PDA

View Full Version : குஷ்புவின் ஜாக்(கெட்)பாட்...

ஜீவா
25-07-2005, 08:46 AM
எனது நண்பர் ஒருவர், தினமும் MSNல் வரும்போது ஏதாவது ஒரு புது பெயரடோடுதான் வருவார்.. அவர் சமிபத்தில் வந்த சில பெயர்களை சொல்கிறேன்..

சமிபத்தில் எல்லோரும் அறிந்திருப்பீர்கள்.. குஷ்புவின் ஜாக்பாட் நிகழ்ச்சி 150 எபிசோடுகளை தாண்டி செல்கிறாதாம்.. அதில் ஒரு தடவை கூட போட்ட ஜாக்கெட் திரும்ப வரலையாம்.. அய்யோ அய்யொ..

அதனால இவர் பேர் வைச்சிட்டார்..

குஷ்புவின் ஜாக்(கெட்)பாட்

அப்புறம், அறிந்தும் அறியாமலும் படம் பார்த்துட்டு வந்தார்.. அடுத்த நாள், MSN ல,

சொறிந்தும் சொறியாமலும் ன்னு வந்தாரு.. :D :D

இது மாதிரு உங்ககிட்டயும் சரக்கு இருந்தா சொல்லுங்க.. :D :D

pradeepkt
25-07-2005, 08:50 AM
எங்க அம்மா ஜாக்பாட் எதுக்குப் பாக்கறாங்களோ இல்லையோ, குஷ்பூவின் விதவிதமான ஜாக்கெட்களைப் பார்த்து ரசிப்பார்கள்.
உடனே என் தங்கைகளுக்கு (சித்தி மகள்கள்) போன் போட்டு "அந்தக் கிழவியே இவ்வளவு அழகாக உடுத்தி வருகிறாள், இளவட்டங்கள் நீங்களும் இதைப் போல் உடுத்திக் கொள்ளுங்கள்" என்று அறிவுரை (?!) சொல்வார்கள். :D

பரஞ்சோதி
25-07-2005, 08:51 AM
இது மாதிரி லொள்ளு சரக்கை தான் அதிகமா அள்ளி விடலாமே.

ஜீவா, எங்கே நம்ம கோயிந்சாமி, இந்த வார பலன் எங்கே?

gragavan
25-07-2005, 08:52 AM
இதுல அந்த 150வது நிகழ்ச்சிய நானும் பாத்தேன். இரண்டு அணியினர். ஒன்றிற்கு ஜெயம் ரவி தலைமை. கூட மும்தாஜ். மற்றொன்றில் சிபி. பொது அறிவுக் கேள்வி என்று வருகையில் ரவியின் விடைகள் சிறப்பாகவே இருந்தன. சிபிராஜ். முன்னேற்றம் ரொம்பவே தேவை.

ஒரு கேள்வி. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நூறாவது திரைப்படம் என்ன?

ரவி : (கொஞ்சமும் தயங்காமல்) தில்லானா மோகனாம்பாள்.
குஷ்பு : தவறான விடை. கேள்வி அடுத்த அணிக்குப் போகிறது
சிபி : மனோகராவா?
குஷ்பு : வீட்டுக்குப் போனதும் ஒங்களுக்கு அப்பாகிட்ட நல்ல அடி இருக்கு.

பரஞ்சோதி
25-07-2005, 08:52 AM
உம் பிரதீப்பு கொடுத்து வைத்தவர்.

எங்க வீட்டிலே ஜாக்கெட்டை மன்னிக்கவும் ஜாக்பாட்டை பார்க்க விடுவது இல்லை.

gragavan
25-07-2005, 08:53 AM
ஒரு வாட்டி குஷ்பூ சாக்கெட்டுக்குள்ள கிளியெல்லாம் செருகியிருந்தது.

pradeepkt
25-07-2005, 08:55 AM
ஒரு வாட்டி குஷ்பூ சாக்கெட்டுக்குள்ள கிளியெல்லாம் செருகியிருந்தது.
ரொம்ப முக்கியம்...
ஏன்யா பொது அறிவுக் கேள்விகளைக் கவனிங்கன்னா, அந்த அம்மா ஜாக்கெட்டுல இருக்கிற கிளியவா கவனிக்கிறீரு...

pradeepkt
25-07-2005, 08:57 AM
இதுல அந்த 150வது நிகழ்ச்சிய நானும் பாத்தேன். இரண்டு அணியினர். ஒன்றிற்கு ஜெயம் ரவி தலைமை. கூட மும்தாஜ். மற்றொன்றில் சிபி. பொது அறிவுக் கேள்வி என்று வருகையில் ரவியின் விடைகள் சிறப்பாகவே இருந்தன. சிபிராஜ். முன்னேற்றம் ரொம்பவே தேவை.

ஒரு கேள்வி. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நூறாவது திரைப்படம் என்ன?

அது சரி ... ஜாக்பாட்டுல யார் வெற்றி பெற்றது?
மும்தாஜ் இருந்ததினால அனேகமா ஜெயம் ரவியாத்தான் இருக்கணும்...
ஆமா இந்தக் கேள்வி, என்னாஆஆஆஆ பொது அறிவு ... புல்லரிக்குது சாமியோவ்

அறிஞர்
25-07-2005, 08:59 AM
"புரிந்தும் புரியாமலும்"

ஆட்டோகிராப் மாதிரி "பயோகிராப்..."

அன்னியன் மாதிரி உங்க ஸ்டைலில் "சன்னியன்"

அழகிய தீயே ஸ்டைலில்... பழகிய உயிரே, அழகிய குளிரே

ஜீவா
25-07-2005, 08:59 AM
இது மாதிரி லொள்ளு சரக்கை தான் அதிகமா அள்ளி விடலாமே.

ஜீவா, எங்கே நம்ம கோயிந்சாமி, இந்த வார பலன் எங்கே?

நேரம் கிடைக்கும்போது அள்ளி விடலாம் பரம்ஸ்...

அப்புறம், கோயிஞ்சாமியை போலிஸ் தேடிகிட்டு இருக்கு.. முடிஞ்சா அடுத்த சனிபெயர்ச்சியில பார்க்கலாம்.. :D :D :D :D :D :D :D

அறிஞர்
25-07-2005, 09:00 AM
ஒரு வாட்டி குஷ்பூ சாக்கெட்டுக்குள்ள கிளியெல்லாம் செருகியிருந்தது.பார்க்கவேண்டியதை தவிர்த்து மற்ற எல்லாத்தையும் சரியா பார்க்கிறாங்கப்பா...

pradeepkt
25-07-2005, 09:00 AM
நேரம் கிடைக்கும்போது அள்ளி விடலாம் பரம்ஸ்...

அப்புறம், கோயிஞ்சாமியை போலிஸ் தேடிகிட்டு இருக்கு.. முடிஞ்சா அடுத்த சனிபெயர்ச்சியில பார்க்கலாம்.. :D :D :D :D :D :D :D
அடுத்த சனிப்பெயர்ச்சிக்கு இன்னும் கொள்ள நாளு இருக்கு சார்.
போலீஸ் தேடினால் என்ன? அவரு இன்னும் வெளியேதானே இருக்காரு.

gragavan
25-07-2005, 09:04 AM
ரொம்ப முக்கியம்...
ஏன்யா பொது அறிவுக் கேள்விகளைக் கவனிங்கன்னா, அந்த அம்மா ஜாக்கெட்டுல இருக்கிற கிளியவா கவனிக்கிறீரு...அத ஏன் கேக்குறீங்க.....வீட்டுல பாத்துக்கிட்டிருந்தப்ப என்னவோ பச்சையாத் தெரிஞ்சது. அது அசிங்கமா அங்குட்டும் இங்குட்டும் தொங்கீட்டு இருந்தது. நானும் என்னோட தங்கையும் அத உத்துப் பாத்து கிளின்னு கண்டுபிடிச்சோம்.

gragavan
25-07-2005, 09:08 AM
அது சரி ... ஜாக்பாட்டுல யார் வெற்றி பெற்றது?
மும்தாஜ் இருந்ததினால அனேகமா ஜெயம் ரவியாத்தான் இருக்கணும்...
ஆமா இந்தக் கேள்வி, என்னாஆஆஆஆ பொது அறிவு ... புல்லரிக்குது சாமியோவ்மும்தாஜா....சும்மா பக்கத்துல நின்னுகிட்டே இருந்தாங்க. ரவியின் அணிதான் ஜாக்பாட் பெற்றது. மும்தாஜும் நல்ல விடைகளை ஜாக்பாட் ரவுண்டுல சொன்னாங்க.

அந்தக் கேள்வி நமக்குப் பொது அறிவா இல்லையோ. நடிக்கனும் வந்தவங்களுக்கு கண்டிப்பா பொது அறிவுதான். தமிழ் சினிமாவுல இருந்துட்டு தெரியலைன்னா எப்படி?

ரவியாவது கிட்டத்தட்ட நெருங்கி வந்தாச்சு. நவராத்திரிக்கும் தில்லானா மோகனாம்பாளுக்கும் ஒரே இயக்குனர். ஆனால் இங்கிலீஷ்காரன் சத்தியராஜ் மகனுக்கு சிவாஜியின ஆரம்ப காலப் படங்களுக்கும் பிற்காலப் படங்களுக்கும் வித்யாசம் தெரியலை. மனோகரான்னு சொல்லீட்டு...அப்புறம் திரிசூலம்ன்னு மாத்துனா எப்படி?

அறிஞர்
25-07-2005, 09:11 AM
மும்தாஜா....சும்மா பக்கத்துல நின்னுகிட்டே இருந்தாங்க. ரவியின் அணிதான் ஜாக்பாட் பெற்றது. மும்தாஜும் நல்ல விடைகளை ஜாக்பாட் ரவுண்டுல சொன்னாங்க.?
விடைகளை நன்னா கவனிச்சு பாத்திருப்பேளே.....

gragavan
25-07-2005, 09:15 AM
விடைகளை நன்னா கவனிச்சு பாத்திருப்பேளே.....பாத்தேன் பாத்தேன் தேன் தேன்

pradeepkt
25-07-2005, 09:20 AM
பாத்தேன் பாத்தேன் தேன் தேன்
அவ்வளோ இனிப்பாய்யா!!!

அறிஞர்
25-07-2005, 09:34 AM
அவ்வளோ இனிப்பாய்யா!!! இனிப்பும் ஜொள்ளும் பிரிக்கமுடியாதது.. என சொல்ல வருகிறீரா...

மன்மதன்
08-08-2005, 01:00 PM
ஜாக்பாட்ல இவ்ளோ சங்கதி இருக்கா.. நான் ஒருதடவை கூட பார்த்ததில்லையே..ஹ்ம்ம்..
ராசியில்லாத
பி.சி.மன்மதன்

pradeepkt
08-08-2005, 01:53 PM
அது யாருய்யா பிசி.. போலீஸ் கான்ஸ்டபிளா...
இந்த மாதிரி ஒரு தலைப்புன்னா, பாஞ்சி வந்து கருத்து சொல்லீருவீங்களே :D

மன்மதன்
09-08-2005, 04:08 AM
பின்னே... கண் கவரும் தலைப்பாஞ்சியாச்சே..:D :D
அன்புடன்
மன்மதன்

mythili
20-09-2005, 06:34 AM
நான் வாரம் தவறாமல் ஜாக்பாட் நிகழ்ச்சி பார்பது உண்டு.
என்ன தான் சொன்னாலும்...இத்தனை மாடல்களில் எப்படி தான் ஜாக்கெட் டிசைன் செய்கிறார்களோ:)

நிகழ்ச்சியில்...ஒரே அணியில் இருக்கும் பலர்...முதலில் ஒரு முறை சொல்லி...அந்த பதில் தவறாக இருந்த போதும் அதையே மறுபடியும் சொல்லும் போது தான் அலுப்பாக இருக்கிறது. :( :(

அன்புடன்,
மைத்து

sarcharan
26-12-2005, 08:51 AM
உமக்கு ஏனய்யா .... ஒரு நல்ல கருத்தை யார் வேணும்னாலும் சொல்லலாம் என்று அவ்வை பாட்டியார் செப்பியுள்ளார்...
இதனை அடியேன் இங்கு நினைவூட்டுகின்றேன்

ரொம்ப முக்கியம்...
ஏன்யா பொது அறிவுக் கேள்விகளைக் கவனிங்கன்னா, அந்த அம்மா ஜாக்கெட்டுல இருக்கிற கிளியவா கவனிக்கிறீரு...

pradeepkt
27-12-2005, 06:12 AM
உமக்கு ஏனய்யா .... ஒரு நல்ல கருத்தை யார் வேணும்னாலும் சொல்லலாம் என்று அவ்வை பாட்டியார் செப்பியுள்ளார்...
இதனை அடியேன் இங்கு நினைவூட்டுகின்றேன்
ஏப்பூ நீங்க குசுப்பூ ஜாக்கெட்டைப் பாக்குறதுக்கு அந்தத் தமிழ்க் கிழவியை வம்பிழுக்கறிங்க...
அறம் பாடிருவாங்க, தெரியும்ல?

அறிஞர்
27-12-2005, 01:24 PM
ஏப்பூ நீங்க குசுப்பூ ஜாக்கெட்டைப் பாக்குறதுக்கு அந்தத் தமிழ்க் கிழவியை வம்பிழுக்கறிங்க...
அறம் பாடிருவாங்க, தெரியும்ல?அறம் பாடினா சரி.. அரத்தை எடுக்காமலிருக்கும் வரை சந்தோசம்தான்