PDA

View Full Version : ஜூலை 21, வியாழக்கிழமை மலேசிய செய்திகள்



Mano.G.
21-07-2005, 01:08 AM
PTK தேர்வு விகிதம் அதிகரித்துள்ளது - பிரதமர்
கடந்த வருடம் PTK என அழைக்கப்படும் Competency Level Appraisal தேர்வு எழுதிய 359,454 பொது ஊழியர்களில் 237,377 பேர் தேர்ச்சி பெற்றள்ளதாகவும், மேலும் அவ்வெண்ணிக்கையில் 13.7 விழுக்காட்டினர் சிறப்பு தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் பிரதமர் Datuk Seri Abdullah Ahmad Badawi.
தற்போது பதவியில் இருக்கும் பொது ஊழியர்களின் திறன்களை கண்டறிதல் மற்றும் அவர்களின் திறமைகளை மேலும் அதிகரித்தல் ஆகியவையேPTK தேர்வின் முக்கிய நோக்கம் என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், PTK தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தகுந்த திறமைகளை பெற்றிருப்பதாகவும், தேர்ச்சி பெறாதவர்கள் இன்னும் தங்களை உயர்த்திக்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
--------------------------------------------------------------
Datuk Seri Rafidah Aziz-வின் உற்சாகமான பதில்
நேற்று முன்தினம் நடந்த UMNO பொது மாநாட்டில் AP பெர்மிட் விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்கையில் உணர்ச்சிவசப்பட்டு அழுத அனைத்துலக வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சர் Datuk Seri Rafidah Aziz தற்போது மிகவும் தெளிவாகவும் உற்சாகமாகவும் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளார்.
தான் எவ்வித தவறும் செய்யாததால்,மன வருத்தம் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படாது எனவும் தான் பதவி விலகப் போவதாக பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.
தாம் பதவி விலகுவதற்கு எக்காரணமும் இல்லை எனவும் தொடர்ந்து தாம் மக்களுக்கு சேவையாற்றவிருப்பதாகவும் அவர் செய்தியாளர்களிடம் உறுதி கலந்த தொனியில் கூறியுள்ளார்.


UMNO இளைஞர்கள் அக்கட்சியில் எந்தவொரு பதவிக்கும் போட்டியிட வேண்டாம் - Hishammuddin
UMNO இளைஞர்கள் அக்கட்சியில் எந்த ஒரு பதவிக்கும் போட்டியிட திட்டமிட வேண்டாம் என UMNO இளைஞர் பிரிவின் தலைவர் Datuk Seri Hishammuddin Tun Hussein தெரிவித்தார். அதற்கு மாறாக, அவர்கள் UMNO கட்சியை மேலும் உயர்த்துவதற்கு அவர்களின் கடமைகளை சரிவர செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
18 முதல் 25 வயதுக்குட்பட்ட UMNO இளைஞர்கள் தங்களின் அனுபவங்களையும்,அறிவாற்றலையும் மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் பதவி வகிப்பதை குறித்து யோசனைகளை செய்து நேரத்தை செலவு செய்யக்கூடாது எனவும் புத்ரா உலக வாணிப மையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் அவ்வாறு தெரிவித்தார்.
இதனிடையே, UMNO இளைஞர்களுக்கிடையே ஒற்றுமை உணர்வு மேலும் வழுப்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.



9-வது மலேசியத் திட்டத்தின் கீழ் சாலைகளின் விரிவாக்கப் பணிகள்

Kuala Lipis-சில் இருந்து Gua Musang செல்லும் 45 கிலோமீட்டர் தூரம் கொண்ட சாலைகளின் விரிவாக்க பணித் திட்டம் 9-வது மலேசியத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் என பொதுப்பணி அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் Datuk Yong Khoon Seng தெரிவித்தார்.
இந்த சாலை விரிவாக்கத் திட்டம் 142 மில்லியன் செலவில் மேற்கொள்ளப்படவிருப்பதாக அவர் மேளவையில் நேற்று விளக்கமளித்தார்.
Gua Musang-கில் இருந்து Merapoh, மற்றும் Kampung Relong, Kuala Lipis-சில் இருந்து Merapoh செல்லும் சாலைகளின் விரிவாக்கப் பணிகளையும் 9-வது மலேசியத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ள அவ்வமைச்சு ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.



உலகளவில் கடற்கொள்ளை சம்பவங்கள் குறைந்துள்ளன
கடந்த 6 மாதங்களில் உலகளவில் கடற்கொள்ளையர் தாக்குதல்கள் வெகுவாக குறைந்துள்ளதாகவும் தற்போது மலாக்கா நீரிணை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்களிலிருந்து முழுமையாக விடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட சுனாமி பேரிடருக்குப் பின், கடற்கொள்ளை சம்பவங்கள் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டில், 182 கடற்கொள்ளை சம்பவங்கள் ஏற்பட்டதாகவும் இவ்வாண்டு அவ்வெண்ணிக்கை 127-ஆக குறைந்திருப்பதாகவும் அனைத்துலக கடற்துறை இலாகா தெரிவித்துள்ளது.
இருப்பினும்,கப்பல் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் கடந்த பிப்ரவரி மாதத்தில் 8 கடற்கொள்ளை சம்பவங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் அவ்விலாகா அறிக்கையில் தெரிவித்துள்ளது.


மலேசியாவில் இந்திய போர்க்கப்பல்
இந்தியக் கடற்படையின் போர்க்கப்பலான INS Viraat முதன்முறையாக எதிர்வரும் 23 திகதி மலேசியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்தியக் கடற்படைத் தளபதி அருண் பிரகாஷ் அவர்கள் இக்கப்பலில் மலேசியாவிற்கு வருகை மேற்கொள்ளவுள்ளார். இக்கப்பலில் இந்தியாவைச் சேர்ந்த இதர முக்கிய அதிகாரிகளும் வருகை புரியவிருக்கின்றனர்.
அவர்கள் மலேசிய துணைப் பிரதமர் Datuk Seri Najib Tun Razak அவர்களைச் சந்திக்கவுள்ளனர். இந்தியாவிலிருந்து புறப்படும் இக்கப்பல் கிள்ளான் துறைமுகத்திற்கு வந்தடையும் என தெரிய வந்துள்ளது. இக்கப்பல்களை மலேசிய கடற்படையினர் பார்வையிடவுள்ளனர்.
--------------------------------------------------------------
காஷ்மீரில் கார் வெடிகுண்டு தாக்குதல்: 4 வீரர்கள் பலி-10 பேர் காயம்
ஸ்ரீநகர் நாம் முன்ஷி பாக் போலீஸ் நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்த வெடிகுண்டுகள் வெடித்ததில் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் உடல் சிதறி பலியானார்கள்.
அப்பகுதியில் சென்றுக் கொண்டிருந்த பொது மக்கள் 10 பேர் இத்தாக்குதலில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இப்பகுதியில் மாநில அமைச்சர்கள் சிலரின் இல்லங்கள் இருப்பதால் அவர்களின் இல்லத்தைத் தாக்கும் நோக்கத்தில் தீவிரவாதிகள் இத்தாக்குதலை நடத்தி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
------------------------------------------------------------
வெடிகுண்டு தாக்குதலில் ரஷியாவில் 15 போலீசார் பலி
ரஷியாவின் செசன்யா மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 15 காவல் துறையினர் உடல் சிதறி பலியானார்கள். அப்பகுதியில் போலீசாருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.
போலீசார் பயன்படுத்திய கவச வாகனம் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசினார்கள். சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே அவ்வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் அனைவரும் உடல் சிதறி பலியானார்கள்.
அவ்வாகனத்தில் சுமார் 15 போலீஸ்காரர்கள் இருந்ததாக தெரிய வந்துள்ளது. இத்தாக்குதலில் பொதுமக்கள் 3 பேர் பலியானதாகவும் மேலும் 20-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பிய நாடுகளுக்கு Al-Qaeda எச்சரிக்கை

ஈராக்கில் இருந்து தங்களது படைகளை ஒரு மாதத்திற்குள் திரும்ப பெறாவிட்டால் லண்டனில் நடந்தது போன்ற வெடிகுண்டுத் தாக்குதல்களை உங்கள் நாடுகளிலும் நடத்துவோம் என ஐரோப்பிய நாடுகளுக்கு Al-Qaeda அமைப்பு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Al-Qaeda-வின் ஐரோப்பியப் பிரிவு ஒரு இணையத் தளம் மூலமாக இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
ஈராக்கிலிருந்து உங்கள் நாட்டு வீரர்களை ஒரு மாதத்திற்குள் திரும்பப் பெற ஒரு மாதம் மட்டுமே கெடு விதிப்பதாகவும் இல்லையென்றால் தாக்குதல்களை அரங்கேற்றுவோம் எனவும் அந்த இணையத் தளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தியாவை அணு ஆயுத நாடாக அமெரிக்கா அங்கீகரித்துள்ளது

இந்தியாவை அணு ஆயுத நாடாக அங்கீகரிக்க அமெரிக்கா முன் வந்துள்ளது. மேலும் இந்திய அணு சக்தி நிலையங்களுக்குத் தேவையான யுரேனியம் எரிபொருளை வழங்கவும் அமெரிக்கா முன் வந்துள்ளது.
அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை பிரதமர் மன்மோகன் சிங் வாஷிங்டனில் சந்தித்துப் பேசியபோது இதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது உயர் தொழில்நுட்பம், பாதுகாப்பு, அணுசக்தி ஆகிய துறைகளில் இணைந்து செயல்படுவது என இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.
-------------------------------------------------------------
வெற்றி வாகை சூடிய Manchester United
Peterborough மற்றும் Man Utd அணிகளுக்கிடையே நடைபெற்ற காற்பந்தாட்டத்தில் Man Utd அணி 6-0 என்ற கோல் எண்ணிக்கையில் Peterborough அணியை வீழ்த்தியது. ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்து Man Utd அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே, மற்றும் ஒரு ஆட்டத்தில் Brann Bergen அணி 4-0 என்ற கோல் எண்ணிக்கையில் Birmingham City அணியை வீழ்த்தியது.
ஆட்டம் தொடக்கத்திலிருந்து, Brann Bergen அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கடும் போட்டியை எதிர்நோக்கிய Birmingham City கடைசியில் தோல்வியையே தழுவியது.


நன்றி வணக்கம்மலேசியா.காம்.

மனோ.ஜி

பாரதி
21-07-2005, 01:34 AM
இன்றைய செய்திகளை அறிந்து கொண்டேன். நன்றி மனோ.

kavitha
21-07-2005, 03:28 AM
இன்றைய செய்திகளுக்கு நன்றி மனோ அண்ணா