PDA

View Full Version : !



பாரதி
21-07-2005, 05:29 PM
சில நேரங்களில் கணினிகளில் நம்மை அறியாமலே செய்யும் தவறுகளை களைய முற்படும் போது சில புதிய வழிமுறைகள் நமக்கு தெரியவரும். அல்லது சில புத்தகங்களில் சில சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கூறப்பட்டிருக்கும். அவற்றை அவ்வப்போது இங்கே பகிர்ந்து கொண்டால் எப்போதாவது சிக்கலில் மாட்டிக்கொள்பவர்களுக்கு உதவியாக இருக்கக்கூடுமே...!

1. லதா எழுத்துரு:

விண்டோஸ் - 98ல் சில தினங்களுக்கு முன்பு வரை தெளிவாக தெரிந்த சில தளங்களின் தமிழ் எழுத்துருக்கள் சில திடீரென்று கட்டம் கட்டமாக தெரிய ஆரம்பித்தன. உதாரணமாக தினமலர், தினமணி போன்ற பத்திரிக்கைகளில் பல செய்திகள் குழம்பிக் காணப்பட்டன. விண்டோஸ் மீடியா பிளேயரில் உள்ள எழுத்துக்கள் எல்லாம் கட்டங்களாக மட்டுமே காட்சி அளித்தன. என்ன காரணமாக இருக்கும் என்று ஆராய ஆரம்பித்தோம். கடைசியில் நாங்கள் கண்டுபிடித்த அந்த பிரச்சினை என்ன தெரியுமா..? யுனிக்கோட் லதா எழுத்துருதான்! அந்த எழுத்துருவை நீக்கிய பின்னர் எல்லாத்தளங்களிலும் எழுத்துருக்கள் நன்றாக தெரிகின்றன. நான் கூறிய இந்த பிரச்சினை விண்டோஸ் -98ல் வந்தது. மற்ற இயங்குதளங்களில் தொல்லை தருகிறதா எனத் தெரியவில்லை.

2. இண்டர்நெட் எக்ஸ்புளோரரில் பெயர்:

புதிய பதிப்பு இண்டர்நெட் எக்ஸ்புளோரர்களை நிறுவும் போது சில சமயங்களில் அவற்றின் டைட்டில் பார்களில் (Title Bar) அந்த பதிப்புகளை இலவசமாக வழங்கும் நிறுவனங்களின் பெயர்களை சேர்த்து விடுவதுண்டு. உதாரணமாக " Internet Explorer - Provided by XYZ" என்று இருக்கக்கூடும். அதை நீக்கி சாதாரணமான எக்ஸ்புளோரராக மாற்ற வழி:

[ குறிப்பு: ரெஜிஸ்ட்ரியைக் கையாளும் போது மிக கவனமாக இருக்கவும். சிறு தவறு கூட கணினியை இயங்கா நிலைக்கு கொண்டு சென்று விடக்கூடும். தொடரும் ஆங்கில வார்த்தைகளுக்கு மன்னிக்கவும். ]

Goto Start >> Run>>
Type regedit
Goto HKEY_CURRENT_USER\Software|Microsoft|Internet explorer|Main
In the Right panel search for ' Window Title'.
You must see the title name or brand next to this string. Delete the string and exit from the RegistryEditor.

thempavani
22-07-2005, 02:16 AM
1. லதா எழுத்துரு:

விண்டோஸ் - 98ல் சில தினங்களுக்கு முன்பு வரை தெளிவாக தெரிந்த சில தளங்களின் தமிழ் எழுத்துருக்கள் சில திடீரென்று கட்டம் கட்டமாக தெரிய ஆரம்பித்தன. உதாரணமாக தினமலர், தினமணி போன்ற பத்திரிக்கைகளில் பல செய்திகள் குழம்பிக் காணப்பட்டன. விண்டோஸ் மீடியா பிளேயரில் உள்ள எழுத்துக்கள் எல்லாம் கட்டங்களாக மட்டுமே காட்சி அளித்தன. என்ன காரணமாக இருக்கும் என்று ஆராய ஆரம்பித்தோம். கடைசியில் நாங்கள் கண்டுபிடித்த அந்த பிரச்சினை என்ன தெரியுமா..? யுனிக்கோட் லதா எழுத்துருதான்! அந்த எழுத்துருவை நீக்கிய பின்னர் எல்லாத்தளங்களிலும் எழுத்துருக்கள் நன்றாக தெரிகின்றன. நான் கூறிய இந்த பிரச்சினை விண்டோஸ் -98ல் வந்தது. மற்ற இயங்குதளங்களில் தொல்லை தருகிறதா எனத் தெரியவில்லை.


ஆஹா இவர்தானா பிரச்சனை..கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக நான் இந்தக் கட்டங்களோடு போராடிக்கொண்டிருக்கிறேன்......பாரதி அண்ணா நல்ல நேரத்தில் உதவி செய்தீர்கள்..மிக்க நன்றி...

சுவேதா
22-07-2005, 02:31 AM
அண்ணா முன்பு தமிழ் மன்றமோ வேறு தமிழ் வெப் சைட் எடுத்தால் அது கீழ் டைட்டில் பாரில் வடிவாக தமிழிழ் தெரிந்தது ஆனால் தற்போது கட்டம் கட்டம் தெரிகின்றதே ஏன்...?

thempavani
22-07-2005, 09:22 AM
பாரதி அண்ணா அந்த லதா எழுத்துருவை அழித்துவிட்டேன்..தற்போது எனது இணைய பக்கங்கள் எவ்வித பிரச்சனையுமின்றி தெரிகின்றன..தங்கள் ஆலோசனைக்கு நன்றி..

பாரதி
22-07-2005, 09:43 AM
தேம்பாவின் பிரச்சினை நீங்கியது குறித்து மிக்க மகிழ்ச்சி.

சுவேதா.. உங்கள் பிரச்சினை என்ன என்பதை இன்னும் கொஞ்சம் தெளிவாக கூறுங்கள். விடை காண முயற்சிப்போம். உங்கள் கணினியில் உபயோகிக்கும் இயங்குதளம் எது? உலாவி எது என்பதையும் குறிப்பிடுங்கள். முடியுமெனில் பிரச்சினை வரும் தளங்களின் பக்கங்களின் படங்களை தந்தால் மிகவும் உதவியாக இருக்கும்.

thempavani
22-07-2005, 10:19 AM
அண்ணா சுவேதா பிரச்சனை எனக்கும் உள்ளது...நான் இணைய பக்கம் திறந்ததும், டைட்டில் பாரில் அந்த இணைய பக்கத்தின் தலைப்பு யுனிகோடில் இருந்தால், அது கட்டம் கட்டமாகத் தெரிகிறது...நான் விண்டோஸ் எக்ஸ்.பி. உபயோகிக்கிறேன்..உலாவி ஐ.இ.

Iniyan
22-07-2005, 11:07 AM
இந்த லதா எழுத்துருவை நீக்க கண்ட்ரோல் பேனல் போய் எழுத்துரு போல்டரை திறந்து அங்கிருக்கும் எழுத்துருவை அழித்தால் போதுமா??? இல்லை வேறு ஏதும் செய்ய வேண்டுமா???

thempavani
22-07-2005, 11:16 AM
அழித்தால் போதும் அண்ணா...அந்தக் கட்டங்கள் எல்லாம் மாறிவிடுகிறது...

சுவேதா
22-07-2005, 11:54 AM
அண்ணா சுவேதா பிரச்சனை எனக்கும் உள்ளது...நான் இணைய பக்கம் திறந்ததும், டைட்டில் பாரில் அந்த இணைய பக்கத்தின் தலைப்பு யுனிகோடில் இருந்தால், அது கட்டம் கட்டமாகத் தெரிகிறது...நான் விண்டோஸ் எக்ஸ்.பி. உபயோகிக்கிறேன்..உலாவி ஐ.இ.

ஆமாம் அண்ணா அக்கா சொல்வது மாதிரித்தான் என்னுடையதும்.

பாரதி
22-07-2005, 05:44 PM
இந்த லதா எழுத்துருவை நீக்க கண்ட்ரோல் பேனல் போய் எழுத்துரு போல்டரை திறந்து அங்கிருக்கும் எழுத்துருவை அழித்தால் போதுமா??? இல்லை வேறு ஏதும் செய்ய வேண்டுமா???

அழித்தால் போதும் இனியன். வேண்டுமெனில் ஒரு முறை "ரிப்ரெஷ்" செய்யுங்கள்.

அன்பு சுவேதா, தேம்பாவுக்கு சரியாகி விட்டதாக சொன்னார்களே..! அவர்களுக்கு சரியாகி விட்டதா இல்லையா..? நீங்கள் லதா எழுத்துருவை நிறுவி இருந்தால் அதை நீக்கிப்பார்த்தீர்களா..?

poo
25-07-2005, 06:29 AM
இதுபோன்ற குறிப்புகள் நிச்சயம் பெரிதும் உதவிகரமாக இருக்கும்

மிக்க நன்றி நண்பரே..

(தலையிடம் என் எண் வாங்கிக் கொள்ளுங்கள்.. அல்லது தனிமடலில் அனுப்புகிறேன்..)


தொடருங்கள் இப்பதிவினை!


நமது வட்டார மொழியை (regional ==> indic) நிறுவினாலே டைட்டில் பாரில் நம் மன்றத்து பெயர் கட்டம் கட்டமாக தெரியவில்லை!!

mania
25-07-2005, 06:50 AM
[QUOTE]
இதுபோன்ற குறிப்புகள் நிச்சயம் பெரிதும் உதவிகரமாக இருக்கும்

மிக்க நன்றி நண்பரே..

(தலையிடம் என் எண் வாங்கிக் கொள்ளுங்கள்.. அல்லது தனிமடலில் அனுப்புகிறேன்..)


:D:) :D கொடுத்தாச்சுப்பா:) இன்னும் பேப்பர்லதான் போடலை....ஹி....ஹி....ஹி....):D
அன்புடன்
மணியா....

poo
25-07-2005, 11:04 AM
நன்றி தலை...

(அது வேலை செய்யாமல் போறதுக்குள்ள எல்லார்கிட்டயும் பேசிடனும் பாருங்க... ஹிஹி!!)

பாரதி
29-07-2005, 06:10 PM
உங்களுக்கு சொந்தமான கணினியில் உங்கள் பெயரை பதிக்க ஆசைப்படுகிறீர்களா..?

புதிய, பழைய கணினிகள் வாங்கும் போது, சிலவற்றில் நிறுவப்பட்டுள்ள இயங்குதளங்களில், நிறுவனத்தின் பெயரையோ அல்லது வேறு பெயரையோ பதித்துவிடுவதும் உண்டு. உங்களது My Computer ஐகானை வலதுபுறம் சுட்டி, பிராப்பர்ட்டீஸ் என்பதை தேர்வு செய்தால் Registered to என்பதற்கு கீழே இதைக்காணலாம். உதாரணமாக Compaq அல்லது Genith என்று இருக்கும்.

உங்களுக்கு சொந்தமான கணினியில் உங்கள் பெயரை பதிக்க ஆசைப்படுகிறீர்களா..? மிகவும் எளிதுதான். விண்டோஸ் NT/2000/2003/XP இயங்குதளங்களை உபயோகிப்பவர்கள் C:\Windows\System32\OEMInfo.ini என்ற கோப்பையும், விண்டோஸ் 98/ME உபயோகிப்பவர்கள் C:\Windows\System\OEMInfo.ini என்ற கோப்பையும் "நோட்பேட்" உதவியுடன் திறக்கவும். அந்த கோப்பில் "Manufacturer = ********** company" என்று இருப்பதில் நட்சத்திரக்குறிகள் இருக்கும் இடத்தில் இருக்கும் எழுத்துக்களை நீக்கி விட்டு உங்களுக்கு பிடித்த பெயரைப் பதியுங்கள். கோப்பை சேமித்து மூடி விடுங்கள். உடனடியாக உங்களுக்கு மாற்றம் தெரியும்.

smaiva
01-08-2005, 03:39 PM
எனது கணினியை எப்படி முழுமையாக தமிழில் மாற்றுவது? ஏதாவது வழிமுறைகள் உள்ளனவா?

பாரதி
01-08-2005, 05:04 PM
ஏற்கனவே இதற்கான வழிமுறைகளை பழைய மன்றத்தில் முத்து பதிந்துள்ளார். பழைய மன்றத்தில் தேடிப்பாருங்கள். உங்கள் இயங்குதளம் விண்டோஸ் எக்ஸ்-பி என்றால் இது சாத்தியம்தான்.

smaiva
02-08-2005, 03:23 PM
எனது இயங்குதளம் விண்டோஸ் எம்-இ பழைய மன்றத்தில் எந்தப் பகுதியில் உள்ளது? தேடியும் கிடைக்கவில்லை!

பாரதி
02-08-2005, 05:33 PM
இந்த சுட்டியில் பாருங்கள். ஒரு வேளை உங்களுக்கு உதவக்கூடிய தகவல்கள் கிடைக்கலாம்.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=3219

gragavan
05-08-2005, 05:17 AM
நிறைய ஸ்பைவேர்கள் வருகின்றனவே. திடீர் திடீரென்று சின்னச் சின்ன விண்டோஸ்களில் முளைத்து இடையூறு செய்கின்றனவே! என்ன செய்வது?

pradeepkt
05-08-2005, 05:40 AM
மைக்ரோசாப்டின் ஆண்ட்டிஸ்பைவேர் நிறுவுங்கள்.
உங்கள் இப்போதைய பெரும்பாலான பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.
புதிதாக இதைவிட அதிகப்படியான பிரச்சினைகள் வந்தால் அடியேன் பொறுப்பல்ல.

baranee
05-08-2005, 02:30 PM
என்ன மைக்ரோசாப்டுக்கு விளம்பரம் பண்ணறீங்க போல இருக்கு... :-)
மைக்ரோசாப்டின் ஆண்ட்டிஸ்பைவேர் நல்லாத்தான் இருக்கு உபயோகிச்சு பாருங்க.
ராகவன் , இது என்ன உங்க அலுவலக கணினியிலா இப்படி நடக்குது ?

பாரதி
05-08-2005, 04:59 PM
நண்பர்கள் தந்திருக்கும் குறிப்பு போன்று மேலும் ஒரு எளிதான வழிமுறை வேண்டுமென்றால் Adaware அல்லது Spybot போன்ற இலவச மென்பொருட்களை பதிவிறக்கி உபயோகித்துப்பாருங்கள்.

gragavan
05-08-2005, 05:59 PM
இல்லை. அலுவலகத்தில் இல்லை. வீட்டில் இருக்கும் கணிணியில்தான்.