PDA

View Full Version : யோசித்து செயல்படு



sumathi
20-07-2005, 10:56 PM
அமெரிக்காவுல ராபர்ட் அப்படிங்கறவர், பத்திரிகையில ஒரு விளம்பரம் கொடுத்தாரு.

இருபதாம் நுїற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பாக விளங்கக் கூடிய பேனாவும், மையும் இல்லாமல் நீங்கள் அற்புதமாக எழுதலாம். விவரம் அறிய 1 டாலர் அனுப்புங்கள்னு இருந்த விளம்பர வாசகத்தை பார்த்து நிறைய பேர் பணம் அனுப்பி வச்சாங்க.

அதுக்கு ராபர்ட் சொன்ன பதில்,

புத்திசாலிகளே...! பென்சிலை வைத்து எழுதுங்கள். ராபர்ட் உங்களை ஏமாற்றவில்லை. நீங்கள் கொஞ்சம் நிதானமாக யோசிக்காமல் பணம் அனுப்பியவர்கள் தான். ஏமாந்தவர்கள் எதையும் யோசித்து செயல்படுங்கள்னு சொல்லியிருந்தாராம்.

рокро╛ро░родро┐
21-07-2005, 12:55 AM
இப்ப இந்த கதைக்கு கருத்து சொல்ல யோசனையா இருக்கே...!

mania
22-07-2005, 07:31 AM
அமெரிக்கர்கள் சேடிலைட்டில் போகும்போது பேனவால் சரியாக எழுதமுடியவில்லை என்று பல லட்சம் டாலர்கள் செலவு பண்ணி...தலை கீழாக இருந்தபோதும் எழுதும் படியாக ஒரு பேனாவை கண்டுபிடித்தார்களாம்....ஆனால் ரஷ்யர்கள் ஒரு காசுமே செலவு பண்ணாமலமல் (பென்சிலை வைத்து எழுதி )இந்த பிரட்சினையை தீர்த்தார்களாம். அது போல......நல்ல கருத்து சுமா....
அன்புடன்
மணியா...:D

Mano.G.
22-07-2005, 08:05 AM
இதே போல சீனாவிலும் ஒரு காரியம் நடந்ததாம்.

அந்த சோப் தயாரிக்கும் தொழிற்சாலையின் காலி சோப்டப்பாக்கள்
தவறுதலாக சந்தைக்குள் சென்று அந்த நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம்
எற்றபபட்டதாம்.
உடனே அதன் நிர்வாக தலைவர் அனைத்து நிர்வாகிகளையும் அழைத்து
இந்த பிரச்சனையை உடனடியாக நிறுத்த கோரி ஆணையிட்டாராம்.

நிர்வாகிகளும் தங்களது பரிசோதனை கூட (R & D) பணியாளர்களை அழைத்து அதற்கான வேலைகளை உடனடியாக ஆரம்பிக்க பணிக்கபட்டனர்.

பல ஆயிரங்கள் செலவு செய்து மிக நுண்ணியமாக கதிர் இயக்க இயந்திரங்களை கொண்டு காலி டப்பாக்களை அகற்றும் இயந்திரம் கண்டுபிடிக்க பட்டது.

இதற்கிடையில் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒரு சாதாரண தொழிலாளி
உற்பத்தி பகுதியிலிருந்து பேக் செய்யப்படும் இடத்திற்கு இடையில் (conveyor belt) ஒரு அதிவேக காற்றாடியை வைத்து காலி டப்பாக்களை பறக்க செய்து கொண்டிருப்பதை கண்டனராம் நிர்வாகத்தினர்.

படித்தவர்களிடம் மட்டுமிறுந்துதான் நல்ல யோசனைகள் வரும் என்பதல்ல.

மனோ.ஜி.

thempavani
22-07-2005, 08:15 AM
சுமா சொன்ன ஒருவிசயத்திற்குப் பிறகு பல நல்ல தகவல்கள் வெளிவருகின்றன..அனைவருக்கும் நன்றிகள்...

rajjdy
02-12-2005, 03:02 AM
இதைத்தான் நம் முன்னோர்கள் புத்திமான் பலவான் என்று சொல்லி இருக்கின்றார்கள். உண்மையான் பலம் எதுவென்று தெரிகின்றதா?

pradeepkt
02-12-2005, 05:44 AM
வாங்க ராஜ்டி,
உங்களைப் பற்றி ஒரு அறிமுகத்தை அறிமுகம் பகுதியில் கொடுங்களேன்

ilanthirayan
04-12-2005, 05:33 PM
இப்புடித் தாங்க நம்மூர்ல முட்டைப் பூச்சி கொல்லுர மெசினின்னு பேப்பரில வெளம்பரங் கொடுத்தாங்க.... பணங்கட்டினவங்களுக்கெல்லாம் கொரியரில அழகா பார்சல் கட்டி அனுப்பி வைச்சாங்க...

தெறந்து பாத்தவங்களுக்கு கப்புன்னு வந்தது மூக்குமேல கோவம்.. ரெண்டு பலவைத் துண்டு அனுப்பி வைச்சாங்க...

அழகா குறிப்பூ வேற.. மூட்டப் பூச்சியைப் பிடிச்சு ஒரு பலவை மேல வைச்சிட்டு மற்றப் பலவையால நச்சின்னு அட்ச்சு கொல்லனும்னு....

நம்ம தலையிலயும் நச்சுன்னு குட்டு வைச்சுப் புட்டானுவ....

இதானால் சொல்லப் படுவது யாதெனில், தலையில் குட்டு வாங்காமல் இருக்க தலைக்கு உள்ளதை பாவிக்கவும்..... என்னா நா சொல்லுரது...

pradeepkt
05-12-2005, 03:54 AM
பலகைக்கு நடுவுல அவங்களைத் தான்யா வச்சி அடிக்கணும் :D :D

ilanthirayan
05-12-2005, 10:50 PM
பலகைக்கு நடுவுல அவங்களைத் தான்யா வச்சி அடிக்கணும் :D :D

ப்ரதீபு கொல குத்தத்தில் போட்டுடுவாங்கப்பூ.... :) :)

pradeepkt
06-12-2005, 04:18 AM
நான் சும்மா சொன்னேன்... :)

poo
06-12-2005, 09:03 AM
சும்மா சொன்னாலும் யோசிச்சிச் சொல்லனும்ங்க பிரதீப்!