PDA

View Full Version : ஜூலை18, திங்கட்கிழமை மலேசிய செய்திகள்Mano.G.
18-07-2005, 01:23 AM
Meritokrasi அமைப்பு குறித்து பயப்பட வேண்டாம்
Meritokrasi அமைப்பு குறித்து மலாய்க்கார்கள் பயப்பட வேண்டாம் எனவும், அவ்வமைப்பினால் அவர்களுக்கு ஒருபோதும் தீங்கு ஏற்படாது எனவும் பிரதமர் Datuk Seri Abdullah Ahmad Badawi தெரிவித்தார். அமையில் Meritokrasi அமைப்பைக் குறித்து பலர் தவறான கருத்து தெரிவித்ததை அவர் இவ்வாறு கூறினார்.
மேலும், கல்வித்துறையில் முன்னேற்றம் அடைய மலாய்காரர்கள் கண்டிப்பாக பாடுபடவேண்டு என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தற்போது, அதிகமான மலாய்காரர்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளதாகவும், அவர்கள் இனி அரசாங்க உதவிகள் இல்லாமலேயே தங்களின் வாழ்க்கையை நடத்த முடியும் என கருத்து தெரிவித்தார்.
--------------------------------------------------------------
திறமையான மாணவர்கள் அரசாங்க உயர்கல்விக் கூடங்களில் பயில இடம் கிடைக்கவில்லை - அமைச்சர் மறுப்பு
திறமையான 120,000 மாணவர்களுக்கு அரசாங்க உயர்கல்விக் கூடங்களில் கல்வி பயில இடம் கிடைக்காததது தொடர்பாக தகவல் சாதனங்கள் வெளியிட்ட செய்தி உண்மையில்லை என உயர் கல்வியமைச்சர் Datuk Dr Shafie Mohd Salleh தெரிவித்தார்.
உயர்கல்விக் கூடங்களுக்கு இடம் கிடைக்காத மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவானது என்றூம் தகவல் சாதனங்கள் அவ்வெண்ணிக்கையை அதிகமாக குறிப்பிட்டிருப்பதாக அவர் கூறினார். அரசாங்க உயர்கல்விக் கூடங்களில் கல்வி பயில இட கிடைக்காத மொத்த மாணவர்களின் அடுத்த வாரம் இறுதியிலேயே தெரிய வரும் என அவர் குறிப்பிட்டார்.
தகுதியுடையவர்களாக இருந்தும் அரசாங்க உயர்கல்விக் கூடங்களில் இடம் கிடைக்காத மலாய் இனத்த மாணவர்களின் பிரச்சனைகள் உயர் கல்வி அமைச்சு அப்பிரச்சைனைக்குத் தீர்வு காணும் வகையில் பல நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக அமைச்சர் விளக்கமளித்தார்.Meru-NKVE மேம்பால பணியாளர் மரணமடைந்தார்
கடந்த 17-ம் திகதி ஞாயிற்றுக்கிழமை Shah Alam, Bukit Raja அருகே கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த Meru-NKVE மேம்பாலம் சரிந்து விழுந்த சம்பவத்தில் காயமுற்ற ஒன்பது பணியாளர்களில் ஒருவர் மரணமடைந்தார்.
30 வயது Syafiqul Mozahar, வங்காளதேச நாட்டை சேர்ந்தவர் எனவும் நேற்று முந்தினம் அதிகாலை 2.15 அளவில் மரணமடைந்தார் எனவும் Tengku Ampuan Rahimah மருத்துவமநனையின் இயக்குனர் Dr Yahya Baba தெரிவித்தார். காயமுற்றவர்களில் மேலும், இருவரின் நிலைமை மேசமாக உள்ளது என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


40 பாகிஸ்தான் தொழிலாளர்கள் மலேசியா வருகை
நாட்டில் தொழிலாளர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் அரசாங்கம் பாகிஸ்தான் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டது.
அத்திட்டத்தின் முதல்கட்டமாக நேற்று முன்தினம் சுமார் 40 பாகிஸ்தான் தொழிலாளர்கள் கோலாலம்பூர் அனைத்துலக விமாண நிலையத்தில் வந்து சேர்ந்தனர்.
அவர்களுக்கு மருத்துவ சோதனைகள் வழங்ப்பட்டதுடன், மலேசிய நாட்டின் விதிமுறைகளை பற்றியும் தெரிவிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் பூச்சோங் வட்டாரத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேளைக்கு அமர்த்தப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.


செம்பனைத் தோட்டத்தில் ஆடவரின் சடலம்

கோலா சிலாங்கூர்,Jalan Bukit Mayung, Ijok-கில் உள்ள ஒரு செம்பனைத் தோட்டம் ஒன்றில் ஆடவர் ஒருவரின் சடலம் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
கொலையுண்ட ஆடவர் கொலை செய்யப்படப் பிறகு அங்கு வீசப்பட்டிருக்கலாம் என போலீஸ் நம்புவதாக கோலா சிலாங்கூர் வட்டார தலைமைப் போலீஸ் அதிகாரி Rusni Hashim தெரிவித்தார்.
நான்கு நாட்களுக்கு முன்பு அவ்வாடவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் அவ்வாடவரிடமிருந்து அவரை பற்றிய எந்தவொரு பத்திரமும் கிடைக்கப் பெறவில்லை எனவும் அப்போலீஸ் அதிகாரி கூறினார்.

54,000 DVD குறுந்தட்டுகள் பறிமுதல்

Jalan Padang Besar-Kangar-இல் நேற்று சுமார் 500,000 ரிங்கிட் மதிப்புள்ள 54,000 DVD குறுந்தட்டுகள் கடத்தல் முறியடிப்பு பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டன.
இக்குறுந்தட்டுகள் அனைத்தும் அண்டை நாட்டிற்குக் கடத்த முயன்ற வேளையில் பறிமுதல் செய்யப்பட்டதாக பெர்லிஸ் கடத்தல் முறியடிப்பு பிரிவின் அதிகாரி Rooslan Radzi தெரிவித்தார்.
காலை 6 மணியளவில் கனரக வாகனம் ஒன்றைப் பயன்படுத்தி கடத்தல்காரர்கள் இக்குறுந்தட்டுகளைக் கடத்த முயன்றதாக அவ்வதிகாரி கூறினார். இதன் தொடர்பில் போலீசார் கனரக வாகன ஓட்டுநரையும் அவரது உதவியாளர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.
--------------------------------------------------------------

தேதி : 18/7/05 (Mon) 12:00 am ஐதராபாத்தில் மழைக்கு 3 பேர் பலி
ஐதராபாத்தில் பெய்த பலத்த மழை காரணமாக வெள்ளத்தில் சிக்கி மூன்று பேர் பலியானார்கள். அங்கு நேற்று முன்தினம் பயங்கர மழை பெய்தது. இதனால் அங்குள்ள பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
கரம்நகர், மேடக், வாரங்கல், நலகோண்டா, கிருஷ்ணா, ரங்கா ரெட்டி மற்றும் அடிலாபாத் ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடுமையான வறட்சி பகுதியான அனந்தபூரிலும் தற்பொழுது கனத்த மழை பெய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
------------------------------------------------------------
ஈராக்கில் காய்கறி சந்தையில் கார் குண்டு தாக்குதல்: 60 பேர் பலி

பாக்தாத் நகருக்கு அருகில் உள்ள முகாபாபீ நகரில் உள்ள காய்கறி சந்தையில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அச்சந்தையில் அருகிலுள்ள பகுதியில் வெடிகுண்டு ஏற்றிய ஒரு லாரியில் வந்த தற்கொலை படை தீவிரவாதி அந்த குண்டுகளை வெடிக்கச் செய்தான்.
சந்தையில் இருந்தவர்களும் அப்பகுதியில் வசித்து வந்தவர்களும் இவ்விபத்தில் உடல் சிதறி பலியானார்கள். 100க்கும் மேற்பட்டவர்கள் இத்தாக்குதலில் காயம் அடைந்ததாக தெரிய வந்துள்ளது.

விமானம் கடலில் விழுந்தது: 55 பேர் பலி
ஆப்பிரிக்காவில் மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள நாட்டின் தலைநகர் மொலாபோவிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த விமானத்தில் ஏற்பட்ட கோளாறினால் அங்குள்ள அவ்விமானம் கடலில் மூழ்கி 55 பேர் பலியாகிவிட்டனர்.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த விமானத்தில் இருந்து தரை நிலையத்துக்குத் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதன் பிறகு அவ்விமானம் கடலில் விழுந்து நொறுங்கி விழுந்தது.
விமானத்தில் கோளாறு ஏற்பட்டுதால் பியாக்கோ தீவு அருகே கடலில் நொறுங்கி விழுந்ததாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். விமானத்தில் இருந்த 55 பயணிகளும் இவ்விபத்தில் பலியாகிவிட்டதாக அவர் கூறினார்.
நியூயார்க்கில் அமிர்தானந்தமயி

பெண் சாமியார் அமிர் தானந்தமயி அமெரிக்காவிற்கு 10 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 'அம்மா' என்று அன்போடு பக்தர்களால் அழைக்கப்படும் அமிர்தானந்தமயி கடந்த 30 ஆண்டுகளில் 2 கோடியே 1 லட்சம் பேரை கட்டித்தழுவி அவர்களுக்கு ஆசி வழங்கி உள்ளார்.
லட்சக்கணக்கானவர்களுக்கு நோய் தீர்த்ததாகவும் கூறப்படுகிறது. நியூயார்க் நகரிலும் அவர் பக்தர்களைக் கட்டித் தழுவி அவர்களுக்கு ஆசி வழங்கினார்.
------------------------------------------------------------
Barnet அணியை வீழ்த்திய Arsenal அணி
Barnet மற்றும் Arsenal அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற காற்பந்தாட்டத்தில் Arsenal அணி 4-1 என்ற கோல் எண்ணிக்கையில் Barnet அணியை வீழ்த்தியது. ஆட்டம் தொடக்கத்திலிருந்து Arsenal அணி சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியது.
இவ்வாட்டத்தில் Arsenal அணியின் ஆட்டக்காரர் Alexander Hleb சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதனிடையே, Bayer Leverkusen மற்றும் Liverpool அணிகளுக்கிடையே நடைபெற்ற ஆட்டத்தில் Liverpool அணி 3-0 என்ற கோல் எண்ணிக்கையில் Bayer Leverkusen வீழ்த்தி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

நன்றி வணக்கம்மலேசியா.காம்

மனோ.ஜி

aren
18-07-2005, 02:34 AM
திறமையான இந்திய மற்றும் சீன மாணவர்களுக்கு அரசாங்க உயர்கல்வி கூடங்களில் இடம் கொடுப்பதில்லை என்று நண்பர்கள் சொல்லி அறிந்திருக்கிறேன். இது உண்மையா?
அரசாங்க உயர்கல்வி கூடங்களில் முதன்மை இடம் மலாய் மக்களுக்கு என்று நண்பர்கள் சொல்வார்கள். அதுபோல் மலாய் இனத்தவர்களுக்கு அரசாங்கம் செலவில் வெளிநாடுகளுக்கு சென்று படிக்கும் வசதியும் இருப்பதாகவும் கேள்விப்பட்டேன். இந்தியர்களுக்கும் சீனக்காரர்களுக்கும் இந்த சலுகை கிடையாதா?

Mano.G.
18-07-2005, 03:27 AM
நீங்கள் கேள்விபட்டதும் உண்மையே,
அதிலும் சில விதிவிலக்குகளும் உண்டே,
அண்மையில் ஒரு ஆளும் கட்சி துணைமந்திரி( இந்தியர் தமிழர்),
நாடாளுமன்றத்திலிருந்த்து 3 மாத காலம் இடைநீக்கம்
செய்யபட்டதும் இதற்காகவே.

பல நேரங்களில் எல்லாம் போராடியே பெற வேண்டும்,
போராடி பெற்ற இடங்களையும் நமது மக்கள் வீணடித்து மற்றவர்களுக்கும் போய் சேராதவாரு செய்துவிடுகின்றனர்.

மனோ.ஜி