PDA

View Full Version : மொழி பெயர்ப்புக் கவிதைகள் - 4.



kavitha
21-07-2005, 03:27 AM
ஞானமும் நல்வாழ்க்கையும்
-----------------------


......
.....
.....
.....

என்னிடம் மூன்று நிதியங்கள் உண்டு.
நான் மதித்துப் போற்றுபவை.
முதலாவது கழிவிரக்கம்.
இரண்டாவது சிக்கனம்.
மூன்றாவது என்னை முன்னிறுத்திக்
காட்டிக் கொள்ளத்
துணிவில்லாதிருப்பது.


கழிவிரக்கமுடையவர்
வீரத்தோடிருக்க முடியும்.
சிக்கனமானவர்
பெரும்படியாயிருக்க முடியும்.
முன்னிறுத்துக் காட்டிக் கொள்ளாதவர்
நிறைவான தலைவர்களாக முடியும்.

கழிவிரக்கமற்ற வீரம்
சிக்கனமற்ற தருமம்
எளிமையில்லாத லட்சியங்கள்
இவை கொண்டோர் அழிவது நிச்சயம்.

இரக்கமுள்ளவர் தாக்குதலில் வெல்வார்.
தற்காப்பில் உறுதியாயிருப்பார்.
ஒருவரைக் காப்பாற்ற இருக்கும்போது
சொர்க்கம் இரக்கத்துடனே காப்பாற்றுகிறது.

- லா வோத் சூ


.

மன்மதன்
20-08-2005, 07:28 AM
இரக்கமுள்ளவர் தாக்குதலில் வெல்வார்.
தற்காப்பில் உறுதியாயிருப்பார்.
ஒருவரைக் காப்பாற்ற இருக்கும்போது
சொர்க்கம் இரக்கத்துடனே காப்பாற்றுகிறது.

- லா வோத் சூ

கவிதை அருமை.. அப்படியே விளக்கமும் கொடுத்தால் நன்றாக இருக்கும்..
அன்புடன்
மன்மதன்

kavitha
22-08-2005, 07:22 AM
கவிதை அருமை.. அப்படியே விளக்கமும் கொடுத்தால் நன்றாக இருக்கும்..
அன்புடன்
மன்மதன்

இரக்கப்படுவதற்கு சில நல்ல குணங்களாவது இருக்கவேண்டும்.
இராவணனைக் கொல்லும் முன் அவனுக்குத் திருந்த பல சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டன.
ஆனாலும் அவன் இரக்கமற்றவனாக இருந்ததால்தான் தன்னைக்காப்பாற்றிக்கொள்ளமுடியாமல் போயிற்று.

கவிதையின் சாராம்ச பொருளாக என்னறிவுக்கு எட்டியது இது:-

இங்கே மூன்று பொருள்களை முன் வைக்கிறார் ஞானி.

கழிவிரக்கம்: தன்மேலே தான் இரக்கப்படுவது. தனது கையறு நிலையை நினைத்து தன்னைத்தானே நொந்துக்கொள்வது.

சிக்கனம்: விரையம் செய்யாததே சிக்கனம்.

தான் என்றில்லாமல் இருப்பது: தன்னால் தான் யாவும் நடக்கிறது என்ற இறுமாப்பு இல்லாதிருப்பது.


இந்த மூன்றில் முதல் ஒன்றின் மீது எனக்கு அலாதியான விருப்பும் உண்டு, வெறுப்பும் உண்டு. ஆனால் இக்கவிதை படித்த பிறகு ஆச்சரியத்தில் அதிர்ந்து போனேன். அதாவது இதற்குமுன் கழிவிரக்கம் கோழையின் அடையாளம் என்றிருந்தேன். நமது நம்பிக்கையை அது பொசுக்கிப்போடுவதாகவும் ஆற்றலை அபகரிப்பதாகவும் தோன்றும். ஆதலினாலே பச்சாதாபத்திற்கு இடமளிக்காவண்ணம் கழிவிரக்கத்தில் கவனமாய் இருந்ததுண்டு.

இக்கவிதையின் இரண்டாம் பத்தியை நோக்கிய பின்னர், இவை தெளிவாக விளங்கிற்று:

எந்த அளவிற்கு இரக்கம் உற்றிருக்கிறோமோ... அந்த அளவிற்கு வீரத்தோடு இருக்கிறோம்
எந்த அளவிற்கு சிக்கனமாய் இருக்கிறோமோ... அந்த அளவிற்கு அளிக்கவல்லவர்களாய் இருக்கிறோம்
எந்த அளவிற்கு அடக்கமாய் இருக்கிறோமோ... அந்த அளவிற்கு உயர்த்தப்படுகிறோம்


யோசித்து பாருங்கள். 1 லி பாத்திரத்தில் 1 லி பிடித்தால் தான் அது நிறைவு. ஆனால் அரை லிட்டரிலேயே அது நிறையவேண்டும் எனில் பாத்திரம் அரை லிட்டராக இருந்தால் தானே சாத்தியம்!

நமது தேவைகளைக் குறைத்துக்கொள்ளும்போது நமக்கு எல்லாமே நிறைவாய் இருக்கின்றது. எத்தனை அருமையான வாக்கு!
யாரும் இதுவரை சொல்லாததல்ல.. "ஆசையே துன்பத்திற்கு காரணம்" என்றார் புத்தர்.
ஆனால் ஆசையே படக்கூடாது என்பதல்ல இவர் வாதம்.
நிறைவு என்ப்து ஆவலில் அல்ல பூர்த்தியில் இருக்கிறது என்கிறார் இவர்.

இப்போதோ அத்தனைக்கும் ஆசைப்படு என்கின்றனர்! அது அவரவர் சாமர்த்தியம்!

தாக்குவது மட்டும் தெரிந்தால் போதுமா? தற்காப்புடனும் இருக்கவேண்டுமல்லவா? நம்மிடம் எத்தனை ஆயுதங்கள் இருந்தாலும் நம்மைக் காப்பாற்றிக்கொள்ளவேண்டுமாயின் நாமும் அந்தத்தாக்குதலுக்கு தயாராய் இருக்கவேண்டும்.

எதிரெதிர் என்பது வேறு வேறு அல்ல; ஒன்றினுள்ளே தான் இரண்டும்.

Iniyan
24-08-2005, 01:12 PM
எந்த அளவிற்கு இரக்கம் உற்றிருக்கிறோமோ... அந்த அளவிற்கு வீரத்தோடு இருக்கிறோம்
எந்த அளவிற்கு சிக்கனமாய் இருக்கிறோமோ... அந்த அளவிற்கு அளிக்கவல்லவர்களாய் இருக்கிறோம்
எந்த அளவிற்கு அடக்கமாய் இருக்கிறோமோ... அந்த அளவிற்கு உயர்த்தப்படுகிறோம்


இதே போல கீதையிலும் படித்ததாக ஞாபகம். அருமை. கவிதை மட்டுமல்ல. தெளிவான எளிதான விளக்கமும் தான். நன்றி கவிதா.