PDA

View Full Version : ஜூலை 22, வெள்ளிக்கிழமை மலேசிய செய்திகள்



Mano.G.
22-07-2005, 03:29 AM
மலேசிய ரிங்கிட்டின் விலை நிர்ணய மதிப்பு அகற்றப்பட்டது
ஓர் அமெரிக்க டாலருக்கு 3 வெள்ளி 80 காசாக இருந்து வந்த மலேசிய ரிங்கிட்டின் விலை நிர்ணய மதிப்பு அகற்றப்பட்டது.இது உடனடியாக அமலுக்கு வருவதாக நேற்று மாலை BANK NEGARA அறிவித்தது.இனி,மலேசிய ரிங்கிட்,இதர நாணயங்களைப் போலவே புழக்கத்தில் விடப்படும் என்று BANK NEGARA-வின் GABENOR TAN SRI ZETI நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க டாலருக்கு எதிராக சீனாவின் யுவான் நாணயத்தின் விலை நிர்ணயம் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து மலேசியாவும் தனது முடிவை அறிவித்துள்ளது.சீனாவின் யுவான் நாணயம் மதிப்பு அடைந்துவரும் வேளையில் அமெரிக்க டாலரின் மதிப்பு குறந்து வருகிறது.இந்நிலையில்,குறைந்த மதிப்பு கொண்ட நாணயத்தை அதிக விலை கொடுத்து வாங்குவதா என்ற கேள்வி பொருளாதார நிபுணர்கள் மத்தியில் இருந்து வந்தது.எனினும் ரிங்கிட்டின் மதிப்பு மறுபரிசீலனை செய்யப்படாது என BANK NEGARAப் உறுதியாக இருந்து வந்த வேளையில் நேற்று இந்த 3 வெள்ளி 80 காசு விலை நிர்ணயத்தை அகற்றுவதாக ZETI அறிவித்துள்ளார்.
--------------------------------------------------------------
அங்கீகரிக்கப்படாத தனியார் கல்லூரிகள்
2002-ஆம் ஆண்டிலிருந்து கடந்த மே மாதம் வரையில் நாடு முழுவதும் உள்ள அனுமதி அல்லது உரிய லைசன்ஸ் பெறாத 46 தனியார் உயர்கல்விக் கூடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
கிள்ளான் பள்ளத்தாக்கு,Johor Baharu, Ipoh, Taiping, Kuantan, Temerloh, Tuaran, Beaufort, Tawau, Sandakan, Labuan, Manjung, Jitra, Kuantan, Seremban, Melaka, Pulau Pinang, Butterworth, Kulim, Kota Baharu, Kota Kinabalu Kuching ஆகிய இடங்களில் அவை செயல்பட்டு வந்ததாக துணை உயர்கல்வி அமைச்சர் Datuk Fu Ah Kiow தெரிவித்தார்.
அக்கல்லூரிகளில் பயின்று வந்த மாணவர்கள் உடனடியாக அரசு அனுமதி மற்றும் அங்கீகாரம் பெற்ற இதர கல்லூரிகளில் சேர்ந்து கல்வியை தொடர கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட அக்கல்லூரிகளின் நிர்வாகம் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.



வட்டார மருத்துவமனைகளில் சனிக்கிழமைகளில் மட்டுமே அறுவை சிகிச்சை
நாட்டிலுள்ள அனைத்து வட்டார மருத்துவமனைகளும் அவசர சிகிச்சை அல்லாத நோயாளிகளுக்கு சனிக்கிழமைகளில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சர் Datuk Dr Chua Soi Lek தெரிவித்தார்.
சனிக்கிழமை பொது ஊழியர்களுக்கு விடுமுறை என்பதால் நோயாளிகள் காத்திருக்காமல் அந்நாட்களில் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறலாம் என அவர் கூறினார். இதனால் அவசாரமல்லாத அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகள் அதிக நாட்கள் காத்திருக்க தேவையில்லை எனவும் அவர் விளக்கமளித்தார்.
மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் தாதியரின் பற்றாற்கு  ž இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாவும் அவர் கூறினார்.


UMNO-வில் லஞ்ச ஒழிப்பு

இதுவரை லஞ்ச ஒழிப்பு தொடர்பாக துணிச்சலான மற்றும் ஆக்ககரமான நடவடிக்கைகளை அமல்படுத்திய பிரதமர் Datuk Seri Abdullah Ahmad Badawi,தற்போது லஞ்சத்திலிருந்து UMNO-வை முழுமையாக விடுவிக்க உறுதி எடுத்துள்ளார்.
நாட்டின் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய,மக்கள் ஆதரவு கொண்ட UMNO கட்சி தொடர்ந்து பீடுநடை போட, UMNO உறுப்பினர்கள் லஞ்சத்தை உயிர்க்கொல்லியாக நினைத்து அதை ஒழிக்க பாடுபட வேண்டுமென பிரதமர் வலியுறுத்தினார்.
அரசியலில்,லஞ்ச ஒழிப்பு நடவடிக்கை மிகவும் சிக்கலான,சிரமமான செயலாக இருந்தாலும்,தமது உறுதியை கைவிடப் போவதில்லை என 56-வது UMNO பொது மாநாட்டில் பிரதமர் தமதுரையில் தெரிவித்துள்ளார்.


நாள் ஒன்றுக்கு 20 கார்கள் திருடப்பட்டு வருகின்றது
நாட்டில் நாள் ஒன்றுக்கு சுமார் 20 கார்கள் திருடப்படுவதாக தேசிய போலீஸ் தலைவர் Tan Sri Mohd Bakri Omar தெரிவித்தார். இத்திருட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, காப்புறுதி நிறுவனம் நாள் ஒன்றுக்கு சுமார் 1.2 மில்லியன் ரிங்கிட் இழப்பிடு வழங்க நேரிட்டுள்ளது என பொது காப்புறுதி கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் வழி தெரிய வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எனினும் கார் திருட்டுச் சம்பவத்தை ஒழிக்க, போலீஸ் துறை கடும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இது வரையில் சுமார் 23 கார் திருட்டுச் சம்பவங்களை முறியடித்தது மட்டுமல்லாமல் 4,252 நபர்களை கைது செய்துள்ளதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இதனிடையே, இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் சுமார் 4,755 கார் திருட்டுச் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 2,244 வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


அம்னோ பொதுப் பேரவையில் ரத்த தான நிகழ்ச்சி
புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெறும் அம்னோ பொதுப் பேரவையில் மகளிர் பிரிவு ஏற்பாடு செய்திருந்த இரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி எதிர்பார்த்ததை விட பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதாக பொது நலம், மற்றும் சமூக மேம்பாட்டு அமைப்பின் நிர்வாகி Habibah Mohd Yusof தெரிவித்துள்ளார்.
தங்களின் ரத்தத்தைத் தானம் செய்ய அதிகமான நல்லுள்ளம் படைத்தவர்கள் முன் வருவதாக அவர் கூறினார். நேற்று தொடங்கப்பட்ட இந்த ரத்த தான நிகழ்ச்சியில் இதுவரையில் 125 பேருக்கும் அதிகமானோர் ரத்த தானம் செய்திருப்பதாக அவர் விளக்கமளித்தார்.
ரத்தத்தை வழங்க அறைகளின் பற்றாற்குறையால் பலரால் ரத்த தானம் செய்ய முடியாமல் போனதாக அவர் குறிப்பிட்டார். அடுத்த ஆண்டு நடைபெறும் அம்னோ பொதுப் பேரவையின் போது இந்த ரத்த தான நிகழ்ச்சிக்கு இன்னும் அதிகமான அறைகளை அமைக்கவிருப்பதாக அவர் தெரிவித்தார்.
--------------------------------------------------------------
ஏர் இந்தியா விமானத்தில் தீ
டெல்லியில் இருந்து கனடா சென்ற ஏர் இந்தியா விமானம் அம்ரிஸ்தர் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது அதன் ஒரு சக்கரத்தில் தீப்பிடித்துக் கொண்டது. அதிலிருந்து 250 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
நேற்று முன்தினம் நள்ளிரவில் கனடா செல்லும் அந்த விமானம் டெல்லியில் இருந்து பஞ்சாப் மாநிலம் அம்ரிஸ்தர் வந்தது. ராஜசானி சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியபோது அதன் ஒரு சக்கரத்தில் தீப் பிடித்துக் கொண்டது.
விமான நிலைய தீயணைப்புப் படையினர் மிக வேகமாக செயல்பட்டு தீயை அணைத்துவிட்டதால் விமானம் பெரும் விபத்தில் இருந்து தப்பியது. அதிலிருந்த 250 பயணிகளும் அம்ரிஸ்தரிலேயே தரையிறக்கப்பட்டு பின்னர் வேறு விமானம் மூலம் அவர்களை கனடா அழைத்துச் செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட.
--------------------------------------------------------------
தற்கொலைப்படை தாக்குதல் : ஈராக்கில் பத்து பேர் பலி
ஈராக்கில் ராணுவ மையத்திற்கு வெளியே நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் பத்து பேர் கொல்லப்பட்டதுடன் இருபதுக்கும் அதிகமானோர் இத்தாக்குதலில் காயமடைந்தனர். பாக்தாத் மத்திய பகுதியில் உள்ள முத்தானா மாவட்டத்தில் இந்த ராணுவ மையம் அமைந்துள்ளது.
ராணுவ மையத்தின் முன் நின்றுக் கொண்டிருந்த கூட்டத்தில் ஒரு தற்கொலைப் படை தீவிரவாதி திடீரென்று வந்து வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததாக அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் ராணுவ அதிகாரிகளும் தெரிவித்தனர்.
ஈராக்கில் தற்பொழுது தற்கொலை படை தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானில் அணு ஆயுதங்களைத் தீவிரவாதிகள் கைப்பற்றும் அபாயம்

பாகிஸ்தானில் அணு ஆயுதங்களைத் தீவிரவாதிகள் கைப்பற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவிற்கு 4 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய தீவிரவாதிகள் பாகிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்படிப்பட்ட நிலை ஏற்பட்டால் பாகிஸ்தான் தயாரித்து வைத்துள்ள அணு ஆயுதங்கள் அனைத்தும் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டுக்குள் போய் விடும். இது மிகவும் அபாயகரமானது எனவும் தீவிரவாதிகள் அதனைத் தவறான நோக்கத்தில் பயன்படுத்துவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
எனவே, பாகிஸ்தான் அதிபர் முஷாரப் பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுதங்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்தவே இந்தியா விரும்புவதாகவும் ஆனால் அதற்கு முன்னர் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவதைப் பாகிஸ்தான் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சவுதி அரேபியாவில் வசிக்கும் அமெரிக்கர்கள் மீது தாக்குதல் திட்டம்

சவுதி அரேபியாவில் வசிக்கும் அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு உள்ளதாக தெரிய வந்துள்ளது. அவர்கள் எப்படிப்பட்ட தாக்குதலில் ஈடுபட போகிறார்கள் என்பது குறித்து தகவல்கள் கிடைக்க பெறவில்லை.
ஆனால், விரைவில் இத்தாக்குதலில் ஈடுபடவிருப்பதாக தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே, பொது மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அந்நாட்டு அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சவுதி அரேபியாவில் பாதுகாப்பு நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
--------------------------------------------------------------
Arsenal அணியிடம் தோல்வி கண்ட SC Weiz அணி
Austria-வில், SC Weiz மற்றும் Arsenal அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற காற்பந்தாட்டத்தில், Arsenal அணி 5-0 என்ற கோல் எண்ணிக்கையில் SC Weiz அணியை வீழ்த்தியது.
Arsenal அணியின் கோல்களை Mathieu Flamini, David Bentley, Thierry Henry மற்றும் Dennis Bergkamp புகுத்தினார்கள். இவ்வாட்டத்தில் Thierry Henry தலா இரண்டு கோல்களைப் புகுத்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதனிடையே, SC Weiz அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும், இறுதியில் தோல்வியையே அடைந்தது

நன்றி வணக்கம்மலேசியா.காம்

மனோ.ஜி

pradeepkt
22-07-2005, 03:40 AM
செய்திகளுக்கு நன்றி மனோஜி.