PDA

View Full Version : புதுக்கவிதை.



பாரதி
21-07-2005, 05:32 PM
தெவ் கிளவி வேண்டாம்
கெளவை கொண்ட மனம்
ஞிமிறு கொண்ட கனிபோல்
ஞமலியாய்த் திரிய
வெரிந் தில்
ஞெகிழி வைத்தால்
மெய் ஞொள்கல்லாகும்
மெய்யறியும்.

...

மன்மதன்
21-07-2005, 07:44 PM
இந்த கவிதைக்கு நீங்க அர்த்தம் சொல்லித்தான் ஆகணும் பாரதி..
அன்புடன்
மன்மதன்

சுவேதா
22-07-2005, 01:34 AM
ஆமாம் அண்ணா ஒன்னுமே புரியல்ல!

pradeepkt
22-07-2005, 03:23 AM
தெவ் கிளவி வேண்டாம்
கெளவை கொண்ட மனம்
ஞிமிறு கொண்ட கனிபோல்
ஞமலியாய்த் திரிய
வெரிந் தில்
ஞெகிழி வைத்தால்
மெய் ஞொள்கல்லாகும்
மெய்யறியும்.
கடுஞ் (சுடு) சொல் வேண்டாம்
துன்பம் கொண்ட மனம்
வண்டு உள்ளிருக்கும் கனிபோல்
நாயாய்த் திரிய
____________
கொள்ளிக்கட்டை (தீ) வைக்க
உடல் சுருங்கிப் போகும்
ஆனால் உண்மை அறியவரும்.

அரட்டி விட்டீர்கள்..... என்னால் இயன்ற அளவு சொல்லி இருக்கிறேன்.
மீதி ஆண்டவன் அல்லது நீங்கள் விட்ட வழி.

mania
22-07-2005, 04:23 AM
தெவ் கிளவி வேண்டாம்
கெளவை கொண்ட மனம்
ஞிமிறு கொண்ட கனிபோல்
ஞமலியாய்த் திரிய
வெரிந் தில்
ஞெகிழி வைத்தால்
மெய் ஞொள்கல்லாகும்
மெய்யறியும்.

:rolleyes: ஏதோ ஃபாண்ட் ப்ராப்ளம்ன்னு பாத்தா.....ப்ரதீப் அட்டகாசமா ஒரு விளக்கம் கொடுத்திருக்காரே......:)
அன்புடன்
மணியா
(ஏன் பாரதி விளக்கத்தையும் கூடவே தரவில்லை....????):rolleyes:

pradeepkt
22-07-2005, 05:22 AM
:rolleyes: ஏதோ ஃபாண்ட் ப்ராப்ளம்ன்னு பாத்தா.....ப்ரதீப் அட்டகாசமா ஒரு விளக்கம் கொடுத்திருக்காரே......:)
அன்புடன்
மணியா
(ஏன் பாரதி விளக்கத்தையும் கூடவே தரவில்லை....????):rolleyes:
இதென்ன கேள்வி, நம்மைக் கண்டுபிடிக்க வைக்கத்தான்...
ஆனால் வார்த்தைகளை விட அதன் உள்ளிருக்கும் அர்த்தம்தான் பிரமிக்க வைக்கிறது

mania
22-07-2005, 05:35 AM
இதென்ன கேள்வி, நம்மைக் கண்டுபிடிக்க வைக்கத்தான்...
ஆனால் வார்த்தைகளை விட அதன் உள்ளிருக்கும் அர்த்தம்தான் பிரமிக்க வைக்கிறது

:) :) உண்மைதான் ப்ரதீப்........ஆமாம் இந்த பெண்களின் கூந்தலுக்கு இயற்கையாகவே நறுமணம் உண்டா இல்லையா என்ற போட்டிக் கவிதைக்கு விளக்கம் கொடுத்ததும் நீ(ர்)தானா......???:rolleyes: :rolleyes:
அன்புடன்
மணியா.......:D

pradeepkt
22-07-2005, 05:37 AM
:) :) உண்மைதான் ப்ரதீப்........ஆமாம் இந்த பெண்களின் கூந்தலுக்கு இயற்கையாகவே நறுமணம் உண்டா இல்லையா என்ற போட்டிக் கவிதைக்கு விளக்கம் கொடுத்ததும் நீ(ர்)தானா......???:rolleyes: :rolleyes:
அன்புடன்
மணியா.......:D
இந்த நக்கலுதானே வாணாங்கறது.
ஆமா ஆகஸ்ட் 6-7ம் தேதி சென்னையில இருக்கீங்களா?
பிரியன் உங்ககிட்ட பேசினாரா?

mania
22-07-2005, 05:52 AM
இந்த நக்கலுதானே வாணாங்கறது.
ஆமா ஆகஸ்ட் 6-7ம் தேதி சென்னையில இருக்கீங்களா?
பிரியன் உங்ககிட்ட பேசினாரா?

:) இப்போதைக்கு 4ம் 5ம் நான் ஊரில் இல்லை.....அப்போதைக்குத்தான் தெரியும்.....:rolleyes:
அன்புடன்
மணியா.....:)
(இன்னும் பிரியன் பேசவில்லை ):angry:

karikaalan
22-07-2005, 06:12 AM
பாரதிஜி

பதவுரை, பொழிப்புரை இல்லாமல் புரிந்து கொள்வது கடினமே. ப்ரதீப்ஜிக்கு நன்றிகள்.

கவிதை நன்றே!

===கரிகாலன்

aren
22-07-2005, 10:17 AM
கவிதை நன்றாக இருக்கிறது பிரதிப் அவர்களின் புண்ணியத்தில் கொஞ்சம் புரிந்த்ததால்.

gragavan
22-07-2005, 10:58 AM
அப்பா! தமிழில் மறந்த சொற்கள் கூட பாரதியண்ணனுக்கு நிறைந்த சொற்கள் என்று இன்று கண்டு கொண்டேன்.

பிரதீப், எங்கயோ போயிட்டீங்க. நக்கீரரு ஒங்க ஊரா? ஆமா நீங்க மதுரக்காரருதான.

kavitha
22-07-2005, 11:02 AM
விடுகதை போல் உள்ளது. சிலேடையில் விளையாடிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

எனக்கு தீயினாற் சுட்டபுண்.... குறள் தான் நினைவுக்கு வருகிறது!
மெய் பொருளை பாரதி தான் சொல்லவேண்டும்

"பழிச் சொல்லைப் பெற்ற உள்ளம்
வண்டு குடை மாவாய்

புலனாய்வுக் கொண்ட நெஞ்சம்
ஞானம் நிறை தேனாய்


நெஞ்சத்தீ வேம்பே
வீணாய் ஏன் வம்பே?
தேற்றல்தான் பண்பே!
உறுதிகொள் நெஞ்சே! "

மன்மதன்
22-07-2005, 01:12 PM
:) இப்போதைக்கு 4ம் 5ம் நான் ஊரில் இல்லை.....அப்போதைக்குத்தான் தெரியும்.....:rolleyes:
அன்புடன்
மணியா.....:)
(இன்னும் பிரியன் பேசவில்லை ):angry:

6-7 ஆ.. நான் சென்னையில் இருக்க முயற்சிக்கிறேன்...
அன்புடன்
மன்மதன்

சுவேதா
22-07-2005, 01:42 PM
மிகவும் அருமையான கவிதை அண்ணா வாழ்த்துக்கள்! மேன்மேலும் எழுதுங்கள் அண்ணா! நன்றி ப்ரதீப் அண்ணா!

பாரதி
22-07-2005, 05:33 PM
தெவ் = பகை
கிளவி = சொல்
கெளவை = பொறாமை
ஞிமிறு = வண்டு
ஞமலி = நாய்
வெரிந் = முதுகு
ஞெகிழி = கொள்ளிக்கட்டை
ஞொள்கல் = இளைத்தல்
மெய் = உடல் , உண்மை

முதலில் நண்பர்கள் அனைவரும் என்னை மன்னிக்க வேண்டும். என்னைப் பொறுத்த வரை புரியாமல் ஒரு கவிதை எழுத வேண்டும் என்கிற எண்ணம் இல்லை. தற்செயலாக ஒரு புத்தகத்தில் கண்ட இந்த வார்த்தைகளைக் கண்டதும் வியப்படைந்தேன். இது போல ஆயிரமாயிரம் தமிழ் வார்த்தைகள் நாமறியாமலும், புழக்கத்தில் இல்லாமல் இருக்கக்கூடும். நான் படித்த வார்த்தைகளை ஒன்று சேர்த்து எழுதியதுதான் இது. நான் எதிர்பார்ப்பது என்னவென்றால் பழந்தமிழ் சொற்களை அவ்வப்போது அறிந்து கொள்ள யாராவது உதவ மாட்டார்களா என்பதுதான். எனவே படிப்பவர்கள் இந்த கவிதைகளின் பொருள் என்ன என்று கொஞ்சம் சிந்திக்கட்டுமே என்றுதான், வேண்டுமென்றேதான் இதைப் பதித்தேன்.

கிட்டத்தட்ட மிகச்சரியாக கண்டுகொண்ட பிரதீப்புக்கு வாழ்த்துக்கள்.

பதிவைப் படித்து தவறாமல் கருத்துக்கள் தந்த மன்மதன், மணியா அண்ணா, சுவேதா,அண்ணல், ஆரென், கவிதா, இராகவன் ஆகியோருக்கு மனப்பூர்வமான நன்றி..

mania
23-07-2005, 06:17 AM
:D :D ரபவாலிய்யை ராபதி....... ஙாந்க தாப்புக்கறோம்.....தம்மவங்களுக்கு ருபியலைன்னு வகலை டபாதே.....ரிபபீத் நாத் ரியுக்கானே.....ழொமியை தேப்பிடறோம்.....:D
அன்புடன்
ணமியா.....:D

அறிஞர்
23-07-2005, 07:24 AM
வாழ்த்துக்கள் பாரதி... தமிழ் மொழியில் நாம் பயன்படுத்தாத சொற்கள் பல உண்டு..... இங்கு கொடுத்த பதிப்பு அருமை.. இன்னும் தொடருங்கள்.. விளக்கத்துடன்..
--------
என்ன மணியா.... ஏதோ.... சகட்டு மேனிக்கு கிறுக்கியது போல் உள்ளது.. அதற்கு விளக்கம் சொல்ல பிரதீப்பை அழைக்க வேண்டுமோ

pradeepkt
23-07-2005, 02:02 PM
அப்பா! தமிழில் மறந்த சொற்கள் கூட பாரதியண்ணனுக்கு நிறைந்த சொற்கள் என்று இன்று கண்டு கொண்டேன்.

பிரதீப், எங்கயோ போயிட்டீங்க. நக்கீரரு ஒங்க ஊரா? ஆமா நீங்க மதுரக்காரருதான.
நான் இன்னும் ஹைதராபாதிலதானய்யா இருக்கேன்.நன்றி...

pradeepkt
23-07-2005, 02:05 PM
:D :D ரபவாலிய்யை ராபதி....... ஙாந்க தாப்புக்கறோம்.....தம்மவங்களுக்கு ருபியலைன்னு வகலை டபாதே.....ரிபபீத் நாத் ரியுக்கானே.....ழொமியை தேப்பிடறோம்.....:D
அன்புடன்
ணமியா.....:D இதுக்கும் நாந்தானா?சரி சொல்லிடுறேன்...
பரவாயில்லை அறிஞரே, உங்க அணியினருக்கு நல்ல தமிழ் புரியலைன்னு கவலைப் படாதீங்க... (சீடன்) பிரதீப்தான் இருக்கானே... மொழியைக் கத்துக் கொடுத்திருவோம்...
அன்புடன்,
பெருந்தலை மணியா

பிரசன்னா
09-09-2005, 06:14 PM
இந்த கவிதைக்கு நீங்க அர்த்தம் சொல்லித்தான் ஆகணும்

பாரதி
10-09-2005, 06:49 AM
இந்த கவிதைக்கு நீங்க அர்த்தம் சொல்லித்தான் ஆகணும்

அன்பு நண்பரே...
முழுப்பதிவையும் படிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன். நன்றி!

பிரசன்னா
10-09-2005, 12:29 PM
மன்னிப்பு கோருகிறேன்

ஆதவா
07-01-2007, 01:43 PM
தெவ் கிளவி வேண்டாம்
கெளவை கொண்ட மனம்
ஞிமிறு கொண்ட கனிபோல்
ஞமலியாய்த் திரிய
வெரிந் தில்
ஞெகிழி வைத்தால்
மெய் ஞொள்கல்லாகும்
மெய்யறியும்.

அய்யா!! இந்த ஆட்டத்துக்கு நான் வர்ல.. என்னங்க சொல்லவரீங்க. புதுக்கவிதைன்னு பார்த்த, ரெம்ம்ம்ம்ப பழைய கவிதை மாதிரி இருக்கே!!!!

அர்த்தம் படிச்சேன்!!! யப்பா!!! சாமி..

ஷீ-நிசி
07-01-2007, 01:57 PM
சத்தியமா புரியல

இளசு
07-01-2007, 07:54 PM
பாரதியின் கவிதையும்
பிரதீப்பின் பொழிப்புரையும்
கவிதாவின் பின் கவிதையும் ..
மணியாவின் கட்டப்பஞ்சாயத்தும்...
எல்லாமே அருமை..

நன்றிகள்....


பாரதி, பழக்கத்தில் இருந்து மறைந்த சொற்களைக் கொண்டு
தொடுத்த ஆழ்ந்த பொருள் கொண்ட இக்கவிதையும்
புதுக்கவிதையே... பாராட்டுகள்...


முன்றில், கண்டொளி (விளையாட்டு), கிலுக்கி என என்னைக் கவர்ந்த பழைய சொற்கள் - இன்று அவ்வளவாய் பயன்படுத்தப்படாத சொற்கள் நிறைய உண்டு..

கிலுக்கி என்ற சொல்லைப் புரிந்தவுடன் ஒரு கவிதையே அத்தலைப்பில் எழுதிய நினைவு...

நண்பர்களுக்காக இன்னொரு சொற்றொடர்..
சிலப்பதிகாரத்தில் இளங்கோ சொன்னது -
குமரி வாழை...

இதன் பொருள் சொல்லுங்கள் பார்ப்போம்..

ஓவியா
07-01-2007, 10:47 PM
பாரதியண்ணா கவிதை மிக அருமையோ அருமை
தமிழின் சுவையோ சுவைதான்

சான்றோர் பிரதீபுக்கு நன்றி......(உங்கள் விளக்கத்தினால் மட்டுமே கவிதையை முழுமையாய் உணர்ந்தேன்)

மணியா அங்களின் லூட்டியும் அசத்தல்

நன்றி மக்களே

அமரன்
18-03-2008, 09:34 AM
நண்பர்களுக்காக இன்னொரு சொற்றொடர்..
சிலப்பதிகாரத்தில் இளங்கோ சொன்னது -
குமரி வாழை...
இதன் பொருள் சொல்லுங்கள் பார்ப்போம்..
யாராவது சொல்லுங்களேன்..

திகைப்பில் ஆழ்த்திய சொல்லாழம்+சொல்லாளுமை கவிதையில்.
நன்றி பாரதி அண்ணா.

சிவா.ஜி
18-03-2008, 10:35 AM
குலை தள்ளா வாழைமரமோ...?(சில வாழைமரங்கள் குலை தள்ளுவதில்லை)

அமரன்
18-03-2008, 06:52 PM
குலை தள்ளா வாழைமரமோ...?(சில வாழைமரங்கள் குலை தள்ளுவதில்லை)
சரிதான் சிவா. இதோ இங்கே உள்ளது.
http://www.tamilmantram.com/vb/showpost.php?p=221055&postcount=11

பாரதி
22-03-2008, 07:36 AM
கருத்துக்கள் தந்த ஆதவா, ஷீ-நிசி, அண்ணா, ஓவியன், அமரன் ஆகியோருக்கு நன்றி.