PDA

View Full Version : கிரிக்கெட் - இந்தியன் ஆயில் கப்



ஜீவா
30-07-2005, 07:36 AM
நண்பர்களே.. நீண்ட இடைவெளிக்கு பின் இன்று ஆரம்பிக்க உள்ளது..

ஏதாவது இலவசமான வீடியோ ஆடியோ லிங்க் கிடைத்தால் பகிர்ந்து கொள்ளவும்..

http://www.cricbuzz.com

இலவச ஆடியோ கொடுப்பதாக சொல்லி கொண்டார்கள்.. உறுதியாக தெரியவில்லை..

பரஞ்சோதி
30-07-2005, 07:47 AM
நன்றி ஜீவா,

நானும் தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைத்தால் தருகிறேன்.

கங்குலிக்கு 4 போட்டிகள் மட்டுமே தடையாம்.

வருத்தமாக இருக்கிறது ...

ஜீவா
30-07-2005, 07:51 AM
நன்றி ஜீவா,

நானும் தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைத்தால் தருகிறேன்.

கங்குலிக்கு 4 போட்டிகள் மட்டுமே தடையாம்.

வருத்தமாக இருக்கிறது ...

ஏன் இரண்டு போட்டிகள் குறைத்து விட்டார்கள் என்று வருத்தபடிகிறீர்களா?? :D :D சும்மா ஜோக் பண்ணினேன் அண்ணா..


என்ன பண்ண.. டெண்டுல்கரும் இல்லை.. சேவாக், ட்ராவிடும் நன்றாக விளையாட வேண்டும்..

பரஞ்சோதி
30-07-2005, 08:02 AM
ஏன் இரண்டு போட்டிகள் குறைத்து விட்டார்கள் என்று வருத்தபடிகிறீர்களா?? :D :D சும்மா ஜோக் பண்ணினேன் அண்ணா..


என்ன பண்ண.. டெண்டுல்கரும் இல்லை.. சேவாக், ட்ராவிடும் நன்றாக விளையாட வேண்டும்..

கங்குலியை வைத்து டன் கணக்கில் ஜோக்ஸ் வருது, அதற்காகவாது அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

டிராவிட் தலைமையில் விளையாடத் தயார் என்றும் சொல்லியிருக்கிறார். அரசியலில் லல்லு, மாதிரி கிரிக்கெட்டில் கங்குலி என்று சொல்லலாம், ஆனால் அவர் நல்ல காப்டன், டிராவிட் தன் தலைமை பொறுப்பை வெற்றிக்கரமாக செய்தால் கங்குலிக்கு பிரச்சனை தான். :D

aren
30-07-2005, 12:30 PM
ஒன்றும் சரியாக ஆடவில்லை இன்று. இலங்கை நிச்சயம் வெற்றி பெறும் என்று தோன்றுகிறது 205தான் 50 ஓவரில் எடுத்தார்கள். 206 எடுத்தால் இலங்கை நிச்சயம் வெற்றி பெற்றுவிடும்.

aren
30-07-2005, 12:34 PM
Ten Sports-ல் காண்பிப்பதாக செய்தியில் படித்தேன். இந்தியாவில் வரும் என்று தெரிகிறது. தூர்தர்ஷன் வேறு அவர்களிடம் நேரடி ஒளிபரப்பு செய்ய கேட்டதாக தகவல். இந்தியாவில் தெரியும் என்று நினைக்கிறேன்.

pradeepkt
30-07-2005, 02:37 PM
இலங்கைக்கு 3 விக்கெட் போய்விட்டது
99/3 25 ஓவர்கள்.
இனி எல்லாம் பந்து வீசுபவர்கள் கையில்.

aren
31-07-2005, 03:13 AM
நம்ம பசங்களுக்கு செம்ம சுளுக்கு. எல்லோருக்கும் பெரிய பெயர்தான் இருக்கிறது. ஆட வேண்டிய இடத்தில் ஒன்றும் ஆடுவதில்லை.

சொத்த டீமுடன் நன்றாகவே கலக்குகிறார்கள்.

பரஞ்சோதி
31-07-2005, 10:18 AM
மேற்கு இந்திய அணியை வெல்ல வாய்ப்பு இருக்கிறது. முதலில் ஆடும் மே.இ. அணி 44/3 ரன்கள்.

ஜீவா
31-07-2005, 10:44 AM
சொல்ல முடியாது அண்ணா.. நம்ம ஆளுங்க 300 ரன்னை கூட சேஸ் பண்ணிருவாங்க.. குறைஞ்ச ரன்னுக்கு திணறுவாங்க.. பாக்கலாம்.. என்ன நடக்குதுன்னு..

aren
31-07-2005, 12:36 PM
இந்த மாட்சை ஜெயிக்காவிட்டால் நம் மக்கள் பேசாமல் இந்தியா திரும்பிவந்துவிடலாம்.

ஜீவா
31-07-2005, 02:40 PM
லைவ் ஆடியோ


http://cricket.chennaionline.com/cricket/PakinInd05/liveaudio.html

aren
31-07-2005, 02:56 PM
லைவ் ஆடியோ

இது இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மாட்ச் என்று வருகிறதே.

ஜீவா
31-07-2005, 03:07 PM
அது அப்படித்தான்..ஆனால், தற்போதுள்ள கமெண்ட்ரிதான் வருகிறது.. முயற்சி பண்ணி பாருங்கள் ஆரேன்..

ஜீவா
09-08-2005, 01:04 PM
வீடீயோ வேலை செய்கிறது.. நான் Final பார்க்கிறேன்..
http://216.12.162.54/ashes?MSWMExt=.asf

மன்மதன்
10-08-2005, 04:28 AM
இந்தியா தோற்று விட்டதே.. இலங்கையிடம் தோற்க என்ன காரணமாக இருக்கும்??
அன்புடன்
மன்மதன்

ஜீவா
10-08-2005, 04:31 AM
தன்னம்பிக்கை குறைவு.. (lack of confidence)... வேறு ஒன்றும் இல்லை..

mukilan
10-08-2005, 05:04 AM
நம் அணியின் வீரர்கள் தங்களின் சொந்த சாதனையை மனதில் வைத்து ஆடுகின்றனர். குழு ஆட்டம் என்பது இருப்பதாகப் படவில்லை. தன்னம்பிக்கை குறைவா? இல்லை மிகைப் படுத்தப்பட்ட தன்னம்பிக்கையா? எது எப்படியோ தமிழ்நாட்டை விட சின்னதாக (பரப்பில்) உள்ள இலங்கைத்தீவில் இந்திய நாட்டின் வீரர்களை விடச் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள் என்பது ஆணித்தரமாக நிருபணம் செய்யப் பட்டு விட்டது.

பரஞ்சோதி
10-08-2005, 05:15 AM
வெற்றிப் பெற்ற இலங்கை அணியினருக்கு என் பாராட்டுகள்.

தன்னம்பிக்கை, வெற்றிபெற வேண்டும் என்ற துடிப்பு இல்லாதது தான் தோல்விக்கு காரணம்.

ஒவ்வொரு அணியிலும் யாராவது ஒருவர் உயிரைக் கொடுத்து விளையாடி வெற்றியை கொண்டு வருவார்கள், நம்மில் அப்படி யாருமே இல்லை.

கடமைக்கு விளையாடுகிறார்கள், இவர்களை கூலிக்கு மார் அடிக்கிறவர்கள் என்று சொல்லலாம்.

Narathar
10-08-2005, 07:11 AM
கடமைக்கு விளையாடுகிறார்கள், இவர்களை கூலிக்கு மார் அடிக்கிறவர்கள் என்று சொல்லலாம்.


நான் ஒரு இலங்கையன் என்பதில் நேற்றைய ஆட்டத்தின் வெற்றி எனக்கு பெரு மகிழ்ச்சியளிப்பது உண்மை.

ஆனால் இங்கு இந்திய அணியைப்பற்றிய விமர்சனத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை..........

நேற்று அவர்கள் வெற்றி பெற்றிருந்தால் உங்கள் விமர்சனங்கள் வேறு மாதிரி இருந்திருக்கும்...........

தோற்று விட்டோம் என்ற ஆதங்கத்தில் எழுதியுள்ளீர்களே தவிர அவர்கள் நேற்று என்னமாய் இலங்கை கிரிக்கட் ரசிகர்கள் வயிற்றில் புளியை கரைத்தார்கள் என்பது அனுபவத்தில் உணர்ந்த என்களுக்குத்தெரியும்

லொக்கு கெட்டிகேயின் ஓவருக்கு இந்திய வீரரின் துடுப்பாட்டத்தை "கூலிக்கு மாரடிப்பு" என்று சொல்ல வேண்டாம்

பரஞ்சோதி
10-08-2005, 07:19 AM
வாங்க நாரதர், எங்க கஷ்டம் எங்களுக்கு.

என்னுடைய கருத்து நேற்றைய போட்டியை மட்டுமே வைத்து கூறப்பட்டதல்ல.

எத்தனையோ போட்டிகளில் வால் நுனிவரை வந்து விட்டு கோட்டை விட்டவை பல.

கடைசி 10 ஓவரில் 70 ரன்கள் எடுக்க முடியவில்லை என்றால் என்ன காரணம், ஆகா, ஓகோ என்ற தோனி, அனாவசியமாக சிக்ஸர்கள் அடிக்கும் பதான், ஹர்பஜன், என்ன செய்தார்கள்.

இது போன்ற போட்டிகளில் தான் அவர்கள் சாதனைகள் படைக்க வேண்டும், சும்மா வெத்து வேட்டு போட்டிகளில் மட்டுமே அடித்து பெயரை சாதனைகளில் பொறித்து வைத்துக் கொள்கிறார்கள். இது தான் வேதனை.

கங்குலி தன் பங்குக்கு லொட்டு வைத்து பந்தை வீணாக்கி போயிட்டார். கைப் தன் பெயரை காப்பாற்ற போதுமான ரன்களை எடுத்து விட்டார், டிராவிட் பொறுப்பான ஆட்டக்காரர், அவரே கடைசிவரை விளையாட வில்லை என்றால் எப்படி?

ஜீவா
10-08-2005, 07:48 AM
நாரதரே.. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சில சாதனைகளும் பல வேதனைகளும்தான் உள்ளது.. மற்ற நாட்டு ரசிகனை விட இந்தியர்களுக்கு அதிகம் என்பதை நாம் உலகம் முழுவதும் நடக்கும் போட்டிகளில் காணலாம்.. ஆனால், ஒவ்வொரு தடவையும் ஏமாற்றும்போது, மனம் உண்மையிலே குமுறுகிறது.. அவர்களை வெறுக்கிறது..

எத்தனை முறை இவர்களை மறக்க.. கண்டிப்பாக தன்னம்பிக்கையும், கூட்டு முயற்சி உள்ள எந்த அணியும் நேற்றைய ஆட்டத்தில் வெல்ல முடியும்..

அவர் அவர் பங்கை அளித்து விட்டு போய் கொண்டிருக்கிறார்களே தவிர இந்தியா ஜெயிக்க வேண்டும் என்ற வெறி இல்லை..

இதற்கு பல காரணங்கள்.. அதை அலசினால் ஆயிரத்தெட்டு அரசியல் உள்ளே இருக்கும்.. எத்தனையோ திறமையான வீரர்கள் வீணடிக்கபடிகிறார்கள்..

ஆனால், இந்தியா இதே போன்று விளையாடி கொண்டிட்ருந்தால், கண்டிப்பாக கிரிக்கெட் விளையாட்டை ரசிகர்கள் ஒதுக்கி விடுவார்கள்.. இப்போதே, அது நடந்து கொண்டுதான் இருக்கிறது..

மன்மதன்
10-08-2005, 08:02 AM
ஆனால், இந்தியா இதே போன்று விளையாடி கொண்டிட்ருந்தால், கண்டிப்பாக கிரிக்கெட் விளையாட்டை ரசிகர்கள் ஒதுக்கி விடுவார்கள்.. இப்போதே, அது நடந்து கொண்டுதான் இருக்கிறது..

உண்மைதான்..
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
10-08-2005, 08:53 AM
இந்தியா இதே போன்று விளையாடி கொண்டிட்ருந்தால், கண்டிப்பாக கிரிக்கெட் விளையாட்டை ரசிகர்கள் ஒதுக்கி விடுவார்கள்.. இப்போதே, அது நடந்து கொண்டுதான் இருக்கிறது..

100% உண்மை ஜீவா,

இங்கே பதிந்த பதிவுகளை வைத்தே அதை சொல்ல முடியும்.

இப்போ எல்லாம் முடிவு மட்டுமே கேட்கத் தோணுது, அதுவும் தெரிந்த ஒன்று தானே.

pradeepkt
10-08-2005, 01:29 PM
இந்தியா தோற்று விட்டதே.. இலங்கையிடம் தோற்க என்ன காரணமாக இருக்கும்??
அன்புடன்
மன்மதன்
ரொம்ப முக்கியம்...
என்னமோ புதுசு மாதிரி பேசுறீங்களே...