சமீனின் கு(சும்பு)று கவிதையா....?
அதுக்கு ஏன் இமய மலைக்கு போனவர இழுக்கறீங்க?

காதலும் கல்யாணமும்....
காதல் என்பது ரஜினி மாதிரி அது எப்ப வரும் எப்படி வரும்னு
யாருக்கும் தெரியாது ஆனா வரவேண்டிய நேரத்திற்க்கு சரியா வந்திடும் கல்யாணம் என்பது சத்தியராஜ் மாதிரி அதோட கேரக்டரையே
புரிஞ்சுக்க முடியாது:rolleyes: :rolleyes: :rolleyes: :D :D :D :D

பென்ஸ்
08-02-2006, 12:02 PM
யப்பா நெட்டில் சுட்டது திரியில் நான் ஏன் கவிதையை போடுறேன்.,...

அறிஞர்
09-02-2006, 03:03 PM
கலக்கல் பெண்ஸூ... ரஜினி, சத்யராஜ் உதாரணங்கள் அருமை

பென்ஸ்
10-02-2006, 05:26 AM
தலை: சுவேதா, நீ அதிகமா மிட்டாய் சாப்பிடுறது நல்லதில்லை.
அது உன் உடல் நலத்தை கெடுக்கும், பல்லை சொத்தையாக்கும், அப்புறமா நீ குண்டாயிடுவே...

சுவேதா: என் தாத்தா 107 வயதுவரை வாழ்ந்தார்:rolleyes: :rolleyes:

தலை: அவர் உன்னை மாதிரியே அதிகமா மிட்டாய் சாப்பிட்டாரா??:confused: :confused:

சுவேதா: இல்லை, அவர்... அவரோட வேலையை மட்டும் பாத்துக்கிட்டு போயிக்கிட்டு இருந்தார்...:D :D :D :D :D

அறிஞர்
10-02-2006, 03:37 PM
சுவேதா: இல்லை, அவர்... அவரோட வேலையை மட்டும் பாத்துக்கிட்டு போயிக்கிட்டு இருந்தார்...:D :D :D :D :D
சூப்பர் :D :D :D :D :D :D

aren
10-02-2006, 11:57 PM
தலை: சுவேதா, நீ அதிகமா மிட்டாய் சாப்பிடுறது நல்லதில்லை.
அது உன் உடல் நலத்தை கெடுக்கும், பல்லை சொத்தையாக்கும், அப்புறமா நீ குண்டாயிடுவே...

சுவேதா: என் தாத்தா 107 வயதுவரை வாழ்ந்தார்:rolleyes: :rolleyes:

தலை: அவர் உன்னை மாதிரியே அதிகமா மிட்டாய் சாப்பிட்டாரா??:confused: :confused:

சுவேதா: இல்லை, அவர்... அவரோட வேலையை மட்டும் பாத்துக்கிட்டு போயிக்கிட்டு இருந்தார்...:D :D :D :D :D

அய்யா, நம்ம தலையை இப்படி வாருகிறீர்களே, இது நியாயமா?

பாவம்பா, நம்ம தலை.

அறிஞர்
13-02-2006, 04:30 PM
அய்யா, நம்ம தலையை இப்படி வாருகிறீர்களே, இது நியாயமா?

பாவம்பா, நம்ம தலை.நீங்க நல்லா வெளிச்சம் போட்டு காட்டுகிறீர்கள்

தாமரை
15-02-2006, 05:46 AM
பைசலாபாத்தில் நதந்த டெஸ்ட் என்னாச்சு?
பைசா லாபத்தில் முடிந்தது...
அப்போ பரிதாபாத்தில் நடந்த டெஸ்ட்?
பரிதாபத்தில் முடிந்தது..

இங்க நான் காலை எடுத்ததால் என்காலை எடுக்க யாரும் ப்ளான் பண்ண வேண்டாம்.....ஹி.. ஹி.. ஹி...

ஓவியா
13-11-2006, 07:32 PM
முகி
கங்குலின் கவிதையில் தொடங்கி....
சுட்டு போட்டததை ரசித்து படித்தேன்.....

பென்சுவின்
செல் பேசும் வார்தை புரிவதில்லை
படு அட்டகாசமா இருக்கு..........சூப்பர்

ரஜினியின் காதல்...சதியராஜின் கல்யாணம்....

தலை...சுவேதாவின்............மினி கடி...

செல்வன் அண்ணாவின் காலை எடுக்ககும் ப்ளான்......

ஒரே சிரிப்புதான்.....:D :D :D