PDA

View Full Version : ஜூலை 23, சனிக்கிழமை மலேசிய செய்திகள்Mano.G.
23-07-2005, 12:51 AM
தற்கொலை படை தீவிரவாதியை சுட்டுக்கொன்றனர் லண்டன் போலீசார்
லண்டனில் தற்கொலைப் படை தீவிரவாதி என்று சந்தேகிக்கப்படும் ஒருவனை போலீசார் சுட்டுக் கொன்றனர். தெற்கு லண்டனின் Stockwell பாதாள ரயில் நிலையத்தில் இச்சம்பவம் நடந்தது.
நேற்று முன்தினம் இரண்டாவது முறையாக லண்டனில் தொடர் குண்டுகள் வெடித்ததையடுத்து அங்கு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று காலை 10 மணியளவில் பாதாள ரயில் நிலையத்தில் சந்தேகப்படும்படியாகத் திரிந்த ஒருவனை போலீசார் சுட்டனர். இதில் அவன் பலியாகிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவத்தையடுத்து அந்த ரயில் நிலையத்திற்குச் சென்ற எல்லா ரயில்களும் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டன. மேலும் அந்த ரயில் நிலையத்தில் இருந்த பயணிகளும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
ஆனால், போலீசார் இச்சம்பவம் குறித்து இதுவரை ஏதும் தெரிவிக்கவில்லை.
--------------------------------------------------------------
லண்டனில் இருக்கும் மலேசியர்கள் எச்சரிக்கை உணர்வோடு இருக்க வேண்டும்
லண்டன் தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக,அங்கு பணிபுரியும் மற்றும் கல்வி கற்கும் மலேசியர்கள் பாதுகாப்பாகவும் எச்சரிக்கை உணர்வோடும் இருக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் Datuk Seri Syed Hamid Albar தெரிவித்தார்.
லண்டனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டாமென எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு அங்கே உள்ள நிலைமை மோசமடைவில்லை எனினும் அங்கு செல்பவர்களுக்கும் பாதுகாப்பும் எச்சரிக்கை உணர்வும் அவசியம் என அவர் மேலும் தெரிவித்தார்.அது மட்டுமன்றி,உலக நடப்புகளையும் நாம் அறிந்துக் கொள்வது மிக அவசியம் என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

லண்டனில் நடந்த முதல் குண்டுவெடிப்பு ஏற்பட்ட பின்,அங்கு சென்ற 5 மலேசியர்களைப் பற்றிய எத்தகவலும் இதுவரை அறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நீர்,மின்சாரம் மற்றும் தொடர்புத் துறை அமைச்சின் 23 பில்லியன் ரிங்கிட் கோரிக்கை
9-வது மலேசிய திட்டத்தின்கீழ்,நீர் தூய்மை நடவடிக்கை தொடர்பான செலவீனங்களுக்காக 23 பில்லியன் ரிங்கிட்டை நீர், மின்சாரம் மற்றும் தொடர்புத் துறை அமைச்சு அரசிடம் கோரியுள்ளது.
சேதமடைந்த குழாய்களையும் அது தொடர்பான இதர கருவிகளையும் மறுசீரமைப்பு செய்ய அந்நிதி
ஒதுக்கீடு தேவைப்படுகின்றது என நீர்,மின்சாரம் மற்றும் தொடர்புத் துறை அமைச்சர் Datuk Seri Dr Lim Keng Yaik PUTRAJAYA-வில் நடைப்பெற்ற நன்னெறி மற்றும் பண்பான செயல்பாடுகள் என்ற கருத்தரங்கை தொடக்கி வைத்தபோது தெரிவித்தார்.

8-வது மலேசிய திட்டத்தில், நாடளவில் நீர் வசதி தொடர்பான 129 திட்டங்களை அமல்படுத்த சுமார் 4 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் நீர் வசதி மேம்பாடு திட்டங்களுக்கு அதிக நிதி தேவைப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வங்கியில் 15 ஆயிரம் ரிங்கிட் கொள்ள
பினாங்கு Jelutong-இல் உள்ள வங்கி ஒன்றில் முகமூடி அணிந்த இரண்டு கொள்ளயர்கள் 15,000 ரிங்கிட் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றதாக Timur Laut மாவட்ட போலிஸ் தலைவர் ACP Hamzah Md Jamil தெரிவித்தார்.
அவ்விருவரும், அவ்வங்கியின் பாதுகாவலர் ஒருவரை தலைகவசத்தால் தாக்கி, அவருடைய துப்பாக்கியை அபகரித்து இத்திருட்டுச் சம்பவத்தை மேற்கொண்டதாக அவர் செய்தியாளர்களிடம்
தெரிவித்தார்.

அச்சம்பவத்தின் பொழுது, அவ்வங்கியில் ஆறு பணியாளர்களும், இரண்டு வாடிக்கையாளர்களும் இருந்தனர் எனவும், ஆனால் அவர்களுக்கு எந்த ஒரு ஆபத்தும் ஏற்படவில்லை எனவும் அவர் மேலும் கூறினார்.
சாலை விபத்தில் இருவர் பழி !!
Kuala Kangsar வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை 260.9-வது கிலோ மீட்டரில் ஏற்பட்ட சாலை விபத்தில், இருவர் உடல் கருகி மாண்டனர்.
இச்சம்பவம் நேற்று அதிகாலையில் ஏற்பட்டதாகவும், அவர்கள் பயணம் செய்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் உள்ள மின்கம்பியில் மோதி தீப்பற்றிக் கொண்டதாக Kuala Kangsar மாவட்ட போலிஸ் தலைவர் Supt Zakaria Pagan தெரிவித்தார்.
அவ்விருâ உடல்களும் பிரேத பரிசோதனைக்காக Kuala Kangsar மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இச்சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தயவு செய்து போலிசாருடன் தொடர்புக் கொள்ளுமாறும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
------------------------------------------------------------
அமெரிக்கா பக்கம் சாய்கிறது இந்தியா : புலம்புகின்றன கம்யூனிஸ்ட் கட்சிகள்
இந்திய வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டு இந்தியா அமெரிக்கா பக்கம் சாய்வதை, இந்திய & அமெரிக்க கூட்டறிக்கை தெளிவாக காட்டுகிறது.
அணு ஆயுத ஒழிப்பு, தீவிரவாத எதிர்ப்பு, ஜனநாயகத்தை பரப்புதல் ஆகியவற்றில் பெரிய முன்னேற்றத்தை இந்த அறிக்கை வெளிக்காட்டவில்லை என கம்யூனிஸ்ட் கட்சிகள் குற்றம் சாட்டின.
அமெரிக்காவுடன் செய்துள்ள ஒப்பந்தம் குறித்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளுடனோ, கம்யூனிஸ்ட் கட்சிகளுடனோ மத்திய அரசு விரிவாக எந்த விவாதமும் நடத்தவில்லை.
ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி வழங்க அமெரிக்கா எந்த வாக்குறுதியும் வழங்கவில்லை.ஜனநாயக விரோத நடவடிக்கைகள், ஒருதலைப்பட்சமாக முடிவெடுப்பது ஆகிய கொள்கைகளை அமெரிக்கா பின்பற்றும் இவ்வேளையில், அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற இந்தியா ஆர்வம் காட்டுவது பொருத்தமில்லை என கம்யூனிஸ்ட் கட்சிகள் தற்போது கடுமையாக சாடி வருகின்றன.
--------------------------------------------------------------
Discovery ராக்கெட்டை 26-ம் திகதி விண்ணில் செலுத்த Nasa திட்டம்
மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு Nasa நிறுவனம் Discovery என்ற ராக்கெட்டை கடந்த 13-ம் திகதி செலுத்த திட்டமிட்டது.
ஆனால், ராக்கெட்டின் எரிபொருள் டாங்கியின் சென்சார் கருவியில் ஏற்பட்ட கோளாரைத் தொடர்ந்து கடைசி நேரத்தில் ராக்கெட் பயணம் ஒத்தி வைக்கப்பட்டது. Discovery ராக்கெட்டில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் வகையில் விஞ்ஞானிகள் இரவு பகலாக ஈடுபட்டனர்.
ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் தேதி பற்றி முடிவு எடுக்கப்படாமல் இருந்தது. தற்போது, ராக்கெட்டில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டதால் அதை வருகிற 26-ம் திகதி விண்ணில் செலுத்த Nasa நிறுவனம் முடிவு செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் நிர்வாகி பில் பார்சன் தெரிவித்தார்.

பருவநிலை உள்பட அனைத்தும் சாதகமாக இருந்தால் அன்று காலை 10.39 மணிக்கு செலுத்தப்படும் என்றும் அதை செலுத்துவதற்கான countdown நாளை தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
லண்டன் குண்டு வெடிப்புக்கும், Al-qaeda அமைப்புக்கும் தொடர்பு இருக்கலாம்
லண்டன் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கும் Al-qaeda அமைப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என Scotland Yard போலீஸ் அதிகாரி Sir Ian Blair தெரிவித்தார்.
குண்டு வெடிப்பை அடுத்து லண்டன் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பிற்கும் Al-qaeda தீவிவராத அமைப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
இதனிடையே, லண்டனில் முக்கிய நகரில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் மக்கள் நடந்து சென்ற வண்ணம் உள்ளனர்.

பல இடங்களில் Scotland போலீசார் சோதனையிட்டு வருகின்றனர். நகர் முழுவதும் பாதுகாப்பு படையினர் ஆயுதம் ஏந்தியபடி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீதிபதியிடம் பாய்ந்த சதாம் உசேன்
ஈராக்கில் சதாம் உசேன் ஆட்சி அகற்றப்பட்ட பிறகு அங்கு அமெரிக்க படைகளின் பாதுகாப்புடன் புதிய ஆட்சி நடைப்பெற்று வருகிறது.
சதாம் உசேன் கைது செய்யப்பட்டு ரகசிய இடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.அவர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இதற்காக,தனி நீதிமன்றமும் அமைக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக அவர் தனது ஆட்சியின்போது ஆயிரக்கணக்கான ஷியா பிரிவினரை கொன்று குவித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை தொடங்கியது. சதாம் உசேன் ரகசிய சிறையிலிருந்து பாக்தாத்தில் உள்ள நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டுகள் அவரிடம் வாசித்து காட்டப்பட்டன.
நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு சதாம் உசேன் ஆவேசத்துடன் பதில் அளித்து தனது செயல்களை அவர் நியாயப்படுத்தியதுடன் எதிர் கேள்வியும் கேட்டார்.தாடியுடனும் முதுமையுடனும் அவர் காணப்பட்டாலும் அவர் சோர்வடையவில்லை.
உரத்த குரலில் எவ்வித பயம் மற்றும் கவலையுமின்றி அவர் பேசினார்.இதை al-arabia தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பியது.
--------------------------------------------------------------
Sania Mirza ஆதிக்கம் தொடர்கிறது
சின்சினாட்டி tennis, இரட்டையர் பிரிவிலும் Sania Mirza ஆதிக்கம் தொடர்கிறது. முன்னணி வீராங்கனைகள் மோதும் W.T.A. tennis தொடர், அமெரிக்காவின் சின்சினாட்டி பகுதியில் நடக்கிறது.
இந்தத் தொடரில் இந்திய வீராங்கனை Sania Mirza பங்கேற்கிறார். ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் அபாரமாக ஜெயித்து முன்னேறிய Sania, நேற்று முன்தினம் இரட்டையர் பிரிவிலும் கலக்கினார்.
இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் சானியா, யூலியானா பெடக் (உக்ரைன்) ஜோடி 5-7, 6-2, 6-0 என்ற செட்களில் சிபிலி பாம்மர் (ஆஸ்திரியா), பீட்டர்சன் (அமெரிக்கா) ஜோடியை வீழ்த்தினர்; இரண்டாம் சுற்றுக்கும் அவர் முன்னேறினர்.
இரண்டாம் சுற்றில் இவர்கள் அமெரிக்காவின் ஏஞ்சலா ஹெய்ன்ஸ், பெத்தானி மேடக் ஜோடியை எதிர்த்து விளையாடுவார்கள்.

நன்றி வணக்கம்மலேசியா.காம்...


மனோ.ஜி

பரஞ்சோதி
23-07-2005, 05:55 AM
நன்றி அண்ணா.

சானியா கால் இறுதிபோட்டியில் தோல்வியடைந்தார் என்பது வருத்தமான செய்தி.

அறிஞர்
23-07-2005, 07:20 AM
ஆம் பரம்ஸ் வருத்தமான செய்திதான்....
-------
கம்யூனிஸ்ட்டுகளின் கூற்றுப்படி... இந்தியா அமெரிக்கா பக்கம் சாய்கிறது என்பது ஏற்றுக்கூடிய விசயமில்லை...
--நன்றி மனோஜி

pradeepkt
23-07-2005, 02:01 PM
இந்த சதாம் உசேன் விவகாரம்தான் ஒரே குழப்பமாக இருக்கிறது.ஆனால் ஒன்று மட்டும் உண்மை. புஷ் இதுபோல் சதாமிடம் மாட்டி இருந்தால், இன்னேரம் நரகத்தில் அவர்தம் முன்னோர்களிடம் உரையாடிக் கொண்டிருந்திருப்பார்.