PDA

View Full Version : மழையே....

சுவேதா
26-07-2005, 02:12 AM
மழையே....

http://www.dl.ket.org/latin1/review/classounds/images/rain.jpg

நீ வருவாய் என
தினம் தினம்
எதிர் பார்த்து
காத்திருக்கின்றேன்!

நீ வந்தால்
என்னவள் குதித்து
விளையாடுவாள்
அப்பொழுது ஒரு
ஓரமாய் நான்
நின்று ரசிப்பேன்
உன்னோடு
விளையாடும்
என்னவளை!

அந்த மேகமே
எனக்காகத்தான்
உன்னை
அனுப்புகின்றனவா???
நீ விழும்
ஒவ்வொரு துளியும்
என் மனக்கதவை
தட்டுகின்றது!
நீ தினமும்
வர வேண்டும்
வருவாயா????

pradeepkt
26-07-2005, 05:09 AM
மழைக்கு இப்படி ஒரு உபயோகமா?
சுவேதா எனக்கு இன்னும் அந்த சந்தேகம் போகலை...

gragavan
26-07-2005, 07:48 AM
மழைக்கு இப்படி ஒரு உபயோகமா?
சுவேதா எனக்கு இன்னும் அந்த சந்தேகம் போகலை...அது எந்தச் சந்தேகமய்யா! வெவரமாக் கேளுங்க.....

பரஞ்சோதி
26-07-2005, 07:56 AM
அது எந்தச் சந்தேகமய்யா! வெவரமாக் கேளுங்க.....

வேற என்ன சந்தேகம், சுவேதா எழுதியதா? அல்லது சுவேதாவிற்கு யாராவது எழுதி கொடுத்ததா?

சகோதரி, உம் என்று சொல்லுங்க, உண்டு இல்லை என்று பண்ணிடலாம்.

- பொறுப்புடன் அண்ணா வால்டர் பரம்ஸ்.

gragavan
26-07-2005, 08:09 AM
வேற என்ன சந்தேகம், சுவேதா எழுதியதா? அல்லது சுவேதாவிற்கு யாராவது எழுதி கொடுத்ததா?

சகோதரி, உம் என்று சொல்லுங்க, உண்டு இல்லை என்று பண்ணிடலாம்.

- பொறுப்புடன் அண்ணா வால்டர் பரம்ஸ்.சின்ன திருத்தம். சுவேதா டைப்பியதா? டைப்படித்துக் கொடுக்கப் பட்டதா? என்றுதான் இருக்க வேண்டும்.

வால்டர்....உமது வால் டர்ரென்று கிழிந்து போகும் என்னுடன் மோதினால்................

பரஞ்சோதி
26-07-2005, 08:16 AM
சகோதரி கவிதை எளிமையாகவும், அருமையாகவும் இருக்கிறது, பாராட்டுகள்.

gragavan
26-07-2005, 08:26 AM
சகோதரி கவிதை எளிமையாகவும், அருமையாகவும் இருக்கிறது, பாராட்டுகள்.அப்படி வா வழிக்கு.

சுவேதா. உன்னுடைய கவிதை எளிய நடையில் சொல்ல வந்ததைச் சொல்லி விட்டுச் செல்கிறது. நல்ல முயற்சி.

எல்லாரும் கவிதை எழுத காதலில் துவங்குவார்கள். காதலைத் தவிர்த்தும் எழுதப் பழகு. கண்டிப்பாக உதவும். சொல்ல வந்த உணர்ச்சியை சொல்லிய பிறகு சொல்லப்பட்டவரது உணர்ச்சியாக மாற்றுவது கவிதை. அதில் நீ நன்கு முன்னேற எனது வாழ்த்துகள்.

pradeepkt
26-07-2005, 09:13 AM
சின்ன திருத்தம். சுவேதா டைப்பியதா? டைப்படித்துக் கொடுக்கப் பட்டதா? என்றுதான் இருக்க வேண்டும்.

வால்டர்....உமது வால் டர்ரென்று கிழிந்து போகும் என்னுடன் மோதினால்................
இன்னொரு பெரிய திருத்தம்
இது சுவேதா டைப்பியதா அல்லது சுவேதாவுக்கு டைப்பி வந்ததா? என்றுதான் இருக்க வேண்டும்.
அது சரி, வால் எப்படி கிழியும் அதுவும் டர்ரென்று

சுவேதா
26-07-2005, 12:02 PM
மழைக்கு இப்படி ஒரு உபயோகமா?
சுவேதா எனக்கு இன்னும் அந்த சந்தேகம் போகலை...

என்ன அண்ணா அப்படிச் சந்தேகம்??

pradeepkt
26-07-2005, 12:05 PM
விடிய விடிய கதைகேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பான்னாளாம் சுவேதா...
எனக்கு உள்ள சந்தேகத்துக்குத்தானே அங்க அண்ணாவும் ராகவனும் ஒரே சண்டை!!!

சுவேதா
26-07-2005, 12:05 PM
வேற என்ன சந்தேகம், சுவேதா எழுதியதா? அல்லது சுவேதாவிற்கு யாராவது எழுதி கொடுத்ததா?

சகோதரி, உம் என்று சொல்லுங்க, உண்டு இல்லை என்று பண்ணிடலாம்.

- பொறுப்புடன் அண்ணா வால்டர் பரம்ஸ்.

ஓ அதுவா...
நாந்தான் எழுதியது அண்ணா!

( பரம்ஸ் அண்ணா நான் உம் என்றால் யாரை உண்டு இல்லை பண்ண போறிங்க ??? )

வால்டர் பரம்ஸ்சின்
தங்கை
சுவேதா

சுவேதா
26-07-2005, 12:08 PM
சின்ன திருத்தம். சுவேதா டைப்பியதா? டைப்படித்துக் கொடுக்கப் பட்டதா? என்றுதான் இருக்க வேண்டும்.

வால்டர்....உமது வால் டர்ரென்று கிழிந்து போகும் என்னுடன் மோதினால்................

ஓ... அது சரி ஏன் என் அண்ணன் வால் கிழியபோகிறது??????? உங்களுடன் மோதினால் நீங்கள்தான் கிழிவீர்கள் அது எப்படி வால் கிழியும்??

mania
26-07-2005, 12:13 PM
நல்ல கடிதம்....:rolleyes: மழையில் நனையாமல் போஸ்ட் செய்யவேண்டும்....???:rolleyes:
அன்புடன்
மணியா.....:D :D

gragavan
26-07-2005, 12:23 PM
ஓ... அது சரி ஏன் என் அண்ணன் வால் கிழியபோகிறது??????? உங்களுடன் மோதினால் நீங்கள்தான் கிழிவீர்கள் அது எப்படி வால் கிழியும்??அதைப் பரஞ்சோதியைச் சொல்லச் சொல்லம்மா!

சுவேதா
26-07-2005, 12:25 PM
சகோதரி கவிதை எளிமையாகவும், அருமையாகவும் இருக்கிறது, பாராட்டுகள்.
நன்றி அண்ணா!

அப்படி வா வழிக்கு.

சுவேதா. உன்னுடைய கவிதை எளிய நடையில் சொல்ல வந்ததைச் சொல்லி விட்டுச் செல்கிறது. நல்ல முயற்சி.

எல்லாரும் கவிதை எழுத காதலில் துவங்குவார்கள். காதலைத் தவிர்த்தும் எழுதப் பழகு. கண்டிப்பாக உதவும். சொல்ல வந்த உணர்ச்சியை சொல்லிய பிறகு சொல்லப்பட்டவரது உணர்ச்சியாக மாற்றுவது கவிதை. அதில் நீ நன்கு முன்னேற எனது வாழ்த்துகள்..
நன்றி அண்ணா!

இன்னொரு பெரிய திருத்தம்
இது சுவேதா டைப்பியதா அல்லது சுவேதாவுக்கு டைப்பி வந்ததா? என்றுதான் இருக்க வேண்டும்.
அது சரி, வால் எப்படி கிழியும் அதுவும் டர்ரென்று

அது டைப்பியது அண்ணா!

சுவேதா
26-07-2005, 12:27 PM
விடிய விடிய கதைகேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பான்னாளாம் சுவேதா...
எனக்கு உள்ள சந்தேகத்துக்குத்தானே அங்க அண்ணாவும் ராகவனும் ஒரே சண்டை!!!

ஓ... அண்ணன்மார்களே சண்டை வேண்டாம் சரியா??

சுவேதா
26-07-2005, 12:28 PM
நல்ல கடிதம்....:rolleyes: மழையில் நனையாமல் போஸ்ட் செய்யவேண்டும்....???:rolleyes:
அன்புடன்
மணியா.....:D :D

:) நன்றி தாத்தா!

gragavan
26-07-2005, 12:28 PM
ஓ அதுவா...
நாந்தான் எழுதியது அண்ணா!

( பரம்ஸ் அண்ணா நான் உம் என்றால் யாரை உண்டு இல்லை பண்ண போறிங்க ??? )

வால்டர் பரம்ஸ்சின்
தங்கை
சுவேதாஇதோ இன்னொரு வால் டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

gragavan
26-07-2005, 12:30 PM
ஓ... அண்ணன்மார்களே சண்டை வேண்டாம் சரியா??ரொம்பச் சரி சகோதரி.

சுவேதா
26-07-2005, 12:30 PM
இதோ இன்னொரு வால் டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

அண்ணா இன்னொரு வால்டர்ர்ர் இல்லை அண்ணா அவரின் தங்கை என்றேன் அண்ணா!

சுவேதா
26-07-2005, 12:31 PM
ரொம்பச் சரி சகோதரி.

:) அது நல்லது என் அண்ணன்மார்கள் எப்பவும் சண்டை போடக்கூடாது!

ஆதவா
07-01-2007, 10:03 AM
நீ வருவாய் என
தினம் தினம்
எதிர் பார்த்து
காத்திருக்கின்றேன்!

மீண்டுமொரு காதல் ஆனால் மழைக்காதல். தினமும் எதிர்பார்க்கவைப்பதே காதல் ஆனால் மழையை எதிர்பார்க்கிறீர்கள்

நீ வந்தால்
என்னவள் குதித்து
விளையாடுவாள்
அப்பொழுது ஒரு
ஓரமாய் நான்
நின்று ரசிப்பேன்
உன்னோடு
விளையாடும்
என்னவளை!

காதல் கவிதைகளில் அவ்வளவாக தவிர்க்க வேண்டிய வார்த்தை என்னவள்!! அதில் உங்கள் அவள் ளை மழையோடு ஆடுவதைப்பார்ப்பதில் ஆனந்தம் இருக்குமே!

அந்த மேகமே
எனக்காகத்தான்
உன்னை
அனுப்புகின்றனவா???
நீ விழும்
ஒவ்வொரு துளியும்
என் மனக்கதவை
தட்டுகின்றது!
நீ தினமும்
வர வேண்டும்
வருவாயா????

மேகத்தையும் காதலையும் பிணைக்கிறீர்கள். நல்லது.. தினமும் மழைவரவே யாருக்கு ஆசை.. வாழ்த்துக்கள்.. நல்ல மழைக்காதல் கவிதை.