PDA

View Full Version : சுடோகு



பாரதி
19-07-2005, 02:17 PM
ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டு ஆசிய நாடுகள் பலவற்றிலும் விரும்பி விளையாடப்பட்டு வரும் எண் விளையாட்டுக்குத்தான் சுடோகு { SUDOKU } என்று பெயர். குறுக்காக 9 கட்டங்கள்; நெடுக்காக 9 கட்டங்கள்; இதைத்தவிர வண்ணங்களில் ஒன்பது கட்டங்களும் தனித் தனியாக காட்டப்பட்டுள்ளன. ஒன்றிலிருந்து ஒன்பதுக்குள்ளான எண்களை மட்டும் பயன்படுத்தி குறுக்காகவும், நெடுக்காகவும் நிரப்ப வேண்டும். அப்படிச் செய்யும் போது ஒவ்வொரு வண்ணக்கட்டத்திலும் ஒன்று முதல் ஒன்பது வரையேயான எண்கள்தான் நிரம்பி இருக்க வேண்டும். ஒரு வலைத்தளத்திலிருந்து இந்த விபரத்தை சுட்டிருக்கிறேன். ஆர்வமிருப்பவர்கள் முயற்சிக்கலாம்.

pradeepkt
19-07-2005, 02:57 PM
இங்கே டெக்கான், டைம்ஸ், ஹிந்து என எல்லா பத்திரிகைகளுமே இந்த சுடோகுவில் இறங்கி விட்டார்கள்.
நானும் தினமும் பேருந்தில் வரும்போது முயற்சிப்பேன். எல்லாத்தையும் நிரப்பிய பின்னும் அடுத்த நாள் விடையைப் பார்க்கத் தோன்றியதே இல்லை.

mania
19-07-2005, 03:32 PM
சுடோகு போட்டாச்சு. மற்றவர்களும் முயலுட்டுமே என்று காத்திருக்கிறேன். எப்பிடி ஃபில்லப் பண்ணுவது என்றும் தெரியவில்லை....அன்புடன்மணியா(தனியாக பேப்பரில் போட்டேன் )

பாரதி
19-07-2005, 11:44 PM
நன்றி பிரதீப், மணியா அண்ணா.
அதற்கான விடையையும் இப்போது தந்து விடுகிறேன். எப்படி புதிருக்கு விடை காணுவது என்பதிலிருந்து பல புதிர்கள் வரைக்கும் விரிவாக விளக்கப்பட்டிருக்கும் தளத்தின் சுட்டி இதோ:
http://www.sudoku.com/

சுவேதா
21-07-2005, 02:36 AM
நன்றி அண்ணா!

kavitha
21-07-2005, 03:34 AM
"மேஜிக் ஸ்கொயர்" மாதிரி இருக்கு. இதுக்கு ஜப்பானில் சுடோகு என்று பெயர் என்பதை இப்போது தான் தெரிந்து கொண்டேன். நன்றி பாரதி

mania
21-07-2005, 05:02 AM
"மேஜிக் ஸ்கொயர்" மாதிரி இருக்கு. இதுக்கு ஜப்பானில் சுடோகு என்று பெயர் என்பதை இப்போது தான் தெரிந்து கொண்டேன். நன்றி பாரதி

:D அப்பாடி.....ஒருவழியா கவிக்கு புரிய வைத்த பாரதிக்கு நன்றி.....:) கொஞ்ச நாள் முன்பு என்னிடம் தொலைபேசியில் கையால் சொடுக்கு போட்டுவிட்டு....."இதெலென்ன கஷ்டம்....எனக்கு ஈசியா வருதே" :rolleyes: என்று என்னை துளைத்து எடுத்துவிட்டாள்.....:D
அன்புடன்
மணியா...:D

பாரதி
21-07-2005, 05:15 PM
அன்பு மணியா அண்ணா....
மேஜிக் ஸ்கொயர்னா என்ன...? மேஜிக் ஸ்கொயர் போடுறதுன்னா ரொம்ப ஈஸியாமா..? கொஞ்சம் விளக்கி சொல்லுங்களேன்.

mania
22-07-2005, 04:31 AM
அன்பு மணியா அண்ணா....
மேஜிக் ஸ்கொயர்னா என்ன...? மேஜிக் ஸ்கொயர் போடுறதுன்னா ரொம்ப ஈஸியாமா..? கொஞ்சம் விளக்கி சொல்லுங்களேன்.

:) அதான் பாரதி ....எப்படி கூட்டினாலும் ஒரே எண்ணிக்கைதான் வரவேண்டும்....ஒரு முறை உபயோகித்த எண்ணை மீண்டும் உபயோகிக்க கூடாது என்றெல்லாம் சொல்வார்களே அதுதான் கவி சொல்கிறாள்...
நாமே மன்றத்தில் நிறைய போட்டிருக்கேமே ......எனக்கு 3,5,7,9,11,13 என்று எந்த ஒத்தப்படை கட்டங்கள் கொண்ட சதுரத்தில் எப்பிடி போடவேண்டும் என்று தெரியும்.... 4 கட்டங்கள் கொண்ட சதுரத்திலும் போடமுடியும்.... வேண்டுமானால் போட்டி பக்கத்தில் மீண்டும் தருகிறேன்...:)
அன்புடன்
மணியா....:)

pradeepkt
22-07-2005, 05:24 AM
எங்கள் நிறுவனத்தில் சுடோகுவைத் தீர்க்கும் மென்பொருள் போட்டி வைத்திருக்கிறார்கள்.
அட்டகாசமாகப் பரிசுகளும் தருகிறார்கள். நானும் முயற்சி செய்யலாம் என்றிருக்கிறேன்.
எங்கு பார்த்தாலும் ஒரே சுடோகு சுடோகுதான்.

மன்மதன்
22-07-2005, 01:17 PM
மன்றத்திற்கு புதிய வரவான ஜப்பான் நண்பர் சுடோகுவை அறிமுகம் செய்து வைத்த பாரதிக்கு நன்றி...ஹிஹி..
அன்புடன்
மன்மதன்

அறிஞர்
22-07-2005, 01:20 PM
வித்தியாசமான தகவல் தந்த பாரதிக்கு நன்றி...

முயலும்.. மணியாவுக்கு வாழ்த்துக்கள்